ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
சூடானில் இருந்து தென் சூடான் பிரிந்து செல்வதற்கு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது போன்று இலங்கையிலும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சூடான் நிலைமையும், இலங்கை நிலைமையும் வித்தியாசமானவை என்றும் இலங்கையில் இத்தகைய கருத்துக் கணிப்புக்கு அவசியமில்லை எனவும் சிறிலங்காவின் முன்னாள் சமாதான செயலகப் பணிப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறியுள்ளார். சூடானில் இருந்து தென் சூடான் பிரிந்து செல்வதற்கு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது போன்று இலங்கையிலும் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் வபை சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே பேராசிரியர் ரஜீவ விஜேசிங்…
-
- 0 replies
- 977 views
-
-
தியாகச்சுடர்கள் அப்துல் ரகீம், முத்துக்குமார், முருகதாசன் உட்பட 20 ஈகை கொடையாளர்களின் வீரவணக்க நிகழ்வு விடுதலைத் தீயினை தம்முடலிலே ஏற்றி விழுதாக எரிந்த அப்துல் ரகீம், முத்துக்குமார், முருகதாஸ், கோகுலகிருஸ்ணன், சிவப்பிரகாசம், எழில்வளவன், பாலசுந்தரம், மாரிமுத்து, சிவானந்தன், ஸ்ரிவன், ஜெகதீசன், ஆனந், சுப்பிரமணி, ராஜசேகர், அமரேசன், இராஜா, சீனிவாசன், இரவிச்சந்திரன், தமிழ்வேந்தன், இரவி உட்பட இருபது வீர மறவர்களையும், நாட்டுப்பற்றாளர் திரு. புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களையும் நினைவு கூரும் எழுச்சி நிகழ்வு Alperton Community School, Wembleyயில் 12-02-2011 சனிக்கிழமை மாலை 6.45க்கு பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது. பொதுச்சுடரினை 1970ல் தமிழ் மாணவர் பேரவையை ஸ்தாபித்த…
-
- 1 reply
- 1k views
-
-
முட்கம்பி வேலிக்குள் இருந்து ஒரு மடல்... எப்போது வெளியே வருவோம் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர்தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்.ஆனால் அவர்களை விடுவிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுக் கொண்டே போகிறது. இதனால் பெரும்அவலத்தை நோக்குகின்றனர் அவர்கள். பொழுதுகள் ஒவ்வொன்றும் விடிகின்ற வேளைகளில் விடுதலைச் செய்தி ஏதும் காதில் எட்டிவிடாதா என்ற ஏக்கங்களுடன்தான் விடிகின்றன. இந்த ஏக்கங்கள் சற்றுத் தொலைவாகிப் போய்விட்டதையும் உணர்கின்றோம். டிசெம்பர் 31 இந்த நாள் எதிர்பார்ப்புக்கள், கற்பனைகள், ஏக்கங்களை எம்மனதில் விதைத்துவிட்டிருந்த நாள். எம்மைச் சந்தித்த இராணுவ உயரதிகாரிகள் கூட எமது முட்கம்பி வாழ்வின் இறுதி நாளாக இந்த நாளையே நிர்ணயித்திருந்தனர். எமது கனவுகள் கற்பனைகளைச் சிதற…
-
- 1 reply
- 1.1k views
-
-
எம்.வி.சன்.சி கப்பலில் புலிகளின் மாலுமி! செவ்வாய், 15 பெப்ரவரி 2011 03:08 எம்.வி.சன்.சி கப்பலில் கடந்த ஓகஸ்ட் மாதம் கனடாவை வந்து அடைந்த 402 இலங்கைத் தமிழர்களில் 32 பேர் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் என்று புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள். இவர்களில் ஒருவர் பி-005 என்று புலனாய்வாளர்களால் பெயர் வழங்கப்பட்டு உள்ளார். இவர் எம்.வி.சன்.சியில் மாலுமியாக சேர்க்கப்பட்டார். ஆயினும் இவர் இக்கப்பலுக்கு உரித்தான மாலுமி அல்லர். புலிகள் இயக்கத்திடம் எம்.வி.சன்.வேர்ட் என்று ஒரு கப்பல் இருந்தது. இக்கப்பலில் 1990 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மாலுமியாக வேலை பார்த்து இருக்கின்றார். இவர் ஏற்கனவே ஜேர்மனியில் அரசியல் த…
-
- 1 reply
- 1k views
-
-
டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன் பிணை வழங்கக் கூடாது – சென்னை காவல்துறை 15 பெப்ரவரி 2011 Bookmark and Share அமைச்சருக்கு எதிரான பிடி விராந்து உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும், .. டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன் பிணை வழங்கக் கூடாது – சென்னை காவல்துறை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன் பிணை வழங்கக் கூடாது என சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சருக்கு எதிரான பிடி விராந்து உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும், முன் பிணை வழங்க முடியாது எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 1994ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவமொன்றுடன் அமைச்சர் உள்ளிட்ட பத்து பேருக்கு தொடர்பு இருப்பதாக சோலைமேடு காவல்துறையினர் வழக்குத் தாக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
