ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
சிறிலங்கா அரச படைகள் தமிழ்க் கைதிகளை சுட்டுக்கொல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் கொண்ட புதிய சர்ச்சைக்குரிய திரைப்படம் ஜெனிவாவில் திரையிடப்பட்டது [Friday, 2011-06-03 15:56:44] இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய திரைப்படம் ஒன்று, ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் திரையிடப்பட்டுள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் அரச படைகள் தமிழ்க் கைதிகளை சுட்டுக்கொல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இருப்பதாக பிபிசி ஜெனிவா செய்தியாளர் கூறுகிறார். இந்த காட்சிகள் போர்க்குற்றங்கள் மற்றும் மானுட குலத்துக்கு எதிராக இழைக…
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
[ சனிக்கிழமை, 04 யூன் 2011, 04:16 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் மரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியரின் இறுதிச்சடங்கு இன்று மினுவாங்கொடையில் நடைபெறவுள்ளது. சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து சிறிலங்காவில் பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், இறுதிச்சடங்கிலும் மோதல்கள் வெடிக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. மினுவாங்கொட கல்ஒலுவ கத்தோலிக்க சேமக்காலையில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இதனால் வன்முறைகள் வெடிப்பதை தடுக்கும் நோக்கில் கம்பகா மாவட்டத்தில் சிறிலங்கா காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தின…
-
- 2 replies
- 717 views
-
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனக் கோரி யாழில் ஒருவர் உண்ணாவிரதம் [saturday, 2011-06-04 07:34:10] போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி யாழ். துரையப்பா விளையாட்டரங்களில் ஒருவர் இன்று உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதியான வவுனியாவைச் சேர்ந்த என். சகாதேவன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். கடந்த கால போரின் காரணமாக, இழக்கப்பட்ட உயிர் உடமைகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனவும் கோரி அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையெனில் சாகும் வரையிலான உண்ணாவிரதப்…
-
- 0 replies
- 599 views
-
-
முறிகண்டி,பிள்ளையார் கோவில் வழக்கை தமிழ் பேசும் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கத் தீர்மானம் [saturday, 2011-06-04 10:53:26] முறிகண்டி, ஏ 9 வீதியிலுள்ள பிள்ளையார் கோவில் தொடர்பான வழக்கை தமிழ் பேசும் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தற்போது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முறிகண்டி பிள்ளையார் கோவிலை பரம்பரை தர்மகர்த்தாவான தன்னிடம் வழங்க வேண்டும் எனக் கோரி ஜி. மணிவண்னன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சலீம் மர்சூக், பி.ஏ. ரத்னாயக்க எஸ்.ஐ.இமாம் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது, அடுத்…
-
- 0 replies
- 646 views
-
-
Saturday, June 4, 2011, 22:55உலகம், சிறீலங்கா கடந்த 3ம் நாள் ஜெனிவாவில் சனல் 04 “இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் சிறீலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தை திரையிட்டது இந்த ஆவணப்படம் கூடியிருந்த உறுப்பினர்களை மட்டுமல்ல அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியதை நேரடியாகப் பார்க்ககூடியதாக இருந்தது. பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதார்கள். பல உறுப்பினர்கள் இக் காணொளியை தொடர்ந்து பார்க்க முடியாமல் அரங்கைவிட்டு வெளியேறினர். சிறீலங்கா அரசின் இனப்படுகொலை காணொளியை பார்த்து ஆத்திரமுற்ற பார்வையாளர்களும், சில ஊடகவியலாளர்களும் கூடியிருந்த சிறீலங்கா பிரதிநிதிகளை நோக்கி தமது அதிருப்தியை தெரிவிக்க முனைந்தபோது கீழ்த்தரமான முறையில் அநாகரிமாக நடந்து கொண்டதையே நீங்கள்…
-
- 3 replies
- 1.8k views
-
-
Posted by சோபிதா on 02/06/2011 in செய்தி கொழும்பில் நடைபெறும் போர்க்கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் டேவிட் கில்குலேன் வெளியிட்ட கருத்துக்களை சிறிலங்கா ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன. நேற்று கொழும்பில் ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் போர் அனுபவக் கருத்தரங்கில் உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயசின் சிறப்பு ஆலோசகருமான- அவுஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் லெப்.கேணலான டேவிட் கில்குலேன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். அவர் நேற்று தனது உரையில் போர்க்குற்றங்களை ஒருபோதும் மூடி மறைத்து விட முடியாது என்று கூறியுள்ளதாக ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா…
-
- 3 replies
- 1.7k views
-
-
