ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
விஜயகலாவிடம் வாங்கிக் கட்டிய கூட்டமைப்பு வேட்பாளர்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் காரைநகர் பிரதேச சபைக்குப் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவரான வி.ஆனைமுகனுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வேண்டாம் என்று விஜயகலா எம்.பி நேற்று தொலைபேசி வாயிலாகவும், நேரில் வந்தும் மிரட்டினர் என்று ஆனைமுகன் குற்றம் சாட்டி உள்ளார். மாலை.4.00 மணி அளவில் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய விஜயகலா தமிழ் தேசிய கூட்டமைப்பை காட்டமாக விமர்சித்துத் திட்டித் தீர்த்தார் என்றும் கூட்டமைப்…
-
- 6 replies
- 949 views
-
-
இலங்கையின் வடக்கே முறிகண்டி பிரதேசத்தில் இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படாமையினால் அங்குள்ள தமது காணிகள் பறிபோய் விடுமோ என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள். தாமதமின்றி அந்தப் பகுதிகளில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பாக இலங்கைக்கு ஞாயிற்றுகிழமை வருகை தருகின்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அவர்களுக்கு மகஜர் ஒன்றை அந்த மக்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் மகஜர் அனுப்பியுள்ள இந்தப் பகுதி மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந…
-
- 1 reply
- 622 views
-
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாவியில் மீன்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் காரணமாக மக்கள் மீன்களை மறுத்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாவி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது வாவி நீர் தன்மையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தங்களால் பிடிக்கப்படும் மீன்களில் பொதுவாக பல இடங்களில் புண்கள் காணப்படுவதாகவும் இதுவே அந்நோய் என்றும் மீனவர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. மீன்களில் காணப்படும் இந்நோய் ஒரு வகை பூஞ்சை அல்லது பேக்ட்ரீயாவினால் ஏற்படுவதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை தலைவர் கலாநிதி பெ.வினோபாபா கூறுகின்றார். நீ…
-
- 0 replies
- 395 views
-
-
வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்திவிட முடியாது என அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹொரணை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டு உற்பத்திகளை உயர்த்துவதன் மூலம் மட்டுமே, பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறினார். வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் எதிர்காலத்தில் வெளிநாடுகளிடம் கையேந்த நேரிடும். முக்கிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதே மிகவும் முக்கியமான இலக்காக அமைய வேண்டுமெனத் தெரிவித்தார். அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக…
-
- 2 replies
- 505 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 30, 2011 இலங்கை கடற்படை தாக்குவாக கூறி தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழக மீனவர்களுக்கு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழ்நாடு மீனவ மக்கள் பேரவை, தமிழ்நாடு புதுவை கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், தென் இந்திய மீனவ நலச்சங்கம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த ஏராளமான பேர் இந்திய பொலிஸ் உயரதிகாரியிடம் மனுவொன்று கையளித்துள்ளனர். மேலும், அந்த மனுவிலே துப்பாக்கிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி, மீனவர்களுக்கு உரிய துப்பாக்கி சுடும் பயிற்சியும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் மனுவில் முன் வைக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%…
-
- 1 reply
- 553 views
-
-
முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை... இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர். இவர்கள் இருவரையும் கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை நான்கு நாட்கள் இலங்கையில் சித்ரவதைக் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளுடனான யுத்தத்திற்கு கடந்த மூன்று வருடத்தில் 2006 இல் இருந்து 2009 வரை ஐயாயிரத்து 500 மில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி ஆழுனர் கப்புறால் கூறியுள்ளார். ஆயுத கொள்வனவு, சம்பளம், உணவு ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறிய கப்றால் விடுதலைப்புலிகள் மிகத்திறமையான கட்டமைப்புக்களை வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் சொந்தமாக தமக்கு மத்திய வங்கியினை வைத்திருந்ததாகவும், வெளி நாடுகளில் நிதிகளை திரட்டியும் தமது வருமானம் மூலம் நிதிகளை பெற்றுவந்துள்ளதாகவும் கூரியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் தாமாகவும் நிதி உதவிகளை செய்துள்ளமையினையும் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%…
