Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கென மனிக்பாம் முகாமிலிருந்து இளம் பெண்களும் சிறுமிகளும் தமது விருப்பத்திற்கு மாறாக ஏற்றி அனுப்பி வைக்கப்படுவதாக பெற்றோர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்திஆனந்தன் தெரிவித்துள்ளார் இந்தச் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஞாயிறன்று 18 பேரும் திங்களன்று 30 பேரும் இவ்வாறு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள். ஞாயிறன்று அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 18 பேர் பெண் பிள்ளைகள். இவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்ற சிறுவர்கள் சிறுவர்களுக்கான விடுதிகளில் தங்கியிருந்து பா…

  2. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கும் தேசிய நல்லிணக்க ஆணைக் குழு முன் ஆஜராகி சாட்சியம் வழங்குகின்றமை தொடர்பாக எவ்வித ஈடுபாடும் இல்லாதவர்களாக இருந்து வருகின்றனர். ஆஜராகி சாட்சியம் வழங்க வேண்டும் என்று ஆணைக்குழு இவர்களுக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்து உள்ளது. இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டு சுமார் பத்து நாட்கள் கழிந்து விட்டன. ஆனால் இவ்வேண்டுகோளை இருவரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லைப் போல் இருக்கின்றது. இவர்களிடம் இருந்து எவ்விதமான பதிலும் ஆணைக்குழுவுக்கு இன்னமும் வழங்கப்படவே இல்லை. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=arti…

  3. கணவன் பலி; மனைவி ஆபத்தான நிலையில்; பிள்ளையோ வாவியில்! செவ்வாய், 18 ஜனவரி 2011 17:41 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அதன் மீது இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று மோதியதையடுத்து ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். உயிரிழந்தவரின் குழந்தை கந்தலகம வாவியில் வீசப்பட்டது. அவரது மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாகவிருப்பதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, கந்தலகம வாவியில் வீசப்பட்ட குழந்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது. tamilcnn.com

  4. புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி தொடர்ந்தும் சிறையில்! .தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமியை தொடர்ந்து சிறையில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட தமிழினி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு மே, 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அவர் விளக்கமறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளார் என இரகசியப் பொலிஸ் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொ…

  5. தமிழ் நாட்டு மீனவர்கள் காலங்காலமாக இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் இந்திய அரசினால் கண்டுகொள்ளப்படாத விடையமாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் ஏனைய பிராந்தியங்களில் இந்தியர்களுக்கு உயிராபத்துவரும் வேளைகளில் இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கள் வேறுவிதமாக இருக்கும் ஆக்ரோசமாகவும் இருக்கும். இந்திய ராஜதந்திர மட்டத்தில் அலசப்படும். ஆனால் தமிழ் நாட்டு மீனவர்கள் சுடப்படும் போது ஏன் நாயே என கேட்பது கூட இல்லை. ஆனால் தேர்தல் வரும் வேளை மட்டும் சில வார்த்தைகள் இந்திய அதிகாரிகிளிடம் இருந்து வெளியே வரும். ஆனால் நேற்று முந்தினம் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டமை தொடர்பில் இந்தியாவிம் பிரதிபலிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. இத…

  6. மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 14 துப்பாக்கிகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபகர்கள் இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈழMy linkநாதம்

    • 2 replies
    • 1.3k views
  7. யாழ்ப்பாணத்தில் இந்திய விசா வழங்கும் பணிகள் ஆரம்பம்! செவ்வாய், 18 ஜனவரி 2011 12:25 யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய கவுன்ஸிலர் அலுவலகத்தில் விசா வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டடுள்ளன. பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தூதரக அலுவலகத்தில் விசா வழங்கும் பணிகள் திங்கள் கிழமை முதல் ஆரம்பமானதாக இந்த அலுவலகத்தின் பொறுப்பாளர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். தினசரி 50 முதல் 100 விசாக்களை வழங்கக் கூடியதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ஏற்கனவே அமுலில் உள்ள நடைமுறைகளின் பிரகாரமே விசா வழங்கப்படுகின்றது. விண்ணப்பதாரிகள் விசாவுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய …

