ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுடன் இணைந்தது பொதுநலவாய அமைப்பு [ சனிக்கிழமை, 16 யூலை 2011, 07:46 GMT ] [ நித்தியபாரதி ] அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் பொதுநலவாய அமைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளுக்கிடையில்- ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதியரசர் சாங்-கியூன் சொங் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டத்துறை அமை…
-
- 0 replies
- 762 views
-
-
அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் – புலம்பும் மகிந்த 2015 அதிபர் தேர்தலில் தான், தோற்கவில்லை என்றும் அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. ஹோமகமவில் நேற்றுமுன்தினம் நடந்த சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி இந்த நாட்டைத் துண்டாடும் சதித்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது. வடக்கு -கிழக்கு இணைப்பு, அதியுச்ச அதிகாரங்கள் என அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட …
-
- 0 replies
- 211 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 15:46 ஈழம்] மூதூர் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கைக்காக அனைத்துலக சட்ட வல்லுநர்கள் குழு மன்னிப்பு கோர வேண்டும் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அனைத்துலக சட்ட வல்லுநர் குழுவின் தலைவர் நீதிபதி ஆர்தர் சஸ்கல்சனுக்கு அவர் நாளை திங்கட்கிழமை டிதம் ஒன்றை அனுப்பி வைக்க உள்ளார். மூதூர் அரச சார்பற்ற பணியாளர்களின் உடல்களை பரிசோதனை செய்த போது அதில் 5.56 மி.மீ துப்பாக்கி ரவை இருந்ததாக அவுஸ்திரேலிய தடவியல் வல்லுநர் மால்கம் டொட் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் 7.62 மி.மீ துப்பாக்கி ரவைகளே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனைச் சுட்டிக்காட்டி,…
-
- 0 replies
- 798 views
-
-
அனைத்துலக சட்டங்களின்படி கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும் – ஸ்கொட் கில்மோர் அனைத்துலக சட்டங்களின்படி, சிறிலங்கா படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு கட்டளை வழங்கியவர் என்ற வகையில், கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டியவர் என்று அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில், றோய் சமாதானம் என்ற கனடாவைச் சேர்ந்த தமிழரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கை சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் கையாளவுள்ளார். இவர், ஊடகவியலாளர் மேரி கொல்வின் 2012ஆம் ஆண்டு சிரியாவில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக , சிரிய ஆட்சியாளர்களுக்கு…
-
- 0 replies
- 814 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக சதி இடம்பெறுவதாக அரச தலைவரும் அரசும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த அனைத்துலக சதியை முறியடிக்க வேண்டுமானால் உள்நாட்டிலிருந்து கொண்டு பேசுவதால் பயனில்லை. இது தொடர்பாக ஐ.நா. சபையிலேயே பேச வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்காவின் நிலைப்பாட்டை ஐ.நா. சென்று அரச தலைவர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அனைத்துலக சமூகத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாரதூ…
-
- 0 replies
- 510 views
-
-
அனைத்துலக சமாதான ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் சமாதான பாதையில் ஒரு பயணம் இலங்கை இனப்பிரச்சனை மீதான சர்வதேச கருத்தாடல் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் (University of East London) Dockland Campus University Way London E16 2 RD 22–03–2008 சனி மற்றும் 23–03-2008 ஞாயிறு கிழமைகளில் காலை 9 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அடிமைப்பட்டு அல்லலுறும் ஈழத் தமிழர்கட்கு ஒரு ஏற்ற தீர்வை காணும் வகையில் அகில உலக அறிஞர்கள்இ மனித நேய பண்பாளர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் கூடி கலந்துரையாடும் நிகழ்வு இக்கருத்தரங்கில் ஒரு பார்வையாளராக கலந்து கொள்ள விரும்பினாலோ அல்லது வேறு வகையில் ஆதரவளிக்க விரும்பினாலோ தயவு செய்து தாமதம…
-
- 1 reply
- 1.4k views
-
-
அனைத்துலக சமூக அழுத்தத்தில் இருந்து சிறிலங்காவை பாதுகாக்கும் இந்தியா பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதைப் புறக்கணிப்பது தொடர்பான கனேடிய நாட்டின் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் விடயத்தில் இந்தியா உதவி புரிந்த விடயத்தை சிறிலங்கா ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தியுள்ளன. இவ்வாறு Express News Service நிறுவனத்திற்காக கொழும்பிலிருந்து அதன் சிறப்பு செய்தியாளர் P K Balachandran எழுதியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் சரியான பதில் கூறாததால் 2013ல் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதைப…
-
- 0 replies
- 612 views
-
-
