Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன், 02 பெப்ரவரி 2011 11:55 .இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள பூந்தமல்லி விசேட அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் ஒன்பது பேர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதப் போராட்டத்தில் நேற்று முதல் குதித்து உள்ளனர். இவர்களில் எட்டுப் பேர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டவர்கள். பொலிஸ்காரர்கள மீது தாக்குதல் நடத்தினர் என்கிற சந்தேகத்தில் கைதானவர்கள். ஆரம்பத்தில் செங்கல்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். பின் பூந்தமல்லி விசேட அகதி முகாமுக்கு மாற்றப்பட்டனர். ஒன்பதாவது நபர் கடந்த ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். tamilcnn.com

  2. புதன், 02 பெப்ரவரி 2011 18:02 .ஈரானுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்காக இலங்கையை மிகக் கடுமையாக அமெரிக்கா எச்சரித்து உள்ளது என்று விக்கி லீக்ஸ் இணையத் தளம் வெளிப்படுத்தி உள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து விக்கிலீக்ஸால் இடைமறித்து எடுக்கப்பட்ட இரகசிய இராஜதந்திர அறிக்கை ஒன்றில் இருந்து இவ்வுண்மை வெளிப்பட்டு உள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கை வெளிநாட்டமைச்சுச் செயலாளராக இருந்த பாலித ஹோகண ஆகியோரை அழைத்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கையை விடுத்து இருக்கின்றது. ஈரானுடன் ஆன வர்த்தக உறவுகளை நெருக்கமாக்குவதால் ஏற்படக் கூடிய பேராபத்து குறித்து இலங்கை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஈரானிடம் இருந்து…

  3. கடலில் கலக்கும் ரத்தம்! - ப.திருமாவேலன் இரவுக் குளிரில் நடுங்கிய நாய் ஒன்று, 'காலையில எழுந்ததும் முதல் வேலையா... போத்திக்க ஒரு போர்வை வாங்கணும்’ என்று யோசிக்குமாம். விடிந்ததும் வெயில் அடிக்க, 'போர்வை எல்லாம் இனி எதுக்கு?’ என்று போய்விடுமாம். அன்றைய இரவும் குளிர் நடுக்கும். போர்வை வாங்க நினைக்கும். மீண்டும் வெயில் காயும். போர்வை வேண்டாம் என்று நினைக்கும். இதற்கும் இன்றைய நடப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுதான் வேதனை! இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்புவார். அவர் இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவிப்பார். இந்தத் தகவல் கொழும்புக்குக் கொண்டு ச…

    • 0 replies
    • 1.4k views
  4. யாழ்ப்பாணத்தில் இருந்து GTNற்காக கனகண்ணை அந்த சனத்துக்கு ஏதுமே கிட்டப் போறதில்லையெண்டது மட்டும் அப்பட்டமா தெரியுது. கனநாளா கதைக்கவேணும் கதைக்க வேணுமெண்டு நினைச்ச விசயமிது. உயர் பாதுகாப்பு வலயத்தில சனத்தை மீளக் குடியமர்த்தப் போறம் எண்டுறாங்கள். இல்லையில்லை உயர் பாதுகாப்பு வலயமெண்ட ஒண்டே இல்லையென்றாங்கள். பாதுகாப்பு அமைச்சு அனுமதிக்கயில்லை யெண்டுறாங்கள். கண்ணி வெடியா கிடக்கெண்டுறாங்கள். அட அதுக்கையே உந்த 40 ஆயிரம் ஆமியும் இருந்தவங்கள் எண்டு யோசனையா கிடக்கு. இவங்கட கதையளை கேட்டால், சனத்தைப்போல எனக்கும் தான் தலை வெடிக்குது. கொஞ்ச நஞ்ச காலமே. 20 வருஷம் கடந்திட்டுது. பெரும்பாலான அடுத்த சந்ததி பிள்ளை, குட்டியளுக்கு தங்கட வீடெங்க, ஊரெங்கையெண்டே தெரியாது. …

  5. புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து விடுவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் முதல் மூன்று மாதத்திற்கு கண்காணிக்கப்படுவார்கள் என சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து வெளியேறும் போராளிகள் தாங்கள் பெற்றுக் கொண்ட பயிற்சியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை ஆராயவும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையவுமே இக் கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் குறிப்பிட்டார். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பான தடுப்பு முகாம்கள் மற்றும் புனர்வாழ்வு நிலை…

