ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
மகிந்தவை தண்டிப்பதானால் அவர் மீள வெற்றிபெற வேண்டும் கோபி in Ponguthamil.com "உங்களை தமிழர்களின் நிலையில் வைத்துக்கொண்டு யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுங்கள்: உங்கள் மீதும் உங்களது குடும்பத்தினர் மீதும் தாக்குதல்களை நடாத்துமாறு உத்தரவிட்ட அரச தலைவருக்கா, அல்லது அந்த உத்தரவுகளை நிறைவேற்றிய இராணுவத்தை, தலைமை தாங்கி நடாத்தியவருக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்?" இம்மாதம் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறவிருக்கிற அதிபர் தேர்தல் தொடர்பாக நியுயோர்க் ரைம்ஸ பத்திரிகையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக வேந்தரும், சர்வதேச பிணக்குகள் தொடர்பான சிந்தனை மையத்தின் இணைத்தலைவரும், கொங்கொங் நாட்டின் ஆளுனராக முன்பு கடமையாற்றியவருமான கிறிஸ் பற்றன் எழுதிய கட்டுரையில் மேற்கண்டவாறு …
-
- 10 replies
- 1.6k views
-
-
டக்களஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. மற்றும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதனை விடவும், சொந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் கூடுதல் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. தனித்து போட்டியிட்டால் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆசனத்தையேனும் வெல்ல முடியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி தனித்து போட்டியிடத் தீர்மானித்த காரணத்…
-
- 9 replies
- 884 views
-
-
பொன்சேகா கைது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் - சீனா மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010 China பொன்சேகா கைது தொடர்பாக பல நாடுகள் கட்டம் கட்டமாக கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில் சீனாவும் தனது கருத்தினை தெரிவித்துள்ளது. அதாவது சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. இலங்கையில் பொன்சேகா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டமை அவர்களது உள் வீட்டு பிரச்சினை அதில் நாம் தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் நாம் தலையிடுவதில்லை என சீனா கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2…
-
- 13 replies
- 851 views
-
-
ஐக்கியப்பட்ட தமிழர் தலைமை தேர்தல் மூலம் தெரிவாகவேண்டும் இது பொதுத் தேர்தல் காலம். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை மிக முக்கிய மான காலகட்டம் இது. இலங்கைத் தீவில் தமிழர்களின் உரிமைக்கான போராட் டம் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் வரலாற் றுத் திருப்பு முனையில் இப்போது நிற்கின்றது. இலங்கைத் தீவில் ஆட்சியதிகாரம் பிரிட்டிஷ் காலனித் துவப் பிடியிலிருந்து விடுபட்டு தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மையிடம் கைமாறிய பின்னர், தங்களின் வரலாற்று ரீதியான உரிமைகளை நீதி நியாயமான அபிலாசைகளை கௌரவமான வாழ் நிலையை வேண்டி பல் வேறு வழிகளிலும் இலங்கைத் தமிழர்கள் நடத்திய போராட் டங்கள் மூர்க்கத்தனமாக முறியடிக்கப்பட்ட ஒரு நெருக்கடி யான சமய சந்தர்ப்பம் இது. தமிழர்களினாலே முதல் மூன்று தசா…
-
- 1 reply
- 621 views
-
-
இன்று தமிழ்நெட் போட்டுள்ள ஒரு செய்தி, சரத்துக்கு என்ன நடக்குது என்பதிலோ, அல்லது மகாநாயக்க தேரர்களை நாய் என்று அழைப்பவற்றிலோ விட மிக முக்கியத்துவமான ஒரு செய்தி. 90% இற்கும் அதிகமான தமிழ் பேசும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இன்று கல்வி அமைச்சின் செயலாளாராக உள்ள சிங்கள அதிகாரியினால பெரும் எண்ணிக்கையில் தமிழ் பேசும் ஆசிரியர்கள் இடமாற்றத்துக்குள்ளாகி சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் செய்தி ஆங்கிலத்தில். ரகுநாதன், இசைக்கலைஞன் போன்ற ஆங்கிலப் புலமை உள்ள மேன்மையானவர்கள் இதனை மொழிபெயர்த்துப் போட்டால் நன்று Eastern provincial education administration goes to Sinhalese hands [TamilNet, Sunday, 14 February 2010, 02:01 GMT] “Ni…
