ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
தமிழை ஒழுங்காக பேசத் தெரியாதவர்களே புலம்பெயர் தமிழர்கள்! மஹிந்தர் நையாண்டி தமிழ் மொழியை சரியாக பேசத் தெரியாதவர்களே தம்மை புலம்பெயர் தமிழரென கூறிக்கொண்டிருக்கிறார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் மக்களுடனான கலந்துரையாடலை நேற்று நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மொழியில் சரியாக பேசத் தெரியாமல் தம்மை புலம்பெயர் தமிழர் எனக்கூறிக் கொண்டு எமது நாட்டைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். புலம்பெயர் தமிழர்கள் என்பது தவறான வசனமாகும். இது இவர்களுக்கு பொருத்தமில்லை. இவர்களில் பெரும்பாலானோர் இந்த நாட்டில் காலடி வைத்ததுமில்லை. அவர்களுக்கு இங்குள்ள ஊர்களின் பெயர்களும் சரியாக தெரியாது. தமிழையும் ஒழுங்…
-
- 0 replies
- 2k views
-
-
Friday, 11 March 2011 23:08 வான் ஒன்றில் கொண்டுவரப்பட்டு விடப்பட்ட மனநிலை குன்றிய தமிழ் இளைஞன் மீட்பு: பொலிஸார் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் வான்ஒன்றில்; கொண்டுவந்து விடப்பட்ட மனநிலை குன்றிய நிலையில் உள்ள தமிழ் இளைஞர் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்களால் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று மனித உரிமைகள் இல்லத்திடம்; அடையாளம் காண்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில பலர் கடத்தப்பட்டு காணமல் போயுள்ளனர். இந்நிலையில் பொத்துவில் பிரதேச பிள்ளையார் ஆலைத்தடியில் கடத்தப்பட்டகாணாமல் போயுள்ள சிலரை வான் ஒன்றில் கொண்டுவந்து விடப்படடள்ளதாக காணாமல் போயுள்ளோரின் பெற்றேரும் மற்றும் உறவினர்களுக்கு கிடைத்துள…
-
- 0 replies
- 849 views
-
-
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவே புலிகள் தொடர்பாகப் பிரதமர் புரளி: மங்கள சாட்டை அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்து வதற்காகவே தமிழ் நாட்டில் புலிகள் பயிற்சி பெறுகின்றனர் என்று பிரதமர் நாடாளுமன்றில் கூறினார். இப்படி ஐ.தே.க.எம்.பி. மங்கள சமரவீர நேற்றுக் கூறினார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: இந்தியாவின் தமிழ்நாட்டில் புலிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றில் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது கூறினார்.இந்த விடயம் இந்தியாவுக்குத் தெரியுமா? இந்தியாவில் மிகவும் பலம் வாய்ந்த புலனாய்வு…
-
- 0 replies
- 765 views
-
-
தமிழ் ஆயுதக் குழுக்கள் எவற்றிடமும் ஆயுதங்கள் இல்லை என்றால் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் படையினருக்கு எதிரானவையாகவே இருக்கும் : அமைச்சர் விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு சரவணபவன் எம்.பி. சபையில் சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் முறையற்ற கருத்தைத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சபையில் வைத்தே முறையான சாட்டையடி வழங்கினார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதைப் பொலிஸ் மா அதிபர் ஆதாரத்துடன் தெரிவிக்கும் போது அமைச்சருக்கு மட்டும் அது எப்படி சோடிக்கப்பட்ட வித்தையாகத் தெரிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ""உண்மை ஒன்…
-
- 0 replies
- 729 views
-
-
சர்வதேசத்தால் மட்டுமே தமிழினத்திற்கு உதவ முடியும் குறை கூறுதல், குழப்பம் செய்தல், பதவிகளுக் காக எதையும் இழத்தல், குற்றம் சாட்டுதல் ஆகிய இயல்புகள் எங்கள் தமிழினத்தில் அதிக மாகவுள்ளதென்னும் உண்மையைச் சொல்லித் தானாக வேண்டும்.ஒற்றுமைப்பட்டு எதையும் செய்ய முடியாத நிலை அரசியலில் மட்டுமல்ல சாதாரண சன சமூக நிலையங்களிலும் அதுவே நிலைமை யாகவுள்ளது. இதன் காரணமாகவே கடந்த முப்பது ஆண்டு கால உரிமைப் போராட்டம் இருந்ததையும் இழந் ததாக முடிபடைந்து போனது. இப்போது கூட தமிழினத்தின் உரிமை பற்றி சிந்திப்பதற்கு யாருமே இல்லை. மாறாக பொய்யு ரைகள், புளுகுரைகள் மூலம் மீளவும் தமிழ் மக் களை ஏமாற்றி சீவியம் நடத்தும் சின்னத்தனம் தலைவிரித்தாடுகின்றது.விரைவில் நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல…