    • 0 replies
    • 643 views
  6. தேசிய சாதனை: நல்லூர்ப் பிரதேச சபைக்கு ஜனாதிபதி விருது! புதன், 02 பெப்ரவரி 2011 16:15 .தேசிய மட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்ற பிரதேச சபைகளுக்கு கிடைக்கப்படுகின்ற அதியுயர் ஜனாதிபதி விருது யாழ்ப்பாணத்தின் நல்லூர்ப் பிரதேச சபைக்கு கிடைக்கப் பெற்று உள்ளது. நல்லூர்ப் பிரதேச சபை 2008 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மிகவும் சிறப்பாக செயலாற்றியதற்காகவே சுவர்ணபுரவர என்கிற இந்த விருது வழங்கப்படுகின்றது. நாளை மறு தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு குருணாகலில் தேசத்தின் மணி மகுடம் என்கிற கண்காட்சி இடம்பெறுகின்றது. இதன்போது நல்லூர்ப் பிரதேச சபைக்கு இவ்விருது சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்படும். 'சுவர்ணபுரவர' 1977 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்ற போதிலும…

  7. யாழில் விரைவில் பிரித்தானிய தூதரக கிளை திறக்கப்படும் புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011 இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது நாடுகள் பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி இருந்தன. இருப்பினும் தற்போது இலங்கை யின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்தியா மற்றும் சீனா அதிகளவிலான பொருளாதார உதவிகளை வழங் கிவருவதினால் மேற்குலக நாடுகள் இலங்கைக் கான உதவிகளைக் குறைத்துள்ளன.யாழ்ப்பாணத்தில் வெகுவிரைவில் பிரிட்டிஷ் தூதரகத்தின் கிளை திறந்துவைக்கப்படும். மற்றும் இங்குள்ள மக்களின் ஆங்கிலக் கல்வி விருத்திக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தொரு தீர்வு எட்டப்படுவதன் மூலமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.…

    • 3 replies
    • 682 views
  8. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறந்தாங்கியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’மீனவர்கள் சமீபகாலகளாக தொடர்ந்து தாக்கப்பட்டுவருகிறார்கள். தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் அவர்களுக்கான நிவாரணம் 5 லட்சமாக உயர்ந்துவிட்டது. செல்லப்பன் என்ற மீனவர் கொல்லப்பட்டபோது 3 லட்சமாக இருந்த நிவாரணம் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டபோது தேர்தலை கருதி 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேலும் மீனவர்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கான நிவாரணம் இன்னும் உயர்த்தப்படலாம். இப்போது நிருபமாராவ் இலங்கை சென்று வந்திருக்கிறார். கொலைக்காரன் ராஜபக்சேவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்து பிரதமர் மன்மோகன்…

  9. நேற்று பருத்தித்துறை முனைப் பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலக் குட்டியை பருத்தித்துறை நகர சபையால் அகற்றப்பட்டு புதைக்கப்பட்டது. சுமார் 32.5 அடி நீளமும் 18 அடி விட்டமும் வால் பகுதி 06 அடி நீளமும் கொண்டதாகவும் இருந்த இத்திமிங்கிலக் குட்டியை முழுமையாக எடுத்துச் சென்று புதைப்பதில் சிரமங்கள் இருந்ததால் அதனை பல துண்டங்களாக வெட்டி உழவு இயந்திரம் மூலம் எடுத்துச் சென்று முனை வெளிச்சவீட்டுப் பகுதியில் இராட்சத பக்கோ இயந்திரம் மூலம் குழி வெட்டப்பட்டு புதைக்கப்பட்டது. பருத்தித்துறை நகரசபைச் செயலாளர் அ.அ.நடராசா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இது புதைக்கப்பட்டது. இதன் போது பருத்தித்துறை பிரதேச செயலர் திரு வரதீஸ்வரன் வடமராட்சி வடக்கு கடற்…