    • 1 reply
    • 960 views
  8. செவ்வாய்க்கிழமை, 18, ஜனவரி 2011 (10:13 IST) குரல் கொடுக்க தமிழகத்தில் யாரும் இல்லை என ஈழத் தமிழர்கள் வேதனை: ச. தமிழ் எழுத்தாளர் சங்க இந்திய தலைவர் தமிழகத்தில் குரல் கொடுக்க யாரும் இல்லை என, இலங்கை தமிழர்கள் ஆதங்கப்படுகின்றனர் என்று சர்வதேச தமிழ் எழுத்தாளர் சங்க இந்திய கிளை தலைவர் சுந்தரராஜன் கூறினார். இலங்கை கொழும்பு நகரில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடந்தது. தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து 45 எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் சங்க இந்திய கிளை தலைவர் சுந்தராஜன் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் தலையில்லா முண்டம்போல், தலைவர் இல்லா தேசமாக, ஒருதுளிகூட முன…

    • 1 reply
    • 1k views
  9. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவை மையமாகக் கொண்டு இலங்கையில் மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்து வருவதாக கனடாவின் பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது தங்களுக்குத் தெரியாது எனவும், கனடாவில் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சில தலைவர்கள் இருப்பதாகவும் கனடா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், தெற்காசிய ஆட்கடத்தல்காரர்களால் மேலும் இரண்டு கப்பல்களில் பிரிட்டஷ் கொலம்பியா கடற்பரப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அதில் 50ற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவிற்குச் …

    • 0 replies
    • 2.7k views
  10. பாகிஸ்தானின் இராணுவத் தளபதி இலங்கை விஜயம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-14 06:55:49 AM GMT ] பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அஸ்ரப் பெர்வஸ் கயானி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தானிய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோரை பாகிஸ்தானிய இராணுவத் தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 19ம் திகதி பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயம் ஆரம்பமாகும் என அந்நாட்டு இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamilulagam.com

  11. இலங்கையில் தடை விதிக்கப்படவுள்ள புகையிலைச் செய்கை! செவ்வாய், 18 ஜனவரி 2011 10:30 விவசாயிகளுக்கு உணவுத் தானிய செய்கையை ஊக்குவிக்க அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் புகையிலை செய்கைக்கு தடை விதிக்கப் போவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதனால் புகையிலை செய்கைக்கான உர மானியத்தையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார். உணவுத் தானியங்களை உற்பத்தி செய்வதில் விவசாயிகளின் கவனத்தை திருப்புவதே இதன் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எது எவ்வாறெனினும் இலங்கையின் பல பகுதிகள் உட்பட குறிப்பாக யாழ் குடாநாட்டிலும் பணப்பயிராக பெருமளவு இலாபமீட்டுகின்ற பய…

  12. இலங்கையின் அமெரிக்க இராணுவ நெருங்கிய நண்பர்கள் குறித்து அமெரிக்க ஊடகவியலாளர் திடுக் தகவல்! இலங்கைக்கு அமெரிக்காவில் குறிப்பாக அதன் இராணுவ வட்டாரத்தில் நெருங்கிய நண்பர்கள் உள்ளனர் என்று ஜோன் லீ என்டர்ஸன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் நியுயோர்கர்.கொம் என்ற இணையத்தளத்தில் கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, புஷ் நிர்வாகத்தில் உயர் பதவி வகித்த ஜேம்ஸ் கிளார்ட் என்பவர் இலங்கையின் மிக நெருங்கிய நண்பராக இருந்தார். இவர் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில் இலங்கை மற்றும் இந்திய விவகாரங்களைக் கையாளுவதற்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளராக இருந்தார். 2009ல் ஒபாமா நிர்வாகத்தால் இவர் பதவி மாற்றம் செய்யப்…

