Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Mar 6, 2011 / பகுதி: செய்தி / தாயாகும் சிறுமிகளின் எண்ணிக்கை சிறீலங்காவில் அதிகரிப்பு சிறீலங்காவில் 19 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் குழந்தை பிரசவிப்பது மிக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பான யுனிசெஃப் தனது 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் 15 வயதிற்கும் 19 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகள் குழந்தை பிரசவிப்பது மிகவு அதிகரித்துள்ளது. 1,000 தாய்மார்களில் 28 பேர் சிறுமிகள். உலகில் உள்ள 1.2 பில்லியன் சிறுவர்களில் சிறீலங்காவில் 3.9 மில்லியன் சிறார்கள் வசிக்கின்றனர். ஆனால் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உளவியல் தரமானது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. …

  2. வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ள அரசு! திங்கட்கிழமை, 07 மார்ச் 2011 21:36 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில் வாழும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. முக்கியமாக வழக்குத் தொடரவுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களில் ருத்ரகுமாரன் (அமெரிக்கா), நெடியவன் (நோர்வே), பாலசிங்கம் (பிரித்தானியா) ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் மனிதப் படுகொலைகள் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் வாழும் நாட்டுக்குள்ளே அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்திருப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிக…

  3. எம் இருள்சூழ் வாழ்வின் மீட்பர் யார்? தமிழ் பெண் அரசியல் கைதி்கள் செவ்வாய், 08 மார்ச் 2011 02:29 அனைத்திலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் மகளிர் பிரிவினர் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தங்கள் கோரிக்கை ஒன்றை சர்வதேச சமூகம், அரசியல்வாதிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் முன் முன்வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கை: இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் தாய்மார்களான நாங்கள் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்வது!. காலங்கள் பல கடந்தும் கவனிப்பார் யாரும் இன்றி பயங்கரவாதம் மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் எவ்வித தீர்வும் இல்லாமல் எப்போது விடுதலை என்றுகூட அறிய ம…

    • 0 replies
    • 1.1k views
  4. பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு இன்று இலங்கை வருகிறது [sunday, 2011-03-06 04:31:14] பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் குழுவொன்று ஆறு நாள் பயணமாக இன்று இலங்கை வரவுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் பயிற்சி மற்றும் மதிப்பீட்டுக்கான பொறுப்பதிகாரி லெப்.ஜெனரல் முசம்மில் ஹுசேன் தலைமையிலான குழுவே இலங்கை வரவுள்ளது. பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழுவில் பயிற்சி, நடவடிக்கை மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இலங்கை இராணுவத்துடன் பயிற்சி, நடவடிக்கை மற்றும் முக்கியமான துறைகளில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர். அத்துடன் இலங்கை படைகளின் பிரதான பயிற்சி மையங்களான பாதுகாப்புச் சேவை அதிகாரி…

  5. Monday, 07 March 2011 14:36 தேசியத் தலைவரை இல்லையென்பது வரலாற்றின் உச்சத் துரோகம் - தமிழ்நாடு முன்னணித் தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழ் மக்களுடைய சொத்து. அவர் முன்னெடுத்த போராட்டம் ஒட்டு மொத்த தமிழினத்திற்குமான போராட்டம். அப் போராட்டத்தைக் களங்கப்படுத்துவதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தலைவரொருவர் தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்பதற்காகவே கே.பி.யை துரோகி என தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தமிழ்நாடு மூத்த தலைவர்கள் கே.பி. கைதாவதற்கு முன்னரேயே அறிவித்தார்கள். அதுபோல இப்போது கனடாப் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிள்ள நேரு குண…

  6. ஒருபுறம் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்கம் மறுபுறத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களை எம்மிடத்திலிருந்து அந்நியப்படுத்தும் முய ற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய தரகு அரசியலை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அரை நூற்றாண்டுக்கு மேலாக பேரினவாத சித்தாந்த பரிணாமத்தினாலும் விரிவாக்கப்பட்ட அதன் அடிப்படையிலான ஆட்சி அதிகார இராணுவ நிர்மாணத்தினாலும் தமிழ் மொழி, கலை, பண்பாடு மற்றும் வாழ்விடங்கள் சிதைக்கப்படுகின்றன. பெரும்பான்மைத்துவ செறிவைக் கொண்ட தமிழ் மக்களின் கட்டமைப்பையும் குடி மக்கள் பரம்பலையும் மாற்றியமைக்கும் சிறுபான்மைப்படுத்தும் விதத்தில் அரச…

