ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் இலங்கையர்களும் உள்ளடக்கம். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன், கலாநிதி ரி.மதனரஞ்சன் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். பணிநாள் மற்றும் வருடாந்த அடிப்படையில் விஞ்ஞானிகளைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு தர வரிசைப்படுத்தி இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 22 அறிவியல் துறைகள…
-
- 2 replies
- 606 views
- 1 follower
-
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது - துரைராசா ரவிகரன் 21 OCT, 2023 | 05:35 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று சனிக்கிழமை (21) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்ப…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
20 OCT, 2023 | 08:40 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பலஸ்தீனத்திற்கு அனுதாபம் தெரிவித்து எப்படி அந்த நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், காஸாவில் நடக்கும் மோதல் நிலைமையால் துன்பப்படும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், பாதி…
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 OCT, 2023 | 02:40 PM மூன்று புதிய இராஜதந்திரிகளை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இரண்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர் ஒருவரும் நியமிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கான இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுப் பெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவும், கியூபாவிற்கான இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுப் பெற்ற அட்மிரல் (ஓய்வு) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேபாளத்துக்கான இலங்கை தூதுவராக ஓய்வு பெற்றஎயார் சீஃப் மார்ஷல் சுதர்சன் கரகொட பத்திரன நியமிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
21 OCT, 2023 | 01:24 PM (எம்.நியூட்டன்) இந்திய அமைதிப்படைகளின் யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஏற்பாடடில் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று சனிக்கிழமை (21) காலையில் நடைபெற்றது. யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட பொதுமக்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருகின்ற வகையில் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது உயிர்நீத்த உறவுகளின் திருவருவ ப…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
வடக்கிற்கான ரயில் சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த நேரத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40க்கு காங்கேசன்துறையிலிருந்து – கல்கிஸ்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் நாளை முதல் முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. https://thinakkural.lk/article/277958
-
- 1 reply
- 440 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 OCT, 2023 | 04:04 PM பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தத்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்கு சென்ற போதே தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 43 replies
- 3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 OCT, 2023 | 11:01 AM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா மற்றும் கொழும்பு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவருதுடன் பெருமளவானவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய விமான நிலையத்தில் விமானம் ஊடாக வருபவர்கவளை அழைத்து வர செல்பவர்கள் காத்திருப்பதற்கான இடம் மர நிழலேயாகும். மரங்களுக்கு கீழே கல்லாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் அவை பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மாரி காலத்தில…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
21 OCT, 2023 | 06:21 AM நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கலாநிதி சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். வானிலை குறித்த மேலும் கூறுகையில், கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பா…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
இஸ்ரேல் -பலஸ்தீன் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும், பலஸ்தீனம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திருகோணமலை - மூதூரில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியிலிருந்து நடைபவனியாக வந்து மூதூர் பிரதான வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பலஸ்தீனத்திற்கு ஆதரவான சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது பலஸ்தீன மக்களுக்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. …
-
- 1 reply
- 393 views
-
-
Published By: VISHNU 20 OCT, 2023 | 03:44 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பு திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் - சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு மாகாணங்கள் எழுதிக் கொடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம் பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன மோதல்,பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, …
-
- 2 replies
- 335 views
- 1 follower
-
-
வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலை இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1354900
-
- 4 replies
- 764 views
-
-
காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற சீன ஜனாதிபதியின் கருத்தினை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய அரசியல் பயணம் அமைந்துள்ளதாகவும், குறித்த நம்பிக்கையுடனேயே ஜனநாயக நீரோட்டதில் இணைந்து கொண்டு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அரசாங்கத்தில் சிரேஸ்ட அமைச்சர்களுள் ஒருவராகவும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். சீனாவில் இடம்பெற்ற கடலசார் ஒத்துழைப்பிற்கான …
-
- 0 replies
- 259 views
-
-