-
- 7 replies
- 1.2k views
-
-
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மகாநாயக்க தேரர்கள் பக்கச் சார்பாக நடந்து கொள்ளக் கூடாது என்று பிரபல திரைப்பட நெறியாளரும் இம்முறை அரசாங்கக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான சோமரத்ன திசாநாயக்கா தெரிவித்துள்ளார். மகாநாயக்கர்களின் தவறான வழிநடத்தலினால் சில அரசியல் கட்சிகளே நன்மையடையும் எனவும் தெரிவித்துள்ள சோமரத்ன சட்டத்திற்குட்பட்ட வகையிலேயே தற்போது சகல விடயங்களும் கையாளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அனோமா பொன்சேகா பற்றிக் குறிப்பிடும் போது ஒரு பெண்ணின் கண்ணீர் மக்களின் மனதைக் கரையச் செய்யும் என்றாலும் அதையும் தாண்டி நடைமுறை விடயங்களை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று கேட்ட சோமரத்ன சரியான வேளையில் அரசியல் சூழ்ச்சியைப் அரசாங்கம் கண்…
-
- 2 replies
- 759 views
-
-
வீரகேசரி இணையம் 2/13/2010 2:29:07 PM - மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கடற்படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்களே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வினை வவுனியா வன்முறையற்ற சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் ரோகிதவும் வருகை தந்து மக்களுடன் உரையாடினார். மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிகமானோர் கடற்படையினரால் அழைத்துச் சென்றவர்களே என்றும் அவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் …
-
- 2 replies
- 585 views
-
-
40,000 மக்கள் கொலை!; கோடன் வைஸ் பொய்களை பரப்புகின்றார் - இலங்கை அரசு கொழும்பு நிருபர் சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010 Rohitha கோடன் வைஸ் வன்னியில் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறி இருப்பது பொய் எனவும் அவர் பொய்களை பரப்பிவருவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. முன்னதாக ஐக்கிய நாடுகளின் கொழும்பு பேச்சாளர் அவுஸ்ரேலிய ஏ.பி.சி. ஊடகத்திற்கு இலங்கைப்படைகளால் இறுதி போரில் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாகவே இலங்கை அரசு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாம அவர்கள் கோடன் வைஸ் இன் கருத்தை முற்றாக மறுதலிப்பதாக கூறியுள்ளார். அடுத்து தேசிய பாதுகாப்பு ஊடக ப…
-
- 10 replies
- 1k views
-
-
உதயன்", "சுடரொளி" ஆசிரியர் வித்தியாதரனுக்கு கூட்டமைப்பு எம்.பி. கிஷோர் கொலை அச்சுறுத்தல்! ."உதயன்", "சுடரொளி" ஆசிரியர் ந.வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மாலை "சுடரொளி" பத்திரிகை அலுவலக தொலைபேசிக்கு வவுனியாவிலிருந்து அழைத்த கிஷோர் எம்.பி. இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார். இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு கொழும்பிலுள்ள "சுடரொளி" அலுவலகத்திற்கு வவுனியாவிலிருந்து 024 - 2222 068 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைத்த கிஷோர் எம்.பி., "சுடரொளி" பத்திரிகைக்கு தன்னை பற்றி செய்தி தருபவர் யார் என்றும் அதனை பிரசுரிப்பதற்கு அதிகாரம…
-
- 63 replies
- 5.3k views
-
-
அமெரிக்காவில் முதல் தடவையாக உலக தர கிரிக்கெட்: நியூசிலாந்தை எதிர்த்து ஆட உள்ளது சிறிலங்கா - தமிழர்கள் விசனம் [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2010, 15:00 GMT ] [ கி.வேணி ] அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து சிறிலங்காவை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாக சபைகளின் இந்த கூட்டு முயற்சி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விளையாட்டுப்-பயண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக - மூன்று Twenty20 உலகத் தர கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் தலைமை செயலர் டொனால்ட் லோச்கேர்பி [Donald Lockerbie] தெரிவ…
