Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் உள்ள இடம்பெயர்ந்தோரின் நடமாட்ட சுதந்திரத்திற்காக தொடர்ந்தும் பாடுபடப்போவதாக இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பற்றீசியா ஏ பியூ டெனிஸ் தெரிவித்துள்ளார். ஊக்கமும், ஆக்கமும் உள்ள சுதந்திரமான ஊடகம், ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சங்களுள் ஒன்றாகும். மாறுபட்ட கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும். சகித்துக்கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களை அடக்குபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் முழு நாட்டிற்கும் கேடு விளைவிப்போராவர் என்றும் அவர் கூறியுள்ளார். ராஜபக்ஸ அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பாரியளவிலான ஊடக அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அமெரிக்காவிற்கான புதிய தூதுவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கெதிராக கருத்துக்கள…

  2. கையிருப்பில் உள்ள தங்கங்களை விற்பதற்கு இரகசிய முயற்சி செய்யப்படுகிறது எனத் தான் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அரசு இன்னமும் பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பதிலாக ஊடகங்கள் மூலம் தன்மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க

  3. குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை First Published : 21 Sep 2009 11:59:00 PM IST Last Updated : கொழும்பு, செப். 20: தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டு…

  4. வன்னியில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்டு வரும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கக்கோரி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  5. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்று தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 64 ஆவது அமர்வில் தான் கலந்துகொள்ளாமல் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான குழு ஒன்றை அனுப்பிவைப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ள முடிவானது இராஜதந்திர மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்த பின்னர் இடம்பெறும் முதலாவது பொதுச் சபைக் கூட்டமாக இது இருப்பதால், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தாம் பெற்ற வெற்றியைப் பறை சாற்றுவதற்கான ஒரு மேடையாக இதனை மகிந்த ராஜபக்ச பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இதில் கலந்துகொள்ளாததது பெரியளவில் வெளிப்படையாகத் தெரி…

  6. போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 5 ஆயிரத்து 320 பேர் நேற்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சிறிலங்கா அரச வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 845 தமிழ் மற்றும் 155 சிங்களக் குடும்பங்களையும் உள்ளடக்கிய 1,000 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் வவுனியாவில் உள்ள 28 கிராமங்களில் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச மற்றும் துணைப் படைக் குழுவின் தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் …

  7. சிறிலங்காவுக்கான 'ஜீ.எஸ்.பி.பிளஸ்' வசதிகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்ட அமைச்சரவைக் குழு குறிப்பிட்ட நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. இந்த உயர் மட்டக்குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தனது இறுதி அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்ததாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். 'ஜீ.எஸ்.பி.பிளஸ்' வசதியை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் பற்றிய விபரங்கள், கடந்த இரண்டு வருட காலத்தில் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் பிரதி அமைச்சர…

  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டித் தப்பிக்க முயல்கிறார் ராஜபக்ஷ யுத்த கள முனையில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசு நினைத்ததைப் போல் அல்லாமல், தமிழீழ விடுதலைப் போர் முன்னரைக் காட்டிலும் உத்வேகமாக பல்வேறு திசைகளிலும் விரிந்து செல்கின்றது. யுத்த வெற்றி ஒன்றின் மூலம் மகிந்த சகோதரர்கள் சிங்கள மக்களை அந்த வெற்றி மாயையினுள் வைத்துத் தமது ஆட்சிக்காலத்தை அடுத்த தேர்தலிலும் நீடித்துச் செல்லலாம் என்பதைத் தவிர, சிங்கள தேசம் பல்வேறு இழப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. அரசியல் விவேகமற்ற மகிந்த ராஜபக்ஷவை ஆடசியில் அமர்த்திய விடுதலைப் புலிகளின் இராஜதந்திரம் அவர்களுக்கு களமுனைத் தோல்வியை ஏற்படுத்தினாலும், அவர்களது …

  9. விக்ரம், கொழும்பு 20/09/2009, 02:52 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ரஷ்ய சிறப்புப் படையினர் பயிற்சி! சிறீலங்கா புலனாய்வுத்துறை தகவல்!!! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலத்தில் ரஷ்ய சிறப்புப் படையினரால் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு வன்னிக்குப் பயணம் செய்த ஓய்வுபெற்ற ஐந்து ரஷ்ய சிறப்புப் படை அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு, வாகனங்களை ஓட்டுதல், குறுகிய நேரத்திற்குள் வாகனங்களை பொருத்துதல் - கூறுகளாக அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்கியதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளில் தமிழீழ தேசியத் தலைவ…

