ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143267 topics in this forum
-
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்ட விரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு தடை செய்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இத்தடையை நீட்டிப்பதற்கு முன் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்படுவது வழக்கம். அதைப் போல இம்முறை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 5#10#2010 அன்று காலையில் சென்னை மல்லிகை மாளிகையில் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கவேண்டுமென பழ.நெடுமாறன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழக்கறிஞர் என். சந்திரசேகரன் பின்கண்ட விவாதங்களை முன்வைத்தார். “”பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழர் தேசிய இயக்கத்தைச் சட்ட விரோதமான அமைப்பு என்று கூறி 13#08#2002ஆம் ஆண்டு தமிழக அரசு தடைசெய்தது. தமிழீழ விடுதலைப…
-
- 1 reply
- 999 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம்நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர்.http://www.tharavu.com/2010/10/blog-post_7036.html
-
- 5 replies
- 1k views
-
-
Oct 5, 2010 / பகுதி: செய்தி / சரத் பொன்சேகாவுக்கு சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில் ஸ்ரீலங்காவின் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் ஆயுத ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்காக 30 மாத கால கடூழிய சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வெலிக்கடை சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திவயின சிங்கள செய்திதாள் இந்த தகவலை வெலிக்கடை சிறைச்சாலையின் பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவரை மேற்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது இதன் அடிப்படையில் சரத் பொன்சேகா, சிறைச்சாலை அச்சகத்தில் பணியாற்ற பணிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமக்கு எதிரான தீர்ப்பை ஆட்சேபித்துள்ள சரத் பொன்சேகா, இந்த பணிக…
-
- 4 replies
- 803 views
-
-
போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஒபாமா நிர்வாகம் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-10-05 07:33:02| யாழ்ப்பாணம்] கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலான உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது. பராக் ஒபாமாவின் இந்தச் செய்தியை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டன், அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் றெபேட் ஓ பிளேக் ஊடாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உதவி …
-
- 1 reply
- 961 views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 நேற்று முற்பகல் 11.15 அளவில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் குப்பைகள் வீசப்படும் இடத்திலிருந்து வெடிமருந்துப் பை ஒன்று கைப்பற்றுபட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பை 14 கிலோ கிராம் நிறையினைக் கொண்டதெனவும், பையினுள் 25 அடி நீளம் கொண்ட 40 நூல் பந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். மேலும், கைப்பற்றப்பட்ட பை தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈழ நாதம்
-
- 0 replies
- 565 views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவிருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க பொன்சேகாவை விடுவிக்கும் போராட்டத்தை ஏனைய சகல கட்சிகளுடனும் இணைந்து முன்னெடுக்க கட்சி தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட கருணா, கே.பி.,தயாமாஸ்ரர் போன்றோர் சுதந்திரமாக சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டைக் காப்பாற்றிய தளபதி சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும…
-
- 0 replies
