Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் விளையாட்டாகி விளையாட்டு அரசியலாகியது:- உலகக் கிண்ணத்தோடும் நாமல் உட்பட இலங்கை அணியுடன் இணைந்து நாடு திரும்ப முயன்ற மகிந்த-வெறும்கையுடன் இலங்கை சென்றார் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை காண சென்றிருந்த, ஜனாபதிபதி மகிந்த ராஜபக்ஷ, இன்று அதிகாலையிலேயே நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 3.05 அளவில் அவர் நாடு திரும்பினார். இம்முறை உலகக் கிண்ணத்தை இலங்கை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உலகக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு இலங்கை அணியுடன் நாடு திரும்ப ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். இதில் தனது அரசியல் வாரிசான மகன் நாமால் ராஜபக்ஷவையும் இணைத்துக்கொள…

  2. வைகோ தொடங்கி வைக்கிறார் தமிழருவி மணியன் கையெழுத்து தமிழக தேர்தலில் நம் கடமை என்ன ? – தமிழருவி மணியன் மக்கள் கருத்து

  3. உலகிலேயே மிகப்பெரிய புத்தர்சிலை வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது என நாம் அறிகின்றோம். எமது நகரசபையின் எல்லைக்குள் அந்தச் சிலை அமைக்கப்படுவதாயின் எமது சபையின் அனுமதி பெற்றே அது அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்ததின நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா வில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ரதன் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியவை வருமாறு: "இலங்கைத் தமிழரசுக் கட் சியின் ஸ்தாபகரும், தமிழ் இனத்தின் தந்தையுமான தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இன்றைய நாள் தமிழினத்துக்கு முக்கியத் துவம் வாய்ந்த ஒரு…

    • 0 replies
    • 1.3k views
  4. 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு 24 மணித்தியாலங்கள் இருந்த நிலையில் மும்பாய் சித்ராபட் விமான நிலையத்தில் வைத்து உலகக் கிண்ணத்தில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கவிருந்த கிண்ணம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட வரிப் பணத்தை செலுத்தாததன் காரணமாகவே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கிண்ணம் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிண்ணம் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு வழங்கவுள்ள உண்மையான கிண்ணம் கிடையாது எனவும் அது காட்சிக்காக வைக்கபடவுள்ள கிண்ணமே எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அறிவித்துள்ளது. இந்நிலையில் கிண்ணத்தை மீண்டும்…

    • 0 replies
    • 1.8k views
  5. மாங்குளத்தில் புலிகளின் 39 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 03 ஏப்ரல் 2011 மாங்குளத்தில் புலிகளின் 39 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மாங்குளம் - நத்தன்கண்டால் வனப் பிரதேசத்;தில் பொதியிட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உரித்தானது என என கருதப்படும் 39 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக லங்கை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே நேற்று இந்த படகுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நத்தன்கண்டால் பிரதேசத்தில் அடர்ந்த காட்டில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு பொதியிடப்பட்டி…

    • 1 reply
    • 1.1k views
  6. வன்னி இறுதிப் போரின் யுத்தக் குற்றங்கள் குறித்த ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை இம்மாதம் வெளியாகிறது: ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை வருகை [sunday, 2011-04-03 03:52:57] வ்ன்னி இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்வதற்கான ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் பகிரங்க அறிக்கையாக வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ் அறிக்கையின் பிரதி முதலில் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பெப்ரவரி மாத இறுதியில் சமர்ப்பிப்பிக்கப்படும் என முன்னர் எதிர்பார…

