ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சிகைளை தற்போது இருக்கும் அரசாங்கம் இழுத்தடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று யாழ்.மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில் :- ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடங்கிய பொதியொன்றினை தயார் செய்து வருகிறது. அப் பொதி மக்கள் மத்தியில் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும். யாழ் மக்களுக்கு மகேஸ்வரன் செய்ய வேண்டும் என எண்ணிய அனைத்தையும் படிப்படியான தற்போது ஐக்கிய தேசிய கட்சி முன…
-
- 0 replies
- 535 views
-
-
புலிகளின் குரல் வானொலியை தொடர்ந்து ஒலிக்க உதவுங்கள் – புலிகளின்குரல் நிறுவனம் Thursday, February 17, 2011, 15:13 அன்பான எமது உறவுகளே, மே 2009ற்கு பின்னரான இந்த இடர்மிகு காலகட்டத்தில் இத்தனை நாட்களாக இணையத்தளத்திலும் செய்கோளில் இடைவிடாது ஒலித்து வந்த புலிகளில்குரல் வானொலி தற்போது இணையத்தில் மட்டும் ஒலிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள். புலிகளின்குரல் வானொலி (இணையத்தளத்தில் மட்டும்)தொடர்ந்து சேவையாற்றுவது உலகத்தமிழர் அனைவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது. இன்று எமது வானொலி தன்னை இயங்க வைப்பதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது 500ய+ரோக்களை எதிர்பார்த்து நிற்கின்றது. (பணியாளர்களின் உணவு,ஒலிப்பதிவுகூட-அலுவலக வாடகை, இணையஇணைப்பு, சேர்வர்) எத்தனையோ ஆயிர…
-
- 4 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 138 இந்திய மீனவர்களையும் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா கண்டிப்பாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, நேற்றுக் காலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்போது இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட எஸ்.எம்.கிருஸ்ணா, அவர்களை விடுதலை செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்த நடவடிக்கை குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை அமைச்சர் பீரிஸிட…
-
- 1 reply
- 1.1k views
-
-
அநுராதபுரத்தில் மர்ம நோய்: மூன்று தினங்களில் நால்வர் பலி... வியாழக்கிழமை, 17 பிப்ரவரி 2011 15:46 இலங்கையில் வாழும் சிங்கள மக்களால் புனித பூமி எனப் போற்றப்படும் அநுராதபுரத்தில் மர்ம நோயொன்று திடீரெனப் பரவ ஆரம்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த மர்ம நோய் காரணமாகக் கடந்த மூன்று தினங்களுக்குள் நால்வர் உயிரிழந்தனர் என வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நோய் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதுடன் இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் sankamam.com
-
- 1 reply
- 1.4k views
-
-
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழகத்து மீனவர்கள் 112 பேரை வடமராட்சி கடற்றொழிலாளர்கள் வளைத்துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் மனதிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டதான மனநிலை உள்ளது. அதேசமயம் 18 இழுவைப் படகுகளையும் தமிழகத்தின் 112 மீனவர்களையும் வளைத் துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டுவருவது என்பது சாதாரணமான விடயமன்று. ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வடமராட்சி மீனவர்கள் தனித்து இவ்வாறு செய்வதென்பதும் முடியாத காரியம். எனவே இந் நடவடிக்கைக்கான பின்னணி வேறு என்பது புரிகின்றது. எதுவாயினும் தற்போது இருக்கக் கூடிய சூழமைவில் தமிழகத்து மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்தமை,…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழர்கள் நிலை அறிய ராகுல் தலைமையில் குழு இலங்கை செல்லும்-யுவராஜா வியாழக்கிழமை, பிப்ரவரி 17, 2011, 16:04[iST] ராமநாதபுரம்: இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார். நிருபர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமையும். இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தும். காங்கிரஸ்-திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இளைஞர் காங்கிரசுக்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சி…
-
- 9 replies