-
- 1 reply
- 677 views
-
-
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கொலை! ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 17:43 கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் தமிழ் கொலைகள் இடம்பெறுவது சர்வ சாதாரணம் ஆகி விட்டது. ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ் கொலைதான் ஜீரணிக்க முடியாததாக உள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகம் என்கிற சொல் கடந்த சில வருடங்களாக "கொமம்புப் பல்கலைக்கழகம்" என்று தான் பல்கலைக்கழகத்தில் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. இத்தமிழ் கொலை தலை நகரில் வாழும் தமிழ் புத்திஜீவிகள், கொழும்பு பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினர் ஆகீயோரின் கண்களை இன்னமும் குத்தாதது பேரதிசயமாக உள்ளது. tamilcnn.com
-
- 1 reply
- 827 views
-
-
ஐ.சி.ஆர்.சி. தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு... சனிக்கிழமை, 29 ஜனவரி 2011 15:08 சர்வதேச செஞ்சிலுவைசங்கத்தின் தலைவர் தடரெறு கோனே நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு ஐ.சி.ஆர்.சி. இன் நிவாரண வேலைகளை மேற்பார்வை செய்யவும் செஞ்சிலுவை சங்கங்கத்தின் தொண்டர்களை பாராட்டவுமே கோனே இலங்கை வந்துள்ளார். இவர் கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த போது இலங்கை செஞ்சிலுவை சங்கங்களின் தலைவர் அபய சிங்க விளக்கங்களை வழங்கினார். 50 வருடங்களுக்கு மேலாக செஞ்சிலு வைச் சங்கத்தின் தொண்டர்களாக வேலை செய்தவர்களையும் பாராட்டும் நிகழ்விலும் கோனே பங்குபற்றினார். இவர் இன்று சனிக் கிழமை மாலை இலங்கையிலிருந்து பயணமாகவ…
-
- 0 replies
- 543 views
-
-
சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம் * Sunday, January 30, 2011, 2:55 சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம் மேற்கொள்ளப்படள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவை நேற்று முன்தினம் (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பெப்பிரவரி 04 அன்று பிரித்தானியா இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் என்று தமிழ் மக்களின் சுதந்திரத்தை நிரந்தரமாக சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற இன அழிப்பின் உச்சமாக 2009 மே 19 உலக வரலாற்றில் பதிவாகியது. அன்றில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர்…
-
- 2 replies
- 1.5k views
-
-
நோர்வேயின் மீள் வருகையும் தென் சூடான் படிப்பினைகளும் – இதயச்சந்திரன் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதியன்று 301 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரில் பதிவு செய்திருந்த ஆளும் கட்சி, “கூட்டமைப்பு” என்ற சொல்லின் மீதுள்ள காதலால், முன்னணியை, கூட்டமைப்பாக்கி, தம்மால் யாழ். மாவட்டத்தில் தாக்கல் செய்த அனைத்து வேட்பு மனுக்களையும் நிராகரிக்கச் செய்து விட்டது. மக்களின் சுதந்திரமான நடமாட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ். குடாவில் தேர்தல் நடைபெறப் போகிறது. அரசியல் தீர்விற்கõன முதல்படிக்கல் இதுவென சிலர் கூற முற்படலாம். அட…
-
- 1 reply
- 699 views
-
-
தனித் தமிழ் ஈழத்துக்கான சர்வதேச ஆதரவென்பது சாத்தியமற்றதென்ற நிலப்பாட்டுடன் மத்தியஸ்த்தத்தில் ஈடுபட்ட எரிக் சொகெயிம் தனி நாட்டிற்கான சர்வதேச ஆதரவு ஒருபோதுமே வரப்போவதில்லை என்கிற மனநிலையோடுதான் தான் தான் மத்தியஸ்த்தத்தில் ஈடுபட்டதாகச் சொல்லியிருக்கும் எரிக் சொல்கெயிம் அவர்கள், மீளவும் தான் அரசுக்கும், புலம்பெயர் தமிழர்கள் உற்பட்ட தமிழ் மக்களுக்குமிடையில் மத்தியஸ்த்தம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது இவ்வாறிருக்க மறைந்த முன்னால் தமிழீழ அரசியல்ப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. தமிழ்ச்செல்வனுக்கும் நோர்வே சமாதன ஏற்பாட்டாளர்க் குழுவுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுக்களுக்களின்போது அவர்கள் சூடானைப் போன்று இலங்கையிலும் தனிநாட்டிற்கான சாத்தியம் உள்ளதாக கூறியத…
-
- 3 replies
- 1k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 30, 2011 வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழரசுக் கட்சியின் தனித்த முடிவே தவிர அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி எடுத்த முடிவு அல்ல என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவருமான சுரேஸ்பிரேமச்சந்திரனும், ரெலோ பொதுச்செயலாளர் அ.செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை விடுத்துள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் ப…
-
- 0 replies
