Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 31 OCT, 2023 | 02:47 PM ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தனை சந்தித்தனர் ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் ! | Virakesari.lk

    • 5 replies
    • 552 views
  2. மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கை இன்று செவ்வாய்க்கிழமை (31) விசாரணைக்கு எடுத்தபோது தேரர் தமிழர்கள் மீதான இன வன்முறைகளை தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்கள் இறுவெட்டில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தெற்கிலுள்ள தமிழர்கள்…

    • 1 reply
    • 443 views
  3. வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை! வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌத்தர்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொலிப்பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மகா சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். அரசாங்கத்தின் பொறுப்பு இது. 500 மகா சங்கத்தினரை அழைத்துக் கொண்டு வடக்கு – கிழக்கிலுள்ள விகாரைகளுக்குச் செல்ல நான் தயார்.…

    • 4 replies
    • 804 views
  4. சட்டவிரோத மணல் அகழ்வு – காவற்துறைக்கு துணையாக இராணுவம் , STF களமிறங்குவார்கள்” adminOctober 31, 2023 சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு காவற்துறையினருக்கு துணையாக ராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறங்குவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.10.23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதால் அது பல பாதிப்புகள் ஏற்படுத்துகின்றது, அந்த வகைய…

  5. யாழில். பிக் மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்! யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக கிடைக்கப்பெற்ற வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகேயே இன்று இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது” யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் நின்று ஒருவர் “பிக் மீ ” செயலி ஊடாக முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தியுள்ளார் எனவும், இதனை அடுத்து அவரை ஏற்றுவதற்காக வந்த முச்சக்கர வண்டி சாரதியிடம் தரிப்பிடத்தில் நிற்கும் சாரதிகள் வாக்குவாதத்தில் ஈடு…

  6. கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் பாகதலே வீதிச் சந்திக்கு அருகில் டுப்ளிகேஷன் வீதியின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சுக்கு எதிரே இருந்த வேன், கார் மற்றும் முச்சக்கர வண்டியின் மீது மரத்தின் கிளை வீழ்ந்துள்ளது. இச்சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.R Tamilmirror Online || டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்தது

  7. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசி இறக்குமதி : பணிப்பாளர்களுக்கு பயணத்தடை! போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வந்து நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு அவற்றை விநியோகித்தமை தொடர்பில் இரண்டு சுகாதார அதிகாரிகள் உட்பட மூவருக்கு மாளிகாகந்த நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் விநியோகப் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, மற்றும் மருந்து உற்பத்தி செய்யப்பட்ட நிறுவனத்தின் அதிகாரியான சுகத் ஜானக பெர்னாண்டோ ஆகியோருக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. …

  8. வட மாகாண மாணவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆளுநர் வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருகிறது. இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னோக்கி செல்லும் என கூறியுள்ளார். வடமாகாணத்தை பொறுத்தவரையில் கல்வியில் பின்னோக்கி செல்வது வேதனையான விடயமாகும் என்பதோடு வடக்கில் தற்போது பாடசாலையில் இருந்து இடை விலகும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்…

  9. வடக்கில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு! adminOctober 31, 2023 வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருகிறது. இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னோக்கி செல்லும். வடமாகாணத்தை பொறுத்தவரையில் கல்வியில் பின்னோக்கி செல்வது வேதனையான விடயமாகும். வடக்கில் தற்போது பாடசாலையில் இருந்து இடை விலகும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து செல்கிறது. அதேவேளை சுயமாக வாசிக்கும் , எழுத…

  10. Published By: DIGITAL DESK 3 31 OCT, 2023 | 10:34 AM யாழ்ப்பாணம் - கொடிகாமம் - பருத்தித்துறை பயணிகள் பஸ் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது என அறியமுடிகிறது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பஸ் குடைசாய்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதோடு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/168128

  11. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடுத்த வருடம் முதல் ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி செய்யப்படும் எனவும் அதற்காக செலவிடப்படும் தொகை அறுபது மில்லியன் ரூபாவை தாண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். எம்.பி.க்களின் வயது வரம்பில் ஏற்பட்ட மாற்றம், சமூக பாதுகாப்பு வரி திருத்தங்கள் காரணமாக வரித் தொகையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக காப்புறுதித் தொகை அறுபது மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். https://thinakkural.lk/article/279123