- 1.3k views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களில், 325 பேர் முக்கிய போராளிகளென சிங்கள ஏடு ஒன்று தெரிவிக்கிறது இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தும் முகாம்களில் கைது செய்யப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களில், 325 பேர் முக்கிய உறுபினர்களென இனம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வு காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பில் இன்று வெளியான லங்கா தீப சிங்கள நாளேடு தலைப்பு செய்தியில் தெரிவிக்கிறது. அந்த 325 பேரில் பலர் மூத்த தளபதிகளெனவும், ஆனையிறவு, பூநகரி, முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய தளபதிகள், பிரதேச பொறுப்பாளர்கள் பலர் உள்ளதாகவும் லங்கா தீப குறிப்பிடுகிறது. விசாரணகளின்போது இனம் காணப்பட்ட இந்த முக்கிய உறு…
-
- 9 replies
- 1.6k views
-
-
போரின்போதான பாலியல் வன்முறையும் ஒரு போர்க்குற்றமே - ஐ.நாவின் பெண்ணுரிமைக் குழு [ வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2011, 08:42 GMT ] [ புதினப்பலகை - சிறப்புச் செய்தியாளர் ] போரின் இறுதி நாட்களிலும், போர் முடிவுக்குவந்த கையோடும் சிறிலங்காவில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்செயல்கள் தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொண்டு குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துமாறு 'பெண்கள் பாரபட்சமாக நடாத்தப்படுவதை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையினது குழு' [The Committee on the Elimination of Discrimination against Women - CEDAW Committee] சிறிலங்காவினைக் கோரியிருக்கிறது. ஐ.நாவின் மனித உரிமை ஆணையகம் முன்மொழிந்திருப்பதைப் போல போ…
-
- 0 replies
- 950 views
-
-
கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் [Thursday, 2011-02-17 12:09:27] சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சுதன் (25), கவா (24). அவர்கள் உறவுமுறையில் அண்ணன், தம்பி ஆகும். அவர்கள் இருவரும் கனடாவில் என்ஜினீயரிங் படிக்கிறார்கள். சுதனின் பெற்றோர்கள் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் தான் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஆடுகளம் படம் பார்ப்பதற்…
-
- 1 reply
- 2k views
-
-
நூலகம் எனும் மின்நூல் உருவாக்கத்திற்கான அமைப்பு யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கால்பதித்துள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலகத் திட்டத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா.சிவசந்திரன் தமிழர் மின்நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய பணிக்கு எவ்வகையில் பங்களிக்க முடியும் என்பன பற்றி பயிற்சியின் ஆரம்ப உரையாற்றுகையில் விபரமாக எடுத்துரைத்தார். தகவல் வளங்களை எண்ணிம (Digital) வடிவத்தில் கொண்டுள்ள நூற்றொகுதியை எண்ணிம ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
நிலாவெளி கடற்பரப்பை சுற்றுலா வலயமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை:- 17 பெப்ரவரி 2011 வீரக்கண்டி முதல், தலப்பையாறு வரையான பகுதிகளில் வாழ்ந்த மீனவர்களை, நிலாவெளி கடற்பரப்பை சுற்றுலா வலயமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை:- திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி கடற்பரப்பை சுற்றுலா வலயமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனடிப்படையில், வீரக்கண்டி முதல், தலப்பையாறு வரையான கடற்பிரதேசம் சுற்றுலா வலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, மக்கள் காட்டிய எதிர்ப்பு காரணமாக, அந்த பணிகள் கடற்படையினருக்கு வழங்கபட்டு அவர்கள் அளவீட்டுப் பணிகளை நிறைவு செய்துள்ளனர…
-
- 0 replies
- 694 views
-
-
நெடுங்கேணி ப.நோ.கூட்டுறவுச் சங்க ஊழல்களுக்கு எதிராக உண்ணாவிரதிகள் இருந்த கொட்டில்களை பிரித்தெறிந்த இராணுவம்! * Thursday, February 17, 2011, 13:14 வவுனியா வடக்கு நெடுங்கேணி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமர்ந்திருந்த கொட்டில் இரவானதும் பிரித்தெறியப்பட்டுள்ளது. உழவு இயந்திப் பெட்டியொன்றை மூடி அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்குள் இருந்து இரண்டு பேர் இந்த உண்ணாவிரதத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டிருந்தனர். இருள் சூழ்ந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் அவர்கள் கட்டியிருந்த பதாதையை அகற்றிவிட்டு இருக்குமாறு முதலில் அறிவுறுத்தினராம். அதற்கு உண்ணாவிரதமிருந்தவர்கள் உடன்படாததையடுத்து சிற…
-
- 0 replies
- 677 views
-
-