    • 0 replies
    • 945 views
  7. வெளிநாட்டு அரசியல் நிலைவரங்களில் கவனம் செலுத்துவது அவசியம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியுறுவதற்கான காரணங்களைப் பலர் பலவாறு கூறலாம். ஆனால் விடுதலைப் போராட் டம் தோல்வியுற்றமைக்கு ‘உலகமயமாதல்’ முக்கிய காரணம் என்பதை நிராகரித்து விடமுடியாது. விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திற்கும் அதன் முடிபு காலத்திற்குமான நீண்ட இடைவெளிக்குள் உலகில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்களில் உலக மயமாதல் என்ற பெருமாற்றமானது, பயங்கரவாத அமைப்புகள் என்ற பட்டியலுக்குள் அடக் கப்பட்ட விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கு முடிபுகட்ட வழிவகுத்தது. அதன் விளைவை விடுதலைப்புலிகள் அமைப்பும் சந்திக்க நேரிட்டது. இவற்றின் மத்தியில் இப்போது உலகில் இருக்கக்கூடிய பயங்கரமான ஆட்…

    • 0 replies
    • 884 views
  8. சற்று முன்னர் பாரா. உறுப்பினர் சிறிதரன் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு [ பிரசுரித்த திகதி : 2011-03-07 01:20:41 PM GMT ] சற்று முன்னர் நொச்சிகாமம் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகாக்கள் எவ்வித ஆபத்துமி…

  9. நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு தனக்கு சுதந்திரமில்லை – ஜனாதிபதி [ பிரசுரித்த திகதி : 2011-03-07 06:16:17 AM GMT ] நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் காணப்படுகின்ற போதிலும் தமக்கு சுதந்திரமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரத்தினபுரியில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், எந்த இடத்திற்க வேண்டுமானாலும் செல்வதற்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் தமக்கு அவ்வாறான ஓர் சுதந்திரம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்திய காலத்தில் எதிர்…

  10. பிரித்தானிய அமைச்சருடனான மகிந்தவின் சந்திப்பு ரத்து! [ பிரசுரித்த திகதி : 2011-03-07 06:02:14 AM GMT ] இலங்கைக்கு கடந்த மாதம் விஜயம் செய்திருந்த பிரித்தானியாவின் வெளிநாட்டு பொதுநலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் மகிந்த ராஜபக்­வைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் இலங்கை வெளி விவகார அமைச்சு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது. பிரித்தானிய அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் கடந்த மாதம் இரு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இவரது விஜயம் குறித்து இலங்கைக்கு பிரித்தானியத் தூதரகம் வெளிவிவகார அமைச்சுக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தி யிருந்தது. இதையடுத்து அமைச்சர் பசில் ராஜபக்­ மற்றும்…

  11. Sunday, 06 March 2011 16:33 கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள். யாழ் குடாநாட்டை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தவரும், அப்போது யாழ். மாவட்டத் தளபதியுமான கேணல் கிட்டு மீது 1987 மார்ச் மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து கிரனைட் தாக்குதல் நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விபரங்களை தற்போது அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களே இணையங்களிற்குத் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல் சிறீலங்காவின் உளவுப்படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகவே ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் “மே 1…

    • 2 replies
    • 2.5k views
  12. அநுராதபுரம் - அபயகிரி விகாரைக்குப் பின்னால் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக இரு மூன்று இரஷ்ய நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் இவர்கள் புதையல்தான் தோண்டினார்களா அல்லது ஏதாவது ஆய்வுகள் செய்தார்களா என தெரியவரவில்லை என பொலிசார் கூறுகின்றனர். இந்த மூவரும் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனராம். இந்த மூவரும் கைத்துப்பாக்கி உட்பட பல சாதனங்களையும் வைத்திருந்ததாக கூறபப்டுகின்றது. இவர்கள் உத்தியோக பூர்வமாகத்தான் நாட்டிற்குள் வந்தார்கள் என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகின்றதாம். My link

    • 0 replies
    • 1.3k views
  13. எம்.வி. சன் சீ கப்பல் மூலம் அகதி அந்தஸ்த்துக் கோரி பிரிட்டிஷ் கொலம்பியா ஊடாக கனடாவை சென்றடைந்த இலங்கை அகதிகள் பலருக்கு அகதி அந்தஸ்த்து கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. சன் சீ கப்பலில் கனடா சென்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்தார்களா என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக கனேடிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த கப்பல் பயணிகளை மீளவும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியாத நிலைமை ஏற்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சன் சீ கப்பலில் சென்ற அகதி அந்தஸ்த்து கோரிக்கையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் கனேடிய மத்திய அரசாங்க…

    • 0 replies
    • 3.2k views
  14. Monday, 07 March 2011 02:53 சீன விமானப்படைத் தளபதிகள் சிறிலங்காவில் – எவ்-17 போர் விமானங்களை விற்க முயற்சி சீன விமானப்படையின் செங்டு பிராந்திய வான் கட்டளைப் பணியக தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் டிங் லாய்ஹங் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன விமானப்படையின் மூத்த அதிகாரிகளான கேணல் ஜியாங் லிசேங், கேணல் சூ கான் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்றுமுன்தினம் காலை சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரமவை சந்தித்துப் பேசியுள்ளனர். கொழும்பிலுள்ள சீனத்தூதரக இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியாக உள்ள ஹன் தாவோ இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். …