-
- 0 replies
- 1k views
-
-
முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திங்கள் பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. இந்த எதிர்ப்பு நிகழ்வானது, Second Wave Publication, Democracy and Class Struggle, World People’s Resistance Movement (Britain) ஆகியவற்றின் ஆதரவுடன் நிகழ்கிறது. முற்போக்கு நேபாள சமூகம் என்ற அமைப்பிற்கும் புதிய திசைகள் அமைப்பிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத…
-
- 8 replies
- 1.8k views
-
-
வன்னியில் மீழ்குடியேற்றம் பெயரளவில் மட்டுமே அரச அதிகாரி வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010 Kili people வன்னியில் இதுவரை 50,000 மக்கள் தொகையினை அண்மித்ததாக மீழ் குடியேற்றத்திற்கு என மக்கள் அனுப்பபட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கான மீழ் குடியமர்வு திட்டமிடல் சரியான முறையில் திட்டமிடப்படாமல் உள்ளன. போதிய உதவிகளை, வசதிகளை அரசாங்கம் செய்து தரவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் வீரகேசரி நாளேட்டிற்கு கூறியுள்ளார். 50,000 மக்களையே குடியமர்த்த கஸ்டப்படும் அரசாங்கம் எவ்வாறு 300,000 மக்களையும் குடியமர்த்த போகின்றது என கேள்வி எழுப்பியுள்ளார் அந்த அதிகாரி. கூட்டுறவு சங்க கடைகளை கூட ஒழுங்காக நிர்வகிக்க முடியவில்லை. நிவாரணங்களை வழங்க முடியவி…
-
- 17 replies
- 699 views
-
-
சுவிஸ்முரசம் உலகையே தமது ஆழுமையின் கீழ் கொண்டு வந்து மார்க்சியப் பொருளாதாரக் கொள்கையை உலகமெல்லாம் பரப்ப அதற்கு ஒரே மார்க்கம் இராணுவ வலிமையினால் உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போராடிய சோவியத் ஒன்றியம் பல உலக எதிர்ப்புக்களை கண்டது. அதாவது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வலிமையை சிதறடிக்க முடிவெடுத்து பல போர் முனைப்புகைளை தமது இராணுவ தந்திரோபாயங்கள் மூலமாக நிறைவேற்றிய காலப்பகுதியை (1945–1991) குளிர்கால போர்க்காலமென அனைவராலும் அறியப்பட்டது. சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசு உலகின் பரப்பளவில் கணிசமானதைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய நாடு. இது ஆசியா, ஐரோப்பா மற்…
-
- 12 replies
- 858 views
-
-
வீரகேசரி இணையம் 2/13/2010 10:26:03 AM - வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனக் கூறி கேட்கப்பட்டுள்ள இந்த கப்பப் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழங்கியதாகக் கூறியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் கப்பம் கோரப்பட்ட வர்த்தகரின் உதவியாளர் எனவும் அவரே குறித்த கப்டனுக்கு வர்த்தகர் தொடர்பான தக…
-
- 2 replies
- 640 views
-
-
கிளிநொச்சி மாவட்டம், ஸ்கந்தபுரம், அக்கராயன் பகுதிகளில் பொது மக்களின் வீடுகளை உடைத்து அந்த ஓடுகள், கற்கள், மரங்களையே புதிய ஒப்பந்த கட்டிடங்களுக்கு பாவித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள ஒப்பந்த வேலைகளை சிங்களவர்கள், சிங்கள ப்படைகளின் உறவினர்களே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் புதிதாக பொருட்களை கொண்டுவராது அங்கு இருக்கின்ற பொது மக்களின் வீடுகளை உடைத்தே கட்டட வேலைகளை செய்து வருகின்றனர். இவ்வாறு ஸ்கந்த புரம் பகுதியில் கிராம சேவகர் மகேந்திரனின் வீடு, மருத்துவர் கோபால பிள்ளையின் வீடு ஆகியனவும் உடைக்கப்பட்ட வீடுகளில் அடங்கும். அரச அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் வீடுகளுக்கு என்ன நிலை? http://www.thinamurasam.com/
-
- 1 reply
- 1k views
-
-
