Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்தை பிணையில் விடுவிப்பதில் தமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று சிறிலங்கா சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து திசநாயகம் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையில் திசநாயகத்திற்கு பிணை வழங்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2006 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 2007 ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு - கிழக்கில் மாத ஏடு ஒன்றை வெளியிட்டது, அச்சிட்டது, கட்டுரைகளைச் செப்பனிட்டது ஆகிய மூன்று குற்றச்சாட்டு…

    • 0 replies
    • 354 views
  2. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 150 மில்லியன் டொலர் அவசர கடனுதவியைத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (Asian Development Bank) சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்த வேண்டுகோளை ஆசிய அபிவிருத்தி வங்கி சாதகமாக அணுகுவதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் றிச்சர்ட் வோக்ஸ் ((Richard Vokes), போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு கடனுதவி வழங்குவது பற்றி ஆய்வு செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராகவே இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை விட தேவை அதிகமாக இருந்தால், வடக்கில் மேற்கொள்ளப்…

    • 0 replies
    • 389 views
  3. இரகசிய தகவல் ஒன்று கிடைக்கபெற்றதனை தொடர்ந்து கடந்த வாரம் கட்டு நாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளி நாடு ஒன்றிற்கு செல்லவிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண புலனாய்வு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரில் ஒருவர் ஆள் மாறாட்ட அடையாள அட்டை வைத்திருந்ததாகவும் இந்த இருவரும் வவுனியா முகாமில் இருந்து வெளி நாடு ஒன்றிற்கு தப்பி செல்ல முற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த இருவரினயும் விசாரித்ததன் மூலம் வவுனியாவில் ஒரு வீட்டில் இருந்து 10 கிளைமோர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் மேல்மாகாண பொலிசார். http://www.eelanatham.net/news/important

    • 0 replies
    • 1.1k views
  4. ஜனாதிபதி தேர்தல் காலம் முடியும் வரை நாடு பூராக திடீர் வீதி தடுப்புக்கள், சோதனைகள், நேற்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. 40 பொலிஸ் பிரிவுகளிலும் பகல் இரவு ரோந்து பணிகள் ஆகியனவும் இடம்பெறும் எனவும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான விசேட பாதுகாப்பு திட்டத்தின் கீழ இந்த பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார் பொலிஸ்மா அதிபர். இதுவரை 76 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் ஒரு கொலை சம்பவமும் அடங்கும் எனவும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. http://www.eelanatham.net/news/important

  5. கொழும்பிற்குச் செல்லும் தமிழர்கள் தங்களை பொலிஸ்நிலையங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இலங்கை பொலிஸ் தலைமையக பேச்சாளர் மடவக்க தெரிவித்துள்ளார். ஆனால் வெளினாடுகளில் இருந்து வரும் தமிழர்கள் 30 நாட்களுக்கு மேல் கொழும்பில் தங்கி இருப்பின் அவர்கள் பதிவு செய்யவேண்டும் என பொலிஸ் பேச்சாளர் மடவக்க கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலிருந்து கொழும்பிற்கு செல்லும் தமிழர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.வெளியிடங்களிலிருந்து கொழும்பு செல்லும் தமிழர்கள் காவல் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென இதுவரை காலமும் இருந்த நடைமுறை தளர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.eelanat…

  6. இந்தோனேசிய கடற்பகுதியில் கடந்த மூன்று மாதமாக தரித்து நிற்கும் ஓசியன் வைக்கிங் கப்பலில் 255 தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களினுள் மூவர் முன்நாள் புலிகள் என அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை தூதர் வலகம்பாய தெரிவித்துள்ளார். புகைப்பட ஒப்பீட்டு உறவை வைத்தே உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார் வலகம்பாய. ஆனால் இது தொடர்பாக ஆசி வெளியுறவு பேச்சாளர் கருத்து கூற மறுத்துள்ளார். இதே வேளை கப்பலில் தங்கி இருக்கும் அகதிகளுக்கான சட்டவாளர் இயன் ரிந்தோல் அவர்கள் இலங்கை அரசின் இந்த கூற்றை மறுத்துள்ளார். இலங்கை அரசு சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்யாது எழுந்த மாத்திரத்தில் இவ்வாறு கூறமுடியாது என்றும் அதே நேரம் இவ்வாறு கூறுவதன் மூலம் இலங்கை அரசு எதனை சாதிக்கபோகின்றது எனவும் கேள்வி எழுப்ப…

  7. 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க ஆட்சேபனை எதுவுமில்லை என்று சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து திஸ்ஸநாயகம் மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததை அடுத்து, தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்பட்ட திஸ்ஸ நாயகத்திற்காக அனைத்துலக ரீதியாக ஆதரவு எழுந்தது அத்துடன் பராக் ஒபாமா கூட தனிப்பட கடிதம் ஒன்றினை மஹிந்தவுக்கு வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important

