ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
மட்டக்களப்பில் பயங்கர காற்று : கடல் கொந்தழிப்பு வீரகேசரி இணையம் 11/6/2010 12:37:13 PM கிழக்கு மாகாணத்தில் நேற்று முதல் கடுமையான கடல் கொந்தளிப்பான நிலை காணப்படுகின்றது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச்செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. திருகோணமலை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் என மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. இன்று பிற்பகல் காத்தான்குடி உட்பட பல கரையோர பகுதிகளில் கடல் அலைகள் வழமையான இடத்தை விட முன்னோக்கி வருவதையும் அவதானிக்க முடிந்தது. கடலுக்குச் செல்ல வேண்டாமென மீனவர்களை வானிலை அவதான நிலையம் அ…
-
- 0 replies
- 575 views
-
-
Nov 6, 2010 / பகுதி: செய்தி / தேசியத்தலைவரின் சகோதர, சகோதரிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் சகோதர, சகோதரிகளை அழைப்பது குறித்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதென திவயின சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள், தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தாயாரான கடும் சுகவீனமுற்றிருக்கும் பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தமது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக தெரிவித்து அண்மையில் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் விடுத்திருந்தார். தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரட்ணம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர…
-
- 3 replies
- 906 views
-
-
புதன்கிழமை, நவம்பர் 3, 2010 கொழும்பு சீ.ஆர்.பி. இல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதியான குணரட்ணம் மனோகரன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு விஸ்வமடுவை வசிப்பிடமாக கொண்டுள்ள இந்த கைதி சீ.ஆர்.பி சிறைச்சாலையின் ஜிஐ பிரிவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் நிர்கதி நிலைமையை முன்நிறுத்தியே இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து ஏனைய தமிழ் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருப்பதாக தீர்மானித்துள்ளனர். நீண்டகாலமாக விசாரணைகளின்றியும், அரைகுறை விசாரணைகளுடனும் தமி…
-
- 1 reply
- 552 views
-
-
தீபாவளித் திருநாள் கொண்டுவரும் சமாதானம் மற்றும் நல்லெண்ண ஒளி எமது மக்களின் வாழ்வில் அறியாமை இருளகற்றி மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தீபத்திருநாளாம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இலங்கை வாழ் அனைத்து இந்து மக்களுக்கும் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தீபாவளிப் பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடமையையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றி கொள்வதை குறித்து நிற்கின்றது. உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து சமயத்தின் உயர்ந…
-
- 3 replies
- 890 views
-
-
வணக்கம், அண்மையில் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - CTBC மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை சாடி வெளிவிடப்பட்ட தேர்தல் விளம்பரம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. நம்மவன் இடம் கொடுத்தால் மடம் கட்டுவான் என்பதற்கு குறிப்பிட்ட விளம்பரம் ஓர் நல்ல உதாரணம். ஊரில் இருந்து நிர்வாணமாக தப்பினோம் பிழைத்தோம் என்று கவடு கிழிய ஓடிவந்து கனேடிய திருநாட்டினுள் புகுந்து நிம்மதியாய் மூச்சுவிட்டபின்னர்... இப்போது நமது சமயம், நமது கலாச்சாரம் நமது ஒழுங்குமுறை எனும் அடிப்படையில் இங்குள்ள பல்லின கலாச்சாரத்தை, பல்லின மக்களை மலினப்படுத்தும் வகையில் தேர்தல் விளம்பரத்தை கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வெளிவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பிட்ட விளம்பரத்தை யூரியூப் இணையத்திலு…
-
- 133 replies
- 21.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் இப்போ என்ன நல்ல விடயங்கள் நடக்கின்றது? 2 எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றார்களா? 3 இயல்பு நிலை திரும்பி விட்டதா? 4 எல்லாப் பெண்களும் சுதந்திரமாக பாதுகாப்பாக இருக்கின்றார்களா? 5 மாணவர்கள் படித்து கல்வியில் தற்போது முதலிடம் பெற்றுள்ளார்களா? 6 தமிழர் கலாச்சாரம் தளைத்தோங்குகின்றதா? file vidio கஞ்சாவை தந்து சந்தோசமாக அனுபவி என்றது போல் எமக்கு இந்த சந்தோச சுதந்திரம் தந்திருக்கிறார்கள். கஞ்சா முடிந்த பின் அதனை மீளவும் பெறுவதற்கு அந்த போதைப் பொருளைப் பாவிப்பவர்கள் எவ்வளவிற்கு அதை விற்பவனிடத்தில் கெஞ்சி தன்மானம் இழந்து சொத்து இழந்து மானம் கெடுவார்களோ அதே நிலையைத் தான் இனி வரும் காலம் உணர்த்தும் …