    • 0 replies
    • 1.2k views
  10. தமிழ் மக்களின் பிரச்சினை நியாயமானது: விக்கிலீக்ஸ் புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011 முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் போர் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டதாக கூறியது. இவற்றின் தாக்கங்கள் இந்திய, பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு இருந்தது என்பதனை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு கேபிள் மூலம் தெரிவித்திருந்தது. அதில் மே மாதம் 21 ஆம் திகதி 2009 இல் அனுப்பபட்ட செய்திகளின் படி, போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது ஆனால் மஹிந்த இராஜபக்‌ஷ சமாதானத்தை கொண்டுவருவவார் என்பது இன்னமும் தொலைவிலேயே உள்ளது. விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றாலும் தமிழ் மக்களுடைய பிரச்சி…

    • 2 replies
    • 1.8k views
  11. கூட்டமைப்பு - அரசு நாளை பேச்சு: தீர்வு பற்றியே பேசப்படும் புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011 அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுகள் நாளை மாலை 2 மணிக்கு நடைபெறும். இப் பேச்சுகளின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து மாத்திரமே ஆராயப்படும். இப்படி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான பேச்சு களின் முதற்சுற்று கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது தெரிந்ததே. ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள 2ஆம் கட்டப் பேச்சுகளில் கூட்டமைப்பு சார்பில் எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கனகேஸ்வர னு…

  12. யாழ் குடா நாட்டு மக்கள் பீதியிலேயே வாழ்கின்றனர் - யாழ் ஆயர் புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011 யாழ்.குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் துன்பகரமான அச்ச உணர்வுகளுடனே இருக்கிறார்கள் என யாழ். மாவட்ட கத்தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பில் பிரித்தானிய மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழுவினருக்ககும்; சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆயர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களினால் யாழ். மக்கள் பயப்பீதியுடன் இருப்ப…

  13. தலைவர் பிரபாகரனின் படம் வைத்திருந்த இராணுவச் சிப்பாய் கைது... செவ்வாய்க்கிழமை, 01 பிப்ரவரி 2011 15:43 விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பிரசுரிக்கப்பட்ட சஞ்சிகையை வைத்திருந்த இராணுவக் கோப்ரல் ஒருவர் சிங்கள மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். பேருவல பகுதியை சேர்ந்த கோப்ரல் தர இராணுவ அதிகாரி அவரின் காதலியான கென்கமுவா பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பேரூந்தில் சென்ற சமயம் குறிப்பிட்ட சஞ்சிகையை பேரூந்தினுள் படித்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்த பார்த்த சக பயணி ஒருவர் 119 என்ற அவசர இலகத்தின் ஊடாக சிறீலங்கா காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கொடுத்ததால் பேரூந்தில் பயணம் செய்த இராணுவ கோப்ரலும், அவரின் காதலியும் கைது …

  14. இலங்கையர்களுக்கு ஆங்கில அறிவு.. கற்பிக்கப் போகிறது அமெரிக்கா:இதற்கான நிதியினையும் அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. [Wednesday, 2011-02-02 05:36:41] பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஆங்கில தொலைக்கல்வியை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது என உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார். உயர்கல்வித் துறையில் 30,000 பேருக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை வழங்குவதே தமது இலக்கு என குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த வருடத்திற்குள் 20,000 பேருக்கு இம் மொழிப் பயிற்சியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றில் 10,000 பேருக்குத் தொலைக்கல்வியாக ஆங்கில மொழிப் பயிற்சியை அமெரிக்கா வழங்குமெனத் தெரிவித்த அமைச்சர், ஒருவருட காலத்திற்கு இதற்கான நிதியினையும் அமெரிக்கா ப…

  15. நல்லூர் ஆலய சூழலில் மற்றுமொரு நட்சத்திர விடுதி? GTN செய்தியாளர்:- 02 பெப்ரவரி 2011 யாழ் நகரப் பகுதியில் சர்ச்சைக்குரியதாக நல்லூர் ஆலய சூழலில் மற்றுமொரு நட்சத்திர விடுதி அமைய தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. நல்லூர் செட்டித் தெருவில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மாநகரசபை நிர்வாகம் இது தொடர்பான பொதுமக்களது கருத்துக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது. ஏற்கனவே யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் நல்லூர் ஆலயச் சூழலில் நட்சத்திர விடுதி ஒன்று அமைக்கப்படவிருந்ததும் அது தொடர்பில் இந்து அமைப்புகள் பலவும் எதிர்ப்பு வெளியிட்டதனை அடுத்து அது எந்தவித முடிவும் இன்றி முன்னேற்றமும் இன்றி இருந்து வருகின்றது. இந்த நிலையிலேயே தற்போது யாழ்ப்பாணம் செட்டித் தெருவிலும்…