ஒற்றையாட்சிக்கு சாமரம் வீசும் தேசிய ஒருமைப்பாட்டுத் தமிழர்கள் [ உதயன் ] - [ Feb 14, 2010 05:00 GMT ] போரின் பேரழிவுகளாலும் தொடர்ந்து முகம் கொடுத்த அடக்குமுறைகளாலும் துவண்டு போய்க் கிடக்கின்றது தமிழினம். நொந்து, நொடித்துப் போய் சருகாகிக் கிடக்கும் தமிழி னத்தை நோண்டிப் பார்க்கும் சுரண்டிப் பார்க்கும் கைங்கரி யத்தில் தங்களைத் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பெரு மிதத் தோடு கூறிக் கொள்பவர்களும் கூட ஈடுபடுகின்றமை மிகுந்த வேதனைக்குரியதாகும். இனி என்ன என்பது தெரியாமல் எதிர்காலம் பற்றிய அவ நம்பிக்கையில் தமிழினம் இன்று துவண்டு கிடக்கின்றது. தமது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாதா? அதற் கான மார்க்கம் என்ன? என்பவை தெரியாமல் தமிழ்மக்கள் மட்டு மல்லாமல…
-
- 1 reply
- 685 views
-
-
டிவி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவத்தினருக்குத் தடை வீரகேசரி இணையம் 2/13/2010 10:15:59 AM - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவ அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவர்களை தங்களது நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சகல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் இராணுவ அதிகாரிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்தக் கடி…
-
- 1 reply
- 391 views
-
-
மன்னார் தேவன் பிட்டிக்கு மீழ் குடியேற சென்ற மக்கள் தொடர்ந்தும் பாடசாலையில்! வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010 Thevan piddy மன்னார் மாவட்டம் தேவன் பிட்டி மூன்றாம் பிட்டி பகுதியினை சேர்ந்த 230 குடும்பங்கள் அங்குள்ள தேவன் பிட்டி பாடசாலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீழ் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட மக்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை அதாவது தற்காலிக குடிசைகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை ஆகையால் இன்னமும் பாடசாலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்களுக்கான நிவாரண ஒழுங்குகளும் இன்னமும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லையாம். http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%…
-
- 2 replies
- 442 views
-
-
பொன்சேகாவை அடைத்து வைத்திருக்கும் இடமும் தடுப்பு முகாமாக அரசு பிரகடனம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010 detentoin camp சரத்பொன்சேகாவை தடுத்து வைத்திருக்கும் கடற்படை முகாமை இலங்கை அரசாங்கம் ஓர் தடுப்பு முகாமாக வர்த்தமானியூடாக பிரகடனம் செய்துள்ளது.அரசாங்கம் போருக்கு பின்னர் பல தடுப்பு முகாம்களை நிறுவியது ஆனால் அவற்றினை வர்த்தமானியில் பிரகடனம் செய்யவில்லை. தற்போது பல தடுப்பு முகாம்களை உத்தியோக பூர்வமாக வர்த்தமானியில் தடுப்பு முகாம்களாக பிரகடனம் செய்துள்ளது. சட்ட ரீதியாக தப்புவதற்கே இந்த ஏற்பாடு என விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம் பொன்சேகாவினை கைது செய்து தடுத்து வைத்திருப்பதே. இதன்படி பொன்சேகாவை தடுத்து வைத்திருக்கும் இடமான வெலிசற கடற்…
-
- 3 replies
- 538 views
-
-
எதிர் வரும் பொதுத் தேர்தலில் நான்கு பிரதான கூட்டணிகள் ? எதிர் வரும் பொதுத் தேர்தலில் நான்கு பிரதான கூட்டணிகள் போட்டியிடும் சாத்தியங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்,ஸ்ரீலங்கா சுதுந்திர கேட்சி, விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளுடன் சிறிய முஸ்லீம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகளும் வெற்றிலை சி;ன்னத்தில் போட்டியிடவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி இம்முறை தனித்து தேர்தலை எதிர் கொள்ள தீர்மானித்துள்ளது. சரத் பொன்சேபா தலைமையிலான கூட்டணியில் ஜே.வி.பி ,ஸ்ரீலங்கா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிர…
-
- 0 replies
- 498 views
-
-
