ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
சிறிலங்கா அரசு அனைத்துலக சட்டங்களை மீறி செயற்படும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஒன்றிணைந்து - ஓரணியில் - செயற்பட்டு எமது இலட்சியத்தை அடைவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சர்வாதிகார ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சிறிலங்கா அரசின் ஆட்சியாளர்களால் ஈழத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவரும், தமிழ் மக்களின் அடுத்தகட்ட விடுதலைப் போராட்டத்துக்கான இராஐதந்திர நகர்வுகளுக்கு ப…
-
- 0 replies
- 376 views
-
-
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் சனிக்கிழமை "அவுஸ்திரேலிய தமிழர் பேரவை" எனும் புதிய கட்டமைப்பு உருவாக்கம் பெறவுள்ளது. காலத்தின் தேவை கருதியும்,தமிழர்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டும் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் புதிய கட்டுமானமாக உருவெடுக்கிறது இந்தப் பேரவை என, இப்பேரவை உருவாக்கம் பற்றி விடுக்கபட்டிருக்கும் அழைப்பு அறிக்கையில் தெரிவிக்கபட்டிருக்கிறது. மேலும் அவ்வறிக்கையில், சகல அமைப்புகளினதும் பூரண ஒத்துழைப்போடும்,அவர்களின் தனித்துவமான ஆலோசனைகளோடும் "ஒரே குடையின் கீழ் அணிதிரள்வோம்" என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி அவுஸ்திரேலிய தமிழர் பேரவை உருவாக்கம் பெறுகிறது. கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் விடிவிற்காகவும் பல்வேறு வழிகளில் குரல் கொடு…
-
- 0 replies
- 732 views
-
-
என்னைப் பொறுத்த வரையில் கொழும்பில் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனின் சகாப்தம் கொழும்பிலேயே முடியப் போகிறது என்று சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்தார். மலேசிய அரசு வழங்கிய ஒரு லட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியை கொழும்பில் உள்ள மலேசிய தூதுவர் ரொஸ்லி இஸ்மாயில் அமைச்சர் ரோகித போகல்லாகம ஊடாக சிறிலங்கா அரசிடம் கையளித்தார். இது தொடர்பான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகாரத்துறையின் அமைச்சில் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே ரோகித போகல்லாகம இந்தக் கருத்தைத் தெரிவித்தார். செல்வராசா பத்மநாதன் சிறிலங்கா அரசின் பிடியில் இருக்கிறார் எ…
-
- 0 replies
- 465 views
-
-
காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தபோது இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மொறட்டுவ, அங்குலான காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பொறுப்பதிகாரி உட்பட காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குலானை காவல் நிலையத்துக்கு புதிதாக பொறுப்பதிகாரி ஒருவரும், 11 காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை உடனடியாகவே தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அங்குலான காவல்துறையினரால் நேற்று முன்நாள் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்களினதும் உடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன…
-
- 1 reply
- 746 views
-
-
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படுவதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெற்காசியாவின் அக்கறை உள்ள குடிமக்கள் மன்றத்தின் (Concerned Citizens Forum of South Asia) பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அமைச்சரை நேற்று வியாழக்கிழமை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து நீண்ட நேரம் விவாதித்தது. தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மதிப்புக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு இந்த தெற்கு ஆசியாவின் அக்கறை உள்ள குடிமக்கள் மன்றம், சிறிலங்கா சுதந்த…
-
- 0 replies
- 367 views
-
-
வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களையும் விடுவிக்குமாறு கோரியும், அவர்களின் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனும் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இருந்து தலைநகரான கன்பராவை நோக்கி 300 கிலோ மீற்றர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள இரு தமிழ் இளைஞர்களும் இன்று காலை ஐந்தாவது நாளாக தமது பயணத்தை உற்சாகமாகத் தொடர்கின்றனர். நான்காவது நாளான நேற்றைய நாள் Bowral நகரை வந்தடைந்த இந்த இரு இளைஞர்களும் இரவு அங்கு தங்கியிருந்த பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை பெறிமா (Berrima) நகரை நோக்கிய தமது பயணத்தை உற்சாகமாகத் தொடங்கியிருக்கின்றனர். தொடர்ச்சியாக நான்கு நாட்களாக நடந்தமையால் கால்களில் ஏற…
-
- 0 replies
- 635 views
-
-
THE Sri Lankan Red Cross (SLRC) on Thursday cited non-payment of custom and port demurrage by the Indian Red Cross (IRC) since August 1 as the reason for the 840-tonne relief material being stuck at the Colombo port. Food and medicines meant for the 280,000 Tamil war refugees in north Sri Lanka had been originally dispatched by Mercy Mission of UK. It was handed over to IRC in Chennai, which in turn, sent it to Colombo but the relief material has been stuck in the port here since July 9. Suren Periris, head of Operations of the SLRC, told Express that the IRC had paid demurrage from July 9 to July 31, but they were still to pay from August 1 onwards. The ta…
-
- 0 replies
- 624 views
-
-
இதுவரை காலமும் பெருமளவுக்கு தமிழர்களையே இலக்கு வைத்திருந்த சிறிலங்கா காவல்துறையினரின் அத்துமீறல்களும், சட்டவிரோதச் செயற்பாடுகளும் தற்போது கொழும்பில் உள்ள சிங்கள் மக்கள் மீதும் பாயத் தொடங்கியுள்ளமை சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் தமிழ் மக்களை கடத்தல்கள், கொலைகள், கப்பம் மற்றும் ஏனைய பல துன்புறுத்ததல்களில் சிறிலங்கா காவல்துறை ஈடுபட்டு வந்திருந்தது. ஆனால், அவற்றை சிங்கள மக்கள் கண்டுகொள்ளவில்லை பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்றும் காரணத்தினால் தமக்கு என்ன என இருந்து விட்டார்கள். அத்துடன், இவ்வாறு கடத்தப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் குறிப்பிட்டு பிரச்சினைகளை காவல்துறையினர் தவிர்த்துக்கொண்…
-
- 1 reply
- 751 views
-
-
இலங்கையின் மனிதாபிமானச் சிக்கல்கள் மற்றும