- 572 views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளான அம்பன், குடத்தனை, நாகர்கோவில் பகுதிகளில் தமிழர்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் புராதனப் பொருட்கள் பலவற்றைக் கண்டெடுத்திருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராசா அறிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரதேசங்களில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படும் இடங்களில் இத்தகைய பொருட்கள் கண்டெடுக்கப்படுவதாகவும் அவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல்துறை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அண்மையில் இப்பிரதேசத்தில் பல்வேறு மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட மணிவகைகள், கூரை ஓடுகள், கொல்லர் பட்டறைப் பொருட்கள் போன்ற மரபுரிமைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 667 views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 போர் முடிந்து 16 மாதங்கள் கடந்திருக்கும் நிலையிலும் கால்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் உதவிக்காகக் காத்திருக்கின்றனர். இலங்கையில் கால் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 60 ஆயிரம் ஆகும். இவர்களில் பலர் கண்ணி வெடிகள், வெடிபொருட்களினால் ஊனமுற்றவர்களாகும். பொருத்தமான செயற்கை அவயவங்கள் பற்றாக்குறையாக இருப்பதனால் 90 சதவீதமானவர்கள் இதற்காகக் காத்திருப்பதாக கம்போடியா நம்பிக்கையக அமைப்பான செயற்கை அவயவ சிகிச்சைக்கான இலங்கை பாடசாலை கூறுகிறது. இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள். யுத்தத்தினால் நான் அவயவங்களை இழந்தேன். இப்போதும் துன்பப்படுகிறேன் என்று முல்லைத் தீவைச் சேர்ந்த ஜெகநாதன் சிவகுமாரன் (வயது 25) ஐ…
-
- 0 replies
- 493 views
-
-
சிறிலங்கா யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டது உண்மையே - டப்ளின் நீதிமன்று இத்தாலி மிலானைத் தளமாகக் கொண்டியங்கும் மக்களுக்கான நிரந்தர நீதிமன்றம் எனப்படும் அமைப்பு கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அயர்லாந்து டப்ளின் நகரில் மேற்கொண்ட சிங்கள அரசின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிலங்கா அரசு குற்றவாளிதான் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆவணங்கள் என்பவற்றைத் தனது விசாரனைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தியிருக்கும் இந்த நீதிமன்றம் சிங்களம் மேற்கொண்ட இனவழிப்புத் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. யுத்தத்தின் இறுதி வாரத்தின்போது முல்ல…
-
- 7 replies
- 1.3k views
-
-
கண்டி மாவட்டத்தில் பேராதெனியாவை அண்மித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேரை கண்டி பொலிஸார் இன்று கைது செய்ததுள்ளனர். கண்டி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்ததாக பொலீஸார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட 10 பங்களாதேஷ் பிரஜைகளும் வீசா முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருந்துள்ளனர். அவர்கள் தங்கி இருந்ததற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைகள் முடிவடைந்ததும் சந்தேக நபர்கள் கண்டி பிரதம நீதவான் மன்றில்; ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27577
-
- 0 replies
- 591 views
-
-
தியாக தீபம் திலீபன், குமரப்பா, புலேந்திரன் உட்பட இவ்விரு மாதங்களிலும் மண்ணுக்காய் தம்முயிர் தந்த அனைத்து எம் தேசப்புதல்வர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு நேற்று (3-10-10) மாலை 5.30 மணிக்கு South London Merton மண்டபத்தில் பல எழுச்சி நிகழ்வுகளுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் பொதுச்சுடரினை சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை திருமதி சுபா அவர்கள் ஏற்றிவைத்ததுடன் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்று வணக்கம் செய்தது மிகவும் எழுச்சிபூர்வமாக இருந்ததுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இளையோர் முதல் பெரியவர்கள் வரை கவிதை, பேச்சு பட்டிமன்றம் மற்றும் நடனம் என கலைநிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்விற்கு பிரித்தானியா…
-
- 3 replies
- 722 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சரத் பொன்சேகா இதுவரை காலமும் கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதியினால் 30 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் சிறைக் கூடத்தின் வசதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வியளித்த போது, தேசத் துரோகிகளை துக்கில் போட வேண்டுமென வலியுறுத்தியதாகவ…
-
- 6 replies
- 1k views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு 30 மாதகால கடுழிய சிறைத்தண்டனை வழங்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து இத்தாலியில் சுவரொட்டி பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி இத்தாலியிலுள்ள விகாரைகள் பௌத்த நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகிலும் இலங்கையர்கள் வசிக்கும் மற்றும் நடமாடும் பிரதேசங்களிலுமே ஒட்டப்பட்டுள்ளன. தமிழர்களை இனப்படுகொலை செய்த இனவெறி சரத் பொன்சேகாவ சிறையில் அடைத்தமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு உலகத் தமிழ் மக்களின் நன்றி உரித்தாகட்டும் என அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன் கீழே தமிழ் மக்கள் அமைப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_3747.html