  16. மன்னார் அருவியாற்றுக்குக் குறுக்காக பாலம் * Wednesday, February 2, 2011, 5:23 மன்னார் அருவியாற்றுக்குக் குறுக்காக 15.14 மில்லியன் ரூபா செலவில் புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 260 மீற்றர் நீளமும், 7.5 மீற்றர் அகலமும் கொண்டதாக இப்பாலம் நிர்மாணிக்கப்படுமென நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல நேற்றுத் தெரிவித்தார். தற்போது இந்த ஆற்றைக் கடப்பதற்காக படகு சேவையே இடம்பெற்று வருகின்றது. புத்தளம், வண்ணாத்திவில்லு, சிலாவத்துறை ஊடாக மன்னாருக்குச் செல்லும் பி.403 வீதி வழியில் இந்த ஆறு உள்ளது. கொழும்பு – புத்தளம் ஊடாக வில்பத்து சரணாலயம் வழியாக யாழ்.குடா நாட்டைச் சென்றடைவதற்கான கிட்டிய பாதை இதுவேயாகும். இதேவேளை வடக்கு, …

  17. யாழ்ப்பாணத்துக்கென புதியதொரு புலனாய்வுப் பிரிவு - இலங்கை காவல்துறை நடவடிக்கை! [ பிரசுரித்த திகதி : 2011-02-01 03:37:31 PM GMT ] இலங்கை காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணத்துக்கென தனியான பிரிவு ஒன்றை உருவாக்கவுள்ளது. மிக விரைவில் இந்தப் புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு செயற்படத் தொடங்கும் என்று இலங்கை காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்து விசாரண நடத்துவது மற்றும் தடுப்பதற்கான நடவடிக்கைளில் இந்தப் புதிய புலனாய்வுப்பிரிவு ஈடுபடும். கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துடன் இந்தப் பிரிவு நெருக்கமான தொடர்புகளைப் பேணி வரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். யாழ்ப்ப…

  18. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் வௌ்ளம் [ பிரசுரித்த திகதி : 2011-02-02 05:37:25 AM GMT ] அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்றிரவு தொடக்கம் இன்று காலைவரை பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதனால் மீண்டும் ஒரு சில இடங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக எமது மாவட்ட செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறான காலநிலை நீடிக்குமானால் மீண்டும் ஒருசில குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இங்கினியாகல குளக்கட்டின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அதன் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இ…

  19. எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு பயோமெற்றிக் முறையிலான வீசா வழங்கப்படும் - அவுஸ்திரேலியா 02 பெப்ரவரி 2011 எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்.. எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு பயோமெற்றிக் முறையிலான வீசா வழங்கப்படும் - அவுஸ்திரேலியா எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு பயோமெற்றிக் முறைமையிலனா வீசாககள் வழங்கப்பட உள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்பரவரி மாதம் 8ம் திகதி இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் கிறிஸ் பொவுண் தெரிவித்துள்ளார். இதன்படி, அவுஸ்திரேலி…

  20. வணக்கம். மேற்கு நாடொன்றில் இருந்து கொண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் "மக்களுக்கு உதவ முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்" என்று சொன்னதை வைத்துக் கொண்டு "பின் எதற்காக இவர்கள் எம்பிகளாக இருக்கிறார்கள்?" என்று கேட்பது நல்ல வேடிக்கை. இதே கேள்வியை அந்த மண்ணில் இருந்து கொண்டு நீங்கள் கேட்டிருந்தால் உங்களை நான் பெரிய துணிச்சல்காரன் என்று அழைத்திருப்பேன். உயிருக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடிவந்த நீங்கள் (நானும்தான்) அந்த மண்ணில் உயிர் ஆபத்துக்கு மத்தியில் செயல்படும் நா.உறுப்பினரை (களை) தரக் குறைவாக விமர்ச்சிப்பது உங்களுக்கு அதிகப் பிரசங்கத்தனமாகப் படவில்லையா? யோகேஸ்வரன் போன்றோரை யோசேப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், சிவநாதன், மகேஸ்வரன் சென்ற பாதையில் ம…

