Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Feb 19, 2011 / பகுதி: செய்தி / விசுவமடுவில் மீள்குடியேறியுள்ள மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் ஸ்ரீலங்காப்படையினன் முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாடுகளை ஸ்ரீலங்காப்படையினன் கப்டன் வசந்த எனும் படைப்பொறுப்பதிகாரி ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இடம்பெயர்ந்த மக்களின் சொத்துக்களை சிங்களவர்களை சூறையாடுவதற்கும் உறுதுணையாக நின்று செயற்படுபதாகவும் இவர் விசுவமடுவின் றெட்பான பாரதி வித்தியாலய பகுதியில் முகாம் அமைத்து செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். இடம்பெயர்ந்த மக்களை விசுவமடுவிற்கு அப்பால் புதுக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேற அனுமதிக்காத நிலையில் அப…

  2. டெங்கு நோயின் தாக்கத்தால் யாழில் மாணவன் மரணம்! வியாழன், 17 பெப்ரவரி 2011 03:02 யாழ். வடமராட்சியில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த 18 வயது மாணவன் ஒருவர் டெங்கு நோயின் தாக்கத்தல் இன்று யாழ்.போதனா வைத்தியசலையில் இறந்து உள்ளார். தர்மரட்ணம் துஷாந்தன் என்பவரே இறந்தவர் ஆவார். இவர் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம்- கலைப் பிரிவு பயின்று வந்தவர். நெல்லியடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று படிக்க சென்றவர் அங்கு மயக்கம் போட்டு விழுந்து இருக்கின்றார். உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின் மாலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் கொடுக்காமல் காலையில் இறந்து வ…

  3. முள்ளிவாய்க்கால் படுகொலை யுத்தம் நடந்து 21 மாதங்கள் கடந்த நிலையில், முந்நாள் விடுதலைப் புலிப்போராளிகள் 5,000 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் விசுவாசத்திற்குரிய உறுப்பினர்கள் இவர்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான பிரதிநிதி நீல் பூனே (Neil Buhne) இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் செஞ்சிலவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் கண்காணிப்பு அப்பாற்பட்ட விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான தலைமைப் பதவியின் இறுதி ந…

  4. யாழ்ப்பாண மாவட்டம் உட்பட 75 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க முடிபு தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-19 07:52:46| யாழ்ப்பாணம்] யாழ்.மாவட்டம் உட்பட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து கட்சிகளினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 75 உள்ளூராட்சி சபைக ளிற்கான தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் முடிபு செய்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத் தகவல்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது, நாடளாவிய ரீதியில் 301 உள்ளூராட்சி சபைக ளுக்கு எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்தது.இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஜனவரி 24 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.இதில் …

  5. மன்னார் மதவாச்சி பிரதானவீதியில் பொலிஸாரின் வாகனம் ஒன்று அவ்வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அறிந்து அந்த இடத்தில் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது. இம்முறுகல் நிலையைத் தணிப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மன்னாரில் இருந்து தென்பகுதியை நோக்கி சிவில் உடை தரித்த பொலிஸாரை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பயணித்தது. அப்போது முருங்கன் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இந்த பஸ்ஸுடன் நேருக்குநேர் மோதியதால் …

  6. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரில் நடைபெறவிருக்கும் நிலையில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் "லிபறேஷன்' என்ற பெயரில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்ற அறிக்கை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் 'திவயின' செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் இயங்கும் தமிழ்த் தகவல் மையமே இந்த "லிபறேஷன்' போர்க் குற்ற அறிக்கையை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளதாகவும் இதனை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐந்து முன்னணி உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழர் தகவல் மையம் சமர்ப்பிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிபறேஷன் போர்க் குற்ற விசார…

  7. பாதுகாப்பு உறுதிப்பட வேண்டும் என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு Friday, 18 February 2011 06:05 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தல் வேண்டுமெனவும் அதற்காக அவர்கள் குடியிருப்புகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமெனவும் விரும்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டு வந்தனர். இச்சந்திப்பில் முன்னணியின் சார்பாக மு…

    • 0 replies
    • 823 views
  8. பெருந்தொகையான வெடிபொருட்களுடன் சென்ற லொறி ஒன்றினை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கைப்பற்றப்பட்ட லொறியில் இருந்து 115 ஜெலிக்நைற் குச்சிகளும், 90 வெடிக்க வைக்கும் கருவிகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான பொருள்களுடன் லொறி ஒன்று சென்றுகொண்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து, பிரஸ்தாப லொறி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதாகவும், சோதனையின் போது வெடி பொருள்கள் சிக்கியதாகவும், யாழ்ப்பாண பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தையடுத்து லொறியைச் செலுத்தி வந்த சாரதியும், அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப…

  9. பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் - இலங்கை கடற்படையினரே மீனவர்களை கைதுசெய்தனர் - இந்திய ஊடகங்கள் தகவல் தமிழக மீனவர்கள் 112 பேரையும் அவர்களின் 18 இழு வைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினரே கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் 112பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், இச் சம்பவத்தை இந்தியப் பிரதமர் வன்மையா கக் கண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. டில்லியிலுள்ள பிரத மர் மன்மோகன் சிங்கின் வாசஸ்தலத் தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப் பொன்றிலேயே பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமி…

