ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சரத் பொன்சேகா பல விடயங்களில் தமிழ் கூட்டமைப்பிற்கு உத்தரவாதம் – அவர்களின் ஆதரவு கிடைக்கலாம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத்திட்டங்களும் சமாதான வழிமுறைகளும் அடங்கிய ஆவணம் ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா கையளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கையளிக்கப்பட்ட ஆவணத்தில் 10 அம்சங்கள் உள்ளடக்கப்படடுள்ளன. சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படைகள் மற்றும் ஆயுதக்குழுக்களை தடைசெய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள்குடியேற்றம், மற்றும் புனர்வாழ்வு அளித்தல் போன்றவை இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப…
-
- 4 replies
- 654 views
-
-
புதுக்குடியிருப்பு கிழக்கு, முள்ளைவாய்க்கால் பகுதி்யில் எடுக்கப்பட்ட M16-A2 எறிகுண்டு செலுத்தி எம் தர இயந்திர துப்பாக்கி மற்றும் 125தற்கொலை அங்கிகள் உட்பட அனைத்தையும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தனிப்பட்ட பாஅனைக்கு உபயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் என இலங்கை அரசு கூறியுள்ளது. இது ஓர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே ஆகும். உண்மையில் இந்த வெடிப்பொருட்கள் ஆயுதங்கள் இயக்கத்தில் கொமாண்டோ தாக்குதல், குறுந்தூர தாக்குதல்கள், ஆகியவற்றுக்கு பாவிக்கப்படுவது வழமை. ஆனால் இதனை தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட ஆயுதம் என கூறி தேர்தல் ஆதாயம் பெற மஹிந்த அரசு முற்படுகின்றது. தவிர வவுனியாவில் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆயுத மீட்பு தொடர்பாக கிளிநொச்சி பொலி…
-
- 0 replies
- 1k views
-
-
நாடாளுமன்றக் குழு நேற்றுக்காலை கூடிய பின்னர் கோத்தபாய, பசில் ஆகியோரிடம் இருந்து கூட்டமைப்பினை சந்திப்பதற்கு அழைப்புக்கள் வந்தது. இதே வேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதால் ஆளும் கட்சியுடன் பேசுவதனை சம்பந்தர் வெட்டிவிட்டார் என கூறப்படுகின்றது. எனினும் கோத்தபாய கூட்டமைப்பினரை பயமுறுத்தும் முகமாகவே அழைத்ததாக கூறப்படுகின்றது. இரா. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாகச் சென்று சந்தித்து உரையாடிய பின்னர் சரத் பொன்சேகா சந்திக்க விரும்புவதாகவும் சரத்பொன்சேகா எழுத்து மூலமான உத்தரவாதத்தினை தர தயாராக இருப்பதாகவும் ஆகவே அவரை முடிவு எடுப்பதற்கு முன்பாக சந்திக்கவேண்டும் எனவும் ரணில் கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சரத்பொன…
-
- 0 replies
- 593 views
-
-
ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிப் பல பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் கட்டப்பட்டுள்ள பதாகைகள், நிலை நிறுத்தப்பட்டுள்ள "கட்அவுட்'கள் ஆகியவை இன்னும் அகற்றப்படாத நிலையில், அது விடயம் தொடர்பில் பொலிஸார் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் குறித்து உதவித் தேர்தல் ஆணையாளர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர் என்று கூறப் படுகின்றது. இவ்விடயத்தில் தேர்தல் செயலகத்தின் கண்டிப்பான பணிப்புரைக்குப் பின்னரும் இன்னும் பல பிரதேசங்களில் தேர் தல் சுவரொட்டிகள், பதாகைகள், "கட் அவுட்'கள் என்பன அகற்றப்படாமலே உள் ளன எனவும் அவையாவும் அகற்றப்பட்டுவிட்டன எனப் பொலிஸார் அனுப்பியுள்ள அறிக்கையில் சந்தேகம் தோன்றியுள்ளதாகவும் பிரதேசங்களுக்குப் பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளர்கள், தேர்தல்கள் ஆணையாள…
-
- 0 replies
- 489 views
-
-
மக்களே எமது மொத்த தமிழினமே எதிரியின் திட்டமிட்ட இனவழிப்பு ஆக்கிரமிப்பு போரிற்கு முகங்கொடுத்து நிற்கும் இந்த அவசரகால நிலையில்... எம் தாயக விடுதலைக்கான பயனத்தில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இக்காலகட்டத்தில்... எமது இந்த அவசர நிலையினை உலகெங்கும் எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணியினை ஆற்ற வேண்டிய ஊடகங்களானது அவற்றின் பணியினை செவ்வனே செய்கின்றனவா.... மக்களே இந்த கருத்து கணிப்பின் மூலம் நாம் ஒரு தெளிவான முடிவினை மேற்கொள்ளலாம். எமது குறைநிறைகளை நிவர்த்தி செய்யலாம். அதன் மூலம் எம் தாயகத்தை பலப்படுத்தலாம் அதனால் நாமும் பலமடையலாம். ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம். அதனால் அனைவரும் உங்கள் கருத்தினை தவறாமல் பதிந…
