Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் : பொதுத்தேர்தலுக்கான நிதி 2025 வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 01:01 PM ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என ஜனாதிபத ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை …

  2. Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 11:12 AM சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காதலர் தினத்தன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மனைவி அல்லது குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொடர்பான 37, 514 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய தொகைய…

  3. பெரிய வெங்காய ஏற்றுமதி மீதான தடையில் இருந்து இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை, இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக விலையில் வாங்குவதற்கு ஏனைய சந்தைகளை நாடுகிறார்கள். வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், இலங்கை போன்ற நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை இருமடங்காக உயர்ந்ததை அடுத்து, டிசம்பர் 8, 2023 அன்று ஏற்றுமதியைத் தடை செய்தது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கை முடிவை இந்தியா எடுத்துள்ளது. எவ்வாறாயினும், தடை செய்யப்பட்ட போதிலும் விசேட ஏற்பாடுகளின் கீழ் இந…

  4. இலங்கையில் ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை 135000 ஆக இந்த வருட இறுதிக்குள் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 150000 இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கப்படும் என கடந்த ஆண்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார். 2030 ஆண்டில் இராணுவத்தின் எண்ணிக்கை இதற்கமைய, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவ படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி கொள்கைகளின் அ…

    • 5 replies
    • 611 views
  5. ஹரிஹரன் இசை நிகழ்ச்சி - குழப்பம் - குற்றச்சாட்டு - விளக்கம் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு யார் காரணமென விளக்கமளித்துள்ள நொதேர்ண் யுனியின் (NORTHERN UNI) தலைவர் இந்திரகுமார் பத்மநாதன், பணம் செலுத்தி இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் விரும்பினால் பணத்தை மீளப்பெற முடியும் என்று அறிவித்துள்ளார். https://newuthayan.com/article/ஹரிஹரன்_இசை_நிகழ்ச்சி_-_குழப்பம்_-_குற்றச்சாட்டு_-_விளக்கம்

  6. Published By: RAJEEBAN 06 FEB, 2024 | 10:33 AM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் கடும் கரிசனைகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்ற சூழ்நிலையில்; புதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சபாநாயகர் மகிந்தயாப்பா அபயவர்த்தன சமீபத்தில் அந்த சட்டமூலத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். புதிய சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது எதிர்காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்துறை வல்லுனர்கள் உட்பட பல தரப்பினர் கரிசனைகளை வெளியிட்டுள்ள போதிலும் அரசாங்கம் புதிய …

  7. யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்! பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்களான சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368978

  8. Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 02:50 PM அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜெய்கா (JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் ,அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , JICA தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் சற்றுமுன்னர் திறந்துவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/176443

  9. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு LED தொலைக்காட்சிகளும் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் சாதனைகள் நிகழ்த்திய தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/291896

  10. Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 04:19 PM பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மாணவன் ஒருவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (14) இந்த மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இதுகுறித்து ஆசிரியர்கள் அவரிடம் கேட்டபோது, பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான வீதியில் வைத்து தான் கசிப்பு அருந்தியதாக கூறினார். இதனையடுத்து அந்த மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தான் கசிப்பு அருந்தியதனை குறித்த மாணவன் வைத்தியசாலையில் கூறியதன் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக…

  11. Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 03:28 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/176451

  12. கம்பஹாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் பல்வேறு தரப்பினரிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் கம்பஹா – வேபட பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்த தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி என்பன குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. https://thinakkura…

  13. மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதாவுல்லாவுக்கு என்ன வேலை- இரா.சாணக்கியன் எம்.பி பிப்ரவரி 15, 2024 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா வந்து கலந்து கொண்டு மாவட்ட பிரச்சினைகளை பேச விடாது தடுக்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், அதாவுல்லா எவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள…

  14. Published By: NANTHINI 15 FEB, 2024 | 11:14 AM சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு 10 ஆயிரம் முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவிக்கையில், 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலத்தில் 9,434 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன. அவற்றில் குறிப்பாக, 2,242 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 472 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 404 முறைப்பாடுகள் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 51 முறைப்ப…

