Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மையில் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது ஐக்கியநாடுகள் அதிபர் என்ற வகையில் அவர் தோல்வியை தழுவியுள்ளார் என்று நோர்வேக்கான ஐக்கிய நாடுகள் மோனா ஜுல் குற்றம் சாட்டியுள்ளார். பொதுவாக ஐ.நா. அதிபரின் தலைமைத்துவ போக்கை நோர்வே தூதுவர் கண்டித்துள்ளார் என்று ஒஸ்லோ தினசரி பத்திரிகை ஆவ்தென்போஸ்டன் செய்தி வெளியிட்டுள்ளது. பான் கீ மூனுடன் பணியாற்ற முடியாத அளவுக்கு அவர் அடிக்கடி ஆத்திரமடைகிறார் என்றும் தலைமைத்துவத்தை பேண முடியாமல் தத்தளிக்கிறார் என்றும் பொறுப்பு அற்றவராக காணப்படுகிறார் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான நோர்வே தூதுவரிடமிருந்து பெற்றுக் கொண்ட அந்தரங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆவ்தென்போஸ்டன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. …

    • 0 replies
    • 603 views
  2. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அரசு அறிவித்தாலும்கூட, முன்னர் அவர்களின் பலம் வாய்ந்த கோட்டையாக இருந்த வன்னிப் பகுதியின் பாதுகாப்புக்காக மேலும் 50 ஆயிரம் பேர் சிறிலங்கா தரைப்படையில் இணைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 464 views
  3. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், அந்த அமைப்பு மீண்டும் ஒன்றிணையாமல் இருப்பதில் அரசு எச்சரிக்கையாக இருக்கின்றது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 353 views
  4. தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக போற்றப்படும் ரஜனி காந்த், அரசியல்வாதிகளான வை.கோ மற்றும் ராம்தாஸ் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் இயங்கி வரும் தமிழ் வானொலிச் சேவைகள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வியாபார முயற்சிகளுக்கு புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். குறித்த ஊடகங்கள் வெறுமனே இலங்கை அரசாங்கம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து, தமிழ் புலம்பெயர் மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை விளக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக எண்ணிக்கையிலான தமிழ் இணைய தளங்கள் புலம் பெயர் தமிழர்க…

    • 2 replies
    • 1.8k views
  5. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தமது கடமையை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகளுக்கான நோர்வே பிரதிநிதி முனா ஜூல் (Mona Juul) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை வகித்து வரும் பான் கீ மூன் தனது கடமைகளை மேற்கொள்ளவில்லை எனவும், அதிகாரத்தையும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது. பான் கீ மூன் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை எனவும், சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. உலகப் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். மூலம் - GTN

  6. இங்கிலாந்து ஆயுதங்களை வைத்து தமிழர்களை அழித்த இலங்கை புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2009, 16:49 [iST] லண்டன்: இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தமிழர்களுக்கு எதிரான போரில் பெருமளவில் இலங்கை ராணுவம் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் மட்டுமல்லாது, காஸாவிலும் இங்கிலாந்து ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் பெருமளவில் பயன்படுத்தியதாக இங்கிலாந்து எம்.பிக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அப்பாவி மனிதர்களுக்கு எதிரான போர்களில் இங்கிலாந்து தயாரிப்பு ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் காஸா முனையிலும், இலங்கையின் வடக்கிலும் இந்த வகை ஆயுதங…

  7. இலஙகைமீது அழுத்தம் கொடுக்க கிடைத்த சந்தர்ப்பத்தை கனடா இழந்துவிட்டது on 19-08-2009 18:11 சிறிலங்கா மீது அழுத்தம் கொடுக்க கனடாவுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை கனடா இழந்துவிட்டது : போரில் வெற்றி பெற்ற பின்னர் இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா அரசு நடத்தும் விதத்துக்கு எதிராக தனது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு கனடாவுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அது வீணடித்துவிட்டது என்று ஜோ பெக்கர் தெரிவித்துள்ளார். ஜோ பெக்கர் ஒரு மனித உரிமை ஆர்வலர். மனித உரிமைகள் காப்பகத்தின் சட்ட ஆலோசகர். பயத்துக்குள் வாழ்க்கை : விடுதலைப் புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பு, கடைசிப் போருக்கான நிதி வழங்கல் : புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் கப்பம் திரட்டல் ஆக…