  10. கனடா ரொரன்டோ நகரில் 360 யூனிவேர்சிற்ரி வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்களால் நடாத்தப்பட்டுவரும் கவனயீர்ப்பு நிகழ்வு 19 - 9 - 2009 சனிக்கிழமை தொடர்கவனயீர்ப்பின் 150 ஆவது நாளை நிறைவு செய்தது. இந்தக்கவனயீர்ப்பின் 150 ஆவது நாளையொட்டி ரொரன்டோ மத்திய பகுதி வீதிகளில் முழக்கப்பேரணியும் இடம்பெற்றது. இப்பேரணியானது யூனிவேசிற்ரி வீதியின் பாதையோரமாக வலது புறமாக அணிவகுத்து கொலிச் வீதியின் பாதையோர நடைபாதையினூடாக யங் வீதியில் வலதுபுறமாக நகரும்போது அதிகரித்த மக்கள் தொகையினால் ரொரன்டோ காவற்றுறையினர் யங் வீதியின் வாகன போக்குவரத்தின் ஒரு பாதையை நிறுத்தி அதனூடே பேரணியை நகர்ந்து செல்ல உதவி வழங்கினர். யங் வீதியின் போக்குவரத்ததுப் பாதையில் …

    • 6 replies
    • 1.2k views
  11. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியா செயற்படுகின்றது என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக தம்முடைய கவலையை சிறிலங்காவிடம் இந்திய அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இந்த பதிலில் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருக்கின்றார். தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய நிலை தொடர்பாக தனது கவலையைத் தெரியப்படுத்தி தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அனுப்பிவைத்திருக்கும் கடிதத்துக்குப் பதிலளிக்கும் முகமாகவே இந்தியப் பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். "இடம்பெயர்ந்த தமிழர்களுடைய நலன்…

  12. 2009ம் ஆண்டு ஓகஸ்ட் 31ம் திகதி வரையில் இலங்கையின் தனி நபர் ஒருவின் கடன் 163,425 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்தக் கடன் தொகையானது இதுவரை இருந்த அதிகூடிய தனிநபர் கடனாக கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக கடன்பெற்று வருகின்றமையே இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. இதனைத்தவிர கடந்த ஓகஸ்ட் 31ம் திகதி வரை மகிந்த சிந்தனைக்கமைய மாத்திரம் பெறப்பட்ட கடன் தொகை 3,301 பில்லியன் ரூபாவாகும். இதில் 1,916 பில்லியன் ரூபா உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதனைத் தவிர 1,385 பில்லியன் ரூபா சர்வதேச ரீதியாக பெறப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் 1,504 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது.. http://vannik…

  13. தலைவர் பிரபாகரன் படத்தை எடுக்கச்சொன்னால் தீக்குளிப்போம்:சீமான் ஆவேசம் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது.இதை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை முழுவதும் பிரபாகரன் – சீமான் இணைந்து இருப்பது மாதிரியான தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. போலீசார் இவற்றை இரவோடு இரவாக அகற்றிவிட்டனர். இன்று கலந்துரையாடல் நடைபெறும் புதுக்கோட்டை மதுரை சாலையில் உள்ள எஸ்.எஸ்.மகால் முன்பு பிரபாகரன் -சீமான் இணைந்திருப்பது மாதிரியான படம் வைக்கப்பட்டிருந்தது. டி.எஸ்.பி.சாமிநாதன் இந்த படத்தை அகற்ற உத்தரவிட்டார். கலந்துரையாடலுக்கு வந்த சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம் என்றனர் ஆவேசமாக.…

  14. [url="http://vannikuruvi.blogspot.com/2009/09/blog-post_19.html"]பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, படுகொலைக் காட்சியால் அதிர்ச்சியுற்ற ஐ.நா. சந்நிதானம், அடுக்கடுக்காக ஆட்களையும் அறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஐ.நா. மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுமென்

