ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
தமிழ்மாறன், கொழும்பு 02/11/2009, 18:44 எங்களுடைய பிரச்சினைகளை பார்ப்பதற்கு அனைத்துலக நீதிமன்றங்கள் தேவையில்லை - மகிந்த எங்களுடைய பிரச்சினைகளைப் கையாள்வதற்கு அனைத்துலக நீதிமன்றங்கள் தேவையில்லை என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் புதிய நீதிவளாகம் ஒன்றியை நிறுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். எங்களுடைய சொந்தப் பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்வதற்கு எங்களால் இயலும். எங்களுடைய பிரச்சினைகளுக்கு அனைத்துலக நீதிமன்ற விசாரணைகள் தேவையில்லை மகிந்த ராஜபக்ச அங்கு மேலும் கூறியுள்ளார். பதிவு
-
- 1 reply
- 657 views
-
-
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு on 02-11-2009 12:16 இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல்கள் வெகு விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சகோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இந்தியா செல்லவுள்ளனர். இவர்கள் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றல், இனப்பிரச்சினை தீர்வு மற்றும் பாதுகாப்பு நிலவரம் ஆகியவை தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர…
-
- 1 reply
- 700 views
-
-
Print | E-mail : Email this Article திங்கட்கிழமை, 2, நவம்பர் 2009 (12:3 IST) இலங்கை போரில் மனித உரிமை மீறல்;கோத்தபாய ராஜபக்சே மீது விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு இலங்கையில் போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது. அதில் அத்துமீறல்கள் குறித்து 170 நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை நாடாளுமன்றத்திடம் அமெரிக்க வெளியுறவுத்துறை சமர்ப்பித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் அதிபர் ராஜபச்சேவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபச்சேவுக்கு உள்ள பங்கு குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள இலங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பதிவுகள் * நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விம்பகம் தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார். http://puliveeram.files.wordpress.com/2008/09/lrg-733-20071103002.jpg மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்…
-
- 11 replies
- 1.4k views
-
-
பம்பலபிட்டி கடலில் பொலிசாரினால் அடித்து கொலை செய்யப்பட்ட பாலவர்ணம் சிவகுமாரனின் அஞ்சலி கூட்டமும் இந்த காட்டு மிராண்டி தனமான கொலையினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறுகையில் இந்த நாட்டில் இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய…
-
- 9 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு. கேள்வி: "பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?" பதில் :- "இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட…
-
- 8 replies
- 2.9k views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 02/11/2009, 13:19 சிறீலங்காக் காவல்துறை மா அதிபராக மகிந்த பாலசூரிய நியமனம் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவினால் புதிய சிறீலங்கா காவல்துறை மா அதிபராக மகிந்த பாலசூரிய நியமனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா காவல்துறை மா அதிபராக இருந்த ஜயந்த விக்கிரமரட்ட நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் பணி ஓய்வு நிலைக்குச் செல்வதால் அவரின் இடத்திற்கே மகிந்த பாலசூரிய நியமனம் பெற்றுள்ளார். pathivu
-
- 0 replies
- 469 views
-
-
யுத்தம் முடிவடைந்திருந்த போதிலும் ஜனாதிபதி வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்திலும், மீண்டும் நாடு திரும்பும் சந்தர்ப்பத்திலும், நீர்கொழும்பு முதல் கொழும்பு வரையிலான கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட மீனவர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மீனவச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கரையோரப் பிரதேசங்களிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். இந்தத் தடைகள் திடீரென அவசர அவசரமாக பின்னிரவு 1 மணி, அதிகாலை 2 மணியளவில் அறிவிக்கப்படுவதாகவும் குறுகிய காலப்பகுதியில் அனைத்து மீனவர்களுக்கும் இதனைத் தெரியப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள்…
-
- 1 reply
- 738 views
-
-