  8. அமெரிக்க செனற் வெளியறவு குழுவின் அண்மைய அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதன் பேச்சாளர், அந்த அறிக்கை இனங்களுக்கு இடையில் பக்கச் சார்பு பார்க்கவில்லை; இனத்தின் அடிப்படையில் அதன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2UKOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB22022m4BZ4e

  9. சிறீ லங்கா படையின் முக்கிய தளபதிகள் வெளிநாடு சென்றால் அங்கு கைது செய்யப்படும் ஆபத்து காணப்படுவதாக சிறிலங்கா சட்ட பேராசிரியரும் அமைச்சருமான பீரிஸ் கூறியுள்ளார். http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=23_12_2009_001_004&mode=1

    • 0 replies
    • 807 views
  10. யுத்தவெற்றியை பங்கிட்டு கொள்வது யார்? : டைம்ஸ் திகதி: 22.12.2009 // தமிழீழம் யுத்தத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றியை பங்கிட்டுக் கொள்வதில், யார் முன்னணியில் திகழ்வார் என்பதே தற்போதைய கேள்வியாக காணப்படுவதாக டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாகவும் மாற்றும் பொருட்டே முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளதாக டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், யுத்தம் வெற்றிக்காணப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியின் நிழற்படங்கள் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டு வந்தமையே…

  11. புலிகளின் தலைவர்கள் சிலர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயன்ற போது சிறிலங்காப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக அந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரி விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று ‘இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வி எழுப்பி உள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2IAOJlaccaeoOAd4deKKMMC0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

    • 2 replies
    • 887 views
  12. இலண்டன் குயின் மேரீஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழன் (17.12.09) இனப்படுகொலைக் கெதிரான வாக்குக் கணிப்பு ஒன்று இடம் பெற்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் மாணவர் குழுவும் (Amnesty International Student Groups) தமிழர் இனப்படுகொலைக் கெதிரான மாணவர் அமைப்பும் SAGT (Student Against Genocide of Tamil) இணைந்து இலண்டன் குயின் மேரிஸ் பல்கலைக்கழக அனைத்து மாணவர் அமைப்பின் ஆதரவுடன் கடந்த 17 ஆம் திகதி சில கோரிக்கைகளின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்கள். அதேவேளை மாணவர் சமூகத்தினதும், பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் வாக்குறுதிகளுக்கு அமைய கையெழுத்துப் போராட்டமும் நடைபெற்றது. அதன் அடிப்படையிலேயே கருத்துக் கணிப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 1…

    • 0 replies
    • 602 views
  13. சந்திரிகா காலத்திலேயே இராணுவம் அதி நவீனமயப்படுத்தப்பட்டது. கனரக பீரங்கிகள், டாங்கிகள், நவீன சாதனங்கள் உடபட அனைத்தும் சந்திரிகா ஆட்சியிலேயே கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால் அந்த காலத்தில் பிரபாகரனை நெருங்க முடியவில்லை மாங்குளம், ஆனையிறவு ஏன் வன்னியினை கூட பிரபாகரனிடம் இளந்தோம். இதற்கு காரணம் அன்று இராணுவ தலைமை செயல்திறன் அற்று இருந்தது. இவ்வாறு கூறியுள்ளார் சரத் பொன்சேகா நேற்று அனுராதபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆனால் எனது படைத்தலைமை காலத்தில் சந்திரிகா காலத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட படைத்துறையினரை வைத்து பிரபாகரனை தோற்கடித்தேன். ஆகவே மஹிந்த தானே போரினை வென்றேன் என்று கூறுவதோ அல்லது் கோத்தபயா தானே வெற்றிக்கு வழிவகுத்த…

    • 2 replies
    • 1.1k views
  14. கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை - "தமிழீழமே தீர்வு" என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு திகதி: 20.12.2009 // தமிழீழம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, நேற்று 19-12-2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக ‘ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக ‘இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன. இதன் பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ‘ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்ப…

  15. ஈழத் தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசை ‘இனப் படுகொலை’ அரசாக அறிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 'மே 17 இயக்கம்' கோரிக்கை விடுத்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e24KOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

