ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11 ஆம் திகதி வழிகாட்டல்கள் வெளியிடப்படும் என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/282287
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
24 NOV, 2023 | 01:27 PM அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும் வைத்தியசாலைக்கு திட்டமிட்டபடி வராததால் வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் அவரது தொலைபேசிக்கு பலமுறை அழைத்தனர். இருப்பினும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வைத்தியசாலையைச் சேர்ந்த இரு தாதிகள், குறித்த டாக்டர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளனர். அதன்போது குறித்த வைத்தியர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் நில…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
நினைவேந்தலுக்கு எதிராக தடையுத்தரவு! சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சம்பூர் பொலிஸாரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை வழங்குவதற்காக இன்றைய தினம் சம்பூர் பொலிஸார் துயிலுமில்லத்துக்கு வருகைதந்து குறித்த தடையுத்தரவுகளை வழங்க முற்பட்ட போது தடையுத்தரவில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் தவறாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தம்முடைய பெயர்களை அடையாளப்படுத்தக…
-
- 0 replies
- 213 views
-
-
”மீனவர் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்” இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்திய மீனவப் படகுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடற்படையின் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அ…
-
- 0 replies
- 261 views
-
-
24 NOV, 2023 | 09:36 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இடையில் பல்வேறு காரணங்களால் அது சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது என நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்றக்கூடிய 6000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மொழி பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் மூலம் தமிழ் மொழியில் சேவையாற்ற கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள்க…
-
- 1 reply
- 298 views
- 1 follower
-
-
”வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்”: கஜேந்திரகுமார் ஆதங்கம்! வடக்கு, கிழக்கிற்கு என்று வரவு செலவுத் திட்டத்தில் தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அதன்போது மேலும் கூறியுள்ளதாவது, குறித்த பிரதேசம் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுடைய பொருளாதாரத்துடன் போட்டி போட முடியாத நிலையாக உள்ளது. ஆனாலும் எந்த விதத்திலேயும…
-
- 2 replies
- 267 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 23 NOV, 2023 | 05:06 PM (நா.தனுஜா) மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மிகமோசமாக மீறப்பட்டிருக்கின்ற போதிலும், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் பிரகாரம் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகள் மற்றும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிபந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு கடந்த 2020 - 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் என்பவற்றை உள…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 23 NOV, 2023 | 04:49 PM (நா.தனுஜா) ஆட்கடத்தலை முற்றாக முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய குறைந்தபட்ச தராதரங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றது. 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆட்கடத்தல் நிலைவரம் குறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஆட்கடத்தலை முற்றாக முடி…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
23 NOV, 2023 | 10:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காஸா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லாமையே காரணமாகும் அதனால் அங்கு அரசியல் தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இலங்கையிலும் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் ரவூப் ஹக்கீம் காஸா தொடர்பாக ஆற்றிய உரைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
யாழில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்து, இளைஞர் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர். கண்காணிப்பு கமராக்களில் சிக்கிய நபர் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்கள…
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
ஜூலி சங்கிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் - சந்திம வீரக்கொடி Published By: VISHNU 22 NOV, 2023 | 09:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங்கிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தேவையற்ற பரிந்துரைகள் இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும். குழுவின் தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. முறையான விசாரணைகளை முன்னெடுங்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான சந்திம வீரக்கொடி சபா…
-
- 3 replies
- 537 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுடன் கூட்டமைப்பையும் ஒழித்திருக்க வேண்டும் : சரத் வீரசேகர! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும். இந்தக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர்கள் முதன் முதலாக பிரபாகரன் முன்னிலையில் தான் சத்தியப்பிரமாணம் செய்துக் …
-
- 7 replies
- 418 views
- 1 follower
-
-
Published By: VISHNU 23 NOV, 2023 | 05:13 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். இலங்கையிலிருந்து புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும் துடிப்புடன் உள்ளார்கள் செயற்படுகிறார்கள். இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா? என்பதை ஆராய வேண்டும். மாவீரத் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். ப…
-
- 2 replies
- 235 views
- 1 follower
-
-