-
- 2 replies
- 1k views
-
-
இடம்பெயர் மக்களுக்கு உணவு அமெரிக்கா உணவு நிவாரணம் வழங்கியுள்ளது யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அமெரிக்கா உணவு நிவாரணங்களை வழங்கியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் தனது அபிவிருத்தி முகவர் நிறுவனமான யூஎஸ் எயிட் நிறுவனத்தின் ஊடாக இந்த உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இடம்பெயர் மக்கள் மீள் குடியேறுவதற்கு உதவியளிக்கும் நோக்கில் யூஎஸ் எயிட் நிறுவனம் 4.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. உலக உணவுத் திட்டம் இந்த உதவிகளை மக்களுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. கோதுமை மா, பருப்பு, மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. அமெரிக்க அரசாங…
-
- 1 reply
- 750 views
-
-
ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம் [Friday, 2011-03-11 03:51:15] தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக வெளியான தகவல் தவறானது. ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் ஸ்ரீ விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் மூன்று இடங்களில் செயல்பட்டு வருவதாக, இலங்கை பிரதமர் கூறியுள்ளார். ஆனால், இலங்கை அரசு தெரிவித்துள்ளது போல், தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் எதுவும் செயல்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலை உறுதியாக மறுக்க…
-
- 2 replies
- 962 views
-
-
ஆஸி.செல்லத் தயாராகவிருந்த வடக்கு,கிழக்கைச் சேர்ந்த 58 பேர் கைது: சிலாபத்தில் படகு மீட்பு [Friday, 2011-03-11 16:14:05] சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 58 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.நீர்கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பிரதேங்களிலேயே இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக முறையில் படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சுமார் 58 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 40 ஆண்கள்,12 பெண்கள் மற்றும் 6 குழந…
-
- 1 reply
- 910 views
-
-
கடந்த 30 வருடகாலத்தில் பிரபாகரன் தான் ஒரே ஒரு சிறந்த கெரில்லா தலைவர். அதைவிட சேகுவேராவிற்கு பின்னர் அவரைத்தான் சிறந்த உலகில் கெரில்லா தலைவராக என்னால் உணரமுடிகின்றது என கூறியுள்ளார் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப். இந்திய ஊடகம் ஒன்றிற்கான செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றினை எழுத தனக்கு பிரபாகரன் அனுமதி தந்ததாகவும் ஆனால் கடைசிவரை நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தமிழ் மக்கள் இன்று இராஜபக்ஷவின் தயவில்தான் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனிற்கு பின்னர் தமிழர்களுக்கு தலைமைத்துவம் இல்லை. அப்படி இருந்தாலும் பிரபாகரன் போல் கிடைக்காது. தமிழ் மக்களை கடந்த 30 வருடமாக வழி நடத்தி வந்த தலைவர் திடீரென விட்டுவிட்டு சென்…
-
- 3 replies
- 2.2k views
-
-
விடுதலை புலிகள் தமிழ் நாட்டில் பயிற்சி எடுப்பதை தடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள் [3/10/2011 ] [cmr news bulletin ] விடுதலை புலிகள் தமிழ் நாட்டில் முகாம்களை அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றமை தொடர்பாக உடனடியாக இந்திய அரசாங்கத்தக்கு அறிவித்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி இன்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. புலிகள் பயிற்சிபெறும் தகவலை உபகண்டத்துக்கு வெளியில் இருந்து இலங்கை அரசு பெற்றிருந்தால் உடனடியாக இந்திய மத்திய அரசுக்கு அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியது. எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்…
