ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் ஏற்பட்டுள்ள பிளவுகள் தமக்கு சாதகமாக உள்ளதாகவும் தனது மக்கள் பணியை தொடர்ந்து செய்வதற்கு உரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தம்பட்டி கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறையிலிருந்து தம்பட்டி வரையிலான புதிய பேரூந்து தேவை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பாக கதைப்பதாக கூறி தம்பட்டி கிராம மக்களின் பிரதிநிதிகள் அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது மேலும் கருத்துக்கூறிய டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமக்குள்ளே பிரிந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதால் யாழ் மக்கள் எமக்கு வாக்களிப்பதில் விர…
-
- 6 replies
- 811 views
-
-
உலக அரசியல் நிலவரம்தான் தமிழ் மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுகிறது; இந்த இடம்பெயர்வுகள் மனிதநேய விதிகளின் கீழ் போர்க்குற்றங்களாகவே கருதப்படும் :- மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர். தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா அரசினால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் முகாம்களிலேயே உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகள் மீதான செயற்பாடுகளை பூகோள அரசியல் தடுத்து வருகின்றது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர் தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் மனித உரிமைகள் ஆ…
-
- 1 reply
- 737 views
-
-
பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2010 யாழ்ப்பாணதேர்தல் மாவட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி (1) நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடத் தீர்மானித்ததன் காரணம் என்ன? தமிழர் அரசியலில் 30 ஆண்டுகால அறவழிப் போராட்டத்திலும் 30 ஆண்டகால ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டு இன்று மீண்டும் ஆரம்பப் புள்ளியில் நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழரது எதிர்கால அரசியல் என்பது சர்வதேச சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜனநாயக அடித்தளத்தில் நின்றுகொண்டு உலக மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி எமது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்காகக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்குக் …
-
- 26 replies
- 1.9k views
-
-
பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை! புதன்கிழமை, மார்ச் 17, 2010, 12:36[iST] கொழும்பு: இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் [^] [^] இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவேதான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று இலங்கை அரசு புதுக் கதை விட்டுள்ளது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரு…
-
- 9 replies
- 1.8k views
-
-
மன்னார் பகுதியில் எண்ணெய்க் கொள்ளை - தென்செய்தி திகதி: 18.03.2010 // தமிழீழம் இந்திய - இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் பெட்ரோல் எடுப்பது என்பதை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும், அதனை இரு நாடுகளுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என 1974ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை செய்து கொண்டிரு…
-
- 0 replies
- 593 views
-
-
வன்னிமக்களின் சொத்துக்கள் விற்பனையாகும் கள்ளச்சந்தை திகதி: 18.03.2010 // தமிழீழம் வன்னி ஆக்கிரமிப்பின் பின்னர் மக்களால் கைவிடப்பட்ட வன்னி மக்களின் சொத்துக்கள் பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாவது தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. உமையாள்புரம் பகுதிக்கு கொண்டுவரப்படுகின்ற உழவியந்திரம் உட்பட்ட ஊர்திகள் மற்றும் உந்துருளிகள் அங்குள்ள பாரிய பதுங்குகுழி ஒன்றினுள் இறக்கப்பட்டு கழற்றப்படுகின்றன. கழற்றப்பட்ட உதிரிப்பாகங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் தென்னிலங்கை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் இருந்தும் செல்லும் கொள்வனவாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனைசெய்யப்படுகின்றன. உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நபர்கள் வன்னியில் …
-
- 0 replies
- 557 views
-
-
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கேட்பதற்கு உரிமை இருக்கிறது - பிரித்தானியா நிதிமன்றம் தீர்ப்பு Terrorist members can claim asylum in Britain Members of a banned terrorist organisation can claim asylum in Britain, the Supreme Court has ruled. By Duncan Gardham, Security Correspondent Published: 3:50PM GMT 17 Mar 2010 The court ruled that being a member of the Tamil Tigers, which has been designated as a terrorist organisation by the government, should not prevent an individual claiming asylum. Their ruling was made in the case of “R” who joined the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 1992, at the age of 10. …