-
- 4 replies
- 1.5k views
-
-
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நிறை மது போதையில் தீபாவளி கொண்டாடிய 06 சிறீ.ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்திவிட்டு கடலில் நீராடி உள்ளனர். இவர்கள் ஆறுபேரும் கடல் அலையிலும் சுளியிலும் அகபட்டு உயிருக்கு போராடியபோது கடற்படையினர் ஆபத்தான நிலையில் 04 மாணவர்களை மட்டும் உயிருடன் மீட்டு எடுத்துள்ளனர். மூன்றாம்வருடமாணவரான யாழ்பாணம் கோப்பாயை சேந்த நரசுதன் இரண்டாம்வருமாணவனான வவுனியா தாண்டிகுளத்தை சேந்த அன்புதாசன் ஆகியோர் இறந்துள்ளனர். இவர்களின் உறவினர்கள் உடனடியாக பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை தொடர்புகொள்ளுமாறு தமிழ் சி.என்.என் க்கு சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.http://www.tharavu.com/2010/11/blog-post_2428.html
-
- 1 reply
- 1k views
-
-
Nov 5, 2010 / பகுதி: செய்தி / வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் கிடையாது, சிங்களவர்களை குடியேற்றுவோம் - ஹெல உறுமைய வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பூமி கிடையாது. சிங்கள மக்களின் உரிமைகளை எந்த சக்தியாலும் தடுக்கவும் முடியாது. எனவே வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்படாவிட்டால் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இன்று அநாதரவான நிலையில் 200 சிங்கள குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையத்தில் உள்ளனர். இம் மக்களுக்காக இதுவரையில் எந்தவொரு சர்வதேச நிறுவனமும் உதவ முன்வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வி…
-
- 0 replies
- 529 views
-
-
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சென்றவருடம் முதலாவது சுதந்திர தீபாவளி கொண்டாட கிடைத்தபோதிலும், பலர் அகதி முகாம்களில் இருந்தார்கள். ஆனால் இவ்வருட தீபாவளியை பெரும்பான்மையானவர்கள் கொண்டாடினர் அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பாரிய சுடரேற்றும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. 51ஆவது படையணியின் ஏற்பாட்டில் இந்த தீபமேற்றும் நிகழ்வு இன்று யாழில் 51ஆவது படையணி முகாமின் முன்னிலையில், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், 51ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜானக வெல்கம ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. சுமார் 10,000இற்கும் மேற்பட்ட சிட்டி விளக்குகள் யாழ். வீதிகளின் இருமருங்கிலும் அழகாக ஒரே நேர…
-
- 0 replies
- 1.1k views
-
-
மூவின மக்களும் "சிங்களே” என்றே அழைக்கப்படவேண்டும் - இராணுவ அதிகாரியின் கூற்றுக்கு கண்டனம் நவ 4, 2010 இந்த நாட்டின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களும் "சிங்களே' மக்கள் என்றே அழைக்கப் படவேண்டும் என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்து தமிழ் அரசியல் தலைவர்களை கொதிப் படையச் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோர் இக்கூற்றை வன்மையாகக் கண்டித்து அறிக்கைகளை விடுத்துள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் அமரசேகர சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார். இக்கூற்றுக் குறித்து செல்வம் அடைக்கல…
-
- 2 replies
- 861 views
-
-
கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி. ஆகியோரை முறையாக நிர்வகித்து அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு குறிவைத்துள்ளது. குறிப்பாக, கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் குறித்தும் சொத்து விபரங்கள் தொடர்பிலும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் கூடுதலாக சுதந்திரம் கொடுத்துள்ளது. அல்லது விசாரணைகளை நடத்த வில்லை என எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில் : கடந்த யுத்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமயரீதியான வைபவங்களின்போது மிருகங்களை கொல்வது விரைவில் சிறீ லங்காவில் தடைசெய்யப்படக்கூடும் என்று கூறப்படுகின்றது. மேற்கோள் மூலம்: Plan to ban animal sacrifices at religious festivals
-
- 5 replies
- 923 views
-
-