    • 0 replies
    • 1.1k views
  13. மீண்டும் தமிழர்கள் ஏமாறுவார்களா? கனடாவில இப்போது தமிழர்களை அரசியலாளர்கள் கண்டு கொள்ளத்துவங்கிவிட்டார்கள். கரிசனையும் வாழ்த்துக்களும் தமிழர்களுக்கு குவிகின்றன. ஏன்? எதற்காக? தேர்தல் களம் கனடாவில் அண்மிக்கின்றது. தமிழர்களைத் தங்கள் திசையில் திருப்பி வாக்குகளை அபகரிக்கும் திட்டம் தான். இம்முறை என்றுமில்லாதவாறு தைப்பொங்கல் வாழ்த்துக்கள் நீ முந்தி, நான் முந்தி என அரசியல் பிரமுகர்களிடம் இருந்து குவிகின்றது. 2009ம் ஆண்டு குளிரிலும் பனியிலும் தமிழர்கள் தங்கள் உறவுகளைக்காப்பாற்று காப்பாற்று என்று இரவும் பகலும் வீதிகளில் இறங்கி தொண்டைகிழியக்கத்தி கேட்டபோது விழி திறந்து இருந்தும் திறக்காதவர்கள்போல், காது கேட்டும் காது கேட்காதவா போல் தமிழினத்தின் உரிமைகளை எட்டி உதைத்தவர்கள். தம…

  14. "Wikileaks" சுவிஸ் வங்கியில் கள்ளமாய் பணம் வைப்பிலிட்டோரையும் காட்டி கொடுக்க வெளிக்கிடவிடருக்கு [இரண்டு இறுவட்டு இருக்கம்லே]பார்ப்போம்...![எனது பெயரும் வருதா என்று! http://www.youtube.com/watch?v=AqOn4L8kJwA

  15. யாழ். மானிப்பாயை சேர்ந்த பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று திங்கட்கிழமை இரவு 8.20 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த 31 வயதான ஸ்ரீபால சுந்தரம் நினோஷா என்பவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவராவர். இவர் வீட்டு வாசலில் நிற்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் காலில் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/15088-2011-01-17-16-07-02.html

  16. அவுஸ்திரேலியக் கிளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். 17/01/2011. வெள்ள அழிவு நிவாரணம்: அவசர வேண்டுகோள்! அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான நிவாரணப்பணித்திட்டத்தில் தமிழ் பேசும் மக்களும் தம்மாலான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அண்மையில் ஏற்பட்ட இப்பேரழிவால் குயின்ஸ்லாந்து மாநிலம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியளவில் பொருண்மிய இழப்பு குயின்ஸ்லாந்தில் ஏற்பட்டுள்ளது. இங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணித்திட்டத்தில் தமிழ் பேசும் மக்களும் தம்மை இணைத்துப் பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது. இதேவேளை, அண்மையிலேற்பட்ட வெள்ளப்பெரு…

  17. Fiddling politics of Mahinda Rajapakse (January 17, London, Sri Lanka Guardian) President Mahinda Percy Rajapakse is reluctantly advocating a home grown solution to the national question of devolution of powers to the minorities. As though the concept is something unprecedented and creative and no one had advocated in the past, the President is promoting the theme without spelling out what is special about his mission. At this week’s informal meeting with the Foreign Correspondents, responding to a question on devolution he has stated: ‘I am for the 13th Amendment (to the Constitution) plus’. The very President on his return from his recent disastrous visit to t…

  18. யாழ்ப்பாணத்துச் சம்பவங்கள் எதேச்சையாக நடந்தவை அல்ல சிறிலங்கா கார்டியன் விமர்சனம் யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்கள், காணாமற்போதல் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அங்குள்ள தமிழ் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் எதேச்சையாக நடைபெற்றது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு ஒரு குறிப்பிட்ட அரசியல், பொருளாதார நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் என சிறிலங்கா கார்டியன் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீவி…

  19. வடபகுதிக்கான அபிவிருத்தியின் தளம் எதுவாக இருக்க வேண்டும்? வடபகுதியின் அபிவிருத்தி பற்றிய பேச்சுக்கள் இப்போது பரவலாக உள்ளன. செயலில் அதன் பெறுமானம் எவ்வாறு உள்ளதென்பதை உணர்ந்து கொண்டாலும் அபிவிருத்தி என்ற பேச்சின் தொனிப்பு எங்களை அறியாமல் எங்களுக்கு அபிவிருத்தி ஏற்படுகின்றதோ என்ற பிரமையை உண்டாக்கி விடுகின்றது. எனினும் எங்கள் வீதியால் பயணிக்கும் போது வாகனங்கள் குன்று குழிகளில் விழுந்தெழுகையில் பிரமை கலைந்து யதார்த்தத்தைப் புரிய முடிகின்றது. எதுவாயினும் அபிவிருத்தி பற்றிச் சிந்திப்பதிலிருந்து எவரும் விலக முடியாதென்பது மறுக்க முடியாத உண்மை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபுலத்தை அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்லும் தார்மீகக்கடமை அனைவருக்கும் உண்டு. அவ்வாறானதோர்…

