ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
திரு சாந்தன் சுவிஸில் இருந்து வட்டுகோட்டை தீர்மானம் பற்றி – http://eelamsoon.com/upload/santhanSwiss.mp3 source : http://www.eelamsoon.com
-
- 0 replies
- 922 views
-
-
சுவிஸில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து வாக்களிக்கின்றனர் சுவிஸ் நாடு தழுவிய வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து பெருவாரியாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 23/24.01.2010 இந்த வாக்கெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. Basel,Bern.zürich மாநிலத்திலும் மக்கள் ஓரளவு கலந்து கொண்டுள்ளார்கள், ஆனால் 24.01.2010 இன்றும் பெருமளவில் மக்கள் வாக்களிக்க வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/5230/54/.aspx
-
- 1 reply
- 530 views
-
-
யேர்மனியில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆரம்பமாகியது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு யேர்மனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது யேர்மனி வாழ் ஈழத்தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு யேர்மனி முழுவதும் அமைக்கப்பட்ட 110 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியது காலை வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டவுடன் யேர்மன்வாழ் தமிழ்மக்கள் தங்கள் வரலாற்றுக்கடமையை நிறைவேற்றுவதற்கு தங்கள் வாக்குகளை பதிவுசெய்த வண்ணமுள்ளனர் http://www.pathivu.com/news/5226/54/.aspx
-
- 0 replies
- 490 views
-
-
சர்வதேசத்தின் திட்டத்தினை இலகுவாக அடைய தமிழர்கள் உதவப்போகின்றார்களா? பல புத்தி ஜீவிகள், அரசியல் நுண்ணாய்வாளர்கள், வெளி நாட்டில் காகித வடிவில் தீர்வு காண முயற்சிப்போர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றம் என்ற பசப்பு வார்த்தையினை தமிழ் மக்களிடையே கூறி சரத் பொன்சேகாவை வெல்லப்பண்ண வேண்டும் என்பதில் ஒற்றைக்காலில் நிற்கின்றனர். இவர்களின் இந்த திட்டத்தின் மூலம் அதாவது சரத் பொன்சேகாவை வெற்றி பெற செய்வதன் மூலம் கணிசமான தமிழ் மக்களது பிரச்சினை தீர்க்கப்படும் என மக்களை ஏமாற்றுகின்றனர். உண்மையில் இது நடக்க போவதில்லை என்பது வரலாறு ஏனெனில் பிரச்சினை சரத்பொன்சேகாவோ அல்லது மஹிந்தவோ அல்ல பிரச்சினை வரலாற்று ரீதியான தேசிய இனங்களுக்கு இடையேயான பிரச்சினை. எந்த சிங்கள தலைவர்கள் …
-
- 35 replies
- 2k views
-
-
அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்! சிங்கள தேசத்தின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 26-ம் திகதி நடைபெறவுள்ளது. தமிழீழ மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் விடுதலை பெறும்வரை அல்லது அவர்களை விடுவிக்கும்வரை அவர்களது தலைவிதியை சிங்கள தேசமே நிர்ணயிக்கப் போகின்றது என்பதனால், ஈழத் தமிழர்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகி நிற்க முடியாது. மிகப் பெரிய தமிழின அழிப்பை நிகழ்த்திய சிங்கள இனவாதிகள் இருவர் தேர்தல் களத்தில் முன்நிலை வகுப்பதால், விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழர்கள் இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் மக்களின் வாழ்வை…
-
- 0 replies
- 513 views
-
-
இன்னுமோர் ஜனாதிபதி வேட்பாளாரான இலியாஸ் பொன்சேகாவிற்கு ஆதரவு. இன நல்லுறவை பேணல் என்ற நிபந்தனயில் இவர் தனது ஆதரவை நல்கி போட்டியிலிருந்து வாபஸ் வாங்கினார்.இவர் முன்னாள் யாழ் மாவட்ட மு.கா. பாராழுமன்ற உருப்பினராவார். http://www.dailymirror.lk/index.php/news/1084-another-candidate-backs-fonseka.html
-
- 0 replies
- 480 views
-
-
முன்னாள் அதிபர் சந்திரிகா பொன்சேகாவிற்கு ஆதரவு! ஹொரகொல்ல வில் உள்ள சந்திரிகாவின் வீட்டிற்கு பொன்சேகா இன்று விஜயம் செய்தார்.வேறு வாகனம் ஒன்றில் அவருடன் சென்ற பத்திரிகையாளர்கள் பொலிசாரினால் தடுக்கப்பட்டனர். http://www.dailymirror.lk/index.php/news/1087-cbk-extends-support-to-fonseka.html
-
- 0 replies
- 512 views
-
-
எவர் வெற்றி பெற்றாலும் சேர்ந்து பணியாற்றுமாம் அமெரிக்கா; அவரிடம் "நல்லவற்றையே" எதிர்பார்க்குமாம் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அனைத்துலக சமூகத்தில் சிறிலங்காவிற்கு ஏற்பட்டு வரும் நற்பெயருக்கு தற்போதைய தேர்தல் வன்முறைகள் களங்கம் ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளது அமெரிக்கா. அரச தலைவர் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்ற நிலையில் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அமெரிக்கா கவலையும் தெரிவித்துள்ளது. “எல்லோருடைய கவனமும் நடக்க இருக்கும் தேர்தலை நோக்கிக் குவிந்திருக்கின்றது. எங்களுடைய கவனம், ஜனநாயக நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இடம்பெற்று வரும் வன்முறைகள் பற்றியதுதான்” என்றார் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீ…
