ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
19 NOV, 2023 | 09:31 AM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள புதர் ஒன்றிற்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நீல நிற சேட்டும், நீலம் மற்றும் சாம்பல் நிற சாறமும் அணிந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/169662
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
Published By: PRIYATHARSHAN 18 NOV, 2023 | 08:23 PM சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று சனிக்கிழமை 18ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின்…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் டிசம்பரில் இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைகிறது அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனமான RM Parks இலங்கையில் அடுத்த மாதம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ், தங்களது ஆரம்பக் கட்டணத்தை அரசாங்கத்திடம் வைப்பு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். “அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஆரம்பத்தில் 150 எரிபொருள் நிலையங்களை எடுத்து அவற்றை இயக்கும். புதிய எரிபொருள் நிலையங்களை தாங்களாகவே கட்டுவதற்கும் இலங்கையில் இயங்குவதற்கும் RM Parks நிறுவனத்திற்கு அங்கீகாரம் …
-
- 0 replies
- 207 views
-
-
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி என்பன இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியானது Northern Uniஆல் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இசை நிகழ்ச்சி இவ்வாறான சூழலில் குறித்த நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அவர் செவ்வியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்கு பதிலாக டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக Northern Uni ஏற்பாடுகளை செய்துள்ளது. …
-
- 12 replies
- 1.4k views
-
-
18 NOV, 2023 | 12:45 PM யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளை சேர்ந்த வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம்…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
18 NOV, 2023 | 03:51 PM காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த ஸ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் இதுதொடர்பில் தெரிவிக்கையில், ஜனவரி முதல் கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன. இதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் ஈடுபடுத்தப்படவுள்ளது. இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இக்கப்பலில் 150 பயணிகள் தலா …
-
- 1 reply
- 454 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் துவாரகாவின் படத்தை உருவாக்கி அதனை மாவீரர் தினத்திற்கு வெளியிட்டு அவர் உயிருடன் இருக்கின்றார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 27ம் திகதி வெளியிடுவதற்காக காணொளி ஒன்றை தயாரித்து வருகின்றனர். மாவீரர் தினம் இதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உறவி…
-
- 9 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 18 NOV, 2023 | 03:29 PM இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். தற்போதைய வானிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். வட கிழக்கில் இன்று தொடக்கம் எதிர்வரும் 21வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வருகின்றது. இம்மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்றையதினம் சனிக்கிழமை காலை 7 மணியளவி…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டார். முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் செயலி வழியான முச்சக்கர…
-
- 0 replies
- 310 views
-
-
பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளது. இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொழும்பு புகையிரத வீதிகளில் 38 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன், புகையிரத பாதைகளில் 37 ரயில்கள் தடம்புரண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டை விட இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகிறது என்று ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புகையிரதப் பாதையில் பயன்படுத்தப்படும் தண்டவாளங்கள் துருப்பிடித்து அழுகிப் போவதினால் தடம் புரளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். இதுவரையில் புகையிரதப் பாதைகளுக்குப் பயன்படுத்துவ…
-
- 3 replies
- 505 views
-
-
மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ”நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது” எனத் தெரிவித்து குறித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. https://athavannews.com/2023/1359412
-
- 1 reply
- 166 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 NOV, 2023 | 10:01 AM பராமரிப்பு பணிகளுக்காக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் 6 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 165 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் எரிவாயு சுழலி ஆலை மற்றும் நீராவி சுழலி ஆலை இரண்டின் பராமரிப்பு பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்துள்ளது…
-
- 1 reply
- 398 views
- 1 follower
-
-
அடுத்த ஆண்டு 31 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 3 தேர்தல்கள். அடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை சமர்ப்பித்திருந்தது. ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கும் ஒரு மாதத…
-
- 0 replies
- 247 views
-
-
இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்…. இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி புனேயில் இடம்பெற்று வருகின்றது, ‘மித்ரா சக்தி -2023’ எனும் கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வுhந ர்iனெர செய்தி வெளியிட்டுள்ளது. 120 வீரர்களைக் கொண்ட இந்திய படைப்பிரிவில் மராத்தா தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளதுடன் இலங்கை தரப்பில் 53 தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய விமானப்படையை சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை விமானப்படையை சேர்ந்த 5 வீரர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்பதாக வுhந ர்iனெர செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்ப…
-
- 0 replies
- 192 views
-
-
மட்டக்களப்பில் பிரதான வீதி ஒன்றில் தேங்கி நிற்கும் மழை நீரில் கடற்றொழிலாளர் ஒருவர் மீன்களை பிடிக்கும் காணொளி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் ஒரு வினோதமானது என்பதை தாண்டி அரசாங்கத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது. மழைக்காலங்களின் போது குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை மேற்கொள்கின்றனர். இதனை அவதானித்த கடற்றொழிலாளர் இது தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த வித்தியாசமான செயற்பாட்டை செய்துள்ளார். https://tamilwin.com/article/street-in-batticaloa-damaged-1700153905
-
- 0 replies
- 192 views
-
-
17 NOV, 2023 | 06:31 PM இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 55 வயதுடைய அருச்சுணன் சுந்தரலிங்கம் என்பவராவார். கடந்த 31 ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் மனைவியுடன் தோட்டத்தில் களை பிடுங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது இரத்தப்புடையன் பாம்பு அவரை கையில் தீண்டியதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
17 NOV, 2023 | 06:30 PM கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் (INS) கோரா இன்று வெள்ளிக்கிழமை ( 17) இந்தியாவிற்கு புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படை மரபுகளுக்கு அமைய குறித்த கப்பலை வழியனுப்பி வைத்தனர் . 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலானது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை கப்பலாகும். கோரா கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் ஆர்.எம். நம்பியர், ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கப்பலில் வருகை தந்திருந்த இந்திய கடற்படையினர் நாட்டில் இருந்த போது கொழும்பில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. …
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
எரிமலையின் மேல் வாணலியை வைத்து சொசேஜஸ் பொரிக்கும் இனம் நாம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிமலை வெடித்தால் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் என்றும் குணவர்தன கூறினார். பாராளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரவு-செலவுத் திட்டம் மீதான, நான்காம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கடன் தொகை முப்பத்தாறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்த அமைச்சர், இருபது வருடங்களின் பின்னர் கடன் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். யாராக இருந்தாலும் இந்தக் கடனைச் செலுத்துவதற்கு அரசாங்கம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும், க…
-
- 1 reply
- 275 views
-
-
கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் இன்று (17) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 1 reply
- 208 views
-
-
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. குறித்த நபர் தனது மனைவியைப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு தனது மகளை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் தனது மகளை துன்புறுத்தும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் பகிர்ந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் அச்சிறுமியும் சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறி…
-
- 0 replies
- 388 views
-
-
(எம்.நியூட்டன்) மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நடத்த தடைவிதிக்கக் கோரியே மல்லாகம் நீதிமன்றில் மானிப்பாய் பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர். இது தொடர்பிலான விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (17) …
-
- 0 replies
- 180 views
-
-
தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவுபடக் காரணம் : அமைச்சர் மனுஷ நாணயக்கார! 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் …
-
- 4 replies
- 495 views
-
-
குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாடசாலைகளில் பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்றதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதிகாரியின் கூற்றுப்படி, பாலர் பாடசாலை முதல் வெவ்வேறு வயதினருக்கான பாடத்திட்டம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது குழந்தைகளுக்கு சரியான அறிவு மற்றும் முக்கியமான தலைப்புகளைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரிவான பாலியல் கல்வியின் அவசரத் தேவையை எடுத்துரைத்த பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உ…
-
- 5 replies
- 459 views
- 1 follower
-
-
17 NOV, 2023 | 10:59 AM யாழ்ப்பாண நகரில் நின்ற நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை (16) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்துவது பாரிய அசம்பாவிதங்களை தவிர்க்கும். …
-
- 4 replies
- 503 views
- 1 follower
-
-
பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வாருங்கள்! புலம்பெயர் தமிழர்களையும் அழைக்கின்றார் ஜனாதிபதி பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வாருங்கள்! புலம்பெயர் தமிழர்களையும் அழைக்கின்றார் ஜனாதிபதி தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாத…
-
- 2 replies
- 328 views
- 1 follower
-