ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு! தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்தப் பொதிகளில் மொத்தம் 670 கிலோ ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்), 156 கிலோ ஹெராயின் மற்றும் 12 கிலோ ஹாஷிஸ் ஆகியவை இருந்ததாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தப் போதைப்பொருள் தொகை, ‘உனகுருவே சாந்த’ என்று அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவ…
-
-
- 4 replies
- 269 views
-
-
Published By: Vishnu 14 Oct, 2025 | 09:24 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அம்மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனவும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்ட வைத்திய அதிக…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி! பலரிடம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்க…
-
-
- 7 replies
- 494 views
-
-
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி! சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. யாழிற்கு பெருமை சேர்த்த மாண…
-
- 4 replies
- 302 views
-
-
4 Oct, 2025 | 01:04 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும். அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித…
-
- 0 replies
- 173 views
-
-
14 Oct, 2025 | 05:28 PM மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக…
-
- 0 replies
- 99 views
-
-
ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை. செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை. வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி தி…
-
- 3 replies
- 214 views
- 1 follower
-
-
பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் 14 Oct, 2025 | 12:11 PM பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு , யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டனர். நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர். அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றதோடு, நாளைய தினம் புதன…
-
- 0 replies
- 162 views
-
-
திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம் தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப் பொலிஸாரும் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை காலை பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவத்தை நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுக் காலை 6.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட பிக்குமார்கள், சிங்கள் மக்கள். பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக மாற்றுப் பாதை ஊடாக விகாரையை நோக்கிச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டுப் பின்னர் அதேபாதையால் திரும்ப…
-
- 0 replies
- 109 views
-
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை! இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் …
-
-
- 5 replies
- 417 views
-
-
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம் adminOctober 13, 2025 செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , அகழ்வு பணிக்காக பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோர பட்ட நிதியை நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப…
-
- 0 replies
- 121 views
-
-
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார் adminOctober 13, 2025 பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை உடற்கூறாய்…
-
- 2 replies
- 313 views
-
-
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சஞ்சீவ படுகொலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tamilwinஇஷா…
-
-
- 103 replies
- 4.8k views
- 2 followers
-
-
Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 05:05 PM இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகள், 2018-ல் முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம், 1999 இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் (அத்துடன் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளும்) …
-
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
13 Oct, 2025 | 02:40 PM செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது. செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள் ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை, அவ்வாறு வெளிப்படுவது, படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனாலேயே, நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
13 Oct, 2025 | 11:57 AM இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார். இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையா…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம் திங்கள், 13 அக்டோபர் 2025 06:05 AM மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்ற…
-
- 0 replies
- 141 views
-
-
யாழில் வாள் வெட்டு: தேசிய மக்கள் சக்தி செயற்திட்ட இணைப்பாளர் காயம்! யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது . இச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெரியவருவதாவது தும்பளை பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆக…
-
- 0 replies
- 149 views
-
-
வெலிக்கடைச் சிறையில் தமிழர் படுகொலை ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது சிங்கள எழுத்தாளர் யாழில் தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல. சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஆட்சியின் திட்டமிட்ட படுகொலையே எனச் சிங்கள எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான நந்தன வீரரட்ன தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம்பெற்ற கறுப்பு ஜூலையின் 7 நாள்கள் என்ற நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊடகவியலாளராகச் செயற்பாட்டுக் கொண்டிருந்தேன். வடக்கு மாகாணம் இல…
-
- 0 replies
- 138 views
-
-
உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது தெற்காசிய பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்! வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, ஒக்டோபர் 13 முதல் 15 வரை இலங்கையில் நடத்தப்படும் WHO தென்கிழக்கு ஆசியாவின் 78 பிராந்தியக் குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் விவாதிக்கும் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதியத்தின் (SEARHEF) நிதியை விரிவுபடுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறனுக்கு (AMR) எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் குறித்து சுகாதார அமைச்சர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உல…
-
- 0 replies
- 113 views
-
-
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு! இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதல் 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பரில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதல் முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம். இதற்கிடையில், ஜனவரி 01 முதல் இந்த ஆண்டு இன்றுவரை நாடு 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு பணம் அனுப்பியுள்ளதாக CBSL தெ…
-
- 0 replies
- 107 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் October 12, 2025 2:19 pm விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். தொடந்தும்பேசிய அவர், 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் பேசினார். “பொன்சேகா நாம் கடனுக்கு அல்லவா சீனாவிடம் இருந்து பெற்றுக்க…
-
- 1 reply
- 179 views
-
-
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, 200 வருடகாலமாக வாழும் ஒரு சமூகத்தினருக்கு குறைந்த பட்சம் சிறிய அளவிலான காணி கூட இல்லாமல் இருக்கின்றனர். எனவே அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தோட்டத்தில் வ…
-
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
12 Oct, 2025 | 04:32 PM கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227553
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'புற்றுநோய்க்கான மருந்து' (Cancer Cure) குறித்து, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (SLCO) தமது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது புற்றுநோய் நோயாளிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கல்லூரி பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்கவுக்கு, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி தலைவர் வைத்தியர் சனத் வணிகசூரிய ஒரு கடிதம் எழுதியுள்ளார். கண்டனம் அக்கடிதத்தில், "இந்த உற்பத்தியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாதது குறித்து …
-
- 0 replies
- 147 views
- 1 follower
-