[ சனிக்கிழமை, 04 யூன் 2011, 11:28 GMT ] [ நித்தியபாரதி ] லிபியாவில் இடம்பெற்றது போன்று சிறிலங்காவும், தனது சொந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற 'பாதுகாப்பதற்கான கடப்பாட்டு உணர்வு' என்ற அனைத்துலகச் சட்டத்தை மீறி நடந்துள்ளது. இவ்வாறு 'Sydney Morning Herald' ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் [columnist] Cynthia Banham தனது பத்தியில் எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com]மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 26 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் இராண்டாம் ஆண்டு வெற்றிநாளைக் கொண்டாடிய சிறிலங்கா அரசாங்கம் அதன் ஒரு பகுதியாக இந்த வாரம் 'பயங்கரவாதத்தை தோற்கடித்தல்' என்ற தலைப்பில் அனைத்துலக நாடுகளுக்கான கருத்த…
-
- 0 replies
- 785 views
-
-
Saturday, June 4, 2011, 21:56சிறீலங்கா முகாம்களில் தலைமைத்துவ பயிற்சி பெறும் மாணவர்களின் உடல், உள நிலை சீரழிந்து வருவதால் மாணவர்கள் ஆபத்தான நிலையிலுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கூறியுள்ளது. ‘பல முகாம்களிலிருந்து உணவு நஞ்சாதல் மற்றும் பாரிய காயங்கள் குறித்து பெரும் எண்ணிக்கையான சம்பங்கள் தொடர்பாக தகவல்கள் வந்துள்ளன. வெகு அண்மையில் மாதுரு ஓயாவிலுள்ள பயிற்சி நிலையத்தில் மாணவிகள் இருவர் கடுமையான பயறி;சிகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என மேற்படி ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கூறினார். ஒரு மாணவி கணுக்காலில் காயமடைந்த நிலையிலும் மற்றொரு மாணவி நிமோனியாவினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அரனகன்வில வைத்தியசாலையில் அனுமதிக்க…
-
- 0 replies
- 452 views
-
-
Posted by சோபிதா on 04/06/2011 in செய்தி மனித உரிமைகள் மீறல் தொடர்பில் உலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு இந்த விடயத்தில் இந்திய ஆதரவைப் பெற எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி அடைந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், இந்தியாவைச் சாமாளித்துத் தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை அதனிடமிருந்து பெறுவதற்காகப் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அனுப்பிவைத்தார் ஜனாதிபதி. ஆனால், அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் கடந்த மாதம் 16ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்திய செ…
-
- 0 replies
- 1.1k views
-
-
Saturday, June 4, 2011, 19:03சிறீலங்கா வன்னி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களின் உயிரிழப்புக்கள், காயமடைவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் அடிக்கடி கூறிவரும் நிலையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மோதல்களின் போது 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருப்பதன் மூலம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேரவையில் கலந்துகொள்ள சென்றிருக்கின்ற அரசாங்க அமைச்சர்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரியவருகிறது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை தொடர்பான செயலமர்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி சுமார் 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தான் தனிப்பட்ட ரீதியில் நம்பவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
[ சனிக்கிழமை, 04 யூன் 2011, 01:14 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மக்களின் ஜனநாயக உரிமைகளும், அடிப்படை உரிமைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் மீறப்படுவதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான மாணவப் பிக்குகள் நேற்று அலரி மாளிகை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர். விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பமான இந்தப் பேரணி அலரி மாளிகை வரை நடத்தப்பட்டது. முன்னர் இத்தகைய பேரணிகளை சிறிலங்காப் படையினர் தடுத்து நிறுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்த போதும், நேற்று பௌத்த பிக்குகள் எந்தத் தடைகளும் இன்றி அலரி மாளிகை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிக்குகள் தடையின்றி செல்வதற்கு வசதியாக கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்த வீதித்தடையையும் சிறிலங்கா காவல்துறையினர் அகற்றி விட்டனர். இதையடுத்து அ…
-
- 1 reply
- 723 views
-
-
Saturday, June 4, 2011, 18:46சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்த மாதம் 5ஆம் திகதி ரஷ்யாவிற்குப் பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோ நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதியின் அதிகாரிகள் அவரது விஜயத்திற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ரஸ்ய பிரதமர் விளாடீமீர் புட்டின், ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஆகியோரைச் சந்திக்க எண்ணியுள்ளார் . ரஸ்யத் தலைவர்களைச் சந்திக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ள போதிலும் இதுவரை ரஸ்யாவிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வமான பதில்களும் கிடைக்கவில்லை. தற்போது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மீதமுள்ள நட்புறவு நாடுகள் சிலவற்றில் ரஸ்யா முக்கியமான நாடா…