  15. ஜ.நா. நிபுணர்குழு இலங்கைத் தூதுக்குழு இரகசிய சந்திப்பு திங்கட்கிழமை, 07 மார்ச் 2011 08:04 ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ முனீனால் நியமிக்கப்பட்ட இலங்கை தொடர்பான குற்ற விசாரணைகள் நிபுணர் குழுவை இலங்கை அரசின் தூதுக்குழு இரகசியமாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்புக்கு முன்னதாக இலங்கை அரசின் தூதுக் குழு கடந்த வாரம் நியூயோர்க்கில் பான் கீ முனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பானது மிகவும் இரகசியமான முறையில் ஜ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முன் மற்றும் விஜய் நம்பியார் ஆகியோரின் முன்னிலையிலேயே இடம்பெற்றதாக தெரியவருகிறது. இதில் தேசிய நல்லிணக்க ஆணைக்…

  16. சாவகச்சேரியில் வெளிக்கிளம்பிய புராதான சிவன் ஆலயச் சின்னங்கள்: இலங்கையில் உள்ள மிக உயர்ந்த அம்மன் விக்கிரகம் என மக்கள் நம்புகின்றனர். [Monday, 2011-03-07 03:49:02] பிரித்தானியர் காலம் தொட்டு சாவகச் சேரியில் இயங்கி வந்த உயர்நீதிமன்றக் கட்டிடங்கள் தற்போது அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் மீண்டும் புதிய நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான அத்திபாரம் வெட்டும் பணி நடந்துவரும் இடங்களில் வரலாற்றுப் பெறுமதி மிக்க தொல்பொருட் சின்னங்கள் கிடைப்பதாக சோலையம்மன் கோவில் பிரதமகுரு வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா அவர்களின் கவனத் திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பேராசிரியர் புஷ்பரட்ணம், தொல்லியற்துறை ஆய்வு உத்தி…

  17. இலங்கைத் தூதுவராலய கவுன்சிலர் ஜெனரல் அழகிகளுடன் ஆதராம் அம்பலம் * Thursday, March 3, 2011, 4:53 அமெரிக்காவுக்கான கவுன்சிலர் ஜெனரல் அழகிகளுடன் நிற்கும் புகைப்படம் வெளியானதால் பெரும் சர்ச்சைக்குள் மாட்டியுள்ளார். அமெரிக்க லொசேஞ்சல்சில் வசித்துவரும் இலங்கைத் தூதுவராலய கவுன்சிலர் ஜெனரல், ஜெவ் குணவர்த்தன இதற்கு முன்னரும் சில சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவோடு காசு கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது முதல் மகிந்த அமெரிக்கா சென்றவேளை அங்குள்ள நிலையை ஆராயாமல் அவரை வரவேற்றார் என்பது முதல் பல முறைப்பாடுகள் அவர்மேல் இருந்தது. இதனை விட தற்போது இவர் அழகிகளோடு நின்று எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனால் கடும் சீற்றமடைந்த ஜனாதிபதி அவரை உடனட…

    • 9 replies
    • 2.1k views
  18. பெண் ஒருவரிடம் கன்னத்தில் அறைவாங்கினார் பியசேன! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முடியப்பு பியசேனவின் கன்னத்தில் பெண் ஒருவர் அறைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முடியப்பு பியசேன இன்று அம்பாறை கல்முனையில் உள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்திற்கு தேர்தல் கலந்துரையாடல் ஒன்றிற்குச் சென்றிருக்கின்றார். அவ்வேளை அங்கு நின்றிருந்த மக்களுக்கும் அவருக்கும் இடையில் நீண்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த அன்னம்மாள் என்ற பெண் பியசேனவின் கன்னத்தில் அறைந்ததாக அம்பாறையில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் பியசேன வாங்கிய நான்காவது அடி இது என்றும் எமது செ…

  19. ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒன்பது ஆயிரம் இலங்கை ஊழியர்கள் நாடு திரும்புகின்றனர். இதனால் வருடாந்தம் 1800 மில்லியன் ரூபாய்களை இழக்கின்றது இலங்கை. இலங்கை வெளினாட்டு வேலைவாய்ப்பு பணியக பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே மனித உரிமை ஆணையகத்தில் இலங்கை ஊழியர்கள் வழக்கு தாக்கல் செய்தமையால் பல மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் இருந்து ஊழியர்களை எடுப்பதனை நிறுத்தியுள்ளது. மாறாக கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா போன்ற நாடுகளில் மலிவான பிரச்சினை இல்லாத ஊழியர்களை எடுக்க முடிவதாகவும் கூறியுள்ளமை இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஈழநாதம்

