ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
தமிழனுக்காக குரல் கொடுத்தால் கொலை அச்சுறுத்தல்: சிறிதரன் [ பிரசுரித்த திகதி : 2011-03-08 12:29:48 PM GMT ] இலங்கையில் தமிழருக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்வலை நசுக்கப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் தமிழுக்கு எதிராக குரல்கொடுப்பவர்கள் தாக்கப்படுவார்கள் என்பதனை உறுதிப்படுத்துவதாக தான் தாக்கப்பட்ட சம்பவமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தான் தாக்கப்பட்டது தொடர்பில் பாராளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். tamilulakam.com
-
- 1 reply
- 879 views
-
-
பத்திரிகையாளர் டி.சிவராம் படுகொலை வழக்கு மீண்டும் மேல் நீதிமன்றில் விசாரணை: [Tuesday, 2011-03-08 02:20:01] தராகி என்று பலராலும் அறியப்பட்ட சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் டி.சிவராம் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஜுன் மாதம் 28 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெறும் என சாட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2005 ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சிவராமின் வழக்கு விசாரணைகள் நீண்டகாலமாக மாவட்ட நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து சிங்கள யூரர்கள் முன்னிலையில் விசாரணையை நடத்துவதென கொழும்பு மேல் நீதிமன…
-
- 1 reply
- 575 views
-
-
வற்றாப்பளை அம்மன் ஆலய நிர்வாகத்தினரை கொழும்பிற்கு அழைத்து அவமானப்படுத்தி அனுப்பினார் மஹிந்த! ஏற்பாடு செய்தார் ஸ்ரீ ரங்கா! Posted by admin On March 7th, 2011 at 10:53 pm முல்லைத்தீவில் அரசியல் செய்யத் தலைப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா முல்லைத்தீவினைச் சேர்ந்த மக்களை அழைத்துச் சென்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவைச் சந்திக்க ஏற்பாடு செய்து அவர்களை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கின்றார். கொழும்பில் கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் கலந்துரையாடல் ஒன்று இருப்பதாக முல்லைத்தீவில் உள்ள பொது அமைப்புக்களைச் சேர்ந்த தலா இருவரை பங்கெடுக்க வருமாறு ஸ்ரீரங்கா அழைப்பு விடுத்திருக்கின்றார். இதற்கமைய வற்றாப்பளை அம்மன் ஆலய தலைவர் குகதாஸன், கரைதுறைபற்று பலநோக்…
-
- 3 replies
- 1.7k views
-
-
"தமிழைப் படித்துவிடாதீர்கள்! " - நொந்தவர்கள் சொல்கிறார்கள்.. [Tuesday, 2011-03-08 15:28:37] 'தாய்மொழியாம் தமிழ் மீது ஆசையும் ஆர்வமும் கொண்டவர்கள் நாங்கள். அதனால் தமிழ் மொழியை பாடமாக எடுத்துப் படித்தோம். வாழ்க்கையில் எத்தனை பெரிய தவறை செய்துவிட்டோம் என்பது இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது� என்று நமக்கு கண்ணீர் கடிதம் ஒன்று வந்திருந்தது. அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு...! சங்க காலத்தில் மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைக் காண்பதையே பெரும்பேறாகக் கருதினார்களாம், ஆனால், இன்று மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் தமிழ் இலக்கியம் படித்தவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். தமிழாசிரியர் பணிக்காக பி.ஏ., எம்.ஏ., பி.லிட்., பி.எட்., படிப்புகளை, அதுவும் கல்லூரிகளில் சென…
-
- 3 replies
- 828 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு புதிய சிறைச்சாலை 2011-03-08 08:14:40 யாழ் பண்ணைப் பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்று திறக்கப்படவிருக்கின்றது. சர்வதேச தரத்தில் நிர்மாணிக்கவுள்ள இப் புதிய சிறைச்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யூலை மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிய வருகின்றது. இச் சிறைச்சாலையை எவ்வாறு நவீன முறையில் வடிவமைக்கலாம் என்பதை ஆராய யாழ் சிறைச்சாலை அத்தியட்சகர் சந்தன எக்கநாயக்க நெதர்லாந்து செல்லவுள்ளார். newjaffna
