Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 10 DEC, 2023 | 10:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தனது உயிருக்கு இராணுவத்தினராலும் பாதுகாப்பு தரப்பினராலும் அச்சுறுத்தல் என்று மிஹிந்தலை விகாராதிபதி கருதுவாராயின் இராணுவத்தினர் உட்பட 251 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்ளுவோம். இராணுவத்தின் மீது படுகொலை குற்றச்சாட்டை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிஹிந்தலை புனித பூமிக்கு பணிக்கு செல்ல இராணுவத்தினர் விரும்பவில்லை. ஆகவே பாதுகாப்பு தரப்பினரை மீளப்பெறும் தீர்மானத்தில் மாற்றமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்…

  2. 11 DEC, 2023 | 05:44 PM யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்விசாரணை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 2.30 வரை தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கப்பட்டமை மற்றும் ம…

  3. மாஹோ சந்தி முதல் அநுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து பாதை திருத்தப் பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறித்த தொடருந்து மார்க்கம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில், கொழும்பிலிருந்து மாஹோ சந்தி வரையிலும், அநுராதப்புரத்திலிருந்து காங்கேசன்துறை வரையில், மாத்திரமே தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாஹோ மற்றும் ஓமந்தை வரையில் இரண்டாம் கட்ட திருத்தப்பணிகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/284285

  4. Published By: DIGITAL DESK 3 11 DEC, 2023 | 04:03 PM கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும், இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பை மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும், அது தவறான விடயம் என்றும்,”ரணில் பொலிஸ் இராஜ்யமா நடக்கிறது என சந்தேகம் எழுவதாக” பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர…

  5. 11 DEC, 2023 | 05:06 PM யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.நகர் பகுதியை அண்டிய முட்டாஸ்கடை சந்தி பகுதிகளில் இரவு வேளைகளில், வீதியில் பயணிப்போரை வழிமறித்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை வீதி - ஸ்ரான்லி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளும் சந்திக்கும் சந்தி பகுதியான குறித்த சந்தியில் மின் விளக்குகள் பொருத்தப்படாமையால், இருளில் மறைந்து இருக்கும் கொள்ளையர்கள், வீதியில் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். பேர்ஸில் இருக்கும் …

  6. கிளைமோர் தயாரித்ததாக முன்னாள் போராளி கைது! ரி.ஐ.டி.யினரால் கொழும்புக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டார் [ஆதவன்] கிளைமோர் தயாரித்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளி மற்றும் அதற்கு உதவியதாக ஒருவருமாக இருவர் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மன்னார், தேவன்பிட்டி, வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் சவேரியான் (ஜோன்சன்) (வயது - 48) என்ற முன்னாள் போராளியும், நாச்சிக்குடா, கரக்குன்றைச் சேர்ந்த தம்பு குணசேகரம் (வயது -63) ஆகிய இருவருமே பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட் டுள்ளனர். தம்பு குணசேகரம் வைபர் (படகுகள் செய்வதற்குப் பயன்படும் பொருள்) ஒட்டுவேல…

  7. முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்களுக்கான விசேட அறிவித்தல்! பண்ணைகளை பதிவுசெய்து உச்ச பயன் பெற அழைப்பு [செல்வன்] முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்கள் மாடுகளுக்கான பண்ணைகளை பதிவு செய்து உச்ச பயன் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இத்ற்கமைய அவர் விடுத்துள்ள கோரிக்கையில் பண்ணையாளர்கள் தமது மாட்டுப் பண்ணைகளை பதிவுசெய்ய வேண்டியதும் தங்களால் வளர்க்கப்படும் சகல மாடுகளுக்கும் காதுப்பட்டி பொருத்துதலும் மிக முக்கியமானதாக அறிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள பண்ணைகளில் மாடுகளின் பண்ணைகள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது 2008ம் ஆண்டில் இருந்தே முக்கிய விடய…

  8. மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்! adminDecember 11, 2023 தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில், இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றையும் கையளித்தனர். குறித்த மகஜரில், இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு இன்மையே இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக நாங்கள் எதிர் நோக்கி வருகின்றோம் குறிப்பாக நீரியல்வளங்கள்,நிலவளங்கள், சுற்றாடல் போன்ற வள பகிர்வுகளில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலே உள்ள சமூக ஒப்பந்தம் மீறப்படுவ…

  9. விவாகரத்தை எளிதாக்கும் வகையில் மூன்று புதிய சட்டமூலங்கள் ! விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று சட்டமூலங்களை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்ட ங்களில் திருத்தம் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விவாகரத்து கோரி தாக்கல் செய்பவரின் சுமை அதிகமாக உள்ளது என்றும் காரணங்களை நிரூபிப்பது மிகவும் கடினம் என்பதனால் சில விவாகரத்து வழக்குகள் 10-20 ஆண்டுகள் செலவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் விவ…

  10. 11 DEC, 2023 | 11:11 AM கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு தங்களது பயணப்பொதிகளை இலகுவாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் "டாக்" குறிச்சொற்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட ஆரம்பித்துள்ளனர். சில விமானப்பயணிகள் தங்களது பயணப்பொதிகளுக்கு மாறாக வேறொரு பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதும் சில பயணிகள் தெரிந்தே மற்றவர்களது பயணப்பொதிகளை திருடிச்செல்வதும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. இவ்வாறு மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பயணப்பொதிகள் மீண்டும் அடிக்கடி விமான நிலையத்திற்குத் திரும்புகின்ற நிலையில் அவைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவது மிகவும் கடின…

