Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு படகு வடக்கு அவுஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள தீவொன்றினருகே வைத்து அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைப்பற்றிப்பட்டுள்ளது. 41 பேருடன் வந்து கொண்டிருந்த இந்தப் படகு அஷ்மோர் தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் அறிவிக்கப்படாத போதிலும் இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. http://www.tamilstar.org

  2. ஒரு இலட்சத்திற்கு‌ம் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார் எ‌ன்று பழ. நெடுமாற‌ன் கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர். இதுகு‌றி‌த்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ. நெடுமாற‌ன் இ‌ன்று ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு : ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீது மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மை‌யி‌ல்லாத கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்களை‌க் கூ‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌நீ‌ண்ட அ‌றி‌க்கை ஒ‌ன்‌றினை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர். 1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பி…

  3. வடபகுதியின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக வெளிநாடுகள் அன்பளிப்புச் செய்த பெக்கோ இயந்திரங்கள் உள்ளிட்ட இயந்திரக் கருவிகள் பெருமளவில் பசில் ராஜபக்சவினால் கம்பஹா மாவட்டத்திலுள்ள அவருக்கு நெருக்கமான தொகுதி அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற இந்த இயந்திரங்கள் கம்பஹா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக மகநெகும திட்டத்தின் பங்களிப்பும் வழங்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். பசில் ராஜபக்சவிற்கு நெருக்கமான தொகுதி அமைப்பாளர்களுக்கு மாத்திரமே இந்த இயந்திரங்களும், மகநெ…

  4. பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் - வைகோநேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசினார். இந்தியாவின் துரோகத்தை அம்பலப் படுத்தும் ஆவணமாக இந்நூல் வெளிவந்திருப்பதை சுட்டிக் காட்டியும், அரசியல் தளத்தில் ஈழ விடுதலையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் கழகப் பொதுச்செயலாளர் பேசினார். நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப் படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது. …

    • 0 replies
    • 1.7k views
  5. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வடக்கு தெற்கு வேலைத்திட்டத்தினை சமாதான பேரவையும் பொஸ்ரே உள்ளுர் அரசசார்பற்ற அமைப்பும் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கட்டவேலைத்திட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இராணுவ வெற்றியினை வைத்துக்கொண்டு சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. 'யுத்தம் நடைபெற்றமைக்கான காரணத்தை அறிந்து அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதே தேசிய சமாதான பேரவையின் நிலைப்பாடாகும்' என வவுனியாவில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய பேரவையின் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்தனர். 'போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் வசிக்கும் மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவுவது எங்கள் அனைவரின் கடமையுமாகும். மனிதாபிமான நிலையிலிருந்து…

    • 0 replies
    • 438 views
  6. ”பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!” – போட்டுத் தாக்கத் தயாராகும் ஃபொன்சேகா கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார். போரின்போது பிடிபட்ட விடுதலைப் புலிகளையும், காயம்பட்ட மக்களையும் செம்மணி என்கிற இடத்தில் உயிரோடு அள்ளிப்போட்டு புதைத்து, அப்போதே ஆவேசக் குற்றச்சாட்டில் சிக்கினார். பெரிய அளவில் குழி தோண்டி, 600-க்கும் மேற்பட்டோரைஅதற்குள் தள்ளி உயிரோடு புதை…

  7. புதிய 1000 ரூபா நாணயத்தாள் நேற்று முதல் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழிபிறந்துள்ளதை நினைவுகூரும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை நேற்று வெளியிட்டு வைத்தது. மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் புதிய நாணயத்தாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 1998ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயத்தாள் நேற்று முதல் தேசிய ரீதியில் புழக்கத்திற்கு விடப்பட்டது. …

  8. தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிவரை தன் ஆதரவாளர்களுடனேயே இருந்தார். தனது ஆதரவாளர்களை விட்டுச் செல்ல அவர் எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால், ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆபத்துவந்தவுடன் இந்தியா ஊடாக லண்டனுக்குத் தப்பிச் சென்றார். தனது ஆதவராளர்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை என்று பேசியுள்ளார். ttp://tamilseithekal.blogspot.com…