-
- 2 replies
- 1k views
-
-
முறிகண்டிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் 30 லட்சம் ரூபா செலவில் கடைத் தொகுதி முறிகண்டிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் யு.என்.டி.பி. நிதியுதவியுடன் முப்பது இலட்சம் ரூபா செலவில் 10 கடைத் தொகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.வர்த்தகர்களினதும் மக்களினதும் நலன்கருதி அமைக்கப்பட்டு வரும் இக்கடைகள் முன்பு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்படும் என்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அ.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழ்நிலையைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் வன்னியில் மீளக்குடியமர்த்தப் படுவதுடன் குடாநாட்டையும் தென்னிலங்கையையும் இணைக்கும் ஏ9 தரைப்பாதையில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இடம் பெற்று வருகின்றன.இ…
-
- 1 reply
- 990 views
-
-
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக நான் சொல்லவில்லை, கோத்தபயா ராஜபக்சேதான் கூறினார் என்று கூறியுள்ளார் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன. தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக கூறி அவசரகால சட்டத்தினை நீடித்தார் பிரதமர். இதை உடனடியாக தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் மறுத்துப் பதிலளித்தார். சிங்கள பிரதமர் சொல்வது அடிப்படை ஆதாரமற்ற பேச்சு என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து ஜெயரத்ன அவர்கள் இன்று தமிழகத்தில் புலிகள் முகாம் இருப்பது தனது கருத்தல்ல என்றும் படைத்துரை செயலர் கோத்தபாயதான் கூறினார் என பழியை கோத்த மீது போட்டுள்ளார். அதாவது ,புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளரான புகழேந்திரன் என்பவர் தலைமையில் தமிழகத்தி…
-
- 1 reply
- 2.3k views
-
-
லண்டனிலிருந்து இலங்கை திரும்பிய தமிழ் இளைஞரைக் காணவில்லை என முறைப்பாடு [Friday, 2011-03-11 04:06:17] p>சுழிபுரத்தைச் சேர்நத தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் எனப் பொலிஸ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் லண்டனிலிருந்து இலங்கை திரும்பியிருந்து பின்னர் மீண்டும் லண்டன் செல்வதற்காகக் கொழும்பு சென்ற போதே காணாமல் போயுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் சென்று விட்டு மீண்டும் லண்டன் செல்வதற்காக புறப்பட்ட சுழிபுரம் தொல்புரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தெய்வேந்திரம் குவைத் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார். லண்டனில் வசித்து வருகின்ற இவர் கடந்த 1ம் திகதி பண்டாரநாயக்கா விமான நிலையம் ஊடாக கொழும்பை சென்றடைந்திருந்தார். 3ம் திகதி யாழ்ப்பா…
-
- 2 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்கள் உண்ணாவிரதம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-11 07:17:57| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கத்தால் எவ் வித அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வில்லை எனத் தெரிவித்து மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் நேற்று சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தை பொம்மை வெளிப் பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இவர்களை அரசாங்கத்தின் உயர திகாரிகள் எவரும் சென்று பார்வையிடாத நிலையில்,மீளக்குடியேறிய முஹமட் நெளசாத் என்பவர் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களுக்கு வந்தப…
-
- 3 replies
- 810 views
-
-