உள்நாட்டில் தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்கள் அனைத்துலக சமூகத்திடம் தீர்வு கேட்டு நிற்பதில் தவறேதும் இல்லை என்று வட்க்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லாதபோது, அது தொடர்பாக அனைத்துலக விசாரணை கோருவதில் என்ன தவறு உள்ளது? சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வடக்கு மாகாணசபைக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. எங்களோடு பேச்சு நடத்துகின்றபோது, எங்களுக்கு பலவற்றைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் எங்களுக்கு கடைசியில் எதுவுமே கிடைக்க…
-
- 0 replies
- 380 views
-
-
- பாங் கி மூன் விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் அமைதி முயற்சியை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பில் உலங்கு வானூர்த்தி மூலம் இராஜதந்திரகள் கொண்டுசெல்லப்பட்ட போது எறிகணைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் தொடர்பிலேயே பாங் கி மூன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தாக்குதலைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் வெளிநாட்டுத் தூதுவர்களையும் அனைத்துலகத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளையும் ஏற்றிச் செல்லப்பட்ட உலங்கு வானூர்த்தி மீதான தாக்குதலானது அனைத்துல சமூகத்ததின் உயிர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது எ…
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைத்துலக சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி தமிழ் மக்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் எதிரான தனது இனவாதக் கொள்கையை சிறிலங்கா அரசு இறுகப் பற்றிப் பிடித்திருக்கிறது. ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை அதற்கான அண்மைய உதாரணம். எனவே அவரையும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களையும் விடுதலை செய்விப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு கேட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, தான் மேற்கொள்ளும் இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவல நிலையையும் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசு மறைத்திருக்கின்றது எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றது. இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "தமிழர்களுக்கு எதிராக தாம் முன்னெடுக்கும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சிக் குழுவினரைக் கைது செய்திருப்பதன் …
-
- 2 replies
- 721 views
-
-
உள்நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாத நிலையில், அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு பயணம் செய்துள்ள, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் ஒபாமா நிர்வாகத்தின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப்புடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கா சென்றிருந்த போது ராப்பை தாம் சந்தித்துப் பேசியதாகவும், அவர் சிறிலங்கா வந்தபோது தம்மைச் சந்திக்க விரும்பியதன் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, சி…
-
- 0 replies
- 836 views
-
-
அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன?: விடுதலைப் புலிகள் [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 16:22 ஈழம்] [பூ.சிவமலர்] வாகரையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறிலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு எவரும் ஏவுகணை விஞ்ஞானம் படிக்க வேண்டியதில்லை. வாகரையைத் தன்வசமாக்கும் திட்டத்தில் சிறிலங்கா அரசு, அனைத்துலக விதிமுறைகளை மீறியதுடன், மனிதாபிமான வேண்டுகோள்களையும் நிராகரித்துள்ளது என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கை விடுத்துள்ளது. வாகரையில் உள்ள மக்கள் நல சேவை புரியும் இடங்களை மட்டக்களப்புக்கான அனைத்துலக செஞ்சிலுவகைச் சங்கப் பிரதிநிதி காசேசி மார்யத்தை, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் க…
-
- 6 replies
- 1.9k views
-
-
போர்க்களத்தில் காயம்பட்டு வலுகுறைந்து- சமாதானத்துக்காக பேச்சுவார்த்தை நடத்திய சு.ப.தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து கொன்றதாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதனை புரிந்து கொள்ள மேற்குலகம் தாமதிக்கிறது. அந்தப் புரிலை அனைத்துலக சமூகத்துக்கு ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று உதயன், சுடரொளி நாளேடுகளின் ஆசிரியரான வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
அனைத்துலக சமூகத்திற்கு புலிகளின் செய்தி செவ்வாய் 06-03-2007 02:17 மணி தமிழீழம் [மயூரன்] 'சிறீலங்கா அரசு அனைத்துலக ஆதரவுடன் உருவான போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறி தமிழர்தாயகம் மீது ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்து விட்டு தமிழர்களை அவலத்தில் தள்ளியுள்ள இந்நிலையில் சிறீலங்கா அரசை கண்டிக்க தவறியுள்ள அனைத்துலக சமூகம், தமிழர்களளின் தாயகம் மீதான சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பை முறியடிக்க விடுதலைப்புலிகள் சமரை தொடங்கும் போதும் கண்டிக்க கூடாது' இதுவே அனைத்துலக சமூகத்திற்கான எங்களின் செய்தி என்று தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் நோர்வே தூதுவரிடம் தெரிவித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தின் இணையத்தள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pathiv…