  20. கனடாவுக்கு 400 புலிகள் படையெடுப்பு? .இலங்கைத் தமிழ் அகதிகள் என்கிற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் கடத்தல்காரர்களின் உதவியுடன் கடல் வழியாக கனடாவுக்கு வர உள்ளனர் என்று கனேடிய புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அந்நாட்டு பத்திரிகைகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இன்று இச்செய்தியைப் பிரசுரித்து உள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் இருந்து இரு கப்பல்களில் புறப்பட்டு வர உள்ளனர் என்றும் ஆனால் கப்பல்கள் கிடைக்காமையாலேயே தாமதித்துக் கொண்டு இருக்கின்றனர் என்றும் இச்செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17476:-400--&catid…

    • 0 replies
    • 1.9k views
  21. தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தருகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எங்கள் நிலை குறித்த பகிரங்க மடலை எழுதுவது சாலப் பொருத்துடையதெனக் கருதுகின்றோம். அதற்காக நாம் எழுதும் பகிரங்க மடல் இனப் பிரச்சினைக்குத் தீர்வு தாருங்கள் என்பதாகவோ, வடக்குக் கிழக்கை இணையுங்கள் என்ற கோரிக்கையாகவோ, மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்குங்கள் என்பதாகவோ அமையும் என்று யாரும் எண்ணாதீர்கள். அந்த விடயங்கள் எங்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கென உரித்து எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே நாம் அதில் கை வைத்து அவர்களின் பிழைப்பிற்குக் கெடுதி செய்ய விரும்பவில்லை. நாம் ஜனாதிபதியிடம் கேட்பதெல்லாம் நீங்கள் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு வந்து போக வேண்டும்…

    • 0 replies
    • 1.4k views
  22. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் ஒடுக்குமுறைக் கொள்கைகளையே பிரயோகித்து வருவதாக குளோப் அன்ட் மெயில் எனும் ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய முக்கியமான வாய்ப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் தவறவிட்டு வருவதாக இவ்வூடகம் விசனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைக் கொள்கைகளையே பிரயோகித்து வருவதாக இவ்வூடகத்தின் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 30 வருடங்களாக நீடித்த போருக்குப் பின்னர் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமாக இல்லாத போதிலும், …

  23. இன, மத பேதங்களைக் கடந்து நாம் ஒரு தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைவோம் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். 'எங்களுக்கு ஒரு பொறுப்பிருக்கிறது. இந் நாட்டின் தலைவர்கள் எமது மக்களை சரியாக வழிநடத்த வேண்டும். குறுகிய அரசியல் லாபத்திற்காக இம் மக்களைப் பிரிக்க வேண்டாம். இன, மத பேதங்களைக் கடந்து நாம் ஒரு தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைவோம்' என அவர் தெரிவித்துள்ளார். யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், சர்வதேசத்திற்கு பிழையான தகவல்களை வழங்கி அதன் உதவிகளைத் தடுக்க சில சக்த…

    • 0 replies
    • 519 views
  24. அரசு தமிழ்க் கூட்டமைப்பு 2ஆம் கட்டப்பேச்சு 21இல் அரசு கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் எதிர் வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. நேற்று "உதயனு"க்குத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசும் கூட்டமைப்பும் கடந்த 10ஆம் திகதி சந்தித்துப் பேச்சு நடத்தியமை தெரிந்ததே.ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஆரம்பக் கட்டப் பேச்சுகளை நடத்துவதற்காக மூன்றுசிரேஷ்ட அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார். முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறிவிக்கிரமநாயக்க, நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறிபாலடிசில்வா, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் இக்குழுவில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.