-
- 0 replies
- 713 views
-
-
சனல் 4ன் கொலைக்களம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டவை 04 ஜூன் 2011 இலங்கை இராணுவத்தினரின் போர் குற்றம் தொடர்பாக செனல் 4 தொலைக்காட்சி நேற்று ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் திரையிட்ட கொலைக்களம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர் இதற்கு உதவியுள்ளார். புலிகளுக்கு ஆதரவான வீடியோ ஆய்வு கூடத்தில் இந்த திரைப்படம் தொகுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த போர் குற்ற காட்சிகள் அடங்கிய வீடியோ படங்கள் போலியானது என வீடியோ நிபுணரான ஸ்ரீ ஹோவிதாரன தெரிவித்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது. gtbc
-
- 3 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தகுதிவாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் உள்ளபோதும், சிறீலங்கா அதிகாரிகள் தகுதியற்ற சிங்கள ஆசிரியர்களை தொடர்ந்து அங்கு நியமித்துவருவதாகவும், இது ஒரு இனப்புறக்கணிப்பு எனவும் கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் சிறீலங்கா அரச கூட்டணி உறுப்பினர்கள் சிறீலங்கா அரச தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். தமிழத் தேசிய கூட்டமைப்பில் இருந்து சிறீலங்கா அரசின் பக்கம் தாவிய பி பியசேனா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எஸ் புஸ்பராஜா மற்றும் எஸ் செல்வராஜா ஆகியோரே இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு 90 விகிதமான சிங்கள ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் …
-
- 0 replies
- 729 views
-
-
04 ஜூன் 2011 நிமால்கா பெர்ணாண்டோ - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் கேள்வி: ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்னென்ன விடயங்களைக் கொண்டிருக்கிறது? சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக ஒரு சரியான புரிதலுக்கு வருவது இந்தக் குழுவின் முன்னாலிருந்த பிரதான சவாலாகும். ஏனென்றால் பலவிதமான குழப்பமான அறிக்கைகளும் தகவல்களும் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. அரசாங்கம் புலிகள் ஆகிய இரு தரப்பும் யுத்தத்தைப் பிரகடனம் செய்திருந்தனர். அது ஒரு கெரில்லா யுத்தமாக நடைபெறவில்லை. ஒரு மரபுரீதியான யுத்தமாகவே நடைபெற்றது. மனிதாபிமான உதவி அமைப்புக்களாலும் ப…
-
- 0 replies
- 787 views
-
-
''என்னை மூணு வருஷமா லவ் பண்ணினார். கல்யாணம் பண்ணிக் கிறதாச் சொல்லி ஆசையாப் பழகினார். ஆனால், இப்போ கல்யாணத்துக்கு மறுக்கிறார். என்னை மன உளைச்சலில் தள்ளிய அவர் மீது நடவடிக்கை எடுங்கள்!'' - இயக்குநர் சீமான் மீதுதான் இப்படி ஒரு புகார்... கிளப்பி இருப்பவர் நடிகை விஜயலட்சுமி! புகார் கொடுத்த கையோடு சில சினிமா புள்ளிகளிடம் பேசிய விஜயலட்சுமி, ''உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஹீரோவாக இருக்கும் சீமான் என் வாழ் வில் வில்லனாகிவிட்டார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்!'' எனப் புலம்பி இருக்கிறார். விஜயலட்சுமிக்கு அப்படி என்னதான் பிரச்னை? 'ப்ரண்ட்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. பெரிய வாய்ப்புகள் ஏதும்…
-
- 4 replies
- 2.1k views
- 1 follower
-
-
இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஐ.நா. அறிக்கை குறித்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள கொள்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியதாகவும், அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழுவினரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதற்கு ஆதாரங்களையும் அந்த அறிக்கை கொண்டிருக்கிறது. போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து ராஜபக்சே அரசு இந்த விஷயத்தில் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்தறை…
-
- 0 replies
- 818 views
-
-
Posted by: on Jun 4, 2011 அந்த நிழற்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம்குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்கள இராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை நிழற்படத்தில் காணும்போது இதயம் சுக்குநுறாக வெடிப்பது போலவே இருக்கிறது. கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்த நிழற்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன. அந்தக்காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிகநீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால் இப்படிநிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்த நிழற்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மனஉறுதியை உடைத்தெறிந்து…
-
- 0 replies
- 977 views
-
-