  8. மன்னார் செய்தியாளர் மதுசன் 19/08/2009, 21:53 படையினர் குவிப்பு! மன்னாரில் சமாதானத்திற்கான பேரணி இரத்து! மன்னாரில் சமாதானத்துக்கான பேரணி ஒன்று சிறீலங்காப் படையினர் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சீ.எச்.ஏ. நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு திட்டமிட்டபடி இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் மக்கள் பேரணி, சமயத்தலைவர்களின் சமாதான செய்திகள் மற்றும் இன்னிசைக் கச்சேரியும் திடீரென நிறுத்தப்பட்டிருக்கின்றது. முன்னனுமதி பெறாத நிலையிலும், சமாதான நிகழ்வுகள் எனும் பெயரில் அரசாங்கத்திற்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாகவே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகப் சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை…

  9. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 19/08/2009, 21:38 இடம்பெயர்ந்த மக்களுக்கு பஹ்ரைன் நாடு 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியது இலங்கையில் யுத்த நடவடிக்கையினால் இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட நிலையில் ஏதிலிகள் முகாங்களில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பஹ்ரைன் நாடு 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதியை பஹ்ரைன் பிரதமர் ஷெய்க் கலிபா பின் ஸல்மான் அல் கலீபா 10 லட்சம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். குவைத்துக்கான பஹ்ரைன் தூதுவர் ஷெய்க் கலீபா பின் ஹமாத் அல் கலீபா, இலங்கைத் தூதுவர் சரத் திசாநாயக்கவிடம் இந்த நிதி கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு பஹ்ரைன் பிரதமர் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளா…

  10. மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிந்து அல்லது சேதமடைந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஐ.நா.வின் உயர்மட்ட அறிக்கை சி.என்.என்.க்கு கிடைத்திருப்பதாகவும் அந்தச் செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. உள்நாட்டு யுத்தத்தில் இரு தரப்பு மோதல்களுக்கிடையில் தப்பிப் பிழைத்து சிலமாதங்களே கடந்துள்ள நிலையில் மழையிலும் வெள்ளத்திலும் இந்த முகாம்களிலுள்ள மக்கள் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 இல் பெய்த கடும் மழையால் பல கூடாரங்களும் மலசல கூடங்களும் மூழ்கிவிட்டதுடன…

  11. இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல் காண்பித்தல் ஆகியவை 1967ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப…

  12. வீரகேசரி நாளேடு - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் பல இலட்சம் ரூபா பெறுதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை மற்றும் பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லூர் கந்தனின் தேர் உற்சவத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது இரண்டு பெண்களின் தாலிக் கொடிகள் மற்றும் ஏழு பெண்களின் தங்கச் சங்கிலிகள், ஒருவரின் கைச் சங்கிலி என்பன காணாமல் போயுள்ளதாக யாழ். மாநகர சபை உற்சவ கால பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை தவிர மேலும் பல கொள்ளைச் சம்பவங்கள…

  13. கலகங்கள் – ஆயுதக் குழுக்களை உருவாக்கும் இந்திய உளவு நிறுவனங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘எழும் தமிழ் ஈழம்’ என்ற தலைப்பில் நடத்திய இன விடுதலை அரசியல் மாநாட்டில் விளம்பர பேனர்களில் பிரபாகரன் படம் இருந்ததால் காவல்துறையே அந்த பேனர்களை அகற்றியது. மத்திய உளவுத் துறையினர் மாநாட்டை சீர்குலைக்கவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும், தி.மு.க ஆட்சிக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார். மத்திய அரசை எதிர்த்தால் தமது அரசை எதிர்ப்பதைவிட கடுமையாகக் கோபம் கொண்டு செயல்படக் கூடிய ‘தமிழின’ ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதே உண்மை. எனவே தான் தொல் திருமாவளவன் பேசிய அடுத்த நாளே தடை செய்யப்பட்ட இயக்கத்தை…

    • 1 reply
    • 2.1k views
  14. அரை நூற்றாண்டிற்கும் மேலாக இனப்படு கொலைக்கு ஆளாகி வரும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவாக இருக்க முடியும்? சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ஸ் – அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர் என்பதோடு, மனித உரிமைகள் தொடர்பான பல ஆய்வு நூல்களை எழுதியவர். உலக அளவிலான மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர் நேஷனலில் ‘உயர்மட்டக் குழு இயக்குனர்’ ஈழத்தில் தமிழினப் படுகொலையை எந்த ஒரு நாடும் தடுக்க முன் வந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியா, இதில் இழுக்கை தேடிக் கொண்டுவிட்டது. என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழகத்தில் வெளிவரும் ‘தலித் முரசு’ இதழுக்கு அவர் தொலைபேசியில் அளித்துள்…

