ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இந்தோனேஷியாவின் கரையோரப் பகுதியில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சுமார் 47 இலங்கை அகதிகள் சென்றுள்ளதாக இந்தோனேஷியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ருமேனியா 16 அகதிகளுக்கும், அவுஸ்திரேலியா 31 அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கனடா 15 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net
-
- 0 replies
- 460 views
-
-
பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட புலனாய்பு பிரிவு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட புலனாய்பு பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்கா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் 12 வருடங்கள் கடமையாற்றிய அபயவாத்தன என்பவர் தலைiமியல் இந்த விசேட புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதிக்கு நெருக்கமாக செயல்படுபவர்களை கண்காணிப்பதும் அவர்களின் நடமாட்டங்கள் மற்று…
-
- 0 replies
- 453 views
-
-
மீள்குடியேற்ற நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட ஒரு திகதியில் பூர்த்தி செய்வதாகத் தாம் அறிவிக்கவில்லை என்றும், ஆனால் முடிந்தளவு விரைவாக அதனைப் பூர்த்தி செய்ய கடுமையாக முயற்சிப்பதாகவும் சிறிலங்கா அரசு இன்று தெரிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e24SOJlaccaeoOAd4deKKMMg0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 459 views
-
-
சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சiயாக போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுக கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே சிவாஜிலிங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பரவலான அபிப்பிராயம் எழுந்துள்ளது. இந்தியாவில் வைத்தே தான் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவிப்பினை சிவாஜிலிங்கம் வெளியிட்டமையை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் அவருக்கு தமிழ் மக்களின் அனதாப வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நாடு கடத்தல் நாடாகம் அரங்கே…
-
- 11 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு முன்னணிச் சிங்களவர்களில் எவரை ஆதரிப்பது என்ற விடயத்தில் தமிழ் பேசும் கட்சிகள் தொடர்ந்து பிளவுபட்டு வருகின்றன. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2USOJlaccaeoOAd4deKKMMg0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 0 replies
- 460 views
-
-
சவுக்கால் அடிவாங்குவதா அல்லது இரும்புச் சப்பாத்தால் உதை வாங்குவதா?: பகிரங்க அரசியல் கருத்தரங்கின் உரை! கடந்த 26-12-2009 அன்று யாழ் நகரில் இடம்பெற்ற “ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும்” என்னும் தலைப்பிலான பகிரங்க அரசியல் கருத்தரங்கின் உரை: கடந்த முப்பது வருட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையனாலோ அந்த அதிகாரக் கதிரைக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியினாலோ இந் நாட்டின் உழைக்கும் மக்களுக்கும் குறிப்பாக தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களுக்கும் எவ்வித நன்மைகளோ விமோசனங்களோ கிடைத்ததில்லை. அதற்குப் பதிலாக பொருளாதார நெருக்கடிகளையும் இன ஒடுக்குமுறைகளையும் யுத்தக் கொடுமைகளையும் மட்டுமே அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டியவர்களாயினர். இந்நிலையி…
-
- 0 replies
- 738 views
-
-
2004ஆம் ஆண்டின் ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்காக உலக நாடுகள் சிறிலங்கா அரசிடம் வழங்கிய பெருந்தொகை நிதியுதவி மோசடி செய்யப்பட்டுவிட்டதாக ஊழலுக் எதிரான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2ASOJlaccaeoOAd4deKKMMg0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 0 replies
- 439 views
-
-
சரத்பொன்சோக அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதும் தமிழ் மக்களின் எதிர்கால பிரச்சனைகள் தொடர்பாகவும் இந்தியாவின் வார இதழ் ஒன்றிற்கு அழித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் ஆட்சி அதிகாரம் எனது கைக்கு வந்தால் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களினை அவர்களின் வாழ்விடங்களில் மீள்குடியேற்றம் செய்வேன் என்று உறுதி அளித்துள்ளதுடன், விரைவில் சோனியாகாந்தி உள்ளிட்ட இந்தியாவின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். மகிந்தராஜபக்ச பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார், சிறீலங்காப்படையினர் தொடர்பாக மகிந்த பீதி அடைந்துள்ளார், நாட்டில் ஒர் சர்வ அதிகாரியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார், நாட்டை அவரது பரம்பரையே ஆழவேண்டும் என்…
-
- 0 replies
- 806 views
-
-