  21. செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 1, 2011 இலங்கைத் தீவில் தமிழ்ர் தாயகப்பகுதிகளில் சிங்கள பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருந்த இனப்படுகொலைகளையும், பேரழிவுகளையும் நிறுத்தக் கோரியும், கொடிய சிங்கள பேரினவாதிகளின் அரக்கத் தனமான போரை நிறுத்தி தமிழர்களைக் காக்குமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்தும் தம்மைத் தாமே தீயிட்டு நீதிகேட்ட அந்த தியாகச் சுடர்களை நினைவு கூறும் நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் இடம்பெறவுள்ளது. பிரித்தானியத் தலைநகர் லண்டனின் வடகிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள Jack Cornwell Community Centre, Jack Cornwell Street, Manor Park, London, E12 5NN எனும் மண்டபத்தில் இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழர் தாயகப்பகுதிகள் மீது உக்கிர தாக்குத…

  22. ஈழநாதம் 02/02/2011 புதன் கிழமை வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினையும் சர்வதேச நிறுவனங்களையும் ஈடுபடுத்த அரசாங்கம் தீரானித்துள்ளது . "Joint Plan for Assistance for Northern Province in 2011" (JPA) எனப்படும் இந்த திட்டத்தில் அரசாங்கம், வடக்கு மாகாண சபை, ஐக்கிய நாடுகள் சபை, அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், அரச அதிபர்கள் ஆகியோர்கள் பங்குபற்றுவர். இவ்வாறான ஓர் பொறிமுறையினையே ஐக்கிய நாடுகள் சபை 2009 இல் அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டபோது அரசாங்கம் அதனை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சண்டித்தனமும் காட்டியது. ஆனால் இப்போ அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக கூறுகின்றத…

    • 0 replies
    • 1.2k views
  23. ஜேர்மன் யாழ்ப்பாணத்து மாப்பிளைக்கு வந்த வினை - மாப்பிளையின் தாயாரை தாக்கிய மனைவி 2011-02-01 04:44:57 ஜேர்மனில் உள்ள தனது கணவருக்கு தொலைபேசி எடுத்த சமயம் பெண் ஒருவரின் குரல் தொலைபேசியில் கேட்கவே பத்திரகாளி வேடம் பூண்டு மாமியாரை தாக்கியுள்ளார் மனைவி. இச் சம்பவம் புத்தூரில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் ஜேர்மன் நாட்டில் இருந்து வந்து யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் திருமணம் முடித்துவிட்டு சென்றுள்ளார் இளைஞர் ஒருவர். தனது மனைவியை அங்கு எடுப்பதற்காக அது தொடர்பான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கிய அவ் இளைஞன் தற்போது சோர்ந்து போய் உள்ளதாக தெரியவருகின்றது. இதற்குக் காரணம் ஒரு பெண்ணின் குரல் என்பதுதான். தனது கைத்தொலைபேசி இலக்கத்தை தனது மனைவியிடம் கொடுத்திருந்தார…

  24. இலங்கை சென்று திரும்பிய கயல் விழி அங்கு பெண்கள் மேல் நடக்கும் பாலியல் வன்முறைகளை எடுத்து கூறும் காணொளி - தமிழ் தேவன் சென்னை தியாகராய நகரில் உள்ள செ தெய்வ நாயகம் பள்ளியில், நேற்று ஈழ தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் தமிழின கூட்டமைப்பு பறையர் பேரவையின் அரங்க கருத்தரங்க கூட்டம் நடை பெற்றது. அதில் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பி வந்த வழக்கறிஞர் கயல்விழி அவர்கள் அங்கு தமிழ் மக்கள் படும் அவலங்களை பற்றி விளக்கி கூறினார் . முதலில் பேராசிரியர் செ தெய்வ நாயகம் அவர்கள் முத்துகுமரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கயல்விழி அவர்கள் ஒளிசுடரை ஏற்றி வீர வணக்க முழக்கமிட்டார். பிறகு உரையாற்றிய கயல்விழி , இலங்கையில் போர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.