-
- 1 reply
- 731 views
-
-
ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 90 வீதமானவர்கள் தனக்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45fp2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 408 views
-
-
கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45ff2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 493 views
-
-
சிங்கள அரசின் போர் குற்றங்கள் இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூர குற்றங்களின் ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு ஈகஒளி முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவு நாளான 29-01-2010 இல் இனப்படுகொலை மற்றும் ஊடகப் படுகொலைக்கு எதிராக நடைபெறவுள்ள தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாட்டில் " சிங்கள அரசின் போர்குற்றங்கள் " - இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூர குற்றங்களின் ஆவண நூலில் * ஐ.நா மனித உரிமை அமைப்பில் விசாரணை ... * இந்தியாவின் துரோகம்... * 2009 சனவரி முதல் மே 18 வரை தமிழீழப் பகுதிகளில் சிங்கள அரசால் நடத்தப்பட்ட இன அழிப்புப் படுகொலைகளின் ஆவணங்களின் தொகுப்பு... -போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய ஆவண…
-
- 0 replies
- 566 views
-
-
எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அதன் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு - நாளை செவ்வாய்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அரசுத் தலைவர் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்ற திங்கட்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடினர். கூட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான போது இரு முதன்மை வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாகக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உறுப்பினர்களுக்கு விளக்கினார். இதனை அடுத்து - கூட்டமைப்ப…
-
- 6 replies
- 902 views
-
-
. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்,காணாமற்போனோர் குறித்தும் நடவடிக்கை *எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் அவசரகாலச்சட்டம் உடன் நீக்கப்படும். *யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்படும். * காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். * பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும். ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர…
-
- 16 replies
- 1.6k views
-
-
‘உன்னிடம் இரண்டு விடுகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?” ‘நிச்சயமாகக் கோடுப்பேன்” ‘உன்னிடம் இரண்டு கார்கள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக்கொடுப்பாயா?” ‘நிச்சயமாகக் கோடுப்பேன்” ‘உன்னிடம் இரண்டு புது உடைகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?” ‘இல்லை கொடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னிடம் உண்மையிலேயே இரண்டு புது உடைகள் இருக்கின்றன.” இதுதான் இன்றைய 80 வீதமான தமிழர்களின் மனநிலை. போராட்டம்,வாக்கெடுப்பு, தமிழீழம் என்று பெரிதாகக் கதைப்பார்கள். ஆனால் நடைமுறை என்று வந்துவிட்டால்...அப்படிப் பின்நிற்பது பராவாயில்லை. ஏன் இவற்றில் பங்குகொள்ளவில்லை என்று யாராவது கேட்டுவிட்டால் அவர்கள் கூறும் பதில்தான் மிகவும் பயங்கரமானது. தங்கள் போக்கை நியாயப்படுத்துவத…
-
- 0 replies
- 827 views
-
-
யாழ் குடாநாட்டின் கிணறுகளில் இருந்து அண்மைக் காலமாக பெருமளவு இறந்த உடல்கள் தொடர்ந்து எடுக்கப்படும் சம்பவங்கள் அங்கு மிகுந்த அச்ச நிலையை ஏற்படுத்திவிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45552cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 1 reply
- 743 views
-
-
காலத்துயர் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பெருந்துயர் நமது காலத்தின் துயராக இருக்கிறது. அதனை வார்த்தைகளில் விவரித்தல் சாத்தியம் என்று தோன்றவில்லை. தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு ஊழி அது. 1983. 1977, 1958 என்று மட்டுமல்ல அதற்கு முன்னாலும் கூட இலங்கைத் தமிழ் மக்களைக் கொடுந்துயர் சூழ்ந்திருக்கிறது. அந்தத் துயர் களைந்து மீண்டும் மீண்டும் அவர்கள் எழுந்து வந்திருக்கிறார்கள். காலந்தோறும் அவர்களைச் சூழ்ந்த துயர் களைந்த எழுந்து வந்த வரலாற்றை அந்தப் போராட்ட வரலாற்றை காட்சியூடகத்தில் கொண்டு வர விரும்பினோம். இன்னொரு வகையில் சொன்னால் காட்சி ஊடகத்தில் வரலாற்றை பதியவும் பகிரவுமான ஒரு முயற்சி இது. இது பற்றி நீண்ட நாட்களாக நாங்கள் ஆலோசித்து வ…