30‐10‐2009 மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி முதலமைச்சர் தமிழ்நாடு சென்னை பெருமதிப்புக்குரிய ஐயா, தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது. பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து கொண்டு, தங்களுக்கு முன் முதலமைச்சர் பதவி வகித்த பெரு மதிப்புக்குரிய சீ.என். அண்ணாதுரை அவர்களின் காலம்தொட்டு எமது பிரச்சினையில் தாங்கள் கொண்டிருக்கும் பெரும் அக்கறை பற்றி நான் நன்கறிவேன். எமது பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிட்டுமென முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது. ஐயா! துரதிஷ்டவசமாக எமது பிரச்சினை தீர்வுக்காக எற்பட்ட பல வாய்ப்புக்களை நாம் இழந்து நிற்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் தங்களின் நன்மதிப்பை பிரய…
-
- 2 replies
- 828 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்ஷே, திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தபோது நடந்துள்ள சம்பவங்கள், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. ராஜபக்ஷே மனைவி, மகன் உட்பட 80 பேர் கொண்ட குழுவினர் திருமலைக்கு வந்து சுவு�மி தரிசனம் செய்துள்ளனர்.பாதுகாப்பு காரணங்கள் கருதி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பிரதான வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேட்டுகள் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.ராஜபக்ஷே திருமலை கோவிலுக்குள் நுழையும் முன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.சுவாமி தரிசனத்திற்காக கியூவில் சென்று கொண்டிருந்த பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் கால் கடுக்க கியூவில் காத்திருந…
-
- 4 replies
- 1.9k views
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) 19 வருடங்கள் பூர்த்தி ‐ வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள் ‐ நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை. 1990 ஒக்.30ஆம் திகதி வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள் கழிந்து விட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக் கொடுப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 24 மணித்தியாலத்துள் தமது இருப்பிடம் மற்றும் உடமைகள் அனைத்தையும் விட்டு உடனடியாகவே வெளியேறுமாறு விடுதலைப் புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதன் க…
-
- 22 replies
- 1.8k views
-
-
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நிலை குறித்து, அனைத்து துறையினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில், அகதிகள் இன்புற்று வாழ தேவையான நிதி ஒதுக்கப்படும்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முள்வேலி முகாம்களுக்குள் இலங்கையில் தமிழ் அகதிகள் அவதிப்படுவதை எண்ணி கண்ணீர் உகுத்து, அந்த முகாம்களில் இருந்து அவர்களை விடுவிக்க தமிழக எம்.பி.,க்கள் குழு சென் றது. இதன் மூலம் அவர்கள் நிலை அறியச் செய்யப்பட் டது.இதன் விளைவாக, மகத் தான வெற்றி கிடைக்கா விட்டாலும், அடைபட்டிருந்த இரண்டு லட்சம் பேரில், ஒரு லட்சம் பேரையாவது இதுவரை அந்தக் கூண்டுகளிலிருந்து வெளியே கொணர்ந்து, அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல வழிவகை செய்யப…
-
- 0 replies
- 462 views
-
-
ராணுவத்தில் பணியாற்றுவோருக்கு, அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை'என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத் துக்கு வெற்றி தேடித் தந்தவர் சரத் பொன்சேகா. இவர்,ராணுவத் தளபதியாக இருந்தபோது தான், போரில் வெற்றி கிடைத்தது. தற்போது இவர், இலங்கை ராணுவப் படைகளின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். ராணுவத் தளபதி யைப் போல், இந்த பதவிக்கு போதிய அதிகாரம் இல்லை என, கூறப்படுகிறது.இலங்கையில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு அதிகாரம் இல்லாத பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, இலங்கையின் தற்போதைய ராணுவத் தள…
-
- 1 reply
- 1.6k views
-
-
தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. இன்னமும் இலங்கையில், ஜனநாயகப் பயிர் அழிந்து விடவில்லையென்று உலகிற்கு எடுத்துக் கூற, இந்தத் தேர்தலை விட்டால் வேறு மார்க்கம் இல்லை போல் தெரிகிறது. மக்களுக்கான ஜனநாயகம், புள்ளடி போடுவதோடு முற்றுப் பெற்றுவிடும். இன முரண்நிலையைத் தீர்ப்பதற்கு புதிய வகை தேடல்களோடு களமிறங்க, பலரும் தயாராகி வருகின்றனர். வாக்கு வங்கியை மையப்படுத்தி, சகல தரப்பினரும் சுழல ஆரம்பித்து விடுவார்கள். புள்ளடியைப் போட்டு விட்டு, விடியலைத் தேடும் விபரீத விளையாட்டில் மக்களும் அரசியல்வாதிகளும் மோதிக் கொள்கிறார்கள். இந்த புள்ளடிச் சுதந்திரம், அடித்தட்டு பெரும்பான்மை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. தேச மக்களின் இறைமை, அதிகார வர்க்க…