  15. 14 FEB, 2024 | 04:42 PM எமது நாட்டிற்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, மலையகம் மற்றும் தென் பகுதிய பெருந்தோட்டத் துறையில் உள்ள சமூகத்துடன் இன்று ஒரு முக்கியமான சமூக உடன்படிக்கையை மேற்கொள்ள முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதற்கென தனியான ஜனாதிபதி செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு, மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார, சமூக ரீதியான அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புத் துறையில் உள்ள பிரச…

  16. Published By: VISHNU 15 FEB, 2024 | 01:43 AM (எம்.ஆர்.எம்.வசீம்) மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அதிகரிக்கப்பட்ட வற்வரி இன்னும் சில மாதங்களில் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அத்துடன் தற்போதுள்ள ஆட்சி முறையில் செல்வதா மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பதே மக்களுக்கு இருக்கும் சவாலாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (14) இ்டம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொரு…

  17. Published By: VISHNU 11 FEB, 2024 | 06:17 PM வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்தகுருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது. வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து…

  18. Published By: RAJEEBAN 14 FEB, 2024 | 10:51 AM உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மனித உரிமைகளிற்கான அமைச்சுகள் இடையிலான குழுவின் ஆரம்ப அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளுடன் ஈடுபாட்டை தொடரும் அதேவேளை உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் குறித்த அமைச்சுகள் மத்தியிலான நிலையில் குழுவை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளமை மனித உரிமைகளை உறுதி செய்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்த அர…

  19. தமிழரசு கட்சியின் தலைவருக்கு கனேடிய தூதுவர் வாழ்த்து. நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன், கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவ…

    • 1 reply
    • 643 views
  20. அழகு நிறைந்த ஃபிளமிங்கோ பறவைகள்! Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 10:32 AM “ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதாக அறியப்படுகிறது. இவ்வாறு இடம்பெயரும் பறவைகளுள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை ஃபிளமிங்கோ ஆகும். தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன. இடம்பெயர்ந்த காலம் எப்போதுமே பார்வையாளர்களுக்கு ஒரு உற்சாகமான நேரமாக உள்ளது, அவர்கள் மன்னாரின் ஈரநிலங்களில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக செலவழிக்கும் அழகான மற்றும்…

  21. யாழ் A9 வீதியில் மோட்டார் சைக்கிள் - அரச பேருந்து விபத்து Published By: VISHNU 14 FEB, 2024 | 06:32 PM யாழ்ப்பாணம் - தென்மராட்சி - A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் புதன்கிழமை (14) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அதில் பயணித்த இருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் …

  22. Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 04:13 PM (இராஜதுரை ஹஷான்) மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களை காட்டிலும் தற்போது முன்னிலையில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முன்னேற்றத்தை ஏற்க முடியாத மனநிலையில் ஒருசில அரசியல் தரப்பினர் இல்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டார். கொழும்பில் புதன்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் 'மக்கள் விடுதலை முன்னணியின் முன்னேற்றம்' தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இட…

  23. நாளை முதல் இலங்கையில் UPI கட்டணமுறை! இந்திய, இலங்கை மற்றும் மொரிஷியஸ் தலைவர்கள் இணைந்து ஆரம்பிப்பர் Published By: VISHNU 11 FEB, 2024 | 10:01 PM இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர். Unified Payment Interface (UPI) என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத…

  24. Published By: VISHNU 14 FEB, 2024 | 08:17 PM யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று புதன்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/176396

  25. ஜனாதிபதி நிதியத்திற்காக (https://www.presidentsfund.gov.lk) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளத்தின் அங்குராப்பண நிகழ்வு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இந்த மைல்கல், மருத்துவ உதவிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்குவதற்கான விருப்பத்துடன், ஜனாதிபதியின் நிதியத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை மூன்று மொழிகளிலும் பொது அணுகலை வழங்குகிறது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத் குமார், ஜனாதிபதி நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் கயான் மொரலியகே மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். https://thinakkural.lk/article/291781

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.