தவறான செயற்பாடுகளை தடுக்க முடியாவிட்டாலும் அவற்றுக்குக்கு துணைபோகாமல் இருக்குமாறு வேண்டுகிறோம் சமீப நாட்களாக எமது பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், குறிப்பாக வன்னி மக்களின் பேரால் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீண்டும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுவருவதை எம்மால் அறிய முடிகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் இங்கிலாந்தில், BTF ஸ்கந்தா தலைமையிலும், கனடாவில் WTM சார்பில் கமல் அணியினரும் மற்றும் முன்னாள் தமிழர் புனர்வாழ்வுக் கழக ரெஜி தலைமையிலான குழுவினர் இங்கிலாந்திலும் என, ஒரு குறிப்பிட்ட அணியினர் மேற்படி நிதி சேகரிப்பில் ஓரணியாக களமிறங்கியிருக்கின்றனர். எமது போராட்டத்தின் ஆத்மாக்களாக இருந்தவர்கள் மூர்ச்சை இழந்ததைத் தொடர்ந்து எமது பேராட்டமும் மூர்ச்சையிழந்துவிட்டது…
-
- 30 replies
- 4.1k views
-
-
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் - பிரித்தானியா:- 14 பெப்ரவரி 2011 Bookmark and Share யுத்தம் இடம்பெற்றக் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் - பிரித்தானியா:- இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்றக் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று சமர்ப்பித்துள்ளார். இதன் போது கருத்து வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் நாடு வலசரபாக்கத்தில் மறைவிடம் ஒன்றில் புலிகள் பதுங்கியுள்ளார்களாம். இப்போ பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்களாம். இது இந்திய புலனாய்வு துறையின் கண்டு பிடிப்பு. தேர்தல் காலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களை கொல்வதே இவர்களது நோக்கம் ஆகவே கருணாநிதி உட்பட காங்கிரஸ் காரர்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர் இந்திய துறையினர். என்ன கொடுமை சார்.. என்றுதான் சொல்லவேண்டி இருக்கின்றது. ஏனென்றால் சூழ்ச்சிகளில் மட்டுமல்ல, ராணி கமிக்ஸ் கதைகளிற்கும் பேர்போனவர்கள் தாமே என நிரூபித்து வருகின்றனர் இந்திய புலனாய்வுதுறையினர். இதுதான் அவர்களது நேற்றைய கட்டுக்கதை இதுதான்; கரும்புலிகள், புலிகளின் விமான எதிர்ப்பு படை பிரிவு போராளிகள் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவி மறைவிடம் ஒன்…
-
- 4 replies
- 2.4k views
-
-
‘குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைக்கு ஒத்துழையுங்கள்’ யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் துண்டுப்பிரசுரங்கள் [ பிரசுரித்த திகதி : 2011-02-15 05:04:01 AM GMT ] குடாநாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்புப் படையினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை பொருட்படுத்தாது பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’ இவ்வாறு மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள பனர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. உங்கள் பாதுகாப்பிற்காக இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் என்ற த…
-
- 1 reply
- 638 views
-
-
குடாநாடு கிடக்கிற கிடையில... அதிகளவிலான மனவெழுச்சிகளுக்கு உள்ளாகும் கட்டிளமைப் பருவ வயதினரில் கிரகப்பிரவேசம் செய்கின்ற காதல், கத்தி நிலையை ஒத்திருக்கிறது. கத்தியை நன்மைக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். அது கத்தியை கையாளுகின்ற நபரின் புத்தியில்தான் தங்கியிருக்கின்றது. நாளைக்குக் காதலர் தினம். உலகம் முழுவதும் உள்ள காதல் காய்ச்சல் பீடித்தவர்கள் நாளைய தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். விடுதிகள் (hotels), பூங்காக்கள், கடற்கரைகள் மாத்திரமன்றி அச்சு, மின்னியல் ஊடகங்கள் கூட நாளைய நாளை சிறப்பிக்கத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ரோஜாப் பூ விற்பனையாளர்கள், வாழ்த்து அட்டை விற்பனையாளர்கள் என அனைவரும் காதலர் தினத்தை…