-
- 0 replies
- 573 views
-
-
5ம் தரப் புலமைப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு அதிக புள்ளி! 507 மாணவர்கள் பரீட்சையில் சித்தி! தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறீலங்கா பரீட்டைத் திணைக்களம் அறிவித்துள்ளது. தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் இரு மாணவர்கள் 175 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை வகிக்கின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மசிறி கீர்த்திகன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையைச் சேர்ந்த செலசிறின் சதுர்ஷயா ஆகிய இரு மாணவர்களுமே அதிக புள்ளியைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை அடைந்த…
-
- 6 replies
- 802 views
-
-
கனேடிய அரசாங்கம் ஓசியன் லேடி கப்பலில் சென்ற தமிழ் மக்களை வழமையான அகதிகள் சட்டங்களிற்கு முரணான வகையில் கையாள்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வழமையாக 1-7 நாட்கள் அகதிகளிற்கான முதல் நேர்முக விசாரணைகள் முடிக்கப்பட்டு அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.ஆனால் தற்போது ஓசியன் லேடி கப்பலில் சென்றவர்களுக்கு விடுதலைப்புலிகளும் 78 பேருக்குள் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனைத்து மக்களையும் மேலும் ஒரு மாதம் தடுத்து வைத்திருப்பதுடன் அவர்களை குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட கைதிகள் அணியும் சீருடைகளையே இவர்களுக்கு அணிவித்து கை விலங்கு இட்டு விசாரணை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகத்தில் எந்த காலத்திலும் வாழ முடியாது என தப்…
-
- 3 replies
- 816 views
-
-
தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை - சிவத்தம்பி ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1, 2009, 12:33 [iST] கொழும்பு: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. அவர் மீது புலம் பெயர்ந்த தமிழர்கள் [^] அதிருப்தியுடன் உள்ளனர் என்று ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் போக்குக் குறித்து தமிழ் மக்கள் [^] அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே பலத்த எதிர்ப்பை இது தோற்றுவித்துள்ளது. நான் இம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தீர்மானிக்க க…
-
- 1 reply
- 744 views
-
-
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து, நசுக்கி, தென்னிலங்கை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் நவீன துட்டகைமுனுவாகத் திடீர் எனப் பேரெழுச்சி பெற்று, இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத பெரும் தலைவராக உயர்ந்து நின்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அடித்தளத்தில் திடீரென சிறிய இடறல் பிசிறல் தென்படுவது வெளிப்படை. “புலி அழிப்பு சாதனை”யில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் அவருடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும், முப்படைகளின் தற் போதைய சிரேஷ்ட அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன் சேகா, எதிர்கால அரசியலில் விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் களமிறங்குவார் என்ற தகவல் செய்தி அடிபடத் தொடங்கியதுமே, ஜனாதிபதி மஹிந்தரின் அரசியல் தளம் தடுமாற…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா குற்ற தடுப்பு திணைக்களத்தினை சேர்ந்த, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை வடபகுதி தமிழர் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். 22 அதிகாரிகள் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இவர்களில் 18 பேர் ஏற்கனவே மாங்குளம் பகுதிக்கு அனுப்ப பட்டுள்ளதாகவும் லக்பிம பத்திரிகை கூறுகின்றது. குற்றம் இழைத்த பாதுகாப்பு அதிகாரிகளை போரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புவதற்கான காரணம் என்ன? ஏன் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் இங்கு அனுப்ப படுகின்றார்கள். தண்டனை இடமாற்றம் செய்வதற்கு தமிழர்கள் இடம்தானா அதிலும் பல்வேறு இன்னல்கள் மத்தியில் குடியேறப்போகும் மக்களுக்கு மீண்டும் துன்பங்களை கொடுப்பதற்காகவே இவர்கள் அனுப்ப படுகின்றார்களா என்ற எண்ணம் மக்கள் மனதில் த…
-