  7. ஈழமும் இந்தியாவும்-14:றோ அதிகாரியை சந்திக்க அவசரமாக தமிழகம் வந்த பிரபாகரன் இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஈழப் போராளி அமைப்புக்கள் அனைத்தினதும் தலைமையைத் தான் எடுத்துக்கொள்வதற்காக சந்திரஹாசன் வகுத்துவைத்திருந்த திட்டம் அன்டன் பாலசிங்கத்துக்கு பெரும் சீற்றத்தைக் கொடுத்தது. இது சந்திரஹாசனின் திட்டமாக மட்டுமன்றி றோவின் ஒரு பகுதியினரும் இதனை விரும்பியிருப்பதற்கான ஏதுநிலைகளும் காணப்பட்டன. தமது போராளிகள் அனைவரையும் சந்திரஹாசனின் சுயநல நோக்கங்களுக்காக பலியிடுவதற்கு அவரது மனம் இடம்கொடுக்கவில்லை. அதனால், அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உடனடியாகவே மறுதலித்த பாலசிங்கம், அவ்வாறான ஒரு நிபந்தனைக்கு உட்பட்டதாகத்தான் இந்திய ஆயுதப் பயிற்சித் திட்…

  8. செலக்டிவ் அம்னீசியாவும் ஈழத்தமிழர்களும் ச.ச.முத்து பாவம் சோனியாகாந்தி!, போனவாரம் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்னர் அவருக்கு சிறீலங்காவில் ஈழத்தமிழினம் என்ற ஒன்றே இருப்பது தெரியாது! பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் உரையாற்ற இங்கிலாந்து வருவதற்கு முதல் அவருக்கு இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்துக்கு நடைபெறும் எந்தவொரு அநீதியும் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.பாவம் அவர்.1987முதல் 1989வரை தமிழீழமண்ணில் கொடும் பாலியல் வல்லுறவுகளும்,கொலைகளும் நடாத்தி காட்டாட்சி செய்த இந்தியஅமைதிப்படையைப்பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை சரி அதைவிடுவோம்.அதற்குபிறகுதன்னும் இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழவிடுதலைப்போராட்டத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்காக தமிழ்நாட…

  9. சாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் – இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள் April 1st, 2011 வன்னிச் செய்தியாளர் என்ட கண்ணீர் இவங்கள விடுமே? என்ட சாபம் இவங்கள விடுமே? என்கிற வார்த்தைகளால் பிள்ளைகளைக் குறித்து ஈழத்து தாய்மார் தந்தைமார் இடும் சாபம் நெஞ்சை எந்தளவு வலிக்க வைக்கிறதோ அந்தளவு குற்றம் இழைத்தவர்களின் மீது அந்த வார்த்தைகள் சாபமாகவும் விழுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்து தாய்மார்களும் தந்தைமார்களும் ஒட்டுமொத்த உறவகளும் நாளும் பொழுதுமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபங்கள் வதை நடந்த சமகாலத்திலேயே பழி வாங்குவதைப்போல சம்பவங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இசைப்பிரியா குறித்த காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரச படைகளும் அதன…

  10. இலங்கையில் திரவ பெற்றோலிய வாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் திரவ பெற்றோலிய வாயுவின் விலை, அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, பெற்றோலின் விலை பத்து ரூபாவாலும், டீசலின் விலை 3 ரூபாவாலும், மண்ணென்ணெயின் விலை பத்து ரூபாவலும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று திரவ பெற்றோலியத்தின் விலை, சிலிண்டர் ஒன்றுக்கு 238 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ், மற்றும் லிற்றோ நிறுவனங்கள் அறிவித்தன. (Laugfs ) (litro) சிலிண்டர் ஒன்றின் விலை, 1890 ரூபாவாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் பெற்றோலியத்தின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நுகர்வொர் விவகார அதிகாரசபை அறிவித்தது. http://thamilfm.c…

    • 1 reply
    • 1.1k views
  11. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை விமான நிலையத்தில் கறுப்பு கொடி காட்டப்படும் என்று நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதேப்போன்று மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவரை கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காக பாகுபாடு இன்றி கலந்து கொள்ளவேண்டும். இன்று விமான நிலையத்தில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டப்படும். மேலும் அவருடைய உருவ…

    • 2 replies
    • 1.4k views
  12. இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! - சொல்கிறார் ராஜபக்சே சனிக்கிழமை, ஏப்ரல் 2, 2011, 12:33[iST] திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார். மும்பையில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய போல…