  12. அடுத்த பட்ஜெட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரி – விஜித ஹேரத் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 2024 ஜனவரி முதல் சொத்து வரி மற்றும் Inheritance Tax போன்ற புதிய வரிகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்திற்கான பொது முன்மொழிவுகளை கோரி நிதி அமைச்சின் செயலாளர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது வழமை என்றாலும் இவ்வருடம் அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ச…

  13. Simrith / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 12:38 - 0 - 39 நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2013 ஆம் ஆண்டு ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் …

  14. 30 OCT, 2023 | 10:10 AM “யாழ் நிலா” ரயில் சேவையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) பயணித்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதிச் சேவையை விசேடமாக வழங்கவென கொழும்பு - காங்கேசன்துறைக்கு இடையில் 'யாழ் நிலா' என்ற பெயரில் ஒரு ரயில் சேவையைத் திணக்களம் ஆரம்பித்தது. ஒருவருக்கு ஒருவழி கட்டணம் 4,000 ரூபாவாகும். வெள்ளிக்கிழமை (27) இரவு 10 மணிக்கு கல்கிஸையில் இருந்து புறப்படும் ரயில் சனிக்கிழமை காலையில் காங்கேசன்துறையை சென்றடையும். அதுபோல காங்கேசன் துறையிலிருந்து ஞாயிறு மாலை 9.30 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை கல்கிஸை வரைப் பயணிக்கும். ரயிலின் என்ஜினில் ஏத…

  15. கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்கவரியில்லா சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் அல்லது வரியில்லா ஷொப்பிங் மொல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கான அளவுகோல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின்படி, ஒரு முதலீட்டாளர் வரியில்லா சில்லறை வணிகத்தை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்க வேண்டும் மற்றும் வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் சர்வதேச அளவிலான அனுபவத்தைப் பெற வேண்டும். மேலும், கொழும்பு துறைமுக நகரில் தீர்வை இல்லாத ஷொப்பிங் மொல் வர்த்தகத்தை…

  16. 30 OCT, 2023 | 04:57 PM அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ 260 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசிக்கு 210 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு குறைந்தபட்சம் ஒ…

  17. இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார். அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு தேவைப்படுவதாக தெரிவித்தார்.…

  18. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். களப்பணிகளுக்கு செல்லும்போது தமது வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இரத்த வங்கி, மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், சிறுநீரகப் பிரிவுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் போன்றவை பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக…

  19. Published By: RAJEEBAN 30 OCT, 2023 | 10:25 AM அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் ஜனாதிபதிகள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 25ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திரசில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை என சரத்வீரச…

  20. 27 OCT, 2023 | 03:03 PM விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர். இந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் இரத்த வங்கியில் எல்லாவகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாம் பல இடங்களுக்குச் சென்று குருதியை சேகரித்தாலும் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் க…

  21. தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளிப்பு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று சனிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை மன்னார் மாவட்டம் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் தலைமன்னார் கடற்படையினர் கையளித்துள்ளனர். தலைமன்னார் கடற்படை முகாமில் மலேரியா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் 23 மீனவர்களும் கையளிக்கப்பட்டனர். கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளி…

  22. உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியா சென்றுள்ள இலங்கை விளையாட்டு ரசிகர்கள் அந்நாட்டு மைதானங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம்(29.10.2023) இடம்பெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. கடும் வாக்குவாதம் இந்நிலையில் குறித்த போட்டியை பார்வையிடவந்த இலங்கை விளையாட்டு ரசிகர்கள் கொண்டு வந்த தேசியக் கொடிகளை மைதானத்திற்குள் எடுத்துச் செல்வதற்கு மைதானத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது. போட்டியை காண ரசிகர்கள் இலங்…

  23. இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம். ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில், ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்; கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் கொண்டு செ…

  24. மட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மட்டக்களப்பு, இருதயபுரத்தில் சிலருடன் வருகை தந்த சுமனரத்தின தேரர், 'மீண்டும் யுத்தம் வரும்; தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்' என்று கூறியுள்ளார். இவருடைய கருத்தை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று, மிகப்பெரும் அழிவுகளை சந்தித்த நாடு, தற்போது நிலையான அமைதியையும், இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வையும் நோக்கி பயணி…

  25. ஜனாதிபதி ரணிலுக்கு கூட்டணி அரசியல் தொடர்பாக தெளிவில்லை : நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டணி அரசாங்கமொன்றில், ஏதேனும் முக்கியமான தீர்மானமொன்று எடுக்க வேண்டுமாக இருந்தால் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். ஆனால், கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பலரால் முன்வைக்கப…

    • 14 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.