Saturday, June 4, 2011, 9:31சிறீலங்கா வடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியிலும் பல ஆயிரம் மக்களை சிறீலங்கா படையினர் பலவந்தமாக கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர். சிறீலங்கா அரசு அண்மையில் வடக்கில் மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் நீக்கப்பட்ட 331,214 தமிழர்களில் பெருமளவானோர் வன்னிப் போரில் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 2009 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 816,005 ஆகும். ஆனால் இந்த வருடம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் 481,791 பேரின் விபரங்களே உள்ளதுடன், 331,214 பேர் வாக்காளர் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இ…
-
- 0 replies
- 507 views
-
-
Saturday, June 4, 2011, 9:52சிறீலங்கா மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் உள்ள ஓடைக்கரையில் படகு கவிழ்ந்ததில் மூன்று வயது குழந்தை உட்பட காணாமல்போன ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு நடேசபதி வீதியை சேர்ந்த ஐந்துபேரே இவ்வாறு காணாமல்போயிருந்தனர். நேற்று பிற்பகல் 5.30மணியளவில் சொந்தங்களுடன் வள்ளத்தில் சென்ற 11பேர் ஓடையின் நடுப்பகுதியில் வைத்து வள்ளத்தின் தாங்கிக்கம்பு உடைந்த காரணத்தினால் வள்ளம் கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவர்கள் தத்தளிப்பதைக்கண்டு அவர்களை மீட்க பல்வேறு பிரயத்தனங்களை மே…
-
- 0 replies
- 493 views
-
-
Saturday, June 4, 2011, 14:07சிறீலங்கா வெளிநாடுகளில் வசிக்கும் கிழக்கு மாகாண மக்களின் விபரங்களை அங்கு நிலைகொண்டிருக்கும் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சேகரித்துவருவதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: கறுப்பு உடைகளுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வீடாக செல்லும் சிறப்பு அதிரடிப்படையினர் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பெயர் விபரங்களை பதிவு செய்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை (02) அதிகாலை 4.00 மணிமுதல் காலை 11.00 மணிவரை ஏறாவூர்பற்று பகுதியில் இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேலைவாய்பபுக்கள் இன்றி மத்தியகிழக்கு நாடுகளுக்குச் சென்ற தமிழ் மக்கள் தொடர்பான தகவல்களையும் சிறப்பு அதிரடிப்படையினர…
-
- 0 replies
- 749 views
-
-
Saturday, June 4, 2011, 13:29இந்தியா ஈழத்தில் நடைபெற்ற போர் இனப்படுகொலையே என்றும், இனப்படுகொலை குற்றவாளிகளான ராசபட்சே, அவன் கூட்டாளிகள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மதுரை வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்றம் முன் பதாகை நிறுவியுள்ளனர். , மேலும் மாநகர் முழுவதும் சுவரொட்டிகளும் ஒட்டி தங்கள் கோரிக்கையை வலிமையாக அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.மதுரை வழக்கறிஞர்கள். source:tamilthai.
-
- 0 replies
- 455 views
-
-
Saturday, June 4, 2011, 13:03சிறீலங்கா துப்பாக்கியால் சுட்டு மக்களை, கொலை செய்வதன் மூலம் தொழிலாளர் சக்தியையும், அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் இளைஞர் சக்தியையும் கட்டுப்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பல்கலைக்கழக சட்டபீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் நேற்றுமுன்தினம் சிறிகொத்தவில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: அரசு முறையாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் கட்டுநாயக்க சுதந் திர வர்த்தகவலயத்தில் கடமையாற்றிய ரொஷான் சானக்கவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும். அரசின் தான்தோன்றித்தனத்தால் இளைஞரின் மதிப்பார்ந்த உயிரை இழக்கவேண்…
-
- 0 replies
- 408 views
-
-
நேர்காணல் : ஐ.நாவுக்குள் மட்டுமல்லாது அதற்க்கு அப்பாலும் சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் ஆவணப்படம் ! ஜெனீவாவில் இடம்பெற்றுவருகின்ற ஐ.நாவின் மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், நேற்று வெள்ளிக்கிழமை (யூன்3) இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியிடம் ஓர் உரையாடல். கேள்வி : திரையிடப்பட்ட ஆவணப்படம் பற்றிய ஒரு குறிப்பைத் தாருங்கள் ? பதில் : ஆதரவுடன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சின் ஆவணப்படமாக அது அமைந்திருந்தது. அண்ணளவாக 50 நிமிடங்கள் ஓடக்ககூடியதாக அமைந்திருந்தது அந்…
-
- 2 replies
- 851 views
-
-
[saturday, 2011-06-04 06:55:51] பிரசெஸ்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் ஐக்கிய இடது/நோடிக் கிறீன் இடது தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேசமயம், இலங்கையிலுள்ள சகல சிறுபான்மையினரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வட,கிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கும் தளங்களை அரசாங்கம் மூடிவிட வேண்டுமெனவும் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் புதன்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஆங்கில இணையத்தளமொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் ஐரோப்பிய பாராள…
-
- 0 replies
- 585 views
-