யானை சின்னத்தில் ஐ.தே.க. போட்டி. கூட்டமைப்பிற்கு வருத்தம் ஏன்? நக்கீரன் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010 TNA வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜன நாயக மக்கள் முன்னணியான மனோ கணேசனின் கட்சியும் போட்டியிட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தினை ஐக்கிய தேசிய கட்சியும், மனோகணேசனும் நிராகரித்துள்ளனர். இது தொடர்பாக தமது கட்சி எடுக்கும் தீர்மானத்தின் படியே முடிவு எடுக்க முடியும் எனவும் கட்சியின் முடிவு கூட்டமைப்பின் ஆலோசனைக்கு மாறாகவே இருக்கும் எனவும் நழுவல் வழுவலாக கூறியுள்ளனர் ரணில் விக்கிரமசிங்காவும் மனோ கணேசனும். இதனால் கூட்டமைப்பு மனம் சோர்ந்து போயுள்ளனராம். ஜனாதிபதி தேர்தலில் நாம் உதவியதற்கு இதுதானா பிரதியுபகாரம் என மனசுக்குள் புளுங்…
-
- 2 replies
- 405 views
-
-
"தமிழருக்கு மூட்டிய தீயில் வெந்து கருகும் சிங்களம்"! “தமிழ்மக்களின்- உரிமைப் போராட்டத்தை நசுக்கி, அவர்களின் வாழ்வையும் வளங்களையும் அடியோடு பெயர்த்து, இல்லாமலே செய்து விட்ட மகிந்த ராஜபக்ஸவும், சரத் பொன்சேகாவும் அதற்கான தண்டனைகளை அனுபவிப்பதற்கான சூழல் நெருங்கி வருகிறது.” என தாய் நாடு ஏடு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற முழக்கத்தோடு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல், சமூக பண்பாட்டு விழுமியங்களை பேணி வெகுவிரைவில் அச்சுப்பதிப்பாய் வெளி வரவிருக்கும், தற்போது இணையம் ஊடாக மாதம் இருமுறை வெளிவரும் தாய் நாடு ஏடு 03 ல் வெளிவந்துள்ள செய்தி ஆய்வு வருமாறு தமிழருக்கு மூட்டிய தீயில் வெந்து கருகும் சிங்களம்! சரத் பொன்சேகாவைக் கைது…
-
- 0 replies
- 635 views
-
-
ஐக்கிய தேசிய கட்சி தனது ஆதரவு கட்சிகளுடன் பேச தயார் - ரணில் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010 யானை சின்னத்திலேயே எத்ரணி போட்டியிடும் என அதிரடியாக அறிக்கைவிட்ட ரணில் இப்போ ஏனைய ஆதரவு கட்சிகளுடன் பேசவும் தயார் என தெரிவித்துள்ளார். எதிரணிகளுக்குள் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்ற நிலை இழுபறியில் இருந்தது. இந்த நிலையில் பொன்சேகாவின் கைது ஐக்கிய தேஎசிய கட்சிக்கே மிக அனுகூலமாக இருக்கின்றது. முதலாவது அவரது அழுத்தம் இல்லாமல் போனது, இரண்டாவது ஜானையா அன்னமா என்ற ரணிலுக்கு யானைதான் என முடிவு எடுக்க இலகுவாக இருந்தது. அடுத்ததாக பொன்சேகா கைதினால் பெரும் பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு பெளத்த பீடங்கள் வரை பிரதிபலிப்பதால் ஆழும் கட்சிக்கான ஆதரவில் வீழ்ச்சி…
-
- 0 replies
- 451 views
-
-
மறுபடியும் பிரபாகரன்.. மறுபடியும் சி.பி.ஐ.. சி.பி.ஐ – சிதம்பரம் குழப்பத்திற்கு பிரபாகரன் காரணமல்ல.. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சரத் பொய்யாகத்தன்னும் சொன்னாலே போதும்… பிரபாகரனின் மரணச்சாட்சிப் பத்திரத்தை சிறீலங்கா அரசு தம்மிடம் தரவேயில்லை என்று சி.பி.ஐ நேற்று மீண்டும் கூறியுள்ளது. முன்னர் ஒரு தடவை இதே அறிக்கையை சி-பி.ஐ வெளியீடு செய்ய, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதை மறுத்து இன்னொரு அறிக்கை விட்டிருந்தார். இப்போது மீண்டும் சி.பி.ஐ அதை மறுத்திருக்கிறது. நாளை ப.சிதம்பரம் மீண்டும் இன்னொரு தடவை மறுக்க நாடகம் மேலும் பல படிகளாக தொடரலாம்… இப்படி இந்தியாவில் இருந்து அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு விதமாகவும், சி.பி.ஐ மறுவிதமாகவும் முரண்பட்ட அறிக்கை விடுவது எதற்காக என்…
-
- 10 replies
- 2.2k views
-
-
மடவளையில் முஸ்லிம்களைக் கொன்ற லொஹான் ரத்வத்தையும் தேர்தல் களத்தில் 2000ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது மடவளையில் வைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரைக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தையின் மகன் லொஹான் ரத்வத்தையும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சுதந்திரக் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. அத்துடன் றகர் விளையாட்டு வீரர் ஒருவரின் கொலை தொடர்பாகவும் இவரது பெயர் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது. இவர் கண்டி மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரிக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரைக் களத்தில் இறக்குவதன் மூலம் சந்திரிக்கா…
-
- 1 reply
- 785 views
-