    • 2 replies
    • 1.3k views
  13. தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டே இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த [saturday, 2011-04-02 10:12:41] வடபகுதியில் உள்ள சகல அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் நீக்கி,வட மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார் என திவயின கூறியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, இந்த யோசனைகளை முன்வைக்க இருந்தது. வடபகுதிக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அரசாங்கத்தின் எந்த ஒரு அரசியல்வாதிக்கும், பலாலி விமான நிலையம் ஊடக யாழ்ப்பானத்திற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்க…

  14. தமிழ்த் தேசிய எச்சங்களைச் சிதைக்கும் முயற்சியில் பொபி – வித்தியாதரன் கூட்டுச் சதி! April 1st, 2011 யாழ் செய்தியாளர் போராட்டப் பின்னடைவின் பின்னர் எமது தேசம் மறுமுகங்கள் பலவற்றை நாளாந்தம் கண்டுகொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அதிகாரப் போட்டி, சுயநலம், மாவீரர்களைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவது, விடுதலைப் போராட்டத்தினை விமர்சிப்பது என்ற போர்வையில் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது என்று பலரது மறுமுகங்கள் வெளிப்பட்டவண்ணமே உள்ளன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் சுவடுகளைப் பின்பற்றி அரசியல் செய்யத் தலைப்பட்ட சிலரது முகங்களை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு உணரப்பட்டமையாலும், சரியான ஆதாரங்கள் கிடைக்கப்…

    • 0 replies
    • 1.9k views
  15. சனிக்கிழமை , ஏப்ரல் 2, 2011 யாழ். சாவகச்சேரி வாரிவானேஸ்வரர் ஆலயக் திருக்குளத்திலிருந்து பன்னிரண்டு இந்து விக்கிரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளதாவது, சாவகச்சேரி நீதிமன்ற வளவில் புராதன ஆலயத்திற்குரிய கட்டிட அழிபாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து அவ் ஆலயம் பற்றிய பல தகவல்கள் அவ்ஊர் மக்களால் தினமும் வழங்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆலய முகாமையாளரால் தரப்பட்ட தகவல்கள் எமது ஆய்வை மேலும் முன்னெடுத்துச் செல்ல தூண்டுதலாக உள்ளன. அவரது தகவல்களின்படி நகரத்திலுள்ள நீதிமன்றம், சந்தை மற்றும் அதன் சுற்றாடல்களில் கிடைத்த விக்கிரகங்களே ஆரம்ப காலங்களில் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆல…

  16. கொழும்பில் நடந்த சிறீலங்கா - நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் சிங்களவர்களை அதிகம் கொண்ட சிறீலங்கா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை அடுத்து எழுந்த சூழலை காரணம் காட்டி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்கியதுடன்.. சிறீலங்கா பாதுகாப்புப் படை பல்கலைக்கழக அத்துமீறலையும் செய்ததை அடுத்து கிழக்குப் பல்கலைக்கழக அனைத்துப் பீட தமிழ் மாணவர்களும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் காரணம் காட்டி கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. சிறீலங்கா சிங்களப் பேரினவாத கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தருவோரே உங்கள் நிலைப்பாடு குறித்து.. சிந்தியுங்கள். Eastern University closed down indefinitely [Ta…

    • 39 replies
    • 3.9k views
  17. தனியார் துறையிலும் ஓய்வூதியம்: மேயிலிருந்து அமுல் என்.சிவரூபன் தனியார் மற்றும் கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களிற்கும் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. இந்த புதிய திட்டம் வரும் மே மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் என தெழிலாளர் மற்றும் உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார். தெழிலாளர் மற்றும் உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய திட்டங்களால் நன்மைகளை பெறுகின்றனர். இவற்றுடன் புதிதாக ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளது. …

  18. வடக்கில் அடுத்த மோதலுக்கான வழியை ஏற்படுத்தல் 02 ஏப்ரல் 2011 யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் ஆவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ளன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததைக் கொண்டாடுவதற்கான அரச விழாவை ஏற்பாடு செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எனினும், வடபகுதி தகவல்களை ஆராய்ந்து பார்த்த சுயாதீனமான விமர்சகர்கள் வெற்றி விழாவைவிட கவலைக்குரிய விடயங்களும் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடபகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது. இதன் மூலமும் வேறொரு அரசியல் தோற்றத்த…