    • 2 replies
    • 1.4k views
  10. இலங்கையில் குண்டு வீசும் விமானங்களை இரகசியமாக தயாரிக்கும் பணியில் சீனா! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 19:53 கொழும்பில் இராணுவத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியில் 04 ஏக்கர் சீன நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டு உள்ளது என லங்கநீயூஸ் வெப் இணையத்தளம் கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து செய்து பிரசுரித்து உள்ளது. கடின் ஹெம் என்கிற நிறுவனம் இக்காணித் துண்டை ஹோட்டம் நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்த உள்ளது என்று வெளியில் சொல்லி வருகின்றது என்றும் ஆனால் உண்மையில் குண்டு வீசும் விமானங்களை தயாரிக்கின்றமையே இந்நிறுவனத்தாரின் நோக்கம் என்றும் இச்செய்தியில் கூறப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்துக்கு சீனாவில் ஒரேயொரு ஹோட்டல் மாத்திரமே உண்டு என்றும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்…

    • 4 replies
    • 1.9k views
  11. Feb 18, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இலக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய ஊடகங்கள் - ஈழமுரசு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களிலும், கொல்லப்படும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையிலும் உலகில் முன்னணியில் திகழும் நாடாக சிறீலங்கா இன்னமும் விளங்குகின்றது. ஊடகங்களின் மீதான சிறீலங்காவின் அடக்குமுறையும் வன்முறைகளும் போர் நடை பெற்ற காலங்களில் மட்டுமல்ல, போர் முடிவடைந்ததன் பின்னரும் தொடர்கின்றது என்பதற்கு அண்மையில் கொழும்பிலுள்ள ஊடக நிறுவனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது வரையான சாட்சியங்கள் உள்ளன. போர் நடைபெற்றபோதும், அது முடிவுற்றதாக கூறப்பட்டதன் பின்னரும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நிமலராஜன், தராகி சிவராம், லசந்த விக்கரமதுங்க... என ப…

  12. யாழ். பருத்தித்துறை நீதிவானுக்கு சட்டம் சொல்லிக் கொடுக்கும் இந்திய துணைத் தூதுவர்! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 10:05 .யாழ். வடமராட்சிக் கடலுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருக்கும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் துணைத் தூதரகம் தலையீடு செய்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. மேற்படி மீனவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் பருத்தித் துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் மீது யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர் என்று சாடப்பட்டு உள்ளது. மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்…

  13. இலங்கை போன்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான பெரிய நிகழ்வுகளின்போது தாக்குதல்களை நடத்துவது பயங்கரவாதிகளுக்கு இலகுவானதாக இருக்கும். இதன் காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானத்துடன் இருக்குமாறு அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும் என்பது பற்றிய குறிப்பான தகவல்கள் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை. இருந்த…

  14. தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நேரடியாகவே முதல்வர் கருணாநிதயின் பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி அனுப்பிவைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பிய கடிதம் பின்வருமாறு: கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு கலைஞர் அவர்களுக்கு ஓர் அவசரக்கடிதம்!.... பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!... தமிழக மக்…

  15. அனோமாவின் நேர்த்திக்கடன் - சிக்கல்களை எதிர்நோக்கும் மஹிந்த வெள்ளிக்கிழமை, 18 பிப்ரவரி 2011 07:07 தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவினால் யாழ பகுதியில் உள்ள புகழ்பெற்ற கெபிலித்தே தேவாலயத்தில் செய்யப்பட்ட நேர்த்திக்கடனால், தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருதுவதாக லங்கா நிவ்ஷ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் தமக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அங்கு பூஜை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி, பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. கதிர்காம முருகன் வல்லியை மணம் முடிப்பதற்காக இலங்கை வந்த வேளையில், கெபிலித்த தேவாலயத்திலேயே வாழ்ந்து வந்ததாக இந்துக்களாலும், பௌத்தர்களாலும்…

  16. தமிழக-ஈழ மீனவர்களிடையே பகைமூட்ட முயற்சி:சீமான் சென்னை, பிப்.18,2011 தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் மத்தியில் பகையை தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும், இந்தியா மறைமுகமாகவும் செய்துவருகின்றன என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 106 பேரை பலவந்தமாகவும் சட்ட விரோதமாகவும் சிறைபிடித்துச் சென்று பருத்தித் துறை நீதிமன்றத்தில் நிறுத்தி 15 நாட்கள் சிறையிலடைத்திருக்கிறது சிங்கள அரசு. இந்நிலையில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மேலும் 26 மீனவர்களைப் பிடித்துச் சென்று இளவாலை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்…