-
- 2 replies
- 996 views
-
-
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களினால் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை பார்வையிடுவதற்காக கரு ஜயசூரிய இன்றைய தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பொன்சேகாவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கரு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் 30 மாத கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவ…
-
- 1 reply
- 574 views
-
-
சீ.ஐ.டி ஒருவர் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தார். மறுத்தால் குடும்பத்தை அழித்து விடுவேன் என பயமுறுத்தியதால் சம்மதித்தேன் என்று கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய பெண் ஒருவர் நிகழ்ச்சித் திட்ட உதவியாளரிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். அருணாசலம் தடுப்பு முகாமைச் சேர்ந்த இந்தப் பெண் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றுக்கும் அறிவித்திருக்கிறார். கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் 20 வயதுடைய கிளிநொச்சி கணேசபுரத்தை நிரந்தர வதிவிதடமாகக் கொண்ட திருமணமாகாத இளம் பெண்ணொருவர் பெண் குழந்தையொன்றை பிரவசித்துள்ளார். இதன் பின்னர் குறித்த பெண் பிள்ளையை தனக்கு வளர்க்க விருப்பமில்லை எனவும் அந்தக் குழந்தையை அரச சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விருப்புவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 GL.Peris சிறிலங்கா வெளி நாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி இலண்டன் வரவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் 19 ஆம் திகதி ஓர் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் கூறப்படுகின்றது. இலண்டனில் சிறிலங்கா தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கு இலங்கையில் இணக்க நிலையினை கொண்டுவர எவ்வாறு தமிழர்கள் உதவலாம் என்பது பற்றியதாகும். தேர்வு செய்யப்பட்ட 50 இலண்டன் தமிழர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. Eelanatham.net
-
- 6 replies
- 1.2k views
-
-
சிங்கள அரச பொறிக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு! மீட்டெடுப்பது எவ்வாறு? நாடு கடந்த தமிழீழ அரசுக்கான யாப்பை அங்கீகரிக்கவும், அரச அவைக்கான அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கவும் 29 செப்ரம்பர் முதல் 01 அக்ரோபர் ஆகிய 3 தினங்கள் கூட்டப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு இறுதியில் குழப்பத்தில் முடிவுற்றுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் கூடிய நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தொலைக்காட்சித் தொடர்பாடல் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். இந்த அமர்வு இடம் பெறுவதற்கு முன்னரே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 115 உறுப்பினர்களின் தேர்வு நடைபெற்று முடியாத நிலையிலும், ஏற…
-
- 24 replies
- 1.9k views
-
-
விசவாயுகொண்டு கொல்லப்படும் விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள்: சிறிலங்கன் கார்டியன் தகவல் திகதி:04.10.2010 கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள், விசவாயு பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம், புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிலவுவதாக த சிறிலங்கா கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் அடையாளம் தெரியாதிருக்கவும், கைதுக்கான ஆதாரங்களை இல்லாது செய்யவும் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையர்கள் என அண்மைக் காலமாக கைது செய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கும் இதே நிலைமையே ஏ…
-
- 0 replies
- 785 views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 4, 2010 சரணடைந்த முக்கிய போராளிகள் மற்றும் தற்போதும் கைது செய்யப்படுகின்ற போராளிகளை சித்திரவதை செய்து கொன்ற பின் அல்லது உயிருடன் தகனம் செய்கின்றனர் மஹிந்தவின் பிணம் தின்னி பிசாசுக்கூட்டம். சித்திரவதை செய்தல் கொலை செய்தல் என்பது வழமையாகிவிட்டது . ஆனால் காஸ் மூலம் இயங்கும் தகனம் செய்யும் சேம்பரில் போட்டு எரிப்பது எனும் தகவல் இப்போதுதான் கசிந்துள்ளது. சடலங்களை வெளியில் வீசுவது, வெளியில் தகனம் செய்வது மக்களிற்கு தெரிய வந்து அதனால் பல்வேறு பிரச்சினைகளையும் அரசாங்கம் எதிர்கொள்கின்றது.இதனை தவிர்க்கவே இந்த உத்தி என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது ஒவ்வொரு இராணுவ முகாமிலும் இவ்வாறான டொக்ஷி காஸ் சேம்…