-
- 2 replies
- 1.3k views
-
-
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மே 19க்கு முன், பின் என இரண்டு காலக்கட்டங்களாக பிரித்தே தீரவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட மாந்தநேயம், மனிதத்தின் பேரொளி, மனித பேரவலம், முடக்கப்பட்ட மாந்தநேயம், அழுகைக்குரல் என மனிதத்திற்கே சவால்விடும் அனைத்துப் பேரழிவுகளும் அங்கே நிறைவேறி முடிந்தது. இதற்கான காரணங்களை பல்வேறு தளங்களிலிருந்து பலவாறு அலசுகிறார்கள், ஆய்வுநடத்துகிறார்கள். ஒரு விடுதலை இயக்கத்திற்கான பின்னடைவு எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்தெல்லாம் பகுப்பாய்வு செய்கிறார்கள். ஆனால் மற்றப் போராட்டங்களில் இருப்பதைப் போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் துரோகங்கள் விஸ்வரூபம் எடுத்தன. துரோகத்தின் அடையாளங்கள் தம்மை மிகைப்படு…
-
- 7 replies
- 1.4k views
-
-
இலங்கையில் முதற்தடவையாக மரபணு முறையில் ஆட்டுக் குட்டியொன்றைப் பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவபீடம் உருவாக்கியுள்ளது. இது நாட்டின் மரபணு தொழில்நுட்பத்தின் பாரிய வெற்றியாகுமென மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். உயிரோட்டமுள்ள மரபணுக்களைச் சீரான முறையில் பேணுவதற்கான வசதிகள் இலங்கையில் காணப்படாமையால் அதுகுறித்து மேற்கொள்ளபட்ட ஆய்வுகளின் பலனாகவே இந்த ஆட்டுக்குட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுமார் 10 வருட காலமாக மேற்கொள்ளபட்ட ஆய்வுகளின் பிரதிபலனாகவே இந்த ஆட்டுக்குட்டியை உருவாக்க முடிந்ததாகவும் டாக்டர் தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=21396
-
- 4 replies
- 635 views
-
-
"என் கடைசி காலத்தில் என் ஊரிலேயே நான் வாழ வேண்டும்" - தமிழ் நாட்டில் இருக்கும் ஒர் ஈழ அகதியின் ஆதங்கம் [ புதன்கிழமை, 17 மார்ச் 2010, 10:52 GMT ] [ தி.வண்ணமதி ] ‘நான் வீட்டுக்குப் போக வேண்டும்’ என நிசா என்னிடம் கூறினாள். சிறிலங்காவின் 26 வருடகால இனப் போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் தமிழ்நாட்டில் சிதறிக்கிடக்கும் 100,000 ஈழத் தமிழ் அகதிகளுள் இவளும் ஒருத்தி. 2008ம் ஆண்டு நிசா வவுனியாவிலிருந்து புறப்பட்ட போது அவளது அகதிப் பயணம் ஆரம்பமானது. உள்நாட்டிலேயே அவள் இரண்டு முறை இடம்பெயர்ந்திருந்தாள். “போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. எனது பிள்ளை, எனது கணவன் மற்றும் எனக்கு என்ன நடக்குமோ என நான் அஞ்சினேன்” என என்னிடம் விபரிக்கிறாள் நிசா. இவ…
-
- 1 reply
- 545 views
-
-
அரசியல் என்பது சாக்கடையல்ல அது புனிதமாக்கப்படவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் இரா.சிவசந்திரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பு வேட்பாளராக நிற்கின்ற பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தமது கட்சி அலுவலகத்தில் 14.03.2010 அன்று பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தபோது பின்வரும் விடயங்களை முன்னிலைப்படுத்தினார் இன்றைய அரசியலில் திட்டமிட்டே பெருந்தொகையான கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சிங்கள அரசு களமிறங்கியுள்ளது. கல்வியறிவில் உயர்நிலையிலுள்ள யாழ் சமூகத்தை கேலிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்பட வேண்டும். கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்தோர் பலர் ‘சென்றுவா வென்றுவா’ என ஆசீர்வதித்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள…
-
- 0 replies
- 513 views
-
-
திகிலான அனுபவங்கள், கனவுகளுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ஒருவன் தனது குடும்பத்தினரையும் இரண்டு கால்களையும் இழந்திருந்தான். பெண்ணொருவர் தனது குடும்பத்தை இழந்திருந்தார். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களிலிருந்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பியிருந்தனர். ஆனால், நீண்ட காலம் அவர்கள் இருக்கவில்லை. "ஏனையவர்கள் போன்று எம்மால் வாழமுடியாது... இவ்வாறு அவர்கள் எழுதிவைத்த தற்கொலைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரம் …
-
- 1 reply
- 687 views
-
-
