ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
50 இலத்திரனியல் பஸ்கள் இறக்குமதி 50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு நகருக்குள் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது. வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் தாக்கம் ஆகிய இரண்டையும் குறைக்கும் முயற்சியில் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த பஸ்கள் இயக்கப்படும் எனவும், ஏனைய ப…
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கைக்கான அதிக கடன் வழங்குநர் என்ற வகையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் இணைவதற்கு சீனா வரவேற்கப்படுவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய – ஜப்பான் மன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச மற்றும் உலக வங்கியின் பொதுவான கட்டமைப்பிற்குள்ளும், அதற்கு வெளியிலும் உள்ள சிக்கலைத் தீர்க்க சிறந்த மற்றும் விரைவான அணுகுமு…
-
- 1 reply
- 307 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 JUL, 2023 | 06:43 PM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒருதரப்பினர் இன்றும் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மொனராகலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உலகில் எந்த நாடும் சேதன பசளை திட்டத்தை விவசாயத்துறையில் முழுமையாக அமுல்படுத்தவில்லை. எமது அரசாங்கம் சேதன பசளை திட்டம் தொடர்பில் எ…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 JUL, 2023 | 06:54 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களு டையதாக மாறியது போல் வ…
-
- 45 replies
- 2.4k views
- 1 follower
-
-
30 JUL, 2023 | 11:03 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக குழாய் திட்டத்திற்கான செயல்பாட்டு ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த செயல்பாட்டின் ஆய்வை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்தியாவின் தென் பகுதியின் நாகப்பட்டினத்தை அண்மித்த பிரதேசத்திலிருந்து இலங்கையை நோக்கி எரிபொருள் விநியோக குழாய் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. கடலுக்கு அடியில் முன்னெடுக்கப்பட உள்ள இந்த குழாய் …
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
30 JUL, 2023 | 11:06 AM மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து வியாழக்கிழமை மாலை (27) மீட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டிக்கொட்டுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடலாமை மறைத்து வைக்கப் பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டது. குறித்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் உரிய அதிகாரிகளுடன் சென்று குறித்த ஆமையை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடலாமை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மீ…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சம்மதம், ஆனால் தன்கையில் முடிவு இல்லை – ஜனாதிபதி தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தான் இறுதித் தீர்வா என கொழும்பு ஊடகம் எலிப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். 13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் தான் இறுதித் தீர்வு என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சூழல் இல்லை என்றும் இருக்கின்ற அதிகாரங்களைக்கொண்டு தற்காலிகத் தீர்வை வழங்குவதே எ…
-
- 3 replies
- 742 views
-
-
தமிழ்க் கட்சிகளை அவசரமாக சந்திக்கின்றார் கோபால் பாக்லே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் நாளை மறுதினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் கலையரசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் டெலோ கட்சி சார்பாக செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், விநோதரலிங்கம், புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்துகொள்ளவுள்ளனர். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும…
-
- 5 replies
- 723 views
- 1 follower
-
-
அதிகாரப் பகிர்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவூட்டல் தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்ருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்தும் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்…
-
- 1 reply
- 545 views
-
-
29 JUL, 2023 | 06:13 PM (நா.தனுஜா) இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தும் அதேவேளை, குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் நி…
-
- 4 replies
- 380 views
- 1 follower
-
-
29 JUL, 2023 | 05:36 PM (இராஜதுரை ஹஷான்) ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வுகாண அரசாங்கம் முயற்சிப்பதை கடுமையாக எதிர்ப்போம். முதலில் 13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டில் மு…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
தற்போது ஐநூறு ஆசிரியர்கள் சட்ட அங்கீகாரம் இன்றி வெளிநாடு சென்றுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகள் விடுப்பு எடுத்து வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வழங்கப்பட்ட சலுகையின் கீழ் விண்ணப்பித்தும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வெளிநாடு செல்வதற்கு தேவையான ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள போதிலும் அனுமதி கிடைக்காத நிலையில் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக மேற்படி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து வெளிநாடு செல்ல வாய்ப்பு வழங்கப்படாதது அநீதி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையால் அதிகமான ஆசிரியர்கள் வெளி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
29 JUL, 2023 | 06:08 PM (நா.தனுஜா) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் செயன்முறையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் முழுமையாகப் பெறவேண்டியது மிகவும் அவசியமென பலமுறை தான் அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியிருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் தலைவரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். அரசாங்கம் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிவ…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