-
- 1 reply
- 828 views
-
-
அனைத்துலக பெண்கள் தினம் மார்ச் 8 தமது அன்பு உறவுகளை இழந்து ஏங்கி அநாதரவக வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு இதை சமர்ப்பிக்கின்றோம். மகளீர் தினம் 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கி…
-
- 1 reply
- 1.3k views
-
-
கோட்டாபய ராஜபக்ஷ்வை குறிவைத்த தமிழ் இளைஞனுக்கு விளக்கமறியல் நீடிப்பு Posted by saritham On March 8th, 2011 at 11:18 pm / No Comments கொழும்பு – பித்தளை சந்தியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை கொலை செய்ய உதவி புரிந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேகநபர் வெளிநாடு சென்று திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை வைத்தே குறித்த ச…
-
- 0 replies
- 845 views
-
-
http://www.yarl.com/files/110311-colombo-reporter.mp3
-
- 0 replies
- 850 views
-
-
http://www.yarl.com/files/110311-sritharan-mp.mp3
-
- 0 replies
- 981 views
-
-
http://www.yarl.com/files/110311-sivasakthi-anandan.mp3
-
- 0 replies
- 717 views
-
-
http://www.yarl.com/files/110311-kavitha-muraleetharan-thamilakam.mp3
-
- 0 replies
- 616 views
-
-
நிபுணர்கள் குழு எங்கே? தகவல் வெளியிட மறுக்கிறது ஐ.நா – மர்மங்கள் தொடர்கின்றன [ செவ்வாய்க்கிழமை, 08 மார்ச் 2011, 06:48 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் கடந்த 23ம் திகதி நடந்தது ஒரு இரகசிய சந்திப்பு அல்ல என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் நேற்றைய சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது, “உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதை ஒளிப்படம் எடுத்துள்ளீர்கள், அதைவிட எதுவும் கிடையாது.“ என்று கூறியுள்ளார் மார்ட்டின் நெஸ்ர்க்கி. அதேவேளை, ஐ.நா நிபுணர்கள் நியுயோர்க்கில் தான் தங்கியுள்ளனரா? என்று இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் கேள்வி எழுப்பின…
-
- 0 replies
- 658 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சு அரசாங்கத்திற்கு பலனளிக்கப் போவதில்லை - ஜனாதிபதி ஆலோசகர் கோமின் தயாசிறி கருத்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-08 08:02:21| யாழ்ப்பாணம்] கூட்டாட்சித் தீர்வினை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் முயற்சி எடுப்பதாகவும் தற்போது அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்திற்கு பயனளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். திவயின நாளிதழுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே மேற் கண்டவாறு கருத்துரைத்த தயாசிறி, தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு மீண்டும் பிரிவினைக்கான பாதையை அமைக்க முனை வதாக கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையி…
-
- 2 replies
- 1.1k views
-
-
கே.பி., தயா மாஸ்டருக்கு காட்டும் அன்பை ஏனையோருக்கு ஏன் காட்ட முடியாது?: ரில்வின் சில்வா கேள்வி புலிகளின் முன்னாள் தலைவர்களான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மீது அரசு காட்டும் அன்பை ஏன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் மீதும் காட்டக்கூடாது என்று ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பாக கூறியவை வருமாறு: புலிகளின் முக்கிய தலைவரான கே.பியை அரசு இப்போது மிகவும் அன்புடன் கவனித்து வருகின்றது. புலம்பெயர் தமிழர்களின் மனங்களை வெற்றி க…
-
- 0 replies
- 868 views
-
-