    • 0 replies
    • 1.5k views
  9. ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் அதனை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று முன்னிரவு வெளியான தகவல்கள் தெரிவித்தன. மூத்த அமைச்சர்கள், அரச பங்காளிக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்களுடன் நேற்று சந்திப்பு நடந்தது இந்த சந்திப்பிலேயே இவ்வாறு கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்று 18 ஆம் திகதி தமது 64 ஆவது பிறந்த தினத்தில் அல்லது நாளை ஜனாதிபதி தமது அறிவிப்பைச் செய்வார் என்றும் அரச வட்டாரங்களால் ஊகம் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, தேர்தல் பிரசார வேலைகளை இன்று புதன்கிழமை தொடக்கம் ஆரம்பிக்குமாறு ஸ்ரீ.ல.சு.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடனும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் நடத்திய கூட்டங்களில் ஜனாதிபதி யோ…

  10. தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறியுள்ள வன்னிப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ள இவர்கள், மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும் கலந்துகொள்வார்கள். 16ம்திகதி திங்கள்கிழமை இவர்களுடைய விஜயம் இடம்பெறும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த விஜயத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் வழியாக செல்லும் இவர்கள் ஏ-9 வீதியால் திரும்புவார்கள். Posted on 14 Nov 2009 by EelamTimes

    • 29 replies
    • 2.3k views
  11. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று முதல் தேவையில்லையென யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப்பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்.அரச அதிபர் அனுப்பிய செய்திக் குறிப்பில், "இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த 'கிளியரன்ஸ்' நடைமுறை இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடி…

  12. பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம் – விகடன் தமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த “பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமேலம்” கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக… இலங்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து துல்லியமாக அளித்து வரும் ஜூ.வி., ‘அதிபருக்கும் தளபதிக்குமான வெ(ற்)றிக் கூட்டணியில் விரிசல் விழுகிறது என்பதையும் முதன்முதலில் மிகவிரிவாகச் சொன்னது! கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற அலங்காரப் பதவியைக் கொடுத்து தன்னை அவமானப்படுத்தும் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தன் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் சரத் ஃபொன்சேகா குதிக்கப் போகிறார் என்றும் அடித்துச் சொன்னது ஜூ.வி.! அதிபர் மற்றும் தளபதியின் மனைவியர் தங்களுக்குள் இருந்த நட்பைப் பயன்படுத்தி கடைசியாக சில முயற்சிகள் செய்ய… அது…

  13. புதன்கிழமை, 18, நவம்பர் 2009 (14:57 IST) இலங்கை முகாம்களில் ஒரு மாதத்திற்குள் 41 குழந்தைகள் உயிரிழப்பு! வவுனியா முகாம்களில் சிறந்த சுகாதார வசதிகளில்லாத நிலையினால், கடந்த மாதத்திற்குள் 41 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மகப்பேறுக்கான சுகாதர வசதிகள் இல்லாத நிலை இன்னமும் தொடர்வதுடன், போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் முதியோர்கள் பலரும் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்கள் வவுனியா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்படிருந்த நிலையில், உரிமை கோரப்படாத உடல்கள் அரசாங்கத்தின் செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நக்கீரன்

  14. அகரவேல், சென்னை 18/11/2009, 05:05 எதிர்வரும் 27ம் நாள் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை ஏற்றுவீர் – பழ.நெடுமாறன் ஈழத்தில் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை எதிர்வரும் 27ம் நாள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று…

  15. இலங்கையின் கிழக்குப் பகுதியில் அரசு ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டம் நிறுத்தப்படவில்லையானால், அது மற்றொரு ஆயுதக் கிளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விஷயத்தை சிறிலங்கா அரசு கையாளும் விதம் எனக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் முகாம்களில் இருந்து அப்படியே அள்ளிச் செல்லும் மக்களை முறையான அடிப்படை வசதிகள் எதனையும் வழங்காது அங்காங்கே உதறித் தள்ளி விடுகிறது. அவர்களுக்கு வீடுகளும் கிடையாது, வருமானத்திற்கான வழிகளும் கிடையாது. விவசாயத்…