-
- 2 replies
- 619 views
-
-
தமிழர்களை வீழ்த்தி அந்த வெற்றிக்கு காரணமானவர்கள் எண்று தங்களுக்குள் போட்டி போடும் இருவேட்ப்பாளர்களும் இண்று தமிழர்களின் வாக்குக்காக அலைபாய்கிறார்கள்.... இவர்களுக்கு தமிழர்களின் வாக்கு கட்டாயம் போடப்பட வேண்டுமா...?? Should Tamils vote for the General who crushed them? By Dean Nelson Last updated: January 14th, 2010 26 Comments Comment on this article Sarath Fonseka with LTTE(2) Who should Sri Lanka’s blighted Tamils vote for in this month’s presidential election – the politician who ordered a final offensive against their last stronghold or the general who called the shots? There are other candidates, but only two stand a chance o…
-
- 6 replies
- 926 views
-
-
தமிழ் மக்களை சுட்டுக் கொல்லும் காணொளி பிரிட்டன் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது - வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் பிரித்தானியாவில் பெருமளவு தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் பிரித்தானியா என்றும் அக்கறை கொண்டிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார். லண்டன் ருற்றிங் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான சதீக் கானின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடலில் வெண்புறா அமைப்பின் பிரதிநிதிகளிடம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இந்தக் கருத்தினைக் கூறியிருக்கின்றார். வன்னியில் சிறைப்பிடிக்கப்பட்டு முகாம்களில் வாடும் தமிழ் மக்கள் பற்றிக் கருத்துரைத்த அமைச்சர், இலங்கை அரசு தமிழ் மக…
-
- 4 replies
- 663 views
-
-
வடக்கில் இருந்து தென்பகுதி நோக்கி வரும் வாகனங்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்துமாறு பாதுகாப்பு அதிகாரிகள் வட பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். வடபகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சீ4ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே பாதுகாப்பு அதிகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடற்படையினர் 10கிலோகிராம் சீ4ரக வெடி மருந்துகளை கைப்பற்றியிருந்தனர். இதனால் வடக்கில் மேலும் வெடி மருந்துகள் இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் உயர் அதிகாரியயாருவர் தெரிவித்துள்ளார். ஏ-9 வீதியில் உள்ள காவலரண்கள் அனைத் தும் அகற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிப…
-
- 0 replies
- 530 views
-
-
மகிந்தவுக்கு சிங்கள கிராமப்புறங்களில் ஆதரவுகள் உள்ள போதும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் அவர் தோல்வியடைந் துள்ளார். விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பொன்சேகா பெற்றுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகும். மகிந்தவைவிட மோசமானவராக பொன்சேகா இருக்க முடியாது என பலர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தனது நேற்றைய பத்தியில் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு, நேற்று முன்தினம் (22) அதிகாலை விடியும் போது கொழும்பில் உள்ள டிரான் அலஸ் (49) இன் இல்லத்தின் முன்பாக சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.இலங்கையின் வரலாற்றில் மி…
-
- 0 replies
- 631 views
-
-
இலங்கைத் தேர்தலில் யார் வென்றால் தான் தமிழருக்கு என்னவாகப் போகின்றது? பிரதான போட்டியாளர்கள் இருவருமே கூட்டாகத்தழிழரைக் கொடூரக்கொலை செய்தவர்கள். யார் வந்தாலும் தமிழர் நிலையில் மாற்றம் வரப்போதில்லை. இப்போது போட்டி என்னவென்றால் தமிழர்கள் வாக்கு கிடைக்குமபோது தான் எண்ணிக்கையில் வித்தியாசம் வரும் அந்த வித்தியாசத்தை வைத்தே வெற்றிபெறமுடியும் என்பது முடிவானது. தமிழர்களை குழறக் குழற குஞ்சு குருமன் முதல் முதியோர் வரை கொடூரமாகக்கொன்றவர்கள் கேவலம் வோட்டுக்காக தமிழரிடம் கையேந்தும் கையறுநிலையிலுள்ளவர்களுக்கு தமிழர் நல்ல பாடம் படிக்க வேண்டாமா? தமிழர்கள் தீர்க்கமாக சிந்திக்கவேண்டும். யார் வந்தாலும் தமிழர்களுக்கு வேதனை என்னும் சுவைதான்; மிஞ்சும். எதுவும் நடைபெறப்போவதி…
-
- 0 replies
- 493 views
-
-