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளை வானில் சுற்றிய ஐவர் கைது: சாவகச்சேரியில் சம்பவம்! [ பிரசுரித்த திகதி : 2011-02-15 05:18:25 AM GMT ] வெள்ளை வானில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள வீதிவழியாக வந்துகொண்டிருந்த மேற்படி வெள்ளை வானை மறித்து சோதனையிட்ட பொலிஸார், அதில் பயணம் செய்த மேற்படி ஐவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். பொலிஸார் …
-
- 0 replies
- 767 views
-
-
நாட்டில் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் புதிய பங்குதாரராக ஜே.வி.பி. வீரகேசரி இணையம் 2/15/2011 8:33:19 AM உள்நாட்டின் பல தரப்புக்களின் அனுசரணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு சர்வதேசத்தில் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் புதிய பங்குதாரராக ஜே.வி.பி. இணைந்துள்ளது என்று ஜாதிக ஹெ ல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார். நாட்டைத் துண்டாடும் இவ்வாறான நடவடிக்கைகளினால் மீண்டும் பாதிக்கப்பட போவது அப்பாவி தமிழ் மக்களேயாவர். எனவே அரசாங்கம் நாட்டிற்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது…
-
- 0 replies
- 547 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசைக் கைவிட்டு இலங்கை அரசுடன் கைகோர்க்கவும் ருத்திரகுமாருக்கு கருணா பகிரங்க அழைப்பு [Monday, 2011-02-14 11:19:22] நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராகச் செயற்படும் விசுவநாதன் ருத்திரகுமாரன் தனது அனைத்துச் செயற்பாடுகளையும் உடனடியாகக் கைவிட்டு விட்டு இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவர் இலங்கை அரசியலில் ஈடுபட வேண்டுமானால் அவருக்கு ஒரு முக்கிய இடத்தினை எமது கட்சியில் பெற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளேன்; என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். கே.பி. எனப்படும் பத்மநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் வெளியான செய்த…
-
- 23 replies
- 3.1k views
-
-
சமூகச் சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர்,யுவதிகளுக்கு சங்கிலியன் படை எச்சரிக்கை! Monday, February 14, 2011, 17:48 ஒட்டுக் குழுக்களின் ஆதரவுடன் யாழ்.குடாநாட்டில் அரங்கேற்றப்பட்டுவரும் சமூகச் சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர், யுவதிகளுக்கு ”சங்கிலியன்” படை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள சில பிரபலமான பாடசாலைகளின் மதில்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அவசர அவசரமாக இன்று காலை படையினரால் அகற்றப்பட்டதாக அறியவருகிறது. ”சங்கிலியன்” படையினரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் வருமாறு: யாழ்ப்பாணத்தில் சமூகச் சீரழிவுகளில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை! அன்பான தமிழ் மக்களே, நாம் எத்தனையோ இன்னல்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் கடந்து வந்து தமிழ்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கையில் காணாமல் போகும் சம்பவங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனிதவுரிமை செயற்பாட்டாளர் பட்டானி ரசீக் காணாமல் போன ஒரு வருட நிறைவை முன்னிட்டே சர்வதேச மன்னிப்புச் சபை இக் கோரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த 10ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் மனிதவுரிமை செயற்பாட்டாளர் பட்டானி ரசீக் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட நபர் சிறிலங்கா அரசாங்கத்துடன் மிக நெருக்கமானவர் என சர்வதேச மன்ன…
-
- 1 reply