-
- 1 reply
- 1.6k views
-
-
வியாழன் 03-01-2008 23:06 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்காவின் நடவடிக்கையால் நம்பிக்கையை இழந்துவிட்ட முதலீட்டாளர்கள். சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பானது, சிறீலங்காவில் முதலீடு மேற்கொள்ளவிருந்த வர்த்தக சமூகங்களின் நம்பிக்கையை இழக்க வைத்திருப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு தலைப்பட்சமாக சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் அனைத்துலக சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை கொண்டிருப்பதாக மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டு சிறீலங்கா தரப்புக்கும், தமிழ்த்; தரப்புக்கும் இடையே போர…
-
- 3 replies
- 2.5k views
-
-
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அதனைத் தான் நிராகரித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அழைப்பை நிராகரித்து, அனைத்துலக சமூகத்துக்கு தனது முதுகெலும்பைக் காட்டி விட்டதாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணையை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, நான், …
-
- 2 replies
- 350 views
-
-
[ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு பாரபட்சமாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சிறிலங்கா அதிபர், சிறிலங்காவைப் பாதித்த பிரச்சினைகளுக்கு அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் தீர்வுகளை வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஐ.பொதுச்சபையின் 66 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று உரையாற்றியுள்ளார். இந்த உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அபிவிருத்தி அடைந்து வரும் உலகிலுள்ள சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதே அவசியமா…
-
- 0 replies
- 555 views
-
-
இலங்கைத்தீவில் தமிழர்களின் அதிகார மையத்தினை அனைத்துலக சமூகம் அங்கீகரித்தால் மட்டுமே இன மோதுகை தணிப்பு சாத்தியமாகும் என சுவிற்சர்லாந்து ஜெனீவாவை தளமாகக்கொண்ட அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 462 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடும் நிலையை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி குற்றம் சாட்டி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 459 views
-
-
அனைத்துலக அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற அனைத்து நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவியின் நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் அமைதியையும் கொண்டு வரவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அனைத்துலக சமூகம் தலையிடக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய அதிகாரி றொபேர்ட் ஈவன்சிடம் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் தவறிவிட்டதால் கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் 10 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் காயமடைந்தும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழக கள அலுவலக தலைமை அதிகாரி லோறன்ஸ் கிறிஸ்ரி, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கு 'பாதுகாப்பதற்கான பொறுப்பு' (R2P) என்ற கோட்பாட்டைப் பயன்படுத்துமாறும் கோரியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: சுமார் 1,30,000 மக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் 'பாதுகாப்பு வலயம்' என வரையறுக்கப்பட்டுள்ள பகுதி மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் தொடர்ச்ச…
-
- 0 replies
- 371 views
-
-
அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் : சனல்-4 (காணொளி) இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ‘அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதாக, சனல்-4 (Channel-4) தொலைக்காட்சி இன்று (20-07-2011) செய்தி வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை பன்னாட்டு சமூகத்திடம் கொண்டு சென்ற பெருமைக்குரிய பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, அடிக்கடி ஈழத்தமிழர் பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிடப்பட்ட செய்தியில், சனல்-4 முன்னர் வெளியிட்ட காணொளிகள் மற்றும் இலங்கையின் படுகொலைக்களம் போன்ற காட்சிச் சாட்சிக…
-
- 1 reply
- 647 views
-
-
அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறு யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் மார் 24, 2014 யேர்மனியில் 631 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்பு யேர்மன் மொழியில் ஒரே நாளில் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் யேர்மன் சார்பில் ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறும் மற்றும் தமிழ் மக்களுக்கு உண்மைத்தன்மையான நீதி கிடைக்கும் வகையில் யேர்மன் அரசாங்கத்தின் பங்கும் மற்றும் நிலப்பாடும் என்பது ஐநா மனித உரிமை பேரவையில் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்தி யேர்மனியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு யேர்மன் மொழ…
-
- 1 reply
- 528 views
-