இரு கனேடிய தமிழர்களுக்கு கடும் சிறைத்தண்டனை ஆயுதக் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நியூயோர்க் மாநிலத்தின் கிழக்கு மாவட்ட நீதவான் ரெய்மன்ட் ஜே. டியாரியினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சதாஜன் சராசந்திரன் மற்றும் 50 வயதான நடராசா யோகராஜா ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, சராசந்திரனுக்கு 26 ஆண்டுகால சிறைத்தண்டனையும், யோகராஜாவிற்கு 14 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுதங்களை விடுதலைப் புலிகளின் சார்பில் கொள்வனவு முயற்சி மேற்கொண்ட குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்ட…
-
- 6 replies
- 1.5k views
-
-
தேர்லினை குழப்பினால் முடிவுகள் தாமதமாகும் – தேர்தல் ஆணையாளர் அதிபர் தேர்தலின் போது யாராவது குழப்பத்தினை ஏற்படுத்தினால் தேர்தல் முடிவு ஒரு வாரத்தின் பின்னரே அறிவிக்கப்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரம் பாகதுகாப்பு வலயமாக கருதப்படும் எனவும் இந்தப்பகுதிக்குள் எந்தக்கட்சியின் பணிகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார். இதனையும் மீறி குழப்பம் செய்யமுற்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் இதனால் சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் தேர்தல் முடிவுகள் வெளியிட…
-
- 2 replies
- 487 views
-
-
லண்டனின் வடமேற்கு பகுதியிலுள்ள ஹரோவில் இருக்கும் இலங்கையரின் பலசரக்குக் கடையொன்றில் தமிழ் பத்திரிகையொன்றை அங்குள்ள விற்பனை உதவியாளர்கள் ஆவலுடன்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேசமயம், அங்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்திருந்த ஒருவர் தான் வீட்டிற்குச் சென்று இன்டர் நெற்øறைப் பார்க்கப் போவதாகவும் இலங்கையில் இடம்பெறும் விடயங்களை அறிந்து கொள்ளப்போவதாகவும் கூறினார். புலிகள் அழிக்கப்பட்ட இறுதிக் கட்ட யுத்த நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வந்த பிரிட்டனிலுள்ள தமிழர்கள் மீண்டும் தற்போது இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பாக தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். ஜனவரி 26 இல் இடம்பெறும் தேர்தலில் இராணுவ வெற்றியை மூலதனமாக்கிக் கொள்ள தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் முனைந்து…
-
- 5 replies
- 654 views
-
-
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர் – பொன்சேகா நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் ஒன்று திரண்டுள்ளதாக எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் மக்கள் எதிர்பார்த்திருந்த சனநாயகம், வரிச்சுமையிலிருந்து விடுதலை பெறுதல், மற்றும் சுதந்திரம் அகிய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் உள்நாட்டில் சுதந்திரம் மிக்க நாடாக சிறிலங்காவை கட்டியெழுப்பி நாட்டை சிறத்த பாதையில் இட்டுச்செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://meenakam.com/?p=3952
-
- 1 reply
- 585 views
-
-
சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைள் யாவும் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைள் யாவும் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளன. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவுடன் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் நிறைவடையவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெறும் எந்த அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவேண்டாம் எனவும் சிறிலங்காவின் அனைத்து காவற்பணிமனைகளிற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளையில் அதிபர் தேர்தலுக்கான நாள் நெருங்குவதனால் கடந்த சில தினங்களாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினால் கடுமையான பிரச்சாரப்பணிகள் நடைபெற்று வருகின்ற…
-
- 1 reply
- 360 views
-
-
தமிழர் பிரச்சினையை தீர்ப்போம் என கூறுவோர் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன் செவ்வி தமிழர் பிரச்சினைகளை தீர்ப்போம் என்கின்றவர்கள் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகிறார்கள்? தமிழர்களுடன் உடன்பாடு வைக்காமல் எவ்வாறு தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றார்கள்? என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழருடன் உடன்பாடுகள் செய்ததாக கூறி அவை சிங்கள மக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்படுகின்றன. அவ்வாறு உடன்பாடுகள் எவற்றிலும் யாரும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை. ஆனால், தமிழர் பிரச்சினைகளை தீர்ப்போம் என்கின்றவர்கள் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகிறார்கள்? தமிழர்களுடன் உடன்பாடு வைக்காமல் எவ்வாறு தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றார்கள்…
-
- 2 replies
- 707 views
-
-