தானும் கருணா அவர்களும் இணைந்து பணியாற்றி வருவதாக பிள்ளை யான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெற்றி பெறவேண்டும் என்பதே இருவரதும் ஒரே நோக்கமாகும் எனத் தெரிவித்த முதலமைச்சர் இருவருக்கும் இடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளிவந்துள்ள செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார். இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஜனாதிபதித்தேர்தலில் ஒரே நோக்கத்துக்காக பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத்தெரிவித்த பிள்ளையான் கடந்தகாலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்பாது இணைந்தே செயற்படுவதாகக் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஜனாதிபதி மகிந்தராஜ பஷவுக்குப் பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவு…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் பெற்றோலின் விலை குறைப்பு சிறிலங்காவில் இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 15 ரூபாவால் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீற்றர் ஒக்ரின்-90 ரக பெற்றோலின் புதிய விலை 115 ரூபா எனவும், ஒக்ரின் 95 ரக பெற்றோலின் புதிய விலை 133 ரூபா எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. http://meenakam.com/?p=1187
-
- 0 replies
- 357 views
-
-
சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால் GSP நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எழுத்து மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் மீள வழங்கப்பட வேண்டுமாயின் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென சுட்டிக்காட…
-
- 24 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவு? ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினது நிலைப்பாடுகள் தொடர்பாக குழப்பகரமான சூழல்கள் தொடர்கின்ற நிலையில் அதில் அங்கத்துவம் வகிக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவெடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உயர் மட்ட மகாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற மகாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார். நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பகிஸ்கரிப்…
-
- 9 replies
- 886 views
-
-
ராஜபக்ச குடும்பத்தினரின் பெரும் பணமோசடிகள் குறித்து மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கள் வெளிக்கிளம்பியுள்ளன‐ தொகுப்பும் தமிழாக்கமும் GTN ற்காக சிவபிரான்‐ 28 December 09 08:19 pm (BST) சிங்கள வார இதழ் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியுள்ள ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினரான அநுர குமார திசநாயக்க ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்தச் சொத்துக்களை யார் வாங்கியது? யாரின் பெயரில் வாங்கியது என்று வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அந் நேர்காணலில் கேட்டிருக்கிறார். அவர் கேட்டிருந்தவற்றுள் சில முக்கியமான கேள்விகள் இவை. தெனியாய தோட்டத்தின் சொந்தக்காரர் யார்? அப்பலோ வைத்தியசாலையின் பணிப்பாளர் தற்போது யார்? ஒஸ…
-
- 1 reply
- 935 views
-
-
2004ம் ஆண்டு உலகையே உலுக்கிய ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக நாடுகள் சிறிலங்கா அரசிடம் வழங்கிய பெருந்தொகை நிதியுதவியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஊழலுக்கெதிரான கண்காணிப்பு அமைப்பு (anti-corruption watchdog) தகவல் வெளியிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2ASOJlaccaeoOAd4deKKMMg0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 0 replies
- 454 views
-
-
மஹிந்தவின் மகன் நமல் ராசபக்ஷ தனது தந்தையின் வெற்றிக்காக ரூபா 325 கோடி செலவில் விளம்பரம் செய்து வருகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வியாபாரமோ அல்லது தொழிலோ செய்யாத மஹிந்தவின் மகனுக்கு இந்தளவு பணம் எங்கிருந்து கிடைத்தது என எதிரணிகள் துருவ வெளிக்கிட்டுள்ளனர். இந்த விளம்பரத்தினை நமல் ராசபக்ஷவின் "A Tomorrow for Youth" என்ற அமைப்பின் ஊடாகவே செய்யப்படுகின்றது. இந்த அமைப்பிற்கு போரில் பாதிகப்பட்ட மக்களுக்கு என அரசாங்கத்தினாலும் , வசந்தம் திட்டத்தின் கீழும் பல நூறு கோடி ரூபாய்கள் புவர்வாழ்வு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் விளையாட்டு கழகங்களுக்கு பந்தும் நெற்றும் வாங்கி கொடுத்ததை தவிர வேறெந்த பாரிய திட்டங்களையும் இவர் முன்னெடுகவில்லை என்றும் கூறப்படு…
-
- 0 replies
- 737 views
-
-
அரச நிதி மற்றும் சொத்துக்கள் தேர்தலிற்காக பயன்படுத்தப்படுவதாக சர்வதேச வெளிப்படைத்தன்மைக்கான அமைப்பு கூறியுள்ளது. Transparency International எனும் இந்த அமைப்பின் இலங்கை தலைவர் சட்டத்தரணி ஏ.சி.வெலிமுன அவர்கள் இது தொடர்பாக ஊடகவியலாலர்களுக்கு விளக்கியுள்ளார். தாம் இது தொடர்பாக அறிக்கையொன்றினை ஆதாரபூர்வமாக இந்த மாதம் 31 ம் திகதி வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக முன் நாள் பொலிஸ் அத்தியட்சகர் உபாலி செனிவிரட்ன தலைமையில் நடைபெறுவதாக கூறியுள்ளார் ஜே.சி.வெலிமுன அவர்கள். http://www.eelanatham.net
-
- 0 replies
- 647 views
-
-
ஓசியன் வைக்கிங் கப்பலில் சென்ற 78 பேரில் ஏற்கனவே 15 பேர் கனடா சென்றனர். தற்போது 47 பேர் அவுஸ்ரேலியாவுக்கும் ரோமானியாவிற்கும் செல்கின்றனர். இவர்களில் 16 பேர் ரோமானியாவுக்கும் 31 பேர் அவுஸ்ரேலியாவுக்கும் செல்கின்றனர் என இந்தோனேசிய மேற்கு பிராந்திய சட்ட மற்றும் மனித உரிமை அதிகாரியான வித்ரா குறிப்பிட்டுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 510 views
