ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் திகதி சைபர் தாக்குதல் காரணமாக பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் பரிமாற்ற தரவுகள் காணாமல் போயுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது. gov.lk டொமைனுக்குச் சொந்தமான தரவு அமைப்பை புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா தெ…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 SEP, 2023 | 01:35 PM வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் புதன்கிழமை (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்த நிலையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
13 SEP, 2023 | 12:10 PM முல்லைத்தீவு - சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம், 10 பவுண் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்லும்போது கொள்ளையர்களால் வீட்டின் உரிமையாளர் பொல்லால் தலையில் தாக்கப்பட்டு 63 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், இவ் கொள்ளை, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்று பொலிஸாரால் கைத…
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 13 SEP, 2023 | 09:45 AM யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் தங்குமிட விடுதியில், திருகோணமலையைச் சேர்ந்த பாட்டியும், அவரது பேத்தியான சிறுமியும், வாடகைக்கு அறை எடுத்து கடந்த சில நாட்களாக தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்…
-
- 3 replies
- 385 views
- 1 follower
-
-
12 SEP, 2023 | 09:23 PM இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். போட்டித் தன்மைகொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில் நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொழிற்பயிற்சிக் கல்வி நாட்டின் தற்போதைய தேவை எனவும், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் அந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். …
-
- 2 replies
- 326 views
- 1 follower
-
-
12 SEP, 2023 | 04:02 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(12.09.2023) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொலிஸார், மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் ஊடாக தகவல்களை பரிமாறி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தினார். இதன்போது, கருத்து தெரிவித…
-
- 3 replies
- 382 views
- 1 follower
-
-
நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள் ஆனால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விடயத்தில் மாறிமாறி ஆட்சியில் இருந்து மறுத்து வந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஈஸ்டர் குண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட சர்வதேச விசாரணை தேவையென கேட்டிருக்கின்றார். அவர்கள் இந்த நாட்டை ஆளுகின்றவர்களாக அல்லது ஆட்சி அதிகாரம் வலிமைமிக்கவர்களாக இருக்கின்ற போது தங்களுக்கு அந்த விடயங்களை கண்டறிவதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோருகின்றார…
-
- 2 replies
- 326 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த முறைப்பாட்டிற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் …
-
- 1 reply
- 370 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் துரித மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக 50 மெகாவோல்ட் அல்லது அதற்கு அதிகமான இயலளவு கொண்ட மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் துறையில் முதலீடுவதற்கு எதிர்பார்க்கின்ற முதலீட்டாளர்களின் விருப்புக் கோரல்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, 134 மெகாவோல்ட் மின்சாரத்தை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்திஃமின்கலச் சேமிப்புத் தொகுதியுடன் கூடிய 700 மெகாவோல்ட் சூரிய மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான முன்மொழிவு யுனைட்டட் சோலர் எனேர்ஜி எஸ் எல் தனியார் கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட…
-
- 0 replies
- 292 views
-
-
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சியத்தில் வைக்கப்பட்ருந்த 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சிய அறையின் சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் பகுதியில் அண்மையில் கஞ்சா மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் குறித்த கஞ்சா காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை பொலிஸார் மற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://thi…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 SEP, 2023 | 09:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அத்துடன் தேசிய கல்விக் கொள்கையுடன் முறையான வேலைத்திட்டம் தயாரிக்கவில்லை என்றால் இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சீரழிந்துவிடும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். எஸ்.டி.ரி.ஐ.கெம்பஸ் நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (11) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ஆதரவு- மக்கள்மத்தியில் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம்! kugenSeptember 12, 2023 கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்தது முதல் கடும் மௌனத்தை கடைப்பிடித்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும் ஊடக உரிமையாளருமான ஒருவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மூலம் பாதிக்கப்பட்ட தனது பெயரை மீண்டும் கட்டியெழுப்பி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடுகின்றார். அவரது சகா நேற்று அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவித்துள்ளார். பொதுமக்களால் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டபோதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கின்றார் என தெ…
-
- 1 reply
- 273 views
-
-
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உட்பட உள்நாட்டலுவல்கள் அரச அமைச்சின் ஏனைய அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள்குறித்த முறைப்பாடுகளை 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அந்த தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://thinakkural.lk/article/272623
-
- 1 reply
- 290 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, இலங்கை ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து சேனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் முக்கியமான சாட்சி அளித்திருப்பவர் ஹன்ஸீர் ஆசாத் மௌலானா. 9 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது. குறித்த ஆவணப்படத்தில் சிலர் தமது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டும், மறைத்தும் முக்கிய சாட்சிகளாக தகவல்களை வழங்கியிருந்தனர். …
