Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பாவனைக்கு உகந்ததல்ல என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு அண்மையில் சிறிலங்கா அரசு வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்த வெள்ளை அரிசி மக்களின் பாவனைக்கு உகந்ததல்லவென பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என சிறிலங்கா அரசு மறுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசித்தட்டுப்பாடடை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாகிஸ்த்தான் நாட்டிலிருந்து 40ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை கொள்வனவு செய்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்த அரிசி எதிர்வரும் வாரங்களில் கட்டம் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் என நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவிக்கின்றது. – மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=2000

  2. சரத்பொன்சேகா எழுத்து மூலமான உத்தரவாதத்தினை இன்று காலை கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தன் அவர்களிடம் கொடுத்துள்ளார். அதில் வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான முடிவு எதுவும் கூறப்படவில்லை. உயர்பாதுகாப்பு வலையம், சிறையில் உள்ளவர்களை விடுவித்தல், நிவாரண நடவடிக்கை ஆகியன தன்னால் செய்ய முடியும் என எழுத்து மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் சம்பந்தன் அவர்கள் ரணிலுக்கு தான் தமது ஆதரவு என கூறியதாக டெய்லி மிரர் கூறியுள்ள போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை மறுத்துள்ளது. முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளது. செல்வம் அடைக்கல நாதன் மற்றும் பல முக்கிய உறுப்பினர்களுடன் தற்போது நேரடி…

    • 0 replies
    • 759 views
  3. யாழ்ப்பாணத்தில் இரண்டு சிறீலங்காப் படையினர் தற்கொலை திகதி: 04.01.2010 // தமிழீழம் யாழ்ப்பாணத்தில் இரண்டு சிறீலங்காப் படையினர் தற்கொலை செய்துள்ளார்கள். யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் தமிழ் மக்கள் மீதும் சிங்கள மக்கள் மீதும் சமூக சீர்கேடுகளில் ஈடுபட்டுவருகின்றார்கள். இவ்வாறு அங்குள்ள சிறீலங்காப் படையினருக்கும் பெண் சிங்கள படையினருக்கும் இடையில் சமூக சீர்கேட்டு சம்பவங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இன்நிலையில் நேற்று பருத்தித்துறை சிறீலங்காப்படை முகாமில் கடமையாற்றிய உதவி லெப்பரினன் ஒருவர் தன்னை சுட்டு தற்கொலை செய்துள்ளார். சிறீலங்காவின் வெலியத்த பகுதியை சேர்ந்த இவர் விடுப்பு கேட்டு படைஅதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் விடுப்புக்கு அனு…

    • 0 replies
    • 516 views
  4. அம்பாறை விநாயகபுரத்தில் கைக்குண்டு மீட்பு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் விநாயகபுரம் சிறிலங்கா படைச் சோதனைச் சாவடிக்கு அருகில் நேற்று பிற்பகல் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. இதேவேளை, காத்தான்குடி மண்முனைப்பகுதியில் இளைஞர் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகலில் இவர் கைது செய்யப்படுள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணை மேற்கொள்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். — அம்பாறையிலிருந்து மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=1981

    • 1 reply
    • 483 views
  5. த.ம.வி.பு கட்சி தலைவர் பிள்ளையானுடன் ஐக்கிய தேசிய கட்சி இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்குமாறும் அவ்வாறு ஆதரவு கொடுத்தால் தாம் முற்று முழுதான அதிகார பகிர்வுக்கு தாம் தயார் எனவும் ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது. அண்மையில் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் இல் இருந்து பிரிந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்த ஆர். யோகராஜன் ஐக்கிய தேசியகட்சியினருக்கு பிள்ளையான் எதிரணியினருடன் கதைக்க விரும்புவதாக கூறியுள்ளார். இந்த அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகின்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு முஸ்லிம் அரசியல் வாதி ஒருவர் நடுனிலை வட்கிப்பதாக கூறப்படுகின்றது. இந்த பேச்சுவார்த்தை இரு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதலாவது மஹிந்தவின் அஉத்த…

    • 2 replies
    • 740 views
  6. சிறிலங்கா வானூர்தியில் பணிபுரியும் குடிவரவு குடியகல்வு பணியாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர். தமக்கு சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கும் யோசனையினை ஏற்றுக்கொண்ட மஹிந்த அரசு இதுவரை நான்கு வருடங்களாகியும் அதனை செய்யவில்லை என கூறியே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதாக பணியாளர் நல சங்க செயலர் உத்தரட்ட தேரர் கூறியுள்ளார். இதன்படி இன்று இலங்கை வானூர்தி தளத்தில் இருந்து ஒன்றரை மணித்தியாலம் காலதாமதம் ஆகியே பயணிகள் வானூர்திகள் புறப்பட்டன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன். அரசாங்கம் உரிய பதிலை தரும்வரை போராட்டம் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். http://www.eelanatham.net/news/i…