இப்படியும் தமிழ்க் கிராமங்களும் குழந்தைகளும் இருக்கின்றவா ? இப்படியும் ஊர்கள் இருக்கின்றனவா ? என ஆச்சரியப்பட வைக்கும் கதைகள் நிறைந்தது தான் திருகோணலை மாவட்டம் , மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கிராமங்களான கடற்கரைச்சேனை , நீனாக்கேணி (மலைமுந்தல்), நல்லூர் ஆகிய கிராமங்கள். இந்தக் கிராமத்தினர் ஆதிவாசிகள் வம்சத்தைச் சேர்ந்த குடிகளின் சமூகம். தமிழ்பேசும் தமிழர்கள் இவர்கள். மின்னொளி வெளிச்சத்தை , தொலைக்காட்சியை இல்லது இக்காலத்தில் நமது குழந்தைகள் காணும் இணையம் எதனையும் இந்தக்கிராமத்தின் குழந்தைகளும் அறியவில்லை பெரியவர்களும் அறியவில்லை. 10ம் வகுப்பைத்தாண்டி பிள்ளைகளைக் கல்வியில் முன்னேற்றவோ அல்லது மேற்படிப்பு படிப்பிக்கவோ இந்த மக்களால் முடியாத வறுமையின…
-
- 2 replies
- 979 views
-
-
ஜப்பானில் வாழும் இலங்கையர் தொடர்பில் அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் [Friday, 2011-03-11 15:03:33] ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் அங்கு வாழும் இலங்கையர் தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கென வெளிவிவகார அமைச்சு தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளன. மணிநேரமும் இயங்கக்கூடிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதான தொலை பேசி இலக்கங்கள் வருமாறு: 011-4719593 011-5743362 011-2267929 Skype ID: chandana711 seithy.com
-
- 2 replies
- 840 views
-
-
வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளது:- 11 மார்ச் 2011 இலங்கையின் வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேறியவர்கள் தொழில் வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் வன்னியிலிருந்து மீளக் குடியேறியவர்கள் என 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிவாரணத்தையே நம்பி வாழ்கின்றனர். அதே போன்று வன்னியிலும் மீளக் குடியமர்ந்த தமிழக் கு…
-
- 0 replies
- 698 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பிரமுகருக்குக் கொலை அச்சுறுத்தல் – வவுனியாவில் சம்பவம் Posted by admin2 On March 11th, 2011 at 6:30 pm / தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாத நேரம் அவருடைய வீட்டிற்குச் சென்ற பத்துப்பேர் அடங்கிய அடையாளம் தெரியாத குழுவினரே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அவர்களுடன் வாய்த்தர்க்கம் புரிந்த அவரது மனைவியையும் அவர்கள் கழுத்தைப் பிடித்து நெரித்து அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சமயபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் முக்கியஸ்தரும், வர்த்தகப் பிரமுகருமாகிய எஸ்.செல்லத்துதை என்பவருக்கே இவ்வாறு அச்சுறுத…
-
- 0 replies
- 825 views
-
-
வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் இந்தியாவில் இயங்கவில்லை என இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயமென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் தமிழக முதல்வர், இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ள கூறிய அமைச்சர், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் இந்தியாவில் இல்லை என இந்தியாவே அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கும் விடயமென குறிப்பிட்டார். முன்னதாக சிங்கள பிரதமர் அவசரகால சட்டம் நீடிப்பதற்கு இந்தியாவில் பயிற்சி முகாம்கள் இருப்பதே காரணம் என கூறினார் . அதன…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெலிக்கந்தை கந்தகட்டுவ சிங்கள இராணுவ முகாமிலிருந்து குனேகல நோக்கிப் பயணித்த இராணுவ கப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இராணுவ கெப் வண்டி தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு இராணுவ சிப்பாய் உயிரிழந்ததுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.eelanatham.net/
-
- 0 replies
- 706 views
-
-