  16. தடுப்பு முகாம்களில் தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு "இரசிது" வழங்க வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும். போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு முகாம் சுற்று பயணத்தினை முடித்து கொண்ட த.தே. நாடாளுமன்ற குழு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. பசில் மற்றும் மிலிந்த மொரகொட ஆகியோரை சந்தித்த குழுவின் சார்பாக சிறிகாந்தா இவ்வாறு கோரிகையினை விடுத்துள்ளார். முகாம்களுக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய நாடாளுமன்ற குழுவில் சிறிகாந்தா நேற்று தனது நேர்முகத்தில் 1000 கணக்கான மக்கள் இருக்கும் முகாம்களில் அடிப்படை வசதிகள் எல்லாம் சரியாக இருக்கும் என்று கூறமுடியாத…

  17. திருகோணமலை மாவட்டம் சேருனுவர பகுதியில் தேடுதல் மேற்கொண்ட பொலிசார் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம், விடுதலைப்புலிகள் பாவித்த சற்றலைற் அண்டனா மற்றும் இரண்டு சற்றலைற் தொலைபேசிகள் , சீருடைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    • 0 replies
    • 1.2k views
  18. இலங்கையின் அரசியலில் எதிரணியைச் சேர்ந்த சோதிடரின் உயிருக்குக்கூட உத்தரவாதம் கிடையாது என்று. உலகின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான "வாஷிங்ரன் போஸ்ற்" நேற்று செய்தி வெளியிட்டது. தென்னிலங்கையின் பிரபல சோதிடரான சந்திரஸ்ரீ பண்டார இலங்கையின் எதிர்கால அரசியல் குறித்து குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்து எதிர்வு கூறியதை அடுத்து அரசுத் தரப்பினர் இடமிருந்து தொடர்ச்சியான உயிராபத்தை எதிர்நோக்கி வருகின்றார் என்று அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொல்லப்படலாம் அல்லது பதவியிலிருந்து தூக்கியெறியப்படலாம் என்று சோதிடர் சந்திரஸ்ரீ பண்டார எதிர்வு கூறியுள்ளார். இந்த எதிர்வுகூறலை அடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக …

  19. ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே நேற்று காலை சரத் பொன்சேக்காவின் மனைவியான அனோமா பொன்சேக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதிக்கும் பொன்சேக்காவிற்கும் இடையில் மோதலை உருவாக்கியது பாதுகாப்புச் செயலாளர் எனக் கூறி, பாதுகாப்புச் செயலாளரை மீண்டும் திட்டித்தீர்த்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் செயலாளரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக சரத் பொன்சேக்காவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பாரியார், இந்த நிலைமையின் கீழ், பொன்சேக்கா மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கோபமடையப் போவதில்லையெனக் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கும், பொன்சேக்காவிற்கும் இடையில் மோதல்கள் அதிகரித்த சந்தர்ப்பத்தில் இந்த மு…

  20. :"அரசியல் தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி கிடைத்தது'என, இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத்துக்கு கிடைத்த வெற்றிக்கு யார் காரணம் என்பது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், ராணுவத்துக்கு இந்த மிகப் பெரிய வெற்றி கிடைத்தது என, கூறுவேன். ராணுவத்தில் இருந்து கொண்டே, அரசியலில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ராணுவத்தினர், தற்போதுள்ள நிர்வாகத்துக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும். ராணுவ வீரர்களின் சம்பள உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வரு…

  21. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் நேற்று மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது கைதிகளுக்கும் சிறைச்சாலை காவலர்களுக்கும் இடை யில் கைகலப்பு இடம்பெற்றது. இக் கைகலப்பில் இரண்டு தமிழ் கைதிகள் காயமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மகஸின் சிறைச்சாலைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள தமிழ்க் கைதிகள் நேற்றுக்காலை முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். அங்கு கடமையில் இருந்த சிறைக்காவலர்கள் பிற்பகல் 3 மணியளவில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கைதிகளிடம் வற்புறுத்தினர் என்றும் கைதிகள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே அவர்கள் மீது காவலர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இக்கை…