29 JUL, 2023 | 06:03 PM (நா.தனுஜா) இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அதற்கு தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெவ்வேறு அடிப்படைகளில் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றன. அதன் ஓரங்கமாக அண்மையில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளினதும் இராஜதந்திரிகள் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர…
-
- 3 replies
- 356 views
- 1 follower
-
-
29 JUL, 2023 | 05:57 PM (நா.தனுஜா) வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் குறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெள்ளிக்கிழமை (28) நாட்டின் 5 மாவட்டங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு இது வரையில் மொத்தமாக 21,374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், அவற்றிலிருந்து காணாமல்போன முப்படைகளைச்சேர்ந்தோர் பற்றிய 3742 முறைப்பாடுகளையும், ஒரேநபர் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவான 2644 முறைப்பாடுகளையும் கழித்ததன் பின்னரான தேறிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 14,988 ஆகும். இத்தேறிய முறைப்பாடுகள் அவை இடம்பெற்ற…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 29 JUL, 2023 | 05:52 PM இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது என பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவருமான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புத்திஜீவிகள் பங்கேற்கும் ஊடக சந்திப்பு சனிக்கிழமை (29) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு இவ்வாறு கூறிய பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை…
-
- 11 replies
- 795 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 JUL, 2023 | 12:07 PM கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ், நேற்று என் பக்கத்தில் இருந்தபடி பகிரங்கமாக, “கனடாவில் எங்களின் சொந்த அனுபவம் இருக்கிறது. ஆதிகுடிகள் தொடர்பில் கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆதிகுடிகளுடனான இனநல்லிணக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அது தொடர்பில் நாம் பணியாற்றுகிறோம். அது சுலபமல்ல. அது நீண்ட பணி.” என்று கூறினார். அதாவது தவறு, குற்றம் நிகழ்ந்ததை, அந்நாட்டு அதிகாரபூர்வ தூதுவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதிலிருந்து இலங்கை கற்க வேண்டிய பாடம் என்ன? வரலாற்றில் தவறுகள், குற்றங்கள் எங்கும் நிகழும். ஆனால் அந்த தவறுகள், குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மு…
-
- 1 reply
- 271 views
- 1 follower
-
-
இந்தியக் கடற்படைக் கப்பலான ‘கஞ்சர்’ இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின்போது இந்திய கடற்படைக் கட்டளை அதிகாரியான கொமாண்டர் என் வி எஸ் பானி குமார், கிழக்கு கடற்படைத் தளபதியை சந்திக்கவுள்ளார். இதன்போது, ஏவுகணை செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு தொழில்முறை தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன. அத்துடன், நாளை மறுதினம் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கடற்படையின் திறன்களை பாடச…
-
- 2 replies
- 354 views
- 1 follower
-
-
இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்க கோரவேண்டி ஏற்படும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்தத்தினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்க…
-
- 45 replies
- 2.9k views
- 2 followers
-
-
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சு ! மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார். இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொர…
-
- 0 replies
- 489 views
-
-
செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை மனிதப் புதைகுழிகள் தொடர்கதை நீள்கின்றது – சுகாஷ் மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த மனிதப் புதைகுழிகளுக்கான நீதி இற்றைவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த கனகரத்தினம் சுகாஷ், இனியும் நாம் நீதிக்காகக் காத்திருக்க முடியாது என க…
-
- 1 reply
- 219 views
-
-
மலையகம் 200 : மன்னாரில் நினைவுத்தூபி ! மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக தலைமன்னாரின் நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. தலைமன்னாரில் ஆரம்பித்துள்ள 252 கிலோமீற்றர் வரையான நடைபயணம், எதிர்வரும் ஒகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது. பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தமிழகத்தில் இருந்து மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. தலைமன்னாரில் தரையிறங்கிய மக்கள் …
-
- 1 reply
- 353 views
-
-
யாழில் உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு முக்கிய அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனினால் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரத்தினால் நேற்று(28) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உணவுச் சாலைகள், சிற்றுண்டிச் சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய …
-
- 0 replies
- 289 views
-
-
மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை மட்டக்களப்பு வெல்லாஅவளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்று (28) தற்கொலை செய்துள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துள்ளதுடன் இந்த ஜூலை மாதம் முதல் நேற்று வரை 8 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மண்டூர் பிரதேசத்தில் 81 வயதுடைய பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேச கடலில் 64 வயதுடைய ஆண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி த…
-
- 1 reply
- 287 views
-
-
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் – கம்மன்பில 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய க…
-
- 7 replies
- 902 views
- 1 follower
-