  15. இன்று நான் இணையத்தில் படித்த செய்தி நெஞ்சை சுட்டெரித்தது அதாவது விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் இனவெறி கொண்ட சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ் யுவதிகள் பலர் கர்ப்பம் தரித்திருக்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கே தெரியாது எவ்வாறு தரித்தார்களென்று

    • 6 replies
    • 3.3k views
  16. போரில் வெற்றி பெற்ற பின்னர் இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா அரசு நடத்தும் விதத்துக்கு எதிராக தனது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு கனடாவுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அது வீணடித்துவிட்டது என்று ஜோ பெக்கர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 564 views
  17. 30 வருடங்களுக்குப் பின்னர் சிறிலங்கா முழுவதிலும் சனத்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 689 views
  18. அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக பிரித்தானிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சங்கள் எழுந்துள்ளதை அடுத்து சிறிலங்காவுக்கான ஆயுத விற்பனை மற்றும் விற்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முறை என்பன தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 404 views
  19. அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக பிரித்தானிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சங்கள் எழுந்துள்ளதை அடுத்து சிறிலங்காவுக்கான ஆயுத விற்பனை மற்றும் விற்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முறை என்பன தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 427 views
  20. தண்ணீரால் பரவும் நோய்கள் வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் பெருமளவுக்குப் பரவிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் தகவல் ஒன்றின்படி நாளாந்தம் 251 பேர் இவ்வாறான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 724 views
  21. கே.பி. பகீர் வாக்குமூலம்... பின்னணியும் பிரளயமும்! தமிழ்நாட்டில் திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தபோது, மாப்பிள்ளைத் தோழனாக தோள்கொடுத்து நின்றவர் குமரன் பத்மனாபா என்கிற கே.பி.! ஈழப் போரில் விடுதலைப்புலிகள் பெரிய அளவில் வீழ்த்தப்பட்டபோது, 'பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார்' என்பதை அறிவித்து, அடுத்தகட்ட தலைவராகத் தன்னை பிரதானப்படுத்திக் கொண்ட கே.பி., இப்போது இலங்கை ராணுவத்தின் பிடியில்! அவர் பிடிபட்ட விதம் குறித்து சிங்கள ராணுவம் பல்வேறு கதைகளைச் சொன்னாலும், நிஜத்தில் நடந்ததைப் புட்டுப்புட்டு வைக்கிறார்கள், சிங்கப்பூரில் உள்ள தமிழீழ ஆர்வலர்கள். மர்ம போனும்... மாட்டிய பின்னணியும்! ''மலேசியாவில் ஜலான் துங்கு அப்துல் ரஹ்…

  22. இலங்கைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது - அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வீரகேசரி நாளேடு 8/19/2009 1:45:54 AM - இலங்கைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. இந்தப் பணத்தின் மூலம், ஹில்டன் ஹோட்டல் போன்று மூன்று ஹோட்டல்களை நிர்மாணிக்க முடியும் என்பதுடன், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைத்துள்ள நிலையில், பல நாடுகள் இலங்கையில் முதலீடு செய்யத் தயாராகி வருகின்றன என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சபையில் நேற்று தெரிவித்தார். பாராளு மன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாததத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்ற…

  23. பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ் விரைவில் கைது செய்யப்படலாம் on 18-08-2009 19:51 Published in : செய்திகள், தமிழகம் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படு வோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து 20ந் தேதி சென்னையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரகடனம் வெளியிட உள்ள பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கப்பட்டதுடன் அந்த இயக்கத்தின் கொடிகள…

  24. வவுனியா ..தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள மனிக்பாம் முகாமின் படங்கள்.. கீழே உள்ள இணைப்பில் பாருங்கள்.. http://entertainment.webshots.com/album/57...7SaRmIH?start=0

    • 0 replies
    • 1.7k views
  25. கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மத்தியில் வாரத்திற்கொருமுறை புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 15 முதல் 20 புலிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள் மக்களை அப்பாவிகள் எனக் கூறி விட முடியாது. இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்கள் 20 வருடங்களாக நாட்டின் சட்டத்தை அறிந்திராத பயங்கரவாதிகளின் சட்டத்தின் பிரகாரம் வாழ்ந்த ஒரு பகுதியினராவர். எனவே முகாம்களில் வாழும் சகலரும் எந்தவித பாவமும் அறியாதவர்கள் எனக் கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கே.பி கைது செய்யப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.