திமுக நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பியவர்கள்.. தமிழ் மீனவர்களை கைது செய்த ஈழத்தமிழ் மீனவர்களை கண்டிப்பதாக கோசம் எழுப்பி உள்ளனர். http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=770 இதன் மூலம் திமுக தமிழக மற்றும் ஈழத் தமிழ் மீனவர்களிடையே சிறீலங்கா அரசு சார்ப்பாக.. இந்திய மத்திய அரசின் நோக்கம் வேண்டியும் தனது அரசியல் இலாபம் வேண்டியும் தவறான பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நீதியான தமிழக அரசியல்வாதிகளும் தமிழக மீனவ சங்கங்களும் இந்த விடயத்தில் விளக்கம் பெறுவதோடு ஈழத்தமிழ் - தமிழக உறவுகள் நலன் பேணும் வகையில் செயற்படும் தாயக மற்றும் நாடு கடந்த அரசு உண்மை நிலையை விளக்கி ஒரு அறிக்கையாவது விடுவது நன்று. தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார். ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். http://meenakam.com/
-
- 27 replies
- 3.4k views
-
-
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய இழுவைப் படகுகளும் அவற்றிலிருந்த 90 மீனவர்களும் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு வடமராட்சி கரைக்கு கொண்வரப்பட்டுள்ளனர். வடமராட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தப் படகுகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இம்மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வடமராட்சிக் கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள இந்திய மீன்பிடிப் படகுகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்றைய தினம் உள்ளுர் மீனவர்கள் இந்திய மீனவப் படகுகளை சுற்றிவளைத்துள்ளனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09…
-
- 49 replies
- 3.2k views
-
-
வியாழக்கிழமை, 17, பிப்ரவரி 2011 (13:33 IST) இலங்கை தேசிய கொடியை எரித்தவர்கள் கைது: மதுரையில் பரபரப்பு மதுரையில் இலங்கை அரசின் தேசிய கொடியை எரித்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 106 மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ள இலங்கை கடற்படை, இன்று மீண்டும் புதுச்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 24 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளது. மேலும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும் இலங்கை கடற்படை தாக்கியுள்ளது. இதில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து, மதுரையில் இந்த…
-
- 0 replies
- 805 views
-
-
இலங்கையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் சேவை : ஆரம்ப நிகழ்விலேயே குளறுபடி [ பிரசுரித்த திகதி : 2011-02-17 07:01:15 AM GMT ] இந்திய அரசாங்கத்தின் கடனுதவிடன் நேற்றைய தினம் ஆரம்பமான இலங்கையின் கடுகதி புகையிரத சேவையின் ஆரம்ப நிகழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பி.டி.ஐ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்ப நிகழ்விலேயே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து, ஒரு மணித்தியாலங்கள் தாமதமாகவே இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குரவத்து அமைச்சர் குமாரவெல்கம இந்த நிகழ்வுக்கு ஒரு மணித்தியாலம் தாமதித்தே வந்துள்ளமையே இதற்கான காரணம். அத்துடன் இந்த நிகழ்வின் அடித்தள ஏற்பாடுகள் முறையாக இல்லாத காரணத்தினால், நிகழ்வில் கருத்து தெரிவிக்கவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு ருமானியர்கள் கைது [ பிரசுரித்த திகதி : 2011-02-17 07:05:45 AM GMT ] இலங்கையில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இரண்டு ரூமானிய நாட்டுப் பிரஜைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் தன்னியக்க ரெல்லர் இயந்திரத்தின் ஊடாக மோசடிகளில் ஈடுபட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். கடனட்டை மோசடியில் ஈடுபடுவதற்கு மேலும் இரு ரோமானிய பிரஜைகள் இலங்கை வந்துள்ளனர் என அவர் வழங்கிய தகவலை அடுத்து குறித்த இரு ரோமானிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகவும் நுட்பமான முறையில…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிப்பு:- 17 பெப்ரவரி 2011 மோதல்களை தீர்ப்பதற்கான சிறந்த நடு நிலையாளராக நோர்வே தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிப்பு:- இலங்கையின் பாடசாலைகளின் 6 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 6ஆம் ஆண்டு சிங்கள வரலாற்று புத்தகத்தில், துட்டகைமுனு மன்னனின் 10 மாபெரும் வீரர்கள் குறித்த வரலாறு, தமிழ் வரலாற்று புத்தத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளன என தேசிய ஆசிரியர் சபை தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிமால் சோமவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீனாவின் நுரைச்சோலை அனல்மின்நிலையத்திட்டம் தோல்வி? Thursday, February 17, 2011, 4:48 நுரைச்சோலை அனல் மின் செயற்திட்டம் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லையென மின்வலு எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயற்திட்டம் இம்மாதம் 25ம் திகதி திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பணிகளில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டன. அதனால் திறப்புவிழா பிற்போடப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக மின்வலு, எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை செயற்திட்டம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் நுரைச்சோலை குறித்த செய்திகளை வெளியிடும் போதும், திறப்பு விழாவின்போதும் தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாட்டில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றச்சாட்டு வியாழக்கிழமை, 17 பிப்ரவரி 2011 02:01 இலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம் மற்றும் அடக்கு முறைகள் தலைவிரித்து ஆடுகின்றன. இவ்வாறு முன்னாள் ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதங்களும் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உரத்த குரலில் பீற்றிக் கொண்டாலும் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கட்டுநாயக்காவில் நேற்று நடை பெற்ற மறைந்த விஜயகுமாரதுங்கவின் நினைவுதின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள் ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நானும் விஜ…
-
- 0 replies
- 674 views
-
-
இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவிலுள்ள ஹவார்ட் பல்கலைக்கழகம் விவாதமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இம் மாதம் 24ஆம் திகதி Acountability for Violations of IHL in Counter insurgency the case of Sri Lanka என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இவ்விவாதத்தில் உலகளவில் பிரபலமான பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிகள் குழு உட்பட பல முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்விவாதத்தில் உரை நிகழ்த்த உள்ளனர் என்றும், இலங்கை அரசின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹன்ன கலந்துகொள்ள உள்ளாராம். My link
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவு அளிக்க வேண்டும்:- 17 பெப்ரவரி 2011 41 UK பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை:- விசேட தமிழாக்கம் GTN இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவு அளிக்க வேண்டும்:- இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவளிப்பதாகத் தெரிவிக்க வேண்டும்:- இலங்கையின் 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றுக்கு பிரிட்டன் ஆதரவளி;ப்பதாகத் தெரிவிக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருனிடம் கோரி மூன்று முக்கியமான கட்சிகளைச் சேர்ந்த 41 பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்க கோரி விரைவில் வழக்கு! புதன், 16 பெப்ரவரி 2011 08:02 .தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் போடப்பட்டு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணிகளில் ஒருவரான விக்டர் கோப் இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ராஆற். புலிகள் இயக்கம் மீது 1996 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் விதித்த தடையை தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை கொண்டு வரப்பட்டது. ஆனால் புலிகள் இயக்கத்தை ஏன் பயங்கரவாத இயக்கமாக கொள்ள முடியாது?, புலிகள் இயக்கம் மீது ஏன் தடை போடக் கூடாது? என்பதற்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 2000 ஆம் ஆண்டு எட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த இடத்தைப் பார்வையிடவுள்ளது. இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று இரண்டாவது தடவையாகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வழக்கில் 17 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபரால் 5 இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் 90 சாட்சிகளும் 47 சாட்சியப் பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 19 ஆம் திகதியன்று இடம்பெயர்ந்த நி…
-
- 0 replies
- 789 views
-