  17. ஜனாதிபதி மஹிந்தருக்கு மூளைப் புற்றுநோய்? வெள்ளி, 18 பெப்ரவரி 2011 00:52 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று மேற்குலக நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கடந்த மாதம் அமெரிக்காவுக்கு தனிப்பட்டவிஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார். அங்கு அவர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றார் என்று செய்திகள் வெளியாகின. ஆயினும் அரசுத் தரப்பு இச்செய்திகளை மறுத்து வருகின்றது. ஆனால் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் கடந்த காலங்களில் சமாதான அனுசரணைப் பணியில் ஈடுபட்ட நாடு ஒன்று மஹிந்தர் மூளைப் புற்று நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார் என்றும் நோய் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின…

  18. சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் கடத்தல்களும் 18 பெப்ரவரி 2011 ஹெந்தவித்தாரணவும் வெளிவராத தகவல்களும் - விசேட தமிழாக்கம் GTN சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் கடத்தல்களும் இராணுவப் புலனாய்வுப்பரிவினரால் சித்திரவதைக்குள்ளான இரண்டு சாட்சிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் எச்.கே.ஜி. ஹெந்தவிதாரண இலங்கையில் நடைபெறும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கின்றார், இருந்து வருகின்றார் என்பது வெளிப்படையாகிறது. இராணுவத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ஹெந்தவித்தராண ஜனாதிபதியின் உத்தியோகபூ…

  19. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாண்டியன், ஜெயக்குமார் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கம்போல வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் மீண்டும் திடீரென கடந…

    • 19 replies
    • 1.9k views
  20. கொழும்பில் புலிகளின் தாக்குதல்கள்: சந்தேகநபரை தடுத்து வைக்க பொலிஸாருக்கு அனுமதி வெள்ளி, 18 பெப்ரவரி 2011 21:45 கொழும்பில் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் யாழ்ப்பாணத் தமிழ் இளைஞன் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபரான குழந்தைவேலு ஸ்ரீரங்கன் என்பவரை அடுத்த மாதம் 25 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கினார். ஸ்ரீரங்கன் கடந்த 28 ஆம…

  21. பிரபல சிங்கள திரைப்பட நடிகை வினு வெத்தமுனி படுகொலை 16 பெப்ரவரி 2011 பிரபல சிங்கள திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான வினு வெத்தமுனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்மலானையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத மூன்று பேரினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ரத்மலானை ராஜங்கன மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயர் கோட் ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. gtn உயிரிழந்த நடிகையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்…

  22. தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைபிடிக்கப்பட்டது தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தை இலங்கைக்குத் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பு இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற…

  23. தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது - வடமாராட்சி மீனவர்கள் அண்மையில் தமிழக மீனவர்களுடன் பிடிக்கப்பட்ட இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது என்று வடமாராட்சி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் டக்கிளஸ் தேவானந்தா பிரசன்னமாகி இருந்ததாகவும் ஆனால், பத்திரிக்கையாளர்களின் கண்னில் படாதவாறு பார்த்துக்கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகளை மீள ஒப்படைக்குமாறு இலங்கை ராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் வடமாராட்சி மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, இப்பிரச்சனைக்குத் தீர்வொன்றைத் தருமாறு அதிகாரப் பீடத்தை வலியுறுத்தியிருப…

  24. அரசு, டக்ளஸ், இந்திய சதி வலையில் யாழ் மீனவர்கள் விழுந்தார்களா? மாட்டினார்களா? வெள்ளிக்கிழமை, 18 பிப்ரவரி 2011 07:06 சிறீலங்கா - இந்திய அரசாங்கங்கள் தமக்கிடையேயான மற்றொரு அரசியல் நகர்வை ஈ.பி.டி.பி துணைப்படைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் மீண்டும் அரங்கேற்றியுள்ளன. சிறீலங்கா அரசாங்கம் ஒட்டுக்குழுவின் உதவியுடன் மேற்கொண்டுள்ள இந்த செயற்பாட்டுக்கு, யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்கள் பலியானார்களா? அல்லது பலியாக்கப்பட்டனரா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. தமிழீழக் கடல் எல்லைக்குள் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் எல்லை மீறுவது, உரிய கடற் கலங்களைப் பாவிக்காது மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது என்பது ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களை வெகுவாகப் பாதிக்கும் எ…

  25. பிரபாகரனின் தற்கொலைப் படைகளைவிட மஹிந்த ராஜபக்ஷ்வின் குழுவினர் மிகவும் திறமைவாய்ந்தவர்கள் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியவை பின்வருமாறு:- இரண்டு வருடங்கள் சென்றதன் பின்னர் புலிகளின் குண்டுக்குப் பதிலாக அரசின் குண்டு உள்ளது. அது தற்போது வெடிக்கவுள்ளது. அந்த குண்டு காரணமாக இந்த நாட்டு மக்கள் தினமும் மரணிப்பர். புலிகளின் குண்டு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை எங்காவது சந்தியில் போடப்படும். 30, 40 பேர் உயிரிழப்பர் இன்னும் சிலர் காயமடைந்து வைத்தியசாலைக்குச் செல்வர். அதோடு முடிந்தது. இது அப்படி அல்ல.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.