- 844 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் ருத்ரா தனது நிலையைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் அமைப்பில் புதிதாக இணையவுள்ள தென் சூடானின் அங்கிகாரத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெற்றுள்ளது என ஐலன்ட் நாளேட்டின் அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுக்களின்போது, கூட்டாட்சித் தீர்வு தொடர்பாக அதிகாரபூர்வமற்ற பேச்சு இரண்டு தரப்பு ஆலோசகர்களுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சூடான் விவகாரத்தை ருத்ரகுமாரன் மேற்கோள் காட்டினார். தென் சூடான் பிரிந்து செல்வதைப் பயன்படுத்துவதன் மூலம் சிறிலங்காவிலும் ஐ.நா தலையீடு ஒன்றினை மேற்கொள்வதற்கான நீண்டகால மூலோபாயத்திட்டம் ருத்ரகுமாரனி…
-
- 2 replies
- 2k views
-
-
பலித கோஹனா மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் சரண்டைய வந்த விடுதலைப் புலிகள் பொறுப்பாளர்களை சுட்டுக் கொன்ற போர்க் குற்றத்தில் கூட்டுப் பொறுப்புடைவர் என்ற அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஐ.நா.விற்கான சிறிலங்க அரசின் நிரந்தரத் தூதரான பலித கோஹனா மீது வழக்கு தொடரப்படவுள்ளது. இலங்கையில் போர் நடந்தபோது சிறிலங்க அரசின் செயலராக இருந்த பலித கோஹனா, ஆஸ்ட்ரேலியாவின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். அந்த அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பும், சுவிட்சர்லாந்தின் ஈழத் தமிழர் பேரவையும் கூறியுள்ளன. போர் நடந்துக்கொண்டிருந்தபோது…
-
- 2 replies
- 1.1k views
-
-
எகிப்தின் நைல்நதி தமிழர் நெஞ்சங்களிலும் ஓடாமல் இருப்பது ஏன்..? எகிப்தில் நடைபெற்ற போராட்டத்தை மிகப்பெரியளவில் பார்த்திருக்க வேண்டியது தமிழினமே. இந்த விடயத்தில் வெறும் ஈழத் தமிழர் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டையும் சேர்த்தே நோக்க வேண்டும். உலகத்தில் மீது கோடான கோடியாக கொட்டிக் கிடந்தும் சுயநிர்ணய உரிமை இல்லாது வாழத் தலைப்பட்டுள்ள தமிழினத்திற்கு எகிப்தில் நடந்த நிகழ்வு ஒரு சவுக்கடி. தனது கால நாகரிகம் கொண்ட ஒரு நாட்டில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒழுங்குபடப் பார்த்திருந்தால் அந்தச் சவுக்கடியின் ஆழம் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்திருக்கும். கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் உலகில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் என்று அறிஞர்கள் வர்ணிக்கும் ஒர…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 13, 2011 யாழ் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுவதாகவும் இதனை தட்டிக்கேட்க துணைவேந்தரான பேராசிரியர் சண்முகலிங்கன் முயற்சி செய்வதில்லை எனவும் சிறிலங்கா காடியன் கூறுகின்றது. பேராசிரியர் சண்முகலிங்கன் பாலியல் சேஸ்டைகளில் ஈடுபடுவதாகவும் அதனாலேயே ஊழல்களை தட்டிக்கேட்க முடிவதில்லை எனவும் ஜோன் ரட்ணதுரை என்பவர் எழுதியுள்ளார். பேராசிரியர் சண்முகலிங்கண் பலாலி இராணுவ முகாமிற்கு இராம நாதன் நுண்கலை பீட மானவிகளை அழைத்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.srilankaguardian.org/2011/02/corruption-and-cover-up-at-university.html
-
- 3 replies
- 1.6k views
-
-
மன்னாரில் எண்ணெய் அகழ்வு: சீனா, இந்தியா, ரஷியா கடும் போட்டி! ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 02:14 மன்னார் கடல் பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்தில் இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி தொடர்கின்றது. மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளது என அறியப்பட்டுள்ள பகுதிகளை அரசு எட்டுத் துண்டங்களாகப் பிரித்து உள்ளது. இவற்றில் ஒவ்வொரு தனித் தனி துண்டங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய அரச நிறுவனமான ‘கெய்ன் இந்தியா‘ என்கிற நிறுவனத்துக்கு ஒரு துண்டம் வழங்கப்பட்டது என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் சீனாவுக்கும் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது என தற்போது வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. ஏனைய து…