-
-
ஓசியன் வைக்கிங் கப்பலில் இருந்த 78 அகதிகளுக்கும் அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுப்பதற்கு சம்மதித்தது போன்று லூட் பகுதியில் இருக்கும் அடுத்த 250 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் ஓர் விசேட அணுகு முறையினை செய்ய அவுஸ்ரேலியா முன்வரவேண்டும் என இந்தோனேசிய வெளி நாட்டு அமைச்சர் கேட்டுகொண்டுள்ளார். அவுஸ்ரேலியா ஒரு விசேட திட்டதிற்கு இணங்குமாயின் அதனை நாம் செயற்படுத்த தயாராக உள்ளோம் என இந்தோனேசிய வெளி நாட்டு அமைச்சரும் அதே நேரம் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையமும் கூறியுள்ளன. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 459 views
-
-
வன்னி இறுதிப் போரின் பின்னர், தடுப்பு முகாமில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணைக்கென ஆயுத குழுவினராலும் இராணுவத்தினராலும் பிடித்து செல்லப்பட்டனர். இவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்களில் 738 பேர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் மொகான் பீரீஸ் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்பட உள்ளவர்கள் எவ்வித குற்றச்செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்றும், இதற்கு முன்னரும் இந்த வகையில் நூறு பேர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சொன்னார். தடுப்பு முகாமில் இருந்த போது விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டவர்களில் 700 பேரும் குற்றப்புல னாய்வுத்துறையினால் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களில் 38 பேரும் இவ்வாரம் விடுவிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் கூறினார். கு…
-
- 0 replies
- 520 views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய வந்தவேளை சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று குற்றம்சாட்டப் படுவது குறித்து ஆராயுமாறு, யுத்தக் குற்ற அறிக்கை தொடர்பாக விசாரித்துவரும் குழுவின் கால எல்லை நான்கு மாதம் பிற்போடப்பட்டுள்ளது. முன்னர் டிசம்பர் 31 உடன் முடியும் இந்த கால எல்லை ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவை அனைத்தும் முடிந்த பின்னர் செயற்படுவதற்காகவே இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 471 views
-
-
சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் வழங்கப்படும் ஏற்றுமதி வரிச் சலுகையை [GSP+] தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223BTnBnaccaceoOA4d4deZPZc403022lJOSOd4dedOYldlc0a04m4BZe2e24KKMMgc3a0an5BZB4e
-
- 1 reply
- 556 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்து பாதுகாப்புப் பிரச்சனைகள் தீர்ந்துவிட்ட நிலையில் - சிறிலங்காவில் காலூன்றும் இந்திய நிறுவனங்கள் தற்போது பாரிய முதலீட்டுத் திட்டங்களை பலவேறு துறைகளில் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2SIOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 1 reply
- 670 views
-
-
ஒற்றையாட்சி நிலைப்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – இடதுசாரி முன்னணி ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரெத்தின இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படவேண்டும் என தெரிவித்த அவர், நாட்டின் ஆட்சியாளர்களை இலங்கை மக்களே தேர்ந்தெடுக்கவேண்டும் எனவும் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதில் தலையிட அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்த அதிபர் தேர்தல் வேட்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரெத்தின அதிபர் தேர்தலில் போட்டியிடும்…
-
- 0 replies
- 493 views
-
-
நாட்டிற்கு சிறந்த தலைவர் மகிந்தவாம் – கருணா புகழாரம் நாட்டிற்கு சிறந்ததோர் தலைவர் இருக்கும் போது இன்னுமொருவரை தேடவேண்டிய அவசியம் சிறிலங்கா மக்களுக்கு இல்லையென துரோகி கருணா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 4 வருட காலத்தில் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்றதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கிழக்கில் வாழும் மூவின மக்களும் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்த கருணா எதிர்வரும் அதிபர் தேர்தலின் போது கிழக்கு மக்கள் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கே வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்த…
-
- 0 replies
- 670 views
-
-
கல்வி அமைச்சில் இழைக்கப்பட்ட அநீதிகள் - சச்சிதானந்தன் விளக்கம் by வீரகேசரி இணையம் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சு அக்கறையின்றி செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு செயற்றிட்டத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளார். தமிழ்க் கல்விக்கு வழங்கப்படும் முன்னுரிமையின் அடிப்படையிலேயே தாம் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை கூற முடியும் என பிரதியமைச்சர் சச்சிதானந்தன் நேற்று அறிவித்திருந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக கடமையாற்றும் பிரதியமைச்சர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, வடக்கு, கிழ…
-
- 2 replies
- 696 views
-