-
- 2 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் - நேரில் பார்த்தவர் தகவல் திகதி:04.10.2010 விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான லோறன்ஸ் திலகர் அல்லது லோறன்ஸ் கிறிஸ்ரி, இளம்பருதி, யோகரட்ணம் யோகி, விடுதலைப்புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை, தங்கன், குட்டி, பாப்பா, பூவண்ணன் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததற்கான சாட்சியங்கள் இருக்கின்றன என ’சிறிலங்கா காடியன்’ என்ற ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்திருப்பதாவது, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர அவர்கள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகரட்ணம் யோகியும் க.வே. பாலகுமாரனும் இறுதியாக நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட…
-
- 0 replies
- 2.8k views
-
-
Oct 4, 2010 / பகுதி: செய்தி / ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் - அமெரிக்கா இலங்கை தொழில் சட்டங்களைச் சரியான முறையில் அமுல்படுத்தத் தவறினால், அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சலுகைத் திட்டத்தை வென்றெடுக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளதாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பு மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியன கூட்டாக இணைந்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கைக்கான சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இல…
-
- 2 replies
- 850 views
-
-
ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு போரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டு எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழன் கு.முத்துக்குமார் பற்றிய ஆவண படம் ‘ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. உலகத்தமிழர்கள் காணும் வகையில் இங்கே நாம் வெளியிட்டுள்ளோம்.http://www.tharavu.com/2010/10/29.html
-
- 2 replies
- 823 views
-
-
அண்மையில் இனக்கொலை நடந்த நாடு - தில்லி பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடக்க விழாவில் இலங்கையணிக்குக் கிடைத்த அறிமுகம். கடந்த இரவு புது தில்லியில் 19 ஆம் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகியது. அதில் ஆரம்ப தொடக்க விழா பெரும் எடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவின் ஒரு கட்டத்தில் இப்போட்டிகளில் பங்குபற்றும் நாட்டணிகளை ஒரு இந்திய அழகி வழிநடத்திச் செல்ல அவரைத் தொடர்ந்து அந்தந்த நாட்டிற்குரிய தேசியக் கொடிகளைக் காவும் வீரருரும் அவருக்குப் பின்னால் அந்தந்த நாட்டு அணி வீரர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். இங்கிலாந்து, அவுஸ்த்திரேலியா, நைஜீரியா, நியூசிலாந்து என்று அணிகள் அணிவகுத்துச் சென்றபின்னர் இந்திய அணி மண்டபத்தினுள் நுழைய இசையமைப்புகள் வானைக்…
-
- 3 replies
- 1.6k views
-
-
சீனாவின் "என்.ஐ.சீ.' எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் கொழும்பை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமைற் கொள்கலன் வெடிப்பு சம்பவம் பற்றி சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து நாடளாவிய ரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையில் உள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் இப்புலனாய்வுக் குழுவினர் ஆராய்வை மேற்கொள்வர் எனவும் சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.அதேவேளை கரடியனாறு வெடிப்பு சம்பவம் குறித்து ஏற்கனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை இந்த சீன ஊடகமான சிங்குவா மேற்கோள்…
-
- 1 reply
- 890 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் நிறுவனம் இயங்கிய கிளிநொச்சிப்பகுதியில் தற்போது அந்த நிறுவன கட்டடங்களை முழுமையாக அடித்து நொறுக்கி விட்டு அவ்விடத்தில் புதிய படைமுகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இவ்அலுவலகம் இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் வரலாற்று நினைவிடங்கள் மற்றும் அவர்களின் பிரதான அமைவிடங்கள் என்பனவற்றை படையினர் தமது படை முகாமாக மாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.http://www.tharavu.com/2010/10/blog-post_4051.html
-
- 1 reply
- 958 views
-