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் நிதி வழங்கப்பட்டது ஏன் ? பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை அவசியம் என கோருபவர்களும், அதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களும் தற்போதைய அரசாங்கத்திலேயே அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செனல் 4 வெளிப்படுத்தலுக்கமைய, பிள்ளையானும், ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளும் ஒரே சந்தர…
-
- 0 replies
- 266 views
-
-
Published By: RAJEEBAN 11 SEP, 2023 | 10:15 AM இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்பதை சனல் 4 உறுதிப்படுத்துகிறது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது : இலங்கையில் குறைந்தது 350 பேரைக் கொன்ற 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிறீலங்காவின் பாதுகாப்பு புலனாய்வுத்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளதைக் காண்பிக்கும் காணொளியொன்றை ஐக்கிய இராச்சியத்தின் சனல் 4 கடந்த திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது. பாதுகாப்பு மற்றும் அரசியல் உயர் மட்டங்களின் அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்டுள்…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
11 SEP, 2023 | 10:23 AM கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியின் பாடசாலை வளாகத்தில் பின்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) விசமிகளால் தீவைக்கப்பட்டதன் காரணமாக பெறுமதி மிக்க பல மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த தீ பரவலை பாடசாலை பழைய மாணவர்கள் அதிபர் ஆசிரியர் பொலிஸார் மற்றும் கரைச்சிபிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக பல பகுதிகளில் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அநாவசிய தேவை கருதி தீ வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தற்பொழுது கடும் வரட்சியும் வெப்பமும் கடும் காற்றும் அ…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
11 SEP, 2023 | 09:24 AM யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்துபவரான எமில் ரவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து அதிசொகுசு பேருந்தின் சாரதி, பேருந்தை அவ்விடத்தில் விட்டு தப்பித்து சென்ற நிலையில், அவ்விடத்தில் கூடியோர் குழப்பத்தில் ஈடுப்பட்டு பேருந்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், விபத்து இடம்பெற்ற இடத்தில் கூடிய மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, உயிரிழந்தவரின் சடலத்தை பொலிஸார் யாழ்ப்பாணம…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
11 SEP, 2023 | 11:03 AM மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிய பின் பணம் கொடுக்காது முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை பகல் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று மதுபானசாயில் அரைப் போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாக தெரிவித்து மதுபானத்தை வாங்கி கொண்டு பணத்தை கொடுக்காது முச்சக்கரவணடியில் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.சி. கமராவில் பதிவாகியதுடன் அது ஊடகங்களில் செ…
-
- 2 replies
- 635 views
- 1 follower
-
-
11 SEP, 2023 | 09:45 AM மட்டக்களப்புக்கு வடகிழக்கே 310 கிலோமீற்றர் தொலைவில் கடற்பரப்பில் 4.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (11) அதிகாலை 1.30 மணியளவில் நில அதிர்வு பதிவானதாக இலங்கை புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என இலங்கை புவிச்சரிதவியல் அளவை சுரங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/164278
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
பத்மநாதன், கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்?? – சம்பிக்க கேள்வி குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான் மற்றும் ராம் மற்றும் நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளை எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடம் சம்பிக்க ரணவக்க விளக்கம் கோரியுள்ளார். கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இராணுவப் பாதுகாப்பில் வசிக்கிற அதேசமயம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக விக்கிரமசிங்க-ராஜபக்ஷ அரசாங்கத்தில் பணியாற்றுகிறார். 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி மஹி…
-
- 2 replies
- 637 views
-
-
10 SEP, 2023 | 02:28 PM (இராஜதுரை ஹஷான்) குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்தது. பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்து முறையாக விசாரணை செய்திருந்தால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம். குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். நாவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்…
-
- 2 replies
- 369 views
- 1 follower
-
-
10 SEP, 2023 | 02:14 PM (எம்.வை.எம்.சியாம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை எனவும் சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சனல் 4 காணொளி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை முற்று முழுவதுமாக எம்மா…
-
- 1 reply
- 336 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 SEP, 2023 | 12:33 PM (லியோ நிரோஷ தர்ஷன்) நிதியியல் மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்கவும், நடைமுறையில் உள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக மூவரடங்கிய குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் நிதியியல் மோசடிகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளை ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியிருந்த ஐ நா நிதியியல் நடவடிக்கை செயலணி இவ்வாரத்தில் மீளாய்வு நடவடிக்கைகளுக்காக இலங்கை வரவுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளார். …
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
அது இல்லாவிட்டாலும் கோட்டா வென்றிருப்பார் கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் தான் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புனையப்பட்ட காணொளி தொடர்பில் சர்வவேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோருவதாகவும், குறித்த நிறுவனம் கோட்டாபயவுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள, பௌத்தத்துக்கு எதிராகவே பொய்பிரசாரம் செய்வதாகவும் தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளில் 9 இலட்ச வாக்குகள் மட்டுமே கத்தோலிக்க வாக்குகளாக உள்ள நிலையில் அந்த வாக்குகள் கிடைக்காது விட்டிருந்தால் கூட அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதை…
-
- 4 replies
- 791 views
-