- Interceptor (March 06, Colombo, Sri Lanka Guardian) Gaddafi: As-Salaam-U-Alaikum Mahinda! As-Salaam-U-Alaikum. I am here Muammar from Tripoli. Rajapakse: Maumar! Ai bowang (Hello), Yarhamuk Allah (may Allah show mercy to you) Ai bowang. How are you? Gaddafi: I need your help urgently Mahinda. There is terrorism in Libya. Americans are playing hell here but can’t say Americans. I say Bin-Laden group. Rajapakse: You must fight terrorism in the way we have defeated the Tamil terrorism in our country. Gaddafi: That is why I have come to you. This is my distress call. Come and help. Tell me what to do. Rajapakse: American’s mu…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் எந்தவொரு தடயத்தையும் அழிக்க வேண்டும், அவர்களுடைய வன்முறைகள் மறக்கடிக்கச் செய்யப்பட வேண்டும் என்று இராணுவத்தினர் கூறுகின்றனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அச்செய்தியில், யாழ்.கோப்பாயில் அமைந்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரின் உயிரிழந்த போராளிகளை அடக்கம் செய்திருந்த அவர்களது மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றை முன்னதாக தரைமட்டமாக்கிய இராணுவத்தினர், அதில் புதிய பிராந்திய இராணுவ தலைமையகம் ஒன்றை அமைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரின் காணியில் தற்காலிகமாக இருந்த தமது அலுவலகத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதால், தாம் அரசாங்க காணியிலேயே தமது புதிய அலுவலகத்தை நிர்மாணித்துள்ளதாக இராணுவம் கூறுவதாகவும் அச்ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை அரசினால் மனித உரிமை நடவடிக்கைகள் பேணபப்டவில்லை என்றும் அவை மீறப்பட்டுள்ளது என்றும் மனித உரிமை கண்காணிப்புசபை குற்றம் சாட்டியுள்ளது. மனித உரிமை சூழ்நிலையே அழிந்து போயுள்ளதாக மனித உரிமை கண்காணிப்புக்குழு ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு செய்துள்ளது. மேலும், இந்நிலை தொடர்பாக பல மனித உரிமை அமைப்புகள் எழுத்துமூலமான அறிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலிடம் கையளித்துள்ளது. மேலும் முன்னைய காலகட்டத்தில் இலங்கை அரசால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை என பிறிதொரு மனித உரிமை அமைப்பான சர்வதேச இனப்பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கை குழு குற்றம் சுமத்தியுள்ளது. My link
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு பாதுகாப்பு படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றமை இனவாத அடிப்படையிலான செயலாகுமெனவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் முன்வர வேண்டுமெனவும் நாம் இலங்கையர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து நாம் இலங்கையர் அமைப்பு பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. வடக்கில் ஒரு குடும்பத்திடம் பாதுகாப்பு படையினர் 4 புகைப்படங்களை எடுப்பதாக நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர் உதுல் பிரேமரட்னவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் கிராம சேவகர், பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் வீட்டுரிமையாளர்களுக்க…
-
- 0 replies
- 685 views
-
-
போர் தின்று முடித்த நிலம் GTNற்காக சிவச்செல்வன் ரமணிதரன் போரில் பாதிப்புக்குள்ளான பெண்கள் - முன்னாள் பெண் போராளிகள் -இன்று மார்ச் 8 பெண்கள் தினம் போரில் பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் முன்னாள் பெண் போராளிகள் பற்றிய உரையாடலுக்கான பூரணப்படுத்தப்படாத சில குறிப்புக்கள்: இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாகின்றன. போர் முடிவடைந்த கையோடு போருக்குப் பிந்தைய சமூகம் குறித்து எழுந்த உரையாடல்கள் பத்திரிகைகள் வானொலி தொலைக்காட்சி இணையங்கள் முகப்புப் பக்கங்கள் என்று விரிந்தும் பரந்தும் நடப்பது போலத் தோன்றினாலும், போரில் பாதிப்புக்களுக்குள்ளான மனிதர்களது வாழ்க்கையில் எத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றமும் வந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறான குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 946 views
-
-