  19. அரச வைத்தியசாலைகளில் கட்டணம் அறிவிடும் தனியார் சேவையை ஆரம்பிக்கவுள்ள அரசு! சனி, 02 ஏப்ரல் 2011 08:54 அரச வைத்தியசாலைகளில் கட்டணம் அறிவிட்டு சேவை வழங்கும் வாட் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலைகள் பொதுமக்களிடம் அசாதாரணமான முறையில் கட்டணங்களை அறவிடுவதுடன், அவற்றுக்கென நிலையான கட்டண முறையொன்று இல்லை. இதனால் அரச வைத்தியசாலைகளில் தனியார் வாட்டுக்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இந்த முறை இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் செய…

  20. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி தமிழ் மக்கள் ஒன்றுமே செய்யமுடியாது: இயற்கைக் கடன் கழிக்கவும் அனுமதி பெறவேண்டி வரலாம் என எச்சரிக்கிறார் அருட் தந்தை தமிழ்மக்கள் எதைச் செய்வதென்றாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. இதுவே யதார்த்தமாகும். இதனைத் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நல்லூர் பங்குத்தந்தை அருட்பணி ஐ.டி.டிக்சன் தெரிவித்தார். நல்லிணக்கத்துக்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பங்குத்தந்தை இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் த…

  21. ஈழத்தமிழர்களின் ஒரே போராட்ட வலுவாக இருந்த அவர்களின் இராணுவ வலிமையை முறியடிக்க 2006 இல் இருந்து பெரும் முனைப்புக் காட்டியுள்ளது அமெரிக்கா. இதற்காக இரண்டு குழுக்களையும் அது நியமித்திருக்கிறது. அவற்றிற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்த நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் பணப் பரிவர்த்தனைகள்.. ஆயுதப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. அதுமட்டுமன்றி.. ஏதாவது ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்க ராஜபக்சவையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்தத் தீர்வுத் திட்டங்கள் தமிழர்கள் விரும்புவதை வழங்காது என்றும் அமெரிக்கா இந்தியா அறிந்திர…

    • 3 replies
    • 1.3k views
  22. லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை’ கண்டித்து இலங்கையில் கிழக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு ஏறாரில் இன்று வெள்ளிக் கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்பு மீரா ஜூம்மா பள்ளிவாசல் முன்பாக கூடிய முஸ்லிம்கள் பிரதேச செயலகம் வரை பேரணியொன்றை நடத்தினார்கள. மேற்குலக நாடுகள் லிபியாவில் தொடுத்துள்ள வான் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த தாக்குதல்களை நிறுத்தக் கோரி மகஜரொன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக பிரதேச செயலாளரிடம் கையளித்தனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பி…

    • 0 replies
    • 1.1k views
  23. Started by akootha,

    எப்ப விடுதலை? யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வ…

    • 0 replies
    • 1.4k views
  24. முன்னாள் புலிப் ​போராளிகள் விடுதலை இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் இறுதிச் சண்டைகளின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 206 பேர் கொண்ட மேலும் ஒரு தொகுதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை வவுனியாவில் வைத்து குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார்கள். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆயினும் விடுதலையை எதிர்பார்த்து புனர்வாழ்வு நிலையங்களில் இருப்பவர்கள் மிகுந்த மனத்துயரத்திற்கு ஆளாகியிருப்பதாக விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார். வீட்டுத் தலைவனின் உதவியின்ற…

  25. விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்கவுள்ள அரசு! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 20:54 தமிழீழ விடுதலைப் புலிகளினால் யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்களை பிரசித்தமான ஏலத்தில் விட்டு விற்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட 50 கனரக வாகனங்களை ஏலத்தில் விற்க அரசு தீர்மானித்துள்ளது. இதேவேளை இந்த கனரக வாகனங்கள் விடுதலைப் புலிகளுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனால் இந்த கனரக வாகனங்களை குறித்த அரசசார்பற்ற நிறுவனங்கள் இதுவரை உரிமை கோராத நிலையில் அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சியில் உள்ள உயர் அதிகா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.