    • 0 replies
    • 657 views
  16. கோப்பன்ஹேகன் பருவநிலை மாநாட்டில், முள்ளிவாய்க்காலில், இலஙகை இராணுவத்தினால் ஏற்பட்ட மனித பேரழிவும் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றிய 13 நாட்கள் புகைப்படக் கண்காட்சியில் உலகம் முழவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு தங்களது Global Warming Awareness பிரச்சாரத்தினூடே, தற்போது இலங்கையில் சிங்களர்களால் சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரான நிலையில், அப்பாவித் தமிழ் மக்களை பலமாதங்களாக, முள்வேளிக்குள் தடுத்து வைத்திருப்பதையும் மற்றும் கடந்த மே மாதம் முள்ளிளவாய்க்கால் பகுதியில் 50,000 மக்கள் சிங்கள இராணுவத்தினால் கொன்றுக் குவிக்கப்பட்டதை எதிர்த்து தாங்கள் செல்லும் நாடுகளிலெல்லாம் குரல் எழுப்பி வருகின்றனர். அதற்கு காரணமான ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க உலகம…

  17. நீலப்படையணியினர் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்சே பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் சமல் ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவராவார். இந்த நிலையில், இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பும் அதன் இணை அமைப்பான நீலப்படையணியின் தலைவரான நாமல் ராஜபக்சே நேற்று முன்தினம் தங்காலையில் விசேட கூட்டமொன்றை நடத்தியதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தன்வசப்படுத்தியுள்ளார். நாமல் ராஜபக்சேவின் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்சேவின் ஆசீர்வாதமும் கிடைத்திருப்பதாக …

    • 0 replies
    • 1.3k views
  18. இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்செகாவின் உள்ளக தேர்தல் பிரச்சார அலுவலரான ஓய்வுபெற்ற கப்டன் தர இராணுவ அதிகாரி அரச ஆதரவு குழுக்களால் கடத்தப்பட்டுள்ளதாக சரத்பொன்சேகா முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு நாட்களாக அவரை கானவிlல்லை என்றும் அவர் கடச்த்தப்பட்டுள்ளதாக தகவல்கிடத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளரிடம் நேரடியாக சென்று இன்று முறையிட்டுள்ளார். அத்துடன் பத்திரிகையாளர்களிடம் பேசிய பொன்சேகா அரசாங்க தரப்பு தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே நேரம் சரத்பொன்செகா தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக அம்பலாங்கொடவிற்கு செல்லு வழியில் தங்கி இருந்ததாக கூறப்படும் அவரது ஆதரவாளர் வீட்டில் விசேட அதிரடிபொலிஸ்படையினர் தேடுதல் செய்துள்ளனர். நீதிமன்ற அனும…

  19. தான் ஆட்சிக்கு வந்த போது அரச உயர்பதவிகளில் நாட்டுக்கு என்றும் விசுவாசமாக உழைக்க கூடியவர்களையே நியமித்ததாகவும் ஆனால் அதில் ஒருசிலர் நாட்டை காட்டிகொடுப்பவர்களாக மாறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் மஹிந்த. ஆனால் யார் அந்த ஒரு சிலர் என்பதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார் மஹிந்த முன் நாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவினையே இவர் மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் சிலரும் அதில் அடங்குவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்சார் அறிஞர்களிற்கான 29 வது பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் மஹிந்த தமது உரையில் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிசலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அதனை கவனமாக பரிசீல…

    • 0 replies
    • 1.6k views
  20. அமெரிக்க செனெட்டர் ஜோன் கெரியினால் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை - அமெரிக்க தொடர்பான உறவுகள் பற்றிய கொள்கை ஆலோசனைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பில் பொஸ்டன் வாழ் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர். இலங்கை ஒரு நட்பு நாடாக எதிர்காலத்தில் அணுகுவது என்றும், உதவித்திட்டங்களுக்கு வடக்கு கிழக்கு மக்களுக்கு முன் உரிமை அழிக்கதேவை இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது தொடர்பிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/news/important

  21. இலங்கையில் வன்னிப் போரின் பயங்கரங்களில் இருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்;து வைக்கப்பட்டிருந்த போது இலங்கைப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என்று அங்கிருந்த நிலைமைகளை வெளிப்படுத்துகிறார் பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர். வாணி குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக மெனிக் முகாம் என்ற இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக் கணக்காக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப் …

    • 3 replies
    • 1.2k views
  22. சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்போது, வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 2 இலட்சத்து 66 ஆயிரத்து 975 வாக்களார்களில் 42 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc2QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYll320aeK44B5cee20mKMM043aa4Z5BBB0e

  23. கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியில் தொடரூந்து சேவையை மேம்படுத்துவதற்காகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்காகவும் 425 மில்லியன் டொலர் நிதி உதவியை சிறிலங்காவுக்கு வழங்க உள்ளது இந்தியா. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2KAOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB22022m4BZ4e

  24. சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவின் நலன்களுக்காகச் செயற்படும் அதேவேளையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவின் நலன்களுக்காகச் செயற்படுவதாக ஜே.வி.பி. கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2AAOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB22022m4BZ4e

    • 2 replies
    • 553 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.