- 1 reply
- 689 views
-
-
திருகோணமலை, குச்சவெளி கடற்கரையோரத்தில் இருக்கும் 7 கிலோ மீற்றர் தமிழருக்கு சொந்த மான காணிகளை பயன்படுத்தாத காணிகள் என்ற வரையறைக்குள் உட்படுத்தி கிட்ட தட்ட 400- 500 வரையான காணிகளை அரசாங்கம் சுவீகரித்தமை தெரிந்ததே அத்துடன் இந்த விடயங்கள் மாகாண சபைக்கும் தெரியப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அங்கு ஹோட்டேல் கட்டுவதற்கு 60 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் 50 பேருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டு திட்டத்தில் பெரும்பலானவர்கள் சிங்கள இனத்தினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழநாதம் http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 685 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்வதற்கும் அதே நேரம் ஏனைய அரசுடன் சேர்ந்தியங்கும் கட்சிகளையும் இணைத்து கொள்ளவும் தீமானிக்க பட்டுள்ளதாக ரெலோ அமைப்பினை சேர்ந்த சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் அடுத்த வாரம் இடம் பெறவுள்ளது. தீர்க்கப்படாத இனப்பிரச்சினை, மக்களின் மீள்குடியமர்வு, யுத்தத்தின் பின்னரான புனரமைப்பு போன்றவை தமிழ்க் கட்சிகளின் முன்னுள்ள சவால்களாகும். இந்தச் சவால்களை தமிழ்க் கட்சிகள் ஒன்று சேந்து சந்திக்க சகலரும் ஒன்றிணையவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, நடை பெறவிருக்கும் கூட்டத்தில், தமிழ்த் தேசி யக் கூ…
-
- 1 reply
- 1k views
-
-
தென் தமிழீழ மாவட்டங்களான திருமலை அம்பாரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1407 குடும்பங்களின் காணிகளில் சிங்களவர் ஆக்கிரமித்து குடியமர்ந்துள்ளதால் 1407 குடும்பத்தை சேர்ந்த தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1407 குடும்பங்களும் வன்னியில் நீண்டகாலமாக இருந்ததால் அவர்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரித்து அதில் குடியேறி இருந்தனர். தற்போது தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த காணிகளுக்கு சென்றபோது அங்கு அத்து மீறி குடியேறியிருந்த சிங்கள மக்களால் விரட்டப்பட்டு உள்ளனர். தமக்கு மாற்று காணி தந்தால் தாம் எழும்புவதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதா…
-
- 0 replies
- 844 views
-
-
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி காண்பது சுவாரஸ்யமான அனுபவம். அழகு தமிழில் அவர் வாதங்களை சரவெடிபோல எடுத்துவைக்கும் விதமே அலாதியானது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐவர் குழு இலங்கை போய் வந்தது அவரை மிகவும் கொதிப்பேற்றியுள்ளது அவரது அனல் வார்த்தைகளில் புரிந்தது! kumudam04112009001 நாடாளுமன்றக் குழு இலங…
-
- 0 replies
- 1.4k views
-
-
நன்றி கோலங்கள் தொடர்.- இயக்குனர் திருச்செல்வம்..நன்றி ஆம். ஊடகங்கள்.மிகச் சக்திவாய்ந்தவை.மக்கள் மனதை ஊடுருவும் சாதனம் என்பதனால்தான் ஊடகம்.அதைப் பயன்படுத்த தெரிந்தவரின் கைகளில் அது அற்புதமான ஒரு பொருளாகிப் போகிறது... ...என்று நாம் நம்ப முயற்சித்தாலும் அதன் நிஜ முகம் வேறுமாதிரியாகவே இருக்கிறது.என்றாலும் திருச்செல்வம் போன்ற முனைப்பான இளைஞர்கள் தங்கள் எல்லை உணர்ந்து,அதற்குட்பட்டு,ஆனால் கருத்தை ஆணித்தரமாக பதியும் பொழுது படைப்பாளி ஊடகத்தை தன் கைகளில் ஏந்திக் கொள்கிறான். பல வருடங்களாக இழுத்துக்கொண்டு இருந்த தொடரை பாராட்ட...29ம் தேதி பாகம் ஒன்று மட்டுமே போதும் ஒரு இனப் படுகொலையை பதிந்ததற்காக. அந்த பாகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால்... ஆம். ஒர…
-
- 0 replies
- 923 views
-
-
அவுஸ்த்திரேலியாவிற்குப் படகுகளில் வந்தவர்களுள் புலிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - விக்டர் ராஜகுலேந்திரன் அவுஸ்த்திரேலியாவிலிருக்கும் தமிழ் அமைப்புக்களில் ஒன்றான AFTA எனும் அவுஸ்த்திரேலிய தமிழ் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் என்று கூறப்படும் கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன் என்பவர் அவுஸ்த்திரேலியன் எனப்படும் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில், படகுகளில் வந்துள்ள தமிழர்களில் பல முன்னாள்ப் போராளிகளும் நிச்சயமாக இருப்பதாக அடித்துக்க் கூறியுள்ளார்.அப்பேட்டியின் இரு இடங்களில் தனது கூற்றை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாலையில் வெளிவந்த இப்பத்திரிக்கைச் செவ்வியைத் தொடர்ந்து அவுஸ்த்திரேலியாவிலியங்கும் பிரபல தொலைக்காட்சிகளான சனல் 7 , ஏ.பீ.சீ, எஸ்.பீ…
-
- 41 replies
- 3.4k views
- 1 follower
-