பிரான்சும் இங்கிலாந்தும் லிபியப் போராளிகளின் தலமையை அந்த நாட்டின் மக்களின் தலமையாக அங்கீகரித்துள்ளன லிபியாவில் கேணல் கடாபிக்கு எதிராகப் போராடிவரும் போராளிகளின் தலமைத்துவத்தை அந்த நாட்டு மக்களின் ஏகோபித்த தலமைத்துவமாக அங்கீகரிக்க பிறான்ஸும் அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தும் முன்வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மற்றைய மேற்கு நாடுகளையும் இந்த அங்கீகாரம் நோக்கி நகருமாறும் வேண்டியுள்ளன. வெறும் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டதை முன்வைத்து லிபியாவின் தலைவரை போர்க்குற்றவாளியாக்கி, லிபியாவின் வான்பரப்பை விமானப் பறப்பிற்கான தடைப் பிரதேசமாக அறிவித்து, தமது பாரிய யுத்தக் கப்பலகளை அப்பகுதி நோக்கி நகர்த்தி வரும் மேற்குலகு இறுதியாக போராளிகளின் தலமையை அங்கீகரித்துமுள்ளன. 2009 இல் வன்ன…
-
- 4 replies
- 1.4k views
-
-
தேர்தலில் வாக்களிக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான விஷேட விடுமுறை _ வீரகேசரி இணையம் 3/11/2011 9:55:27 AM Share உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் தினமான எதிர்வரும் 17ம் திகதி வியாழக்கிழமை வாக்களிக்கவுள்ள ஊழியர்களுக்கு 5 மணித்தியாலங்களிற்குக் குறையாத விஷேட விடுமுறை வழங்கப்படவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். எழுத்து மூலம் விண்ணப்பிக்கும் ஊழியர் எவருக்கும் வாக்களித்துவிட்டு அலுவலகத்திற்குத் திரும்பி வரப் போதுமானளவுக்கு விடுமுறை வழங்க மறுத்தல் தேர்தல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் தேர்தல் சட…
-
- 0 replies
- 540 views
-
-
Friday, March 11th, 2011 | Posted by thaynilam வடக்கில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் பெண்கள் வடக்கில் நிலக் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்கள், தமது குடும்பங்களின் பிரதான வருவாய் ஈட்டுனர்களாக காணப்படுவதாக வடக்கில் கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களில் ஒன்றான டெனிஸ் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள பெண்களுக்கு வருமானம் திரட்ட குறுகிய வாய்ப்புகளே காணப்படுவதாகவும், இதனால், அங்குள்ள பெண்கள் பலர் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் சிறந்த வருவாயைப் பெற்றுக்கொள்வதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் பெண்கள் குழு கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் குடும்பத் தல…
-
- 0 replies
- 531 views
-
-
அரசாங்கம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றது – ரணில் : அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை : தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்றால் ஏன் படைவீரர்கள் மரக்கறி விற்பனை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்ன குறிப்பிடுவதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய அச்சுறுத்தல் காணப்பட்டால் ஏன் படைவீரர்கள் சந்திக்கு சந்தி மரக்கறி விற்பனை செய்ய வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு புறத்தில் அரசாங்கம் படைவீரர்களை மரக்கறி விற்பனையில் ஈடுபடுத்தி வருவதாகவும் மறு புறத்தில் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுவ…
-
- 0 replies
- 841 views
-
-
நல்லதோர் வீணை செய்தே… [ வியாழக்கிழமை, 10 மார்ச் 2011, 00:39 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக தி.வழுதி. எம் எல்லோரது இலட்சியமும் ஒன்று தான்; எம் எல்லோரது தேவையும் ஒன்று தான். அது இலங்கையில் தமிழ் மக்களுக்கு உருப்படியான அரசியல் அதிகாரத்தைப் பெறுவது. எம்மிடையே கருத்து மாறுபாடு எழுவது எங்கு எனில் - அந்த இலட்சியத்தையும் தேவையையும் அடைவதற்காக நாம் கைக்கொள்ளும் வழிமுறைகளிலும், அவற்றுள் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் உள்ள வேறுபாடுகளிலும் தான். நாடு கடந்த அரசாங்கமே சிறந்த வழி என்கின்றனர் சிலர்; அதில் உறுப்பு வகிக்கும் சிலரே அதில் தவறுகள் உள்ளன என்றும் கூறுகின்றனர். உலகத் தமிழர் அமைப்பும் அது சார்ந்த நாடு வாரி அமைப்புக்களுமே சிறந்த வழி எ…
-
- 1 reply
- 1.9k views
-