எதிர்க்கட்சிக்கு செலுத்தும் வாக்கு நாட்டை பிளவுபடுத்தும் – மகிந்த எதிர்க்கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நாட்டை பிளவுபடுத்தவே பயன்படுவதாக அதிபர் மகிந்த ராசபக்ச தெரிவிக்கின்றார். இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் சிலர் கைச்சாத்திட்டுள்ள இரகசிய ஒப்பந்தங்கள் குறித்து நினைக்காமல் நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச்சசெல்ல யாவரும் ஒன்றிணையுமாறு இதன்போது மகிந்த அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தீவிரவாதிகளுடன் கைகோர்த்திருந்த சிலர் நாட்டை பிளவுபடுத்த எத்தனிப்பதாகவும் அதனை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://meenakam.com/?p=3950
-
- 1 reply
- 483 views
-
-
நோர்வேயில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டம் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் மற்றும் அதற்கான தேர்தல் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் ஞாயிறு (24.01.2010) இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒஸ்லோ Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsrd Mathisens vei 27) மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நோர்வே செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இப்பொதுக்கூட்டத்தில், செயற்குழுவிற்கான பன்னாட்டு மதியுரைக்குழுவினால் தமிழர் திருநாளன்று வெளியிடப்பட்ட பரிந்துரை அறிக்கை அறிமுகம் செய்யப்படவுள்ளதோடு, கருத்துப்பரிமாற்றமும் இடம்பெறவுள்ளது. அனைத்துலக சட்டம…
-
- 0 replies
- 570 views
-
-
வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுடைய வாக்குகளே சனாதிபதி யார் என்பதினை தீர்மாணிக்கப்போகின்றது. வேறு எந்த பேச்சுக்கும் இடமளிக்காது, எங்களுடைய சிந்தனையின் அடிப்படையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வடக்கு கிழக்கு தமிழ்பேசும்மக்கள் தமது தெளிவான தீர்ப்பை அளிக்கவேண்டும். அதன் மூலமாக சனாதிபதி மகிந்தராஜபக்ஷவை வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்கள் முழுமையாக நிச்சயமாக நிராகரித்துள்ளார்கள் என்ற முடிவு வெளியாகவேண்டும். அந்த அடிப்படையில் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வவுனியாவில் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கு ஒரு நிலையான கௌரவமான அரசியல் தீர்வு ஏற்படும் பட்சத்…
-
- 0 replies
- 603 views
-
-
ஜனாதிபதித் தேர்தலானது தமிழர் களாகிய நமது வாழ்வில் மட்டு மல்ல எமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட் டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித் தார். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் ஆற்றல் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் கடந்த 4 வருடங்களில் அனுபவித்த துன்பங்கள் எமக்கு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார். திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நேற்று முன்தினம் நடைபெற்ற க…
-
- 10 replies
- 1k views
-
-
நாட்டின் உதாரண புருஷராக ஜனாதிபதி இருக்க வேண்டும் - சரத் பொன்சேகா அறிவுரை மேலிருந்து கீழாக நாட்டை தாம் அபிவிருத்தி நிர்வாகத் தின் கீழ் கொண்டு வரவிருப்பதாகவும்,ஜனாதிபதி-பிரதமர்-அமைச்சரவை என்ற அடிப்படை யில் நாட்டை நிர்மாணிக்க விருப்பதாகவும் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.மதவாச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கை யில், முதலில் ஜனாதிபதி உதாரண புருஷராக இருக்கவேண்டும்.பின்னர் பிரத மரும் உதாரணமாக திகழவேண்டும். அதே போலவே அமைச்சரவை உறுப்பினர்களும் உதாரணமாக இருக்கவேண்டும். அப்போது தான் நாட்டு மக்களுக்கு சிறந்த முன்மாதிரியை தோற்றுவிக்க முடியும். அரசியல் தலையீடுகள் அற்ற நிர்வாகம் மேற்கொள்ள…
-
- 1 reply
- 459 views
-
-
எதிர்க்கட்சிக்கு வழங்கும் வாக்குகள் தேசத்துரோகிகளுக்கான வாக்குகளாகும் - ஜனாதிபதி மகிந்த ஆவேசம் எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் இந்த நாட்டின் தேசத்துரோகி களுக்கு காட்டிக் கொடுக்கும் செயற்பாடு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்¬ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், 27ஆம் திகதியும் ஐக்கிய இலங்கையாகக் காணப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்¬ஷ தெரிவித்துள்ளார். தேசத்தின் பெயரில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப சகலரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமக்கு வாக்களிக்காமல் எதிர்க் கட்சியினருக்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும், தேசத்துரோகிகளுக்கு வழங்கப்படுகின்ற வாக்குகளாகவே அமையும் என அவர் த…
-
- 1 reply
- 507 views
-