- 561 views
-
-
இந்திய அரசு, இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கை விட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறு நிதி தொடர்பான 3 நாள் கருத்தரங்கம் நடந்து வருகிறது. இதில் கருத்தரங்கில் பங்கேற்க வந்த கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட 1974, 76ல் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். இந்தியா நேபாளம் ஒப்பந்தம் கூட மறுஆய்வு செய்யப்பட்…
-
- 0 replies
- 470 views
-
-
நகைகளைக் கேட்டனர் கொள்ளையர் கைகளை விரிக்கவே விழுந்தது அடி:புங்குடுதீவு தம்பதியர் யாழ். ஆஸ்பத்திரியில் புங்குடுதீவில் கொள்ளையில் ஈடுபடச்சென்றவர்கள் அங்கு நகைகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த தம்பதியினரைத் தாக்கிக் காயப்படுத்தி விட்டுச்சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவத்தில் காயமடைந்த புங்குடு தீவு 6ஆம் வட்டாரம், ஆலடியைச் சேர்ந்த கே.சுவாமிநாதன் (வயது72), அவரது மனைவி சு.வரதலட்சுமி (வயது65) ஆகியோர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த தம்பதியரின் வீட்டுக்குள் அலவாங்குகள்,பொல்லுகளுடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவரையும் மிரட்டி நகைகளைத் தருமாறு கோரியுள்ளனர்.எம்மிடம் நகைகள் இல்லை நாளை க…
-
- 0 replies
- 985 views
-
-
மஹிந்தரின் நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகின்றார் சந்திரிகா! ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 04:00 கடந்த காலங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் அமைக்க தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகின்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. சாட்சியம் வழங்க ஆணைக் குழு முன் ஆஜராகின்றமைக்கு நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரி இருந்தார். ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இத்தகவலை வழங்கினார். tamilcnn
-
- 0 replies
- 552 views
-
-
இலங்கையில் தயாரிக்கப்பட்ட யுத்த தளபாடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யத் திட்டம்: [sunday, 2011-01-30 05:08:34] இலங்கையில் தயாரிக்கப்பட்ட யுத்த தளபாடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவிக்கையில்.. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கடந்த கால யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் சில இராணுவத் தளபாடங்களைத் தயாரித்திருந்தது. மேலும் யுத்த நடவடிக்கைகளுக்குப் பயன்படும் பல பொருட்கள் எமது தேவைக்கேற்ற நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டன. இவ்வாறானவற்றினை நாம் தற்போது வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். குண்டு துளைக்க முடியாத உடைக் கவசம்,குண்டு துளைக்க முடியாத கவச வ…
-
- 0 replies
- 606 views
-
-
ஸ்ரீ ரங்கா எம்.பிக்கு அரசு நம்பிக்கைத் துரோகம்! ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணி தலைவருமான ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு நம்பிக்கை மோசடி செய்து உள்ளது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு. ரங்கா எம்.பி அரசை ஆதரித்து வருபவர். அரசுடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போட்டியிடுவது இல்லை என்றும் பிரஜைகள் முன்னணியே போட்டியிடுவது என்றும் இவருக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு இருந்தது. கடந்த 25 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும், இவரும் பரஸ்பரம் சந்தித்துப் பேசி இணக்கத்துக்கு வந்து இருந்தனர். …
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 30, 2011 இந்திய கட்டுப்பாட்டு ஹிம்மால்சல் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெளத்த துறவி ஒன்றின் அலுவலகத்தினை முற்றுகையிட்ட பொலிசார் 9 கோடி ரூபா பெறுமதியான வெளி நாட்டு நாணையங்களை கையகபப்டுத்தினர். கர்மபா லாமா எனும் பெளத்த துறவியிடம் 9 கோடி பெறுமதியான அமெரிக்க, சீன, பிரித்தானிய நாடுகளின் பணங்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த பெளத்த துறவி ஹிம்மாசல பிரதேசத்தில் பல பணித்திட்டங்களை செய்துவந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால் சீனா அரசாங்கத்தின் நிதி மூலம் இவர் அங்கே பல பணிகளை செய்வதாக இந்தியா கருதுகின்றது மட்டுமன்றி இந்த துறவி அபல விவசாய நிலங்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. சீன மொழியினை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத …
-
- 2 replies