அரசியல் கட்சி ஒன்றும், பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்து ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர் என்று அரசுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். அவர் அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்குகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- எனவே அரசு மிகவும் அவதானமாக உள்ளது. ”நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்று சுதந்திரமாக வாழ்கின்ற உரிமை ஒவ்வொரு பிரஜைகளுக்கும் உண்டு. நாட்டின் எந்தவொரு பகுதியும் எந்தவொரு பிரிவினருக்கும் சொந்தமானது அல்ல. அதை அரசு அனுமதிக்க மாட்டாது. சும்மா இருக்கும் அர…
-
- 0 replies
- 1.3k views
-
-
11 தமிழக மீனவர்கள் நவ.8இல் விடுவிப்பு: இலங்கை First Published : 05 Nov 2010 02:01:49 PM IST ராமேஸ்வரம், நவ.5: தங்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீன்வர்கள் 11 பேரை நவ.8ஆம் தேதி திங்கள் கிழமையன்று விடுவிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 11 தமிழக மீன்வர்களை வரும் நவ.8 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கவிருப்பதாக இன்று இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது என்று மண்டபம் கடலோர காவல்படை அதிகாரி டி.எஸ்.சைனி தெரிவித்துள்ளார். தற்போது அந்த மீன்வர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில், இலங்கையிலுள்ள நெடுந்தீவு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர். கடந்த நவ.3ஆம…
-
- 0 replies
- 443 views
-
-
வடக்கில் மீளக்குடியேற செல்லும் முஸ்லிம்களை ஏன் வந்தீர்கள் என கேட்கின்றார்கள்-பர்சானா ஹனீபா வட மாகாணத்திலிருந்து கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அங்கு செல்லும் போது ஏன் வந்தீர்கள் என சில கேட்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பர்சானா ஹனீபா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சட்டமும் சமூகமும் என்ற அமைப்பினால் வட மாகாணத்திலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட மக்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட இணைப்பாளர் என்ற வகையில்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் ஒருவர் ஜேர்மனியின் Duesseldorf விமான நிலையத்தை வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். டபிள்யூ. அகிலன் என்கிற இளைஞரே கைது செய்யப்பட்டவர் ஆவார். ஜேர்மனிய பிரஜை ஆன இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு அரசினால் தேடப்பட்டு வந்தவர். 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஜேர்மனியில் புலிகள் இயக்க முக்கியஸ்தராக இவர் செயற்பட்டு வந்திருக்கின்றார். இந்நிலையில் இவர் மடகஸ்கார் நாட்டுக்கு தப்பிச் சென்று இருந்தார். மடகஸ்கார் நாடு இவரை ஜேர்மனியிடம் திரும்ப கையளித்து உள்ளது.http://www.tharavu.com/2010/11/blog-post_05.html
-
- 10 replies
- 2k views
-
-
"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்." By Way of Deception: The Making of a Mossad officer "இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்…
-
- 6 replies
- 1.5k views
-
-
Nov 4, 2010 / பகுதி: செய்தி / இலங்கைத்தீவு தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. சிங்களவர் மகாவம்சத்தைத் திரும்பப் படிக்கட்டும். -யேர்மன் திருமலைச்செல்வன். வடக்குக் கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் இல்லையாம், மகாவம்சத்தை மறந்த ஒரு தேரோ. சிங்களவர்களின் மகாவம்சமெனும் நூல், அது ஒரு மாயை நூல். அது அவர்களாலேயே அவர்களுக்கு ஏற்றமுறையில், மாற்றி எழுதப்படும் நூல் மகாவம்சம். அப்படி சிங்களவர்களின் எதிர்கால நன்மைகளுக்காகப் பலவாறு சிந்தித்து எழுதப்பட்டாலும், சிங்களவர்களுக்கு முதல் இயக்கர்களும்,நாகர்களும் ( தற்போதைய தமிழர்கள்)வாழ்ந்தார்கள் என்ற உண்மையை மகாவம்சத்தில் அவர்களால் மறைக்க முடியாமற்போய்விட்டதே. மகாவம்சத்திலிருந்து மகததேசத்திலுள்ள உருவெல எனும் இடத்திலுள்ள அரசமரத்த…
-
- 2 replies
- 861 views
-
-
பிரித்தானியாவின் மையப்பகுதியான பேர்மிங்காம் விக்டோரியா ஸ்குயாறில் ஆரம்பமாகிய தமிழர்களின் "ஹாட் 2 ஹாட் வோக்" பிரித்தானியாவின் மையப்பகுதியாக விழங்கும் பேர்மிங்காமில் உள்ள விக்டோரியா ஸ்குயாறில் இருந்து லண்டன் நோக்கிய தமிழர்களின் நடைபயணம் நேற்று காலை ஆரம்பமானது. பிரித்தானிய படைவீரர்களையும், தமிழீழ போராளிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணத்தை பேர்மிங்காம் லோட் மேயர் லென் கிறேஜொறி அவர்கள் ஆரம்பித்துவைத்தார். hear to hear ஆரம்ப நிகழ்வில் இந்த நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்களில் முதன்மையானவரான திரு.ஜோகணேஸ் அவர்கள் அங்கிருந்தவர்கள் மத்தியில் இந்த நடைபயணம் தொடர்பான சிறு விழக்கம் அளித்தார். தொடர்ந்து லோட் மேஜர் லென் …
-
- 1 reply
- 712 views
-
-
மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் படையினர் தேடுதல் சோதனை நடவடிக்கை. மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் இரவு வேளைகளில் படையினர் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்;று விசாரணை நடத்துவதாகவும் சில வீடுகளில் தேடுதல் மேற்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்கள். கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற தேடுதல் சோதனை நடவடிக்கையில் பல இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் சிலரை அருகில் உள்ள காவல் நிலையங்களில் கையொப்பமிடுமாறு அவர்கள் உத்தரவிட…
-
- 0 replies
- 662 views
-
-
முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஈழத்தமிழர்களை ஒபாமா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை தகர்ந்த நிலையில் அவரது வருகையால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. இப்படித் தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். திட்டக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு, கறுப்பு இனத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் அமெரிக்க குடியரசு தலைவராக இருப்பது போற்றுதலுக்குரியது. ஆனால் மூன்றாவது ஆவது உலக நாடுகள் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை திணித்து வரும் அமெரிக்கா, ஒபாமா அந்நாட்டின் அடையாளமாக விளங்குவதால் அவரை வரவேற்க வேண்டும் என்பதில் நெருடலாக உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிர…
-
- 4 replies
- 790 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரான்ஸில் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பாகவே உள்ளது என இலங்கை அரசாங்கத்திற்கு பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸின் லா கோர்னியூவ் நகரில் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை தொடர்பாகவே மேற்படி தகவலை பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இச்சிலை திறப்பு தொடர்பாக லா கோர்னியூவ், மாநகர சபைக்கு பிரெஞ்சு அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் விவகார பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். Courtesy - தமிழ் மிரர் தொடர்புபட்ட செய்தி பிரான்சில் தமிழ்செல்வனுக்கு சிலை திற…
-
- 0 replies
- 861 views
-
-
மன்னாரில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை பயன்படுத்தியவர் கைது வீரகேசரி இணையம் 11/4/2010 4:55:46 PM Share மன்னார் பேசாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்து கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமன்னார் பொலிஸாரின் உதவியுடன் மன்னார் கடற்தொழில் பரிசோதகர்கள் இவரைக் கைது செய்தனர். பேசாலைக் கடற்கரையில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும்பாக கடற்தொழில் பரிசோதகர் நீள் மென்டேக்கு தலைமையிலான குழுவினர், குறித்த பகுதியில் திடீர் சோதனைகளை மேற்கொண்ட போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் இவர் கைது செய்யப்பட்டார். இவர் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட வலைத் தொகுதியை…
-
- 1 reply
- 352 views
-
-
ov 4, 2010 / பகுதி: செய்தி / எனக்கு தேனீர் கூட தருவதில்லை: முன்னாள் இராணுவத்தளபதியின் பரிதாப நிலை வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதியும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சிறையில் தேனீர் கூட வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளார். இன்று (04) வெலிக்கடை சிறையில் அவரை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவிடம் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். மேலும் நுளம்புகளின் தொல்லையை தடுப்பதற்கும் தனக்கு எந்தவித உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. pathivu
-
- 0 replies
- 775 views
-
-
Nov 4, 2010 / பகுதி: செய்தி / கச்சதீவு கடல் பகுதியில் தோறியம் கனிமவளம் சிறீலங்காவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடபகுதியில் அதிக பெறுமதியும், முக்கியத்துவமும் கொண்ட தோறியம் எனப்படும் கனிம வளம் அதிகம் உள்ளதாக அனைத்துலக ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோறியம் எனப்படும் இரசாயண கனிமப்பொருள், அணுசக்தியின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் அதன் முக்கியத்துவம் அதிகமானது. அமெரிக்கா, கனடா, போன்ற நாடுகளிலேயே அதிகம் காணப்படும் இந்த தாதுப்பொருள் வடபகுதியில் காணப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. பதிவு
-
- 2 replies
- 1.1k views
-