  7. இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வட்டிக்கு கடன் வழங்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊதுகுழல் டக்ளஸ் கூறியுள்ளார். இதுவரை 75 இலட்சம் கொடுத்துள்ளதாக மேலும் பெருமையாக கூறியுள்ளார். யாழ் குடா நாட்டில் உள்ள மக்களின் சேமிப்பு அரச வங்கிகளில் மட்டும் கிட்ட தட்ட 4000 கோடிகள் இது 10 வருடங்களுக்கு முற்பட்ட கணக்கு. அதன் பின்னர் கொழும்பில் உள்ள வங்கிகளில் வடபகுதி தமிழர்களது பணங்கள் பெருமளவு வைப்பில் இடப்பட்டுள்ளன. இது தவிர வன்னியில் இருந்து தடுப்பு முகாமிற்குள் மக்கள் அடைக்கப்பட்டபோது அந்த மக்களால் வைப்பில் இடப்பட்ட பணம் நகைகள் கிட்டதட்ட 400 மில்லியன் ரூபாய்கள் இதனை மத்திய வங்கியே குறிப்பிட்டு இருந்தது. ஆகவே இவ்வளவு தமிழர்களது நிதியினையும் வைத்துக்கொண்டு அதில் வரும் இ…

    • 0 replies
    • 528 views
  8. கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்பதில் ஆராய்வு எதிர்வரும் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது மட்டில் இதுவரையில் முடிவினை அறிவிக்காது தடுமாறி நிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அது சம்பந்தமான இறுதி முடிவினை எடுக்கும் நோக்கில் இன்று கூடி ஆராயவுள்ளனர். இந்த கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விடயம் மட்டில் இரு பிரதான வேட்பாளர்களும் சார்ந்திருக்கும் கட்சிகளுடன் பலசுற்று பேச்சுக்களை கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடாத்தியிருந்தார்கள். இருந்தபோதும் இதுவரையில் கூட்மைப்பினர் யாரை ஆதரிப்பது என்ற …

  9. ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பில் உள்ள கட்டுவத்த பகுதி அலுவலகம் இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஆயுத குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களை ஆயுதம் தரித்த குழு நடாத்தியுள்ளதாகவும் , தாக்குதலின் போது குண்டு தாக்குதல், துப்பாக்கி பிரயோகம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் இறுதியில் அலுவகலம் தீவைத்து தீக்கிரையாக்கபட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட செயலாளர் ரோஸ் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட பொலிசார் நான்கு வெற்று தோட்டாவையும், இரு வெடிக்காத குண்டுகளையும் கண்டெடுத்துள்ளனர். இது அரச ஆதரவு ஆயுத குழுக்களின் செயற்பாடாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.http://www…

    • 0 replies
    • 442 views
  10. பொன்சேகா வந்தால் இராணுவ ஆட்சியா? மறுக்கின்றார் – ஹக்கிம் சகல மக்களையும் ஜனநாயக வழிக்கு அழைத்துச் செல்லும் சுமையை ஜெனரல் சரத் பொன்சேக சுமந்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில், திறந்த வெளிகளிலே ஒழுங்கான மலசல கூட வசதிகள் இல்லாமல், ஒழுங்கான வைத்திய வசதிகள் இல்லாது ஒழுங்கான பாடசாலைகள் போன்ற எந்தவிதமான ஏற்பாடுகளுமில்லாமல் ஆடு மாடுகள் போல அவர்கள் விரட்டியடைக்கப்பட்டிருக்கின்றார்கள். திறந்த வெளிச் சிறைகளிலிருந்து கொண்டு நாளுக்கு நாள் …

  11. கிளிநொச்சியில் நாளை 5 பாடசாலைகள் திறப்பு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 5 பாடசாலைகளை நாளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வடமாகாண ஆளுநரால் நாளை இந்தப்பாடசாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளன. 2010ம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கிளிநொச்சி கரைச்சி கல்வி கோட்டத்துக்குரிய ஐந்து பாடசாலைகளே நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி இந்து வித்தியாலயம், புனித பாத்திமா றோமன் கத்திதோலிக்க பாடசாலை, கனகபுரம் மகா வித்தியாலயம், மற்றும் புனித திரேச வித்தியாலயம் உள்ளிட்ட 5 பாடசாலைகள் இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளன. இதற்கான பிரதான நிகழ்வு நாளை காலை கிளிநொச்சி இந்து வித…