கிளிநொச்சி நகரத்தில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பூங்காவில் பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கை அமைவாக மாவட்ட அரச அதிபர் குறித்த இடத்தை இன்று வெள்ளிக்கிழமை (20) சென்று பார்வையிட்டுள்ளார். இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்டோரால் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள பூங்காவில் தொடர்ச்சியாக சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பாக வயது குறைந்த சிறுமிகளை அழைத்து வந்து பல்வேறு குற்ற செயல்கள் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனை அடுத்து குறி…
-
- 0 replies
- 300 views
-
-
Published By: VISHNU 20 OCT, 2023 | 03:37 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மக்களின் உயிர்களை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதனால் இஸ்ரேல் காஸாவில் இருந்து வெளியேற வேண்டும். அத்துடன் காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், இஸ்ரேல், பலஸ்த…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
18 OCT, 2023 | 10:38 AM மாங்குளம் புகையிரத சேவையை விஸ்தரித்தால் மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தெரிவித்தார். பயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். வடமாகாணத்திலே ஐந்து மாவட்டங்கள் இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் பெரிய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு புகையிரத நிலையம…
-
- 3 replies
- 546 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 OCT, 2023 | 11:32 AM யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளான். தெல்லிப்பளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.புறநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். வீட்டில் இருந்த உறவினரான சிறுவன், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்திருந்த வேளை சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். …
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
கோட்டாவின் அறையில் இருந்த 17.85 மில்லியன் பணத்திற்கு சாட்சி இல்லையாம் ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், எனவே இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி…
-
- 0 replies
- 415 views
-
-
16 OCT, 2023 | 03:03 PM இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலில் பாலஸ்தீன் மக்களுக்கான தனது ஆதரவு தொடரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து பாலஸ்தீன தூதுவரை சந்தித்து மேற்கண்டவாறு தெரிவித்தார். உலகெங்கும் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்றும் போர் அதற்கு தீர்வு அல்ல என்றும் பாலஸ்தீன் தூதருடனான கலந்துரையாடலில் மஹிந்த கூறினார். இலங்கையின் போர் தொடர்பான அனுபவங்களில் இருந்து சமாதானத்தின் அவசியத்தை பாலஸ்தீன தூதருக்கு எடுத்துக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அமைதியை நிலைநாட்டுவது இருநாடுகளுக்கும் இடையிலான செழிப்ப…
-
- 11 replies
- 671 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:00 AM எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (16) மாலை மன்னாரில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகள், அகில இலங்கை …
-
- 12 replies
- 750 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 05:24 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலமானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள், இச்சட்டமூலத்தின் பெரும்பாலான சரத்துக்கள் சமூகத்தின் மத்தியிலிருந்து பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்குப் பின்பற்றப்படவேண்டிய சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக்கொண்ட செயன்முறைக்கு முற்றிலும் மாறுபட்டவையாகவே அமைந்திருப்பதாகக் கரிசனை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப்…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
19 OCT, 2023 | 08:01 PM இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளிடம் எடுத்துக் கூறி எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தாங்களே களத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், மீனவர்களிடம் உண்டியல் மூலம் பணம் சேகரித்து, இந்தியாவுக்கு சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் மற்றும் அங்குள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், இந்த உண்டியல் குலுக்கும் வேலைத்திட்டமானது நேற்றைய தினம் (18) வடமராட்சி பகுதியில் ஆரம்பமானது. இரண்டாவது நாளான இன்றைய தினம் (19) மாதகல் பகுதியில் …
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
19 OCT, 2023 | 04:59 PM இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கும், ஹெலிகொப்டர் தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி கட்டுநாயக்காவிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளது. இப்பயிற்சிகளின் மூலமாக இலங்கை விமானப்படை விமானிகள் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர்களை கையாளும் வாய்ப்புகளுடன் துணை விமானி அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும், இலங்கை கடற்படைக் கப்பல்களில் தரையிறங்கும் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கும் இந்த பயிற்சி அணியினர் திட்டமிட்டுள்ளனர். அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(19) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அப்போதைய மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என கருத்து வௌியிட்டதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த கூற்றானது, அரசியலமைப்பின் 06 ஆவது பிரிவின் திருத்தம், 1978 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் ச…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 04:14 PM இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார். சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை (19) காலை பீஜிங்கில் இடம்பெற்றதோடு இதன் போதே சீன நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கட…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-