-
- 1 reply
- 596 views
-
-
இந்தோனேசியாவில் Bintan in the Sumatran Kepulauan Riau province எனும் இடத்தில் 11 இலங்கை தமிழர்களை தாம் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸ்தெரிவித்துள்ளது. மலேசியாவில் இருந்து 100 டொலர்கள் கொடுத்து முகவர் ஊடாக இந்தோனேசியாவுக்கு வந்ததாக இவர்கள் கூறியுள்ளனர். 7 ஆண்கள், இரு பெண்கள், இரு குழந்தைகள் இவர்களுள் அடங்குவர். இவர்கள் படகு மூலம் வேறு நாடுகளுக்கு அகதி அந்தஸ்து கோரி செல்வதற்காக தாம் மலேசியாவில் இருந்து வததாகவும். மலேசியாவில் பலமாதங்களுக்கு மேலாக தாம் இருந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த அகதிகளில் அனைவரும் மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் இருவர் ஐ. நா வின் அகதிகள் அடையாள அட்டை வைத்துள்ளனர். மற்றைய ஏழுபேரும் …
-
- 0 replies
- 528 views
-
-
மாத்தறை மாவட்டம் ராகுல வித்தியாலயத்தில் இருந்து சிங்கள மாணவர்களும் ஆசிரியர்களும் வட பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு நட்பு உலா ஒன்றினை மேற்கொண்டனராம். வடமராட்சி ஹாட்லி கல்லூரி, வல்வை சிதம்பரா கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கே இந்த நட்பு உலா மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இவர்களுடன் ஒரு இலவச மருத்துவ சிகிச்சை குழுவும் வந்து அந்த பிரதேச சிறார்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாம். ஹாட்லி கல்லூரி அதிபர் டி. தெஇவேந்திரராஜா அவர்களினால் சூடான வரவேற்பளிக்கப்பட்டதாகவும். பின்னர் வருகை தந்த மாணவர்கள் ஹாட்லி மாணவர்களுடன் கிறிக்கெற் விளையாடினராம். இந்த போட்டியில் ஹாட்லி கல்லூரி வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் தமிழீழ தேசிய தலைவர் படித்த பாடசாலைகளில் ஒன்றான வல்வை சிதம…
-
- 0 replies
- 939 views
-
-
வடக்கு-கிழக்கு இணைப்பால் எந்த இனத்துக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை இலங்கையின் இந்த நாட்டின் அரசுத் தலைவர் யார் என்பதனை அறிவதற்காக, நிர்ணயிப்பதற்காக இந்நாட்டின் சுமார் 11 மில்லியன் வாக்காளர்கள் தமது வாக்குரிமையை இன்னும் இருபத்திரண்டு நாள் களில் பயன்படுத்த உள்ளனர்.ஒரே அணியில் நின்று உழைத்து வன்னிப்போரை வென்ற ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன் சேகாவும் இன்று எதிர் அணிகளில் நின்று மோதுகின்றார்கள். முன்னர் எப்போதும் இல்லாதவாறு தமிழ் பேசும் மக்களின் வாக்கு களையே இம்முறை புதிய ஜனாதிபதி யார் என்பதை நிர்ணயிக்கப் போகின்றன.இத்தகைய பின்புலத்தினை மனதிற் கொண்டு தமிழ் மக்களின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆன…
-
- 1 reply
- 506 views
-
-
மொத்தமாக 84 பாடசாலைகள் இன்று வன்னிப்பகுதியில் திறப்பு வன்னிப்பகுதியில் கடந்த கால யுத்தம் காரணமாக மூடப்ட்டிருந்த 84 பாடசாலைகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 21 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 24 பாடசாலைகளும், மடுப்பிரதேசத்தில் 5 பாடசாலைகள் உட்பட மொத்தமாக 84 பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்தே இருந்ததாகவும் மேலும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. – மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=1996
-
- 3 replies
- 545 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட தேர்தல் கூட்டத்திற்கு மிகச் சிலரே வருகை தந்தனர். சிவாஜிலிங்கமும் அவருடன் இருந்தார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA455B2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 750 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு இன்றும் எட்டப்படாத நிலையில் கூட்டம் சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை ஆராய்ந்து முடிவினை அறிவிப்பதாக கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்ற நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடினர். கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானபோது இரு பிரதான வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் தொடர்பாக கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் எடுத்துக்கூறியுள்ளார். முதல் கட்ட கலந்துரையாடலில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனினும் மாலை 4 ம…