    • 4 replies
    • 905 views
  12. தொலைகாட்சி விவாதம் ஒன்றிற்கு சரத் பொன்சேகா தயாரா என்று அரச தரப்பு அழைப்பு விடுத்தது. இந்த விவாதம் ஆயுத ஊழல் சம்பந்தமானது. இதற்கு எதிரணி சரத்பொன்சேகா தயார் என நேற்று கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் இன்று மஹிந்த தரப்பு ஜனாதிபதிக்கு நேரம் இல்லை என மறுத்துள்ளது. ஆயுத கொள்வனவு தொடர்பில் சரத் பொன்சேகாதான் தவறு இழைத்ததாகவும் அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் அரச தரப்பு சார்பாக விமல் வீரவன்ச சரத்பொன்சேகாவுக்கு சவால் விட்டார். இதற்கு சரத் பொன்சேகா விமல் வீரவன்சவுக்கு அது தொடர்பான அறிவு இல்லை என்றும் தான் ஒரு தேசத்தின் தளபதி தான் வாதிட வேண்டும் என்றால் முப்படைகளின் தளபதியுடந்தான் வாதிடவேண்டும் என மஹிந்தவை நேரடி விவாதத்திற்கு அழைத்தார்பொன்சேகா. ஆனால் மஹிந்த மறுத்துவிட…

  13. நேற்று பருத்தித்துறை இராணுவ முகாமில் இராணுவ லெப்டினன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தனது துப்பாக்கியால் தானே சுட்டு தற்கொலை செய்ததாகவும் அவர் சுடும் போது சுய நினைவிலேயே இருந்ததாகவும் லூறப்படுகின்றது. பெலியவத்தை பகுதியினை சேர்ந்த இந்த லெப்ரினண்ட் தர அதிகாரியின் மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இதே வேளை கோப்ரல் தர இராணுவ சிப்பாய் ஒருவர் பலாலி இராணுவ முகாமில் தற்கொலை செய்துள்ளார். மலகூடத்திற்குள் சென்ற இவர் தனது துப்பாக்கியால் தானே வெடிக்க வைத்து தற்கொலை செய்ததாக இராணுவ பொலிசார் கூறியுள்ளனர். இவரது மரணம் தொடர்பாகவும் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • 0 replies
    • 858 views
  14. யாழ். தீவகப்பகுதியில் மீன் பிடித்தடை நீக்கம் யாழ். தீவகப்பகுதியில் இதுகாலவரையில் மீன் பிடிப்பதற்கு இருந்து வந்த தடை நேற்று முதல் தேர்தலில் மக்களின் ஓட்டுக்களை கவருவதற்காக நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பு ஒன்றையடுத்து தேர்தலில் யாழ் மக்களின் கவருவதற்க்காக இது அமுலுக்கு வந்துள்ளது. இதன் பிரகாரம் தீவகப்பகுதி மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதற்கும் நேற்று முதல் அனுமதிக்ப்பட்பட்டுள்ளதோடு வீதிப் போக்குவரத்திலும் காணப்பட்ட தடைகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலினையொட்டி தமிழ் மக்கள் மீது திடீர…

  15. இன்று மீண்டும் பாடசாலைகள் அரம்பம் 2010ம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பூர்த்தியானதனையடுத்து டிசம்பர் மாதம் 9ம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று துவங்குகின்றன. முதலாம் ஆண்டு தவணைக்கான விடுமுறை ஏப்றல் 9ம் திகதி வழங்கப்பட்டு மீண்டும் ஏப்றல் 22ம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. – மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=1966

  16. போரினால் இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்வுப் பணிகள் வெற்றியாய் அமைந்தாலும் தோல்வியில் முடிந்தாலும் - இத்தகைய பிரச்சினையால் அவதியுறும் நாடுகளுக்கு சிறிலங்கா எடுத்துக்காட்டாக அமையும் என ஒரு அமெரிக்க ஆய்வு கருதுகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45VT2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 342 views
  17. "உதயன்", "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன..எம்.கே.சிவாஜிலிங்கம்2009-12-25 21:04:40 "உதயன்", "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்ற தமது புதிய கண்டுபிடிப்பை லண்டனில் போய் வெளியிட்டிருக்கின்றார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் "உதயன்", "சுடர் ஒளி" ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்ற தமது புதிய கண்டுபிடிப்பை லண்டனில் போய் வெளியிட்டிருக்கின்றார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் எம்.பி. இந்…

  18. பிள்ளை இல்லாமல் தாயா? 03/01/2010 -------------------------------------------------------------------------------- புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ தனியரசுக்கான தேர்தல்கள் சிறீலங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் அதிர்ச்சிகொள்ள வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 1976ம் ஆண்டு தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டுவந்த தனித் தமிழீழம் என்ற முடிவை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை மறைத்து, விடுதலைப் புலிகளே இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் பிரிவினையைக் கோரினார்கள் என்றரீதியில் பிரச்சாரங்கள் சிறீலங்காவினாலும், அதன்சார்பு சக்திகளினாலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பொய…