  11. சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி சாதனை ! மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர் பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அக்ஷதா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச போட்டி கடந்த 3ஆம் திகதி மலேசியாவில் 80இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்து கொண்டனர…

    • 5 replies
    • 340 views
  12. சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய வருடந்தோரும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் நினைவுகூரப்படுகின்றது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த வருடத்துடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் எதிர்காலத்தில் மனித உரிமைகளையும் கலாசாரத்தையும் ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைநிறுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நினைவுகூறப்படுகின்றது. அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதே இந்த பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் அனைவரும் சுதந்திரமானவர்கள் மற்றும் சமத்துவமானவர்கள் என்பதை இந்த ப…

  13. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார். பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக்…

  14. 10 DEC, 2023 | 05:05 PM இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (10) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை - இந்திய நட்புறவை மேம்படுத்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அதற்கு இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு ஒருபோதும் மாற்றமடையாது என கூறியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171400

  15. கிளிநொச்சியில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் விசாரணைகளுக்காக ஒப்படைத்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களுக்கு நீதி கோரி, கடந்த இரண்டாயிரத்து 485 நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினமாக இன்றைய தினம், முற்பகல் கிளிநொச்சி ஏ-9 வீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் …

  16. தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க முயன்று தோல்வியடைந்துள்ளேன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் தமிழையும் சிங்களத்தையும் கற்க முயன்றேன். நான் இரண்டையும் ஒரேநேரத்தில் கற்க முயன்றேன் தவறுசெய்தேன். இரண்டு மொழிகளை ஒரேநேரத்தில் கற்கமுயல்வது சவாலான விடயம். எனது கடினமான வேலைப்பளுகாரணமாக இரண்டு மொழிகளையும் கற்கமுடியவில்லை. என்னால் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய் சில சொற்களை கற்கமுயல்கின்றேன் -எனக்கு தெரிந்த ஒரு சில சொற்களை பேசினாலும் மக்கள் உடனடியாக என்னை நோக்கி வருவதை அவதானித்துள்ளேன். எனக்கு மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் பல மொழிகளை கற்றுக்கொள்ள முயல்கின்றேன் என…

  17. 09 DEC, 2023 | 08:44 PM (ஆர்.ராம்) தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்கும் கடிதம் தயார் நிலையில் இருக்கின்றபோதும் இலங்கை தமிழரசுக்கட்சி உட்பட ஏனைய ஆறு கட்சிகளின் தலைமைகளின் பின்னடிப்பால் அம்முயற்சி ஒப்பேறாதுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணயின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எம்முடனான சந்திப்புக்களின் போது வழங்கிய உறுதி மொ…

  18. குழாய்க்கிணறுகள் யாழில் பூதாகரம்! [ஆதவன்] யாழில் அதிகரிக்கும் குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்றும், நாள் ஒன்றுக்கு எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்பதைக்கணிப்பிட முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் விலங்கியல்துறை பேராசிரியர் திருமதி ஞானேஸ்வரன் இராஜேந்திரமணி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு குழாய்க் கிணறுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவைக் கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. யாழ். குடா மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டு ஒரு பகுதியில் நிலத்துடன் இணைக்கப்பட்ட பிரத…

  19. புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை - சாமர சம்பத் (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரது செயற்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது. இவர் சிங்கள பெண்ணை மணக்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாண…

    • 2 replies
    • 422 views
  20. பாடசாலைக் கல்வித் தரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு! பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு பிள்ளையும், 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை ம…

    • 6 replies
    • 526 views
  21. பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்! பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றுவருவதாகக் கூறப்படும் ஆலயமொன்றிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில் தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.…

  22. Published By: VISHNU. 07 DEC, 2023 | 07:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்திலும் ஒருசிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறார்கள். பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியத…

  23. 08 DEC, 2023 | 06:04 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களை அடிப்படையாக கொண்டு சமூக விரோத செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. ஊடக நெறிமுறையை கடைப்பிடிப்பதற்கு ஊடகங்கள் நியாயமான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். உத்தேச ஒளி மற்றும் ஒலிப்பரப்பு சட்டமூலம் அடுத்த ஆண்டு சட்டமாக்கப்படும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம், கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவா…

  24. தந்திரமாக பறிக்கப்படும் உள்ளூராட்சி அதிகாரங்கள்! adminDecember 9, 2023 யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பிரதேச சபைகளும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையால் , கட்டட அனுமதி உள்ளிட்டவற்றை பெறுவதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளதாக வலி. தென்மேற்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளிற்கு மட்டுமே அத்தியாவசியமாக்கப்பட்டு காணப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட வரம்பு, 2022ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலினால் வடகிழக்கு மாகாணங்களிலுள்ள சில பிரதேசசபைகளும் அந்த சட்டத்தின் கீழ் வருவதாக பிரகடன…

  25. தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று நம்பிக்கை இல்லை. நல்லை ஆதீனத்தின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவிப்பு [இனியபாரதி] நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள்.பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நீங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.