  15. ஜி.எஸ்.பி. பிளஸ் மற்றும் ஏனைய கதைகள் சுனந்த தேசப்பிரிய: இலங்கை இன்று சர்வதேச ரீதியில் எதிர்நோக்கிவரும் பாரிய பிரச்சினை என்ன? மேலோட்டமாக பார்க்கும் போது பல பிரச்சினைகளை இலங்கை எதிர்நோக்கி வருகின்றது. தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 12வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆற்றிய உரையின் அடிப்படையில், சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் இலங்கை மனித உரிமை சம்பந்தமாக மூன்று விடயங்கள் தொடர்பாக அக்கறை செலுத்துகிறது. வவுனியா தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் வன்னி மக்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. செனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட மனித படுகொலைகளைச் சித்தர…

  16. [ஒடியோ] இளைஞர்களே புறப்படுவீர் தமிழின விடுதலையை வென்றெடுக்க – இயக்குநர் சீமான் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் இன்று (19.09.2009) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் கலந்துகொண்ட இயக்குநர் சீமான் அவர்களின் உரை. ஒடியோ கேட்க >>>

  17. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு - சீமான் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20, 2009, 11:54 [iST] தூத்துக்குடி:இலங்கைதமிழர்கள

  18. சீமான் விவரிக்கும் தமிழீழத்தேசியத்தலைவருடனான சிலிர்ப்பான சந்திப்பு இயக்குநர் சீமான் அவர்கள் தமிழீழத்தில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சந்தித்ததைப்பற்றி ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி. சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். ‘பிரபாகரன் விரைவில் வருவார்!’ என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டு திருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். சீமானின் ‘நாம் தமிழர் இயக்கம்’ அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது. ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய செ…

  19. வன்னியில் அரசினால் இயக்கப்படும் தடுப்பு முகாம்கள் பூலோக நரகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா வர்ணித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  20. வைகறை, சென்னை 19/09/2009, 15:55 ஆயுதப் போராட்டம் விரைவில் வெடிக்கும்! கொழும்பு வாழ் தமிழ் மக்கள் கருத்து! தலைமறைவாக இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என்று கொழும்பு வாழ் தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாரம் தென்னிந்தியாவில் இருந்து கொழும்பு சென்று திரும்பிய ஊடகவியலாளர் ஒருவரிடம் இவ்வாறு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த யுத்தத்தில் சிறீலங்கா படைகள் வெற்றியீட்டியுள்ள பொழுதும், ஆங்காங்கே தலைமறைவாக இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான தயார்படுத்தல் இடம்பெறுவதாகவும் இவரிடம் கொழும்பு வாழ் த…

  21. தமிழ்நாடு செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் தம்மை உடனடியாக விடுதலை செய்யக் கோரி காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  22. சிறிலங்கா அரச தலைவருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் முற்றி வருகின்றன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர் ரோகித போகல்லாகம மீது மகிந்த ராஜபக்ச கடும் அதிருப்தியடைந்தார். தொடர்ந்து வாசிக்க

  23. சிறிலங்கா அரச தலைவருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் முற்றி வருகின்றன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர் ரோகித போகல்லாகமவை வாங்கு வாங்கென வாங்கினார் மகிந்த ராஜபக்ச. தொடர்ந்து வாசிக்க

  24. ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ இராச்சியத்தின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போது சிறீலங்கா சிங்கள அரச நிர்வாகத்தின் வரி வசூல்கள் எவையும் இடம்பெற்றதில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களும் அதுதான் சாட்டென்று வரி செலுத்தியதும் இல்லை. நிலக் கட்டுப்பாடுகள் விடுதலைப்புலிகளின் கைக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் விடுதலைப்புலிகளும் வரி வசூல் பற்றி அக்கறை காட்டவில்லை. பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் சில பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட சிறிதளவு வரியை வியாபாரிகள் மற்றும் பண முதலைகளிடம் இருந்து பெற முற்பட்டனர். உடனே அது சிங்கள ஆளும் வர்க்கத்தின் கவனத்திற்கும் மேற்குலக இராஜதந்திரிகளின் பார்வைக்கும் போய்..…

  25. தியாக தீபம் திலீபன் 6ம் நாள் 1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 20ம் திகதி இது திலீபனுடன் 6ம் நாள் இன்று காலையிலிருந்து நல்லூர் கந்தசாமி கோவிலில் திலீபனின் பெயரில் நூற்றுக்கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணம் இருந்தன பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத்தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். இறைவா திலீபனைக் காப்பாற்றிவிடு கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள் இதை நான் அவதானித்தனான். பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே அதுவும் தமிழ்க்கடவுளாகிய குமரன் சந்நிதியிலே இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.