    • 0 replies
    • 484 views
  19. போரினால் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் பணிகள் வெற்றியாய் அமைந்தாலும், அல்லது தோல்வியில் முடிந்தாலும் - இத்தகைய பிரச்சினையால் அவதிப்படும் நாடுகளுக்கு சிறிலங்கா முன்னுதாரணமாக அமையும் என ஒரு அமெரிக்க ஆய்வு கருதுகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45VT2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 431 views
  20. புதிய அரசியல் மாற்றங்களுக்கான எதிர்பார்ப்புகளுடன் உதயமாகியுள்ள புத்தாண்டு – வேல்ஸிலிருந்து அருஷ் புதிய நம்பிக்கைகளுடன் புதுவருடம் பிறந் துள்ளது, தாம் இழந்தவற்றை மீண்டும் பெற்று சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்ற ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கைகளுடன் இந்த வருடத்தை நாம் வரவேற்கத் தயாராகின் றோம். இலங்கையின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக பலமான எதிர்பார்ப்புகளும் புதுவருடத்தின் பிறப்புடன் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலே. எதிர்வரும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன் னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் உள்ள போட்டியைத் தான் உலகம் …

  21. சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகா, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதும் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தத் தவறியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45VJ2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

  22. “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ்மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும்- அதற்கு முரணாக இருக்காது. எனவேஇ இந்த விடயம் குறித்துத் தமிழ்மக்கள் வீணாகக் குழப்பமடையவோஇ சஞ்சலப்படவோ தேவையில்லை” என்று அறிக்கை வெளியிடும் அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தாழ்ந்து போயிருக்கிறது. இப்படியொரு அறிக்கையை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் வெளியிட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தல் அவசியம். தமிழ்மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் மீதிருந்த நம்பிக்கைகள் தளர்ந்து வந்த நிலையிலேயே இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு சமாளிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியிருக்கிறார் சம்பந்தன…

  23. நாளை கூட்டமைப்பு கூடுகின்றது. இந்த கூட்டத்தில் பலகருத்துக்கள் இருந்தாலும் நாளைய கூட்டத்தில் இரு பிரதான கருத்துக்களே வாதிடப்படவுள்ளன. இந்த நிலையில் ரணில் அணிக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நாம் நிம்மதியாக அரசியல் செய்ய முடியும் என்ற கருத்து உட்பட மஹிந்தவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற கருத்தில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமசந்திரன், துரை ரட்னசிங்கம், இமாம், சிவ சக்தி ஆனந்தன், சிறில் ஆகியோர் இடம்பெறுகின்றனர். மஹிந்தவோ சரத் பொன்சேகாவோ ஒப்பீட்டு ரீதியாக நல்லவர்கள் என தமிழ் மக்களிற்கு சிங்கள தலைவர்களை சிபார்சு செய்ய் வேண்டிய தேவை இல்லை. அவசியமும் இல்லை. யாரையுமே நம்பி மக்களுக்கு நாம் சிபார்சு செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கஜ…

  24. தேர்தல் வன்முறைச்சம்பவங்களில் 8பேர் காயம் கொழும்பு கிரிபத்கொடையில் எதிர்கட்சி அரசியல் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஐ.தே.கட்சி மற்றும் ஜே.வி.பி ஆதரவாளர்கள் இன்று முற்பகல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன்போது வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில் நாலப்பிட்டி பகுதியில் இரண்டு பிரதான அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மேலும் 5பேர் காயமடைந்துள்னர். இதில் 3 பெண்களும் அடங்குவதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 6போரை தாம் கைது செய்துள்ளதாகவும் நாவலப்பட்டி சிறிலங்கா க…

  25. இ.தொ.கா.வின் பிளவும் த.தே.கூட்டமைப்பின் முடிவும் – பொன்சேகாவை வலுப்படுத்துமா? -இதயச்சந்திரன் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. கடந்த ஆண்டு, யுத்தம் ஏற்படுத்திய தீராத ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. சிதறுண்டு போன குடும்பங்கள், அங்கங்களை இழந்த மனிதர்கள், மகனைத் தேடியலையும் தாய் தந்தையர், பேரினவாதச் சிறைக் கூடங்களில் முகவரி இழந்து தவிக்கும் இளைஞர்கள் என்று தமிழினம் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளது. வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை. தேர்தல் சலுகையாக, மீன் பிடித் தடை நீக்கமும், பாதை திறப்புக்களும் முன் வைக்கப்படுகின்றன. இயல்பு வாழ்வு திரும்பி விட்டதானதொரு கற்பிதம் உருவாக்கப்படுகின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.