-
- 3 replies
- 1.1k views
-
-
குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார் – பிரதமர் : 13 பெப்ரவரி 2011 Bookmark and Share குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார் – பிரதமர் : தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் குமரன் பத்மநாதனுக்கு கட்சி அங்கத்துவம் வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக…
-
- 4 replies
- 929 views
-
-
ரஷிய விபச்சாரியுடன் கிறிக்கெற் ஆடிய அமைச்சரின் புதல்வர்! நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிறிக்கெற் அணியைச் சேர்ந்த வீரர்கள் இருவரின் ஹோட்டல் அறையில் ரஷிய விபச்சாரி ஒருவர் கூடவே தங்கி இருந்த விவகாரம் சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை நடத்த முடியாத நிலையில் கிறிக்கெற் சபை உள்ளது. இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிறிக்கெற் போட்டி அணமையில் இடம்பெற்ற நாட்களில் இலங்கை வீரர்கள் இருவரின் அறையில் ரஷிய விபச்சாரி ஒருவர் ஒன்றாக தங்கி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாட்டுப்பட்ட வீரர்களில் ஒருவர் செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவரின் மகன். இந்நிலையில் ஆளும் தரப்பில் இருந்து பிரயோகிக்கப்பட்டு வருகின்ற…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரித்தானியாவில் இருந்து திரும்பிய தமிழ் இளைஞர் சிங்கள காடையர்களால் தாக்குதல் * Monday, February 14, 2011, 12:28 பிரித்தானியாவில் இருந்து அண்மையில் சிறீலங்கா திரும்பிய தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள காடையர்களால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் வீதியோரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவின் அனைத்துலக விமானநிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட இந்த குறிப்பிட்ட இளைஞர் மூன்று தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னரே வீதியோரத்தில் கைவிடப்பட்டுள்ளார். கடுமையான காயத்திற்கு உள்ளான இளைஞர் தற்போது திருமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். இதனிடையே, கடந்த வருடம் டிசம்பர் மாதம் பிரித்தானியாவில் சிறீலங்கா…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையைச் சேர்ந்த சுமார் 100 பாவனையாளர்களின் பேஸ் புக் கணக்குகளை முடக்கி உள்ளது * Monday, February 14, 2011, 4:08 சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக் இலங்கையைச் சேர்ந்த சுமார் 100 பாவனையாளர்களின் கணக்குகளை முடக்கி உள்ளது. பேஸ் புக் மூலமாக குற்றச் செயல்கள், துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதற்காகவே இவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இவர்கள் சம்பந்தமாக Sri Lanka Computer Emergency Response Team (SLCERT) பேஸ் புக்குக்கு முறைப்பாடுகளை மேற்கொண்டு இருந்தது. இதே நேரம் கணக்கை குற்றச் செயகளுக்காக பயன்படுத்தும் இலங்கையைச் சேர்ந்த பாவனையாளர்களின் விபரங்களும் பேஸ் புக்கிடம் தயார் நிலையில் உள்ளன. tamilthai.com
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதிக்கு பெண் ஒருவரிடம் இருந்து கிடைத்த முத்தம்! (காதலர் தின முத்தம் அல்ல.) திங்கட்கிழமை, 14 பெப்ரவரி 2011 17:14 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கின்றமைக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு கடந்த வாரம் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்தபோது அங்கு ஒரு பெண் பகிரங்கமாக முத்தம் கொடுத்து விட்டார். ஜனாதிபதியை இவர் கட்டிப் பிடித்து எங்கள் அப்பா. எங்கள் அப்பா என்று மகிழ்ச்சி ததும்ப சத்தம் இட்டு முத்தம் கொடுத்து இருக்கின்றார். ஆனால் ஜனாதிபதி பதிலுக்கு முத்தம் கொடுத்து இருக்கவில்லை. அமைச்சரவை வாரந்த கூட்டம் இடம்பெற்றபோது ஜனாதிபதி இம்முத்தத்தை நினைவு கூர்ந்தார். ஏனைய அமைச்சர்களுக்கு சொன்னார். tamilcnn அப்போது மைத்திரி…
-
- 1 reply
- 1.5k views
-