மாணவர்களைப் பொலித்தீனை உட்கொள்ள வைத்த அதிபர் இடமாற்றம்! லன்ச் சீட் இல் கொண்டு வந்த உணவை லன்ச் சீட் உடன் உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்திய பாடசாலை அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேறு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இந்த விடயத்தை குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், “உணவை உண்ட பின்னர் குறித்த லன்ச் சீட் மற்றும் பத்திரிகைகளை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக தங்களின் பாடசாலை பைகளில் வைத்திருந்த போதும் அதிபர் அவைகளை எடுத்து உட்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்திற்கு முகங்கொடுத்…
-
- 3 replies
- 482 views
-
-
கிளிநொச்சியில் ஒட்டப்பட்ட பதாகைகளால் பரபரப்பு! கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்” என தலைப்பிட்டு, குறித்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், மகேஸ்வரன் மற்றும் எழுத்தாளர்கள் எனப் பலரது புகைப்படங்கள் குறித்த பதாகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1360366
-
- 9 replies
- 916 views
-
-
அடுத்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்ட உரை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (13) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நிதி அமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு (ஞாயிறு தவிர்ந்த) விவாதம் நடைபெறும் என பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார் . வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இம்மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி …
-
- 16 replies
- 1.2k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 23 NOV, 2023 | 05:16 PM சிறுவர்கள் மத்தியில் கை, கால் மற்றும் வாய் நோய் (hand, foot and mouth disease (HFMD)) பரவி வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அல்லது பொது இடங்களுக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், சிறுவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகக் கவசங்களை அணிவிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக சிறுவர்கள் அழுவது அதிகரித்து வருவதாக வைத…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார். "அரசியல்வாதிகளுக்குப் பிறகு, அதிகம் விமர்சிக்கப்படுபவர்கள் பொலிஸார். அதுபோல வரலாற்றில் அரசியல்வாதிகளால் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிறுவனம் என பார்த்தால் அது காவல்துறைதான். அது குறித்து நாம் கதைக்க வேண்டும்" “அக்டோபர் 13 ஆம் திகதி முதல் 40 நாட்களாக இராணுவப் படைத் தலைவர் (இரண்டாம் நிலை) பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் படைகளுக்குள் சிக்கல் எழுந்துள்ளது. இது வரலாற்றில் முத…
-
- 3 replies
- 321 views
- 1 follower
-
-
சீனா உட்பட எந்தவொரு நாட்டிலிருந்தும் எந்தவொரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலையும் இலங்கை வரவேற்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய நிறுவனமான FirstPost க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். சீனாவின் யுவான் வாங் 5 மற்றும் ஷி யான் 6 ஆகிய கப்பல்கள் அண்மையில் மேற்கொண்ட துறைமுக அழைப்புகளுக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க,அந்தக் கப்பல்கள் உளவு கப்பல்கள் என கூறுவதற்கு ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளார். “உளவு கப்பல் என்றால் என்ன என்பது பெரிய கேள்விக்குறி. இவை சிவிலியன் கப்பல்கள், ஆனால் சிக்கல்கள் இருந்தால், உளவு கப்பல்கள் இருந்தால், அவற்றை உள்ளே வர அனுமதிக்கமாட்டோம். ஆனால் ஆய்வைப் பொருத்தவரை, நாங்கள் அனுமதிப்பது மட்டுமல்ல. சீன கப்பல்கள், ஆனால் ஏனைய கப்பல்கள…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது தெரிவித்துள்ளார். . ராஜபக்சக்கள் தமது செயற்பாடுகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டுமா என வினவியபோது, அது அவர்களுக்கே உரியது எனவும், அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக தாம் நம்புவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க “அவர்களின் காலத்தில் நெருக்கடி ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியையும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்தபோது, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் சரிந்தது. நாட்டை பொறுப்பேற்க வேண்டிய எதிர்க்கட்சிகள் பொறுப்பில் இருந்து நழுவின ,” என்றும் தெரிவித்துள்ளார். தான் ராஜபக்ஷக்களை பாதுகாப்பதாக விமர்…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
Published By: VISHNU 23 NOV, 2023 | 01:56 PM யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள காணி ஒன்றினை வெளிப்படுத்தல் உறுதி மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றத்திலையே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அண்மையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்த வேளை , தனது காணிக்கு சென்ற போதே , காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையை …
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு கொடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்! வட்டுக்கோட்டைப் பொலிஸார் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும், அவரது நண்பர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் சசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அதிருப்தி தெரிவித்த அயல் வீட்டார் மீது குறித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், அன்றைய தினம் இரவு முறைப்பாடு அளித்த…
-
- 2 replies
- 344 views
- 1 follower
-
-
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்…
-
- 21 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கையில் மிகப்பெரிய புத்தர் சிலையை அமைக்க உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க், இந்த உறுதிமொழியை பிரதமரிடம் வழங்கியுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே சேன் யிங்க் இவ்வாறு பிரதமரிடம் கூறியுள்ளார். இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்றும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் பிரதமர், இந்த சந்திப்பில் ச…
-
- 3 replies
- 633 views
- 2 followers
-
-
மாவீரர் வாரம் ஆரம்பம் : யாழ் பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி. மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதேவேளை உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நினைவு வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்கள…
-
- 3 replies
- 488 views
-