நிபுணர் குழுவின் இறுதி; அறிக்கை - பகிரங்கப்படுத்தல் குறித்து தீர்மானம் இல்லை 08 மார்ச் 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அமைப்பின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்துவதா அல்லது பொதுச் செயலாளரிடம் மட்டும் சமர்ப்பிப்பதா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலளார் பான் கீ மூனிடம், இந்த மாதத்தில் நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தமது பணிகளை சுயாதீனமான முறையில் மேற்கொள்ள…
-
- 0 replies
- 688 views
-
-
பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட இன்று பதவிப்பிரமாணம்! Posted by admin On March 8th, 2011 at 3:42 am / No Comments முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நாடாளுமன்றப் பதவி வெற்றிடத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த கெட்டகொட, இன்று கூடவுள்ள நாடாளுமன்றில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்க உள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இராணுவ நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ரத்துச் செயப்பட்டது. அதனை அடுத்து சரத் பொன்சேகாவின் வெற்றிடத்துக்கு ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பில் இரண்டாவது அதிகபடியான வாக்குகளைப் பெற்ற லக்ஷ்மன் நிபுணாராச்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், லக்ஷ்மன் நிபுணாராச்சி…
-
- 0 replies
- 644 views
-
-
5 லட்சம் கிலோவுக்கு மேற்பட்ட மரக்கறி வகைகள் நாளாந்தம் யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ள பொருளாதார கேந்திரத்துக்கு கொண்டுவரப்படுவதாகவும் இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் துரிதமாகக் குறைந்து வருவதாகவும் தம்புள்ள பொருளாதார கேந்திரத்தின் அபிவிருத்தி அதிகாரி சமந்த சூரியகொட தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து நாளாந்தம் 12 லொறிகளில் இந்த மரக்கறி வகைகள் தம்புள்ள பொருளாதார கேந்திரத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. 2 லட்சம் கிலோ பீட்ரூட், 1 1/2 இலட்சம் கிலோ - சின்னவெங்காயம், 1 இலட்சம் கிலோ கிழங்கு மற்றும் போஞ்சி, மிளகாய், கெரட், தக்காளி, பூவாலு வாழை ஆகியவையும் பெருமளவில் கொண்டு வரப்படுவதாக அவர் மேலும் கூறினார். இவ்வாறு யாழ். மரக்கறி வகைகள் நாளாந்தம் தம்புள்ளவுக்கு வந்து சேர…
-
- 0 replies
- 935 views
-
-
2007 ஆம் ஆண்டில் விடுதலைப்புபுலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அமெரிக்காவில் செயற்பட்டுவந்த திருநாவுக்கரசு எனப்படும் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவருக்கு அனுப்பிய தகவலில் கிபீர் விமானங்கள் மூலம் தனது படையினருக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருக்கும் எஸ்.ஏ.14 ஏவுகணைகள் மூலம் கிபீர் விமானங்களைத் தாக்கியழிக்க முடியாதெனவும் எனவே உடனடியாக இக்லா எஸ்.ஏ.16 ஏவுகணைகளை கொள்வனவு செய்து அனுப்பும்படி கட்டளையிட்டதாகவும் அமெரிக்க எஸ்.பி.ஐ. விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு திவயின பிரசுரித்துள்ளது. தலைவர் பிரபாகரன் இக்லா ஏவுகணைகளைக் கொள்வனவு செய்து அனுப்பும்படி அவசரமாக மேற்படி திருநாவுக்கரசுக்கு கட்டளையிட்டது கிபீர் விமானத்தாக்குதலில் இயக்க அரசியல் பிரிவுத…
-
- 0 replies
- 1.7k views
-
-
வட தமிழீழ மாவட்டங்களில் உள்ள மக்களை சிறிலங்கா இராணுவத்தினர் பதிவு செய்யும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படும் என அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளபோதிலும், இன்னும் பதிவுகள் பலவந்தமாக இடம்பெற்று வருகின்றன என்று யாழ். மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொள்ளும்படி மக்களைக் கட்டாயப்படுத்துவதை எதிர்த்து கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 3ஆம் திகதி நடைபெற்றபோது பதிவு நடவடிக்கைகளைக் கைவிடுவதென பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறிதரன் தெரிவிக்கையில், அரசின…
-
- 0 replies
- 685 views
-