    • 4 replies
    • 2.3k views
  20. யாழில் செயற்பட்டு வந்த இராணுவத்தின் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகம் இடமாற்றம் [Friday, 2011-03-04 12:27:57] யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த இலங்கை இராணுவத்தின் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகம் இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சுபாஷ் ஹோட்டலில் இதுவரை காலமும் இயங்கி வந்த இந்தப் படைப் பிரிவு மூடப்பட்டதனையடுத்து அந்த ஹோட்டலும் இன்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1995ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ். குடா விடுவிக்கப்பட்டதையடுத்து இந்த ஹோட்டல் 51ம் படைப்பிரிவின் கட்டளைத் தலைமையகமாக மாற்றப்பட்டது.இராணுவ முகாம் மற்றும் 51ம் படைப்பிரிவின்…

  21. சிங்களப்படையினரால் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அணுகுமுறையில் பிரயோசனம் இல்லை நாம் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். வழக்குத்தாக்கல் செய்வது என்பது உடனடி மீள் குடியமர்வுக்குக் கை கொடுக்காது.இராணுவத்துடன் ஒத்து உறவாடி அவர்களுக்கு எம் பிரச்சினைகளை எடுத்துக்கூறினால் இராணுவம் உயர்பாதுகாப்பு வலையத்தை விடுவித்து தருவார்கள் என்று அரியதோர் கண்டு பிடிப்பை கூறியுள்ளார் இமெல்டா சுகுமார். + யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டாசுகுமார் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்களான அரியாலை, கொழும்புத்துறைப் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதுக்கான ஆரம்ப நிகழ…

  22. Mar 4, 2011 / பகுதி: செய்தி / இந்தியாவை முற்றாக புறம்தள்ள சிறீலங்கா திட்டம்! சம்பூர் பிரதேசத்தில் இந்திய நிறுவனத்தினால் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை சிறீலங்கா அரசு தாமதப்படுத்தி வருவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரவித்துள்ளார். சம்பூர் நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஆவணங்கள், அது குறித்த உத்தேச மின்வலு, எரிசக்தி தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை சிறீலங்கா ஜனாதிபதியின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலக்கரி அனல் மின் உற்பத்திக்கான மூலப்பொருளின் விலை அதிகரித்து வருவது குறித்த அறிக்கையையும், நிலக்கரி அனல…

  23. இறுதிக்கட்ட யுத்தத்தில் எண்பதாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர், இருபத்தியேழாயிரம் பிள்ளைகள் தமது பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர்! ஊடக அமைப்புகள் வெளியிடும் திடுக்கிடும் தகவல். [sunday, 2011-03-06 04:34:31] இலங்கையின் ஆறு முக்கிய ஊடக அமைப்புகள் மேற்கொண்ட சுயாதீன ஆய்வின் போது இறுதிக்கட்ட யுத்தத்தில் எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக யுத்தத்தின் காரணமாக இருபத்தியேழாயிரம் பிள்ளைகள் தமது பெற்றோர் இருவரையும் இழந்து வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளன. விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியடையவுள்ள தருணத்தில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரம்…

  24. அடேல் பாலசிங்கம் மற்றும் ருத்ரகுமாரன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சி [ பிரசுரித்த திகதி : 2011-03-06 04:30:43 AM GMT ] தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடைசெய்துள்ள நாடுகளில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் அந்தந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி தற்போது பிரிட்டனில் வாழும் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியாரான அடேல் பாலசிங்கம், அமெரிக்காவில் உள்ள வி. ருத்ரகுமாரன் மற்றும் நோர்வேயிலுள்ள நெடியவன் உள்ளிட்டோருக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கை மற்றும் அவற்றுக்கு கட்டளையிடுதல், உயிரிழப்புகளுக்காக ஒத்துழைப்பு வழங்கியமை போன்ற பாரிய குற்றச்சாட்டுக்…

  25. கணவன் கைவிட்டதால் தெருவில் கையேந்தும் தமிழ்ச்செல்வி! ஆண்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வாழ்க்கையினை தொலைத்த பெண்கள் பற்றி தினம் தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. ஆனாலும் ஏமாறும் பெண்கள் ஏமாந்து கொணடுதான் இருக்கிறார்கள். கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் என்றால் மிகப் பிரபலம். பிச்சைக்காரர்களும் இங்கு பிரபலம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் பிச்சையெடுக்கிறார் சிங்களத்தில் தான் பேசுவார் பெயரோ தமிழ்செல்வி. அம்மா அப்பா கிடையாது. தமிழ் பெண்ணாக பிறந்தாலும் இவர் வளர்ந்தது கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் சிங்கள குடும்பத்தில். தனது பெற்றோர் தன்னை ஒரு சிங்கள குடும்பத்திற்கு காசுக்காக விற்றுவிட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.