- 753 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 30, 2011 உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் மக்கள் வாழ்விடங்கள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளமை குறித்த தனது கவலையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. கிழக்கில், இடம்பெயர்ந்து வாழும் மக்களில் சிலர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று கூறப்பட்டு அந்தப் பகுதிகள் இராணுவத்தினரால் மக்கள் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. இது குறித்த தனது கவலையை அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னாள் ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரமவிடம் தெரிவித்தனர். குறிப்பாக, திருகோணமலை மாவட்டம் சம்பூரில் உள்ள உயர் பாதுகாப்பு வலயம் குறித்து ஐ.நா. அதிகாரிகள் இந்…
-
- 0 replies
- 646 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 30, 2011 உள்ளூராட்சித் தேர்தலில் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளில் போட்டியிடும் சுயேச்சைக்குழுகளுக்கு ஆதரவு வழங்குவதென ஆளும்தரப்பு முடிவு செய்துள்ளது.உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் சமர்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 35 சபைகளுக்கான மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அந்தச் சபைகளில் சுயேச்சைக் குழுக்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து அவற்றின் ஆதரவுடன் சபையின் அதிகாரங்களை கைப்பற்ற அரசு தரப்பு முயற்சி செய்து வருகிறது.இதற்கான பேச்சுக்களை அந்தச் சுயேச்சைக்குழுக்களுடன் ஆளும் தரப்பு ஆரம்பித்துள்ளது என தகவல்கள் தெரிவித்தன. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஆறு சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்களே ஏற்கப்பட்டிருந்தன. அந்தக் குழுக்கள் அரசுத்தர…
-
- 0 replies
- 523 views
-
-
ஈழநாதம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுடன் காலத்தை போக்குவதாக மட்டக்களப்பினை சேர்ந்த பாக்கியராணி வயது 32 கூறுகின்ரார். இவருக்கு நான்கு குழந்தைகள், கணவர் போரினால் காலை இழந்தவர், விவசாயம் செய்தும், கல்லு செய்து விற்றும் சீவியத்தை நடாத்தி வந்த பாக்கியராணியின் குடும்பம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. இவர்களின் வயல் நிலம் வெள்ளத்தினால் அழிந்துவிட்டது. வயல் செய்ய வங்கியில் கடன் எடுத்தார்கள் ஆனால் அதை இப்போ கட்ட முடியாது. இந்த மாதம் 14 ஆம் திகதி வெள்ளம் வடிந்த பின்னர் வீடு வந்தோம் வீடு சுவர் இடிந்து காணப்பட்டது. வெள்ளம் வந்ததில் இருந்து பாடசாலை ஒன்றில் பிள்ளைகளுடன் இருந்தோம் அங்கு சமைத்த உணவு தரப்பட்டது. ஆனால் வீடு வந்ததில் இருந்து நிவாரணம் இல்லை. அதனால் பட்டிணி ஒருவேளை உணவு…
-
- 0 replies
- 418 views
-
-
அம்பாறையில் நேசக்கரம் நிதியுதவியில் நடமாடும் வைத்திய முகாமும் உதவியும் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத்தை பேணும் நடவடிக்கையின் கீழ் நேசக்கரம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் `கோமாரி` பிரதேசத்தில் நடமாடும் வைத்திய முகாமும் 25குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா பெறுமதியான நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வும் 28.01.2011 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெள்ள அனா்த்தத்தினானால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நோய்கள் வராது தடுக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக நுளம்பு வலைகள் வழங்கியதுடன் நடமாடும் வைத…
-
- 4 replies
- 692 views
-
-
நோர்வே அரசின் உதவியுடன் வடக்கில் தொழிற்பயிற்சி அபிவிருத்தித் திட்டங்கள் ... சனிக்கிழமை, 29 ஜனவரி 2011 16:16 நோர்வே வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் வடக்கில் தொழிற்பயிற்சித் துறைசார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொழிற்பயிற்சித் துறையினை விருத்தி செய்யும் முகமாக 3 தேசியத் தொழிற்தகைமை சான்றுப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தேசிய பயிலுநர் கைத்தொழில் அதிகார சபைக்கு கையளிக்கப்படவுள்ளது. இலங்கையில் முதன்முறையாக அமைக்கப்படும் இவ்வாறான சான்றுபடுத்தும் நிலையத்தினூடாக பல்வேறுபட்ட தொழில்சார் திறன் இருந்தும் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் இல்லாதவர்கள் அரசாங்க அங்கீகாரமற்ற தேசிய தொழிற்த…
-
- 0 replies
- 588 views
-
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகின்ற கொழும்பு தமிழ் சங்கம்! ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 01:52 இலங்கையின் 63 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு தமிழ் சங்கம் எதிர்வரும் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படுகின்றது. தமிழ் சங்கத்தில் உள்ள அலுவலகம், படிப்பகம், நூலகம் ஆகியன அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் அறிவித்து உள்ளார். சங்கத்தின் அறிவித்தல் பலகையில் இவ்வறிவித்தல் ஒட்டப்பட்டு உள்ளது. tamilcnn.com
-
- 0 replies
- 653 views
-