-
- 1 reply
- 574 views
-
-
இடம்பெயர்ந்து யாழ். மாவட்டத்திலுள்ள மிருசுவில் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மகா வித்தியாலய மாணவன் வேலும் மயிலும் சுதன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைம் பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். வேலும்மயிலும் சுதன், பரீட்சையில் தான் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ""நான் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெறுவேன் என எதிர்பார்த்திருந்தேன். எனினும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றது எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கின்றது. தமிழ், கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களில் "ஏ' சித்தியினையும் வரலாறு பாடத்தில் "பி' சித்தியினையும் பெற்று மா…
-
- 0 replies
- 574 views
-
-
கிளிநொச்சி பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள 600 குடும்பங் களுக்கு இன்று துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின்tt போக்குவரத்து வசதிகளை இலகு படுத்தும் நோக்குடனே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். http://tamilskynews.org
-
- 0 replies
- 576 views
-
-
குளிக்கச் சென்ற இளைஞரை காணவில்லை நேற்று பிற்பகலில் பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவரை காணவில்லையென கல்குடா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து காணாமல் போன இளைஞரைத்தேடும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. காணமல் போனவர் 34 வயது இளைஞர் எனத்தெரிவிக்கபட்டுள்ளது. -- மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=1986
-
- 1 reply
- 605 views
-
-
உயர்நீதிமன்ற உத்தரவின்படி எதிர்க்கட்சிகளி;ன் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா,தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து நேற்று முன்தினம் வெளியேறி விட்டார். எனினும் அது தொடர்பில் அவர் சட்டமா அதிபருக்கு அறிவிக்கவில்லை என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் அவர் உத்தியோகபூர்வமாக தமது வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறியமைக்கான அறிவித்தலை குறித்த தரப்புகளுக்கு அறிவித்த பின்னரே அது தொடர்பாக ஆதனங்கள் மதிப்பீடு செய்யப்படும் என இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இந்த வாசஸ்தலத்தில் இருந்து ஜெனரல் பொன்சேகா வெளியேறியுள்ள நிலையில் அதில் தற்போதைய இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய குடியேறவுள்ளார். எனினும் அது தொடர்பில் அவர் சட்டமா அதிபருக்கு அறிவிக்கவில்லை என இரா…
-
- 0 replies
- 639 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு வட கிழக்கே சாலமன் தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையடுத்து சிறிய சுனாமி அலைகள் உருவாகின. அந் நாட்டு நேரப்படி இன்று காலை 8.48 மணிக்கு ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகள் அளவுக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 9.36 மணிக்கு 7.2 ரிக்டர் அளவுக்கு அதைவிட பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 0.2 மீட்டர் அளவுக்கு சிறிய சுனாமி அலைகள் ஏற்பட்டன. பிஜி உள்பட அருகாமையில் உள்ள சிறிய தீவுகளை இந்த சுனாமி அலைகள் தாக்கின. ஆனால், இதனால் சேதம் ஏதும் இல்லை. கடந்த 2007ம் ஆண்டில் இப்பகுதியில் 8.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் தாக்கி கிஸோ நகர் கடுமையாக பாதிப்படைந்ததும், இதில் 50 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது. மெக்சிகோவில்...: …
-
- 0 replies
- 761 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட தேர்தல் கூட்டத்திற்கு மிகச் சிலரே வருகை தந்தனர். தன்னார்வ வேட்பாளர் சிவாஜிலிங்கமும் அவருடன் மேடையில் இருந்தார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA455B2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 681 views
-