    • 2 replies
    • 761 views
  22. நீங்கள் பெரிதும் மதிக்கக் கூடிய பத்து தமிழர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி முத்துக்குமாருக்கு கொடுப்பீர்களா? ஆமாம் சில நாட்களாகவே முத்துக்குமாரின் நினவுகள் ஏனோ என்னுள் அலைமோதியபடி இருந்தது. அவன் ஒரு சிறந்த லே.அவுட் ஆர்ட்டிஸ்ட். நன்கு எழுதத் தெரிந்த பத்திரிகையாளன். உலக சினிமாக்களை விரும்பிப் பார்த்து வந்த இளைஞன். நம் எல்லோரையும் போலவே அரசியல் வாதிகள் மீது கடும் விருப்பு கொண்டவன். எதுவுமே செய்ய முடியவில்லை. நாம் இறந்தாவது இந்த இனத்தைப் போராடத்துண்டுவோமா? என்று தன் உயிரை ஈந்தவன். தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் அதை தற்கொலை என்றார். ஸ்டாலின் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். ஆனால் அப்படி ஒன…

  23. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் ஓய்வுபெறும் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு நேற்ற் (16) முற்பகல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் முப்படைகளின் தளதிபதிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியொருவர் ஓய்வுபெற்றுச் செல்லும் அணிவகுப்பு மரியாதையின் போது முப்படைகளின் தளதிபதிகள் அதில் கலந்துகொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயமாக இருந்த போதிலும், இன்றைய அணிவகுப்பில் கலந்துகொள்ள வேண்டாம் என முப்படைத் தளபதிகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.நேற்ற் முற்பகல் 9.30 அளவில் நடைபெற்ற மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்காக 9 மணிக்கு வருமாறு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போ…

  24. ஜெனல்சரத் பொன்சேகா குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஜெனரல் கையளித்துள்ளார். இராணுவச் சீருடையை அகற்றும்வரை அரசியல் பேசுவதை தவிர்க்கப் போவதாக அவர் கூறியிருந்தார். ஊடகத்துறை அமைச்சரின் அரசியல் இராணுவ விளக்கங்களுக்கு ஜெனரல் அளித்த பதிலாகவே இதனைக் கருத வேண்டும். இவர் பதவியில் இருந்தவேளை கனடா, “நெஷனல் போஸ்ட்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அரசியல் கருத்துகளை உதிர்த்தபோது ஆட்சியாளர்கள் அதனை அங்கீகரித்திருந்தார்கள். ஸ்ரீலங்காவின் சிங்கள தேசிய இறைமையில் தமிழர்கள் பங்கு கேட்கக் கூடாதென ஜெனரல் கூறிய அரசியல் பார்வைகள் ஆட்சியாளருக்கு இதமாக இருந்திருக்கும். சாதகமான கருத்துகளுக்கு எப்போதுமே பேரினவாதம் தலைச…

  25. Started by தயா,

    மே17. முள்ளிவாய்க்கால் கடற்கரை. பின் பகல். எங்கு பார்க்கினும் பிணங்களும் உயிர் ஏங்கும் காயமுற்றவர்களும். வெயிலின் வெம்மை ஒருபுறம், இடைவிடாது பொழியப்பட்ட வெடிகுண்டுகள்- எறிகணைகளின் தீ மறுபுற மென கடற்கரை மணல்வெளி கந்தகப் பரப்பாய் கிடக்கிறது. நிறைமாத கர்ப்பிணித்தாய், குனிய முடியாமல் குனிந்தும், ஊர்ந்துமாய் கொலைக் களத்தை கடக்க முயல்கிறார். வேகமாய் நகரவும் முடியாமல் அம்மணல்வெளியின் நெருப் புத் தணலை தாங்கவும் முடியாத வலியின் தவிப்பு. சற்று தூரத்தில் தன்னைப்போலொரு இளம்தாய் எறிகணை குண்டுக்கு இரையாகி இறந்து கிடக்கிறார். அவரது கால்களில் காலணி அப்படியே இருக்கிறது. ஊர்ந்து நகர்கையில் எறிகணை தாக்கியிருக்க வேண் டும். உயிரோடு தவிக்கும் இந்தத்தாய் மெல்ல மாய் பிணமாகக் கிடந்தவ ரின் காலணிகள…

    • 17 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.