இலங்கையில் ஜனநாயகம் இல்லை என ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ விசாரணைக்குட்படுத்துவது சட்டத்திற்கு முரணானது என பல தடவைகள் குறிப்பிடும் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் இலங்கையில் ஜனநாயகம் இல்லை எனக் கூறியுள்ளார். இலங்கையில் ஜனநாயகம் இல்லாமல் போனது எப்போது என்பதை அவர் தெரிவிக்காதது வேதனைக்குரியது.1958களில், 1983களில் தமிழ் மக்களின் குருதியை பேரினவாதம் குடித்துக் கூத்தாடியபோது இலங்கையில் ஜனநாயகம் இல்லாமல் போனதா? அல்லது 2008ஆம் ஆண்டு வடக்குக்கிழக்கைப் பிரிப்பதாக பிரதம நீதியரசராக இருந்த சரத் என்.சில்வா அவர்கள் தீர்ப்பு வழங்கியபோது, ஜனநாயகம் இல்லாமல் போனதா? அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக் கணக்கான தமி…
-
- 1 reply
- 539 views
-
-
சிறிலங்காவின் மறக்கப்பட்ட அகதிகள் [ செவ்வாய்க்கிழமை, 16 மார்ச் 2010, 18:29 GMT ] [ தி.வண்ணமதி ] எலும்பும் தோலுமாக இருந்த வலிடர்சிங் என்ற அந்த நபர் எங்களைப் பார்த்து புன்முறுவல் செய்கிறார். “வலிடர்சிங் என்ற இந்தியக் குத்துச் சண்டை வீரர் எங்களது நகரத்திற்கு வந்து சென்ற பின்னர் எனக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது” என அவர் தமிழில் எம்மிடம் தெரிவித்தார். 1990இல் யாழ்ப்பாணக் குடா நாட்டின் கரையோரத்தில் சிறிலங்கா படையினர் உயர் பாதுகாப்பு வலயத்தினைத் உருவாக்கியதைத் தொடர்ந்து வலிடர்சிங் தனது வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துவதற்காகத் தினமும் போராடி வருகிறார். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பயணம் செய்யும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளர் எழுதியுள்ளார். தொடர்ந்து அவர் எழுதிய…
-
- 0 replies
- 397 views
-
-
பச்சிலைப்பள்ளியில் பொதுமக்களின் நிலங்களில் படையினர் ஆக்கிரமிப்பு கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களை படையினர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தமது உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளும் உடைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர். இதனை தவிர தமது வீடுகளின் கதவு ஜன்னல் உட்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள 14 கிராமசேவையாளர் பிரிவுகளில் பச்சிலைப்பள்ளி பிரிவில் மாத்திரமே மக்களை மீள்குடியேற படைத்தரப்பு அனுமதித்துள்ளது. அதிலும் அங்கு வசித்து வந்தவர்களில் அரைவாசிப்பங்கினரே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இயக்கச்சி…
-
- 0 replies
- 438 views
-
-
சரியான பாதையில் எமது அரசியல் பயணம் தொடரும்- கலா நிதி. திருலோக மூர்த்தி வவுனியா நிருபர் புதன்கிழமை, மார்ச் 17, 2010 Dr.Thirulokamoorthy தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கை தமிழ்க்கங்கிராஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் கந்தசாமி திருலோகமூர்த்தி அவர்கள் வழங்கிய நேர்காணல். முதலில் உங்களை பற்றியொரு சிறு அறிமுகம் தாருங்கள்? தீவுப்பகுதியை சேர்ந்த வேலணையை பிறப்பிடமாக கொண்ட நான் கடந்த 3௦ வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சியில் நிரந்திரமாக வசித்து வருகிறேன் நான் ஒரு சுதேச வைத்திய பட்டதாரி அத்துடன் 2௦ வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்ட திடீர்மரண விசாரணை அதிகாரியாக கடமையாற்றி உள்ளேன். ஈழநாடு, முரசொலி, ஈழமுரசு ,ஈழநாதம் பத்திரிகைகளில் பணி புரிந…
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கையின் வடபகுதியில் உள்ள காடுகள் தொடர்பான வரைபடங்களைத் தயாரிப்பதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடபகுதியில் உள்ள காடுகள் தொடர்பாக வரைபடங்கள் எதுவும் கடந்த இருபது வருடங்களாகத் தயாரிக்கப்படவில்லை. போரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் [uSAID] வடபகுதிக் காடுகள் பற்றிய புதிய வரைபடங்களை தயாரிப்பதற்கு உதவிகளை வழங்கியுள்ளது. வடபகுதியில் உள்ள காடுகள் தொடர்பான புதிய வரைபடங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மென்பொருள், நவீன கருவிகள் மற…
-
- 1 reply
- 847 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக போட்டியிடும் யாழ் நகர முன்னாள் ஆனணயாளரான சீ.வி.கே சிவஞானம் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவராகவும் இருந்தவர். ஈழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு பணிகளை செய்ததுடன் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக நீண்டகாலம் இருந்தவர். தமிழ் தேசியக் கொள்கையில் மிகுந்த பற்றுக்கொண்ட இவர் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வன்னி மாணவர்களுக்கும் உதவியிருந்தார். குளோபல் தமிழ் செய்திகளுக்காக சி.வி.கே. சிவஞானம் அவர்களை நேரடியாக சந்தித்து இந்த நேர்காணலை மேற்கொண்டேன். தீபச்செல்வன் : யுத்தத்தின் பின்னர் இன்று தமிழ் அரசியலில் பிளவுகளும் சிதைவுகளும் உடைவுகளும் ஏற்பட்டு மக்களை கடுமையான குழப்பத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியிருக…
-
- 3 replies
- 762 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய றாஜபக்சவின் உத்தரவுக்கமைய உளவுப் பிரிவினரால் தயாரிக்கப்பட்டிருந்த கொலைப் பட்டியல் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்தப் பட்டியல் குறித்த விடயங்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரித்தானிய ஊடகப் பணிப்பாளர் மைக் பிளேக்மோர் அம்பலப்படுத்தியுள்ளார். இந்தப் பெயர் விபரங்கள் வேண்டுமென்றே அரச தரப்பால் கசிய விடப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் குறித்த நபர்களை அச்சுறுத்தி அவர்களது செயற்பாடுகளைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தப் பட்டியலிலுள்ளவர்களின் பெயர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப புள்ளிகள் வழங்கப்பட்டு இருந்ததாகவும் இந்தப் பட்டியலிலுள்ளோர் உளவுப் பிரிவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பேர் பற்றிய விபரங்களை வெளியிடப்பட்டது! ஏனைய 1,000 பேர் பற்றிய விபரங்கள் இல்லை!! இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11,000 இற்கும் மேற்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிறிலங்கா அரசின் புனர்வாழ்வு அமைப்பு 10,781 பேர் பற்றிய விபரங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும் ஏனைய 1,000 பேர் அளவான பற்றிய விபரங்களை வெளியிடாமல் தொடர்ந்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் வெளியிடப்பட்டவர்களில், 19 – 24 அகவைக்குட்பட்டவர்கள் 4,580 பேர்கள் எனவும் 25 – 34 அகவைக்குட்பட்டவர்கள் 4,220 பேர்கள் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் 1…
-
- 0 replies
- 912 views
-
-
நிபுணர் குழுவை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், உரிய நேரத்தில் நிபுணர்கள் குழு நியமிக்கப்படும் எனவும் பான் கீ மூன் செய்தியாளர் மாநாடொன்றில் குறிப்பிட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழு நியமிப்பதற்கான பூரண அதிகாரம் காணப்படுகிறதென தெரிவித்த ஐ.நா செயலாளர், தமது அதிகாரங்களை மீறி ஐ.நா. செயற்படுவதாக அணிசேரா நாடுகள் அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட நிபுணர்கள் குழுவினர், பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர். நிபுணர…
-
- 0 replies
- 689 views
-
-
அண்மையில் முடிவடைந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் சிறிலங்காவினது பங்குச் சந்தை சற்று முன்னேற்றம் கண்டுவந்தது. ஆனால், நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல், மனித உரிமை தொடர்பான கரிசனைகள், ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி வரிச் சலுகையினை மீளப் பெற்றிருப்பது ஆகியவற்றின் பின்னணியில் - இந்த வருட ஆரம்பம் முதல் கொழும்பு பங்குச் சந்தையில் இருந்த தமது பங்குகளை வெளிநாட்டவர்கள தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு முதலீட்டாளர்களும் தங்களது தனிப்பட்ட நலன்களைப் பிரதிபலிக்கும் முதலீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் சிந்திப்பது தான் - சிறிலங்காவின் பங்குச் சந்தையில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு அவர்கள் பின்னடிப்பதோடு, ஏற்கனவே இருக்கும் பங்குகளை அவர்கள்…
-
- 0 replies
- 431 views
-
-
அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல – கஜேந்திரனின் சிறப்புச் செவ்வி திகதி: 16.03.2010 // தமிழீழம் அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாகச் செயற்படுவது அல்லது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்ட காரணத்தினால், உள்ளிருந்து சம்மரசம் செய்ய அவகாசமற்று அதிலிருந்து வெளியிற்றப்பட்டதால், அடிப்படைத் தேசியக் கொள்கைகளைக் காப்பாற்றும் வகையில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் க…
-
- 18 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் சார்பில் திருமலையில் போட்டியிடும் திரு உமாகாந்தி ரவிகுமார் அவர்கள். http://www.yarl.com/articles/files/160310_umakanthi_ravikkumar.mp3
-
- 1 reply
- 839 views
-
-
இக்பால் அத்தாஸ் பாதுகாப்புச் செயலாளருடன் நெருக்கம்! TUESDAY, 16 MARCH 2010 08:48 செய்திகள் ஜெனரல் சரத் பொன்சேக்கா பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், அவரை அரசியல் ரீதியாக அழிப்பதற்கான ஒப்பந்தம் அரசாங்கத்தினால் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகராகப் பணியாற்றும் இக்பால் அத்தாஸிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ் விற்கும் இக்பால் அத்தாஸிற்கும் இடையில் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்பந்தம் அத்தாஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் கபில ஹெந்தாவித்தாரனவே இருவருக்கிடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார். சண்டே ரைம்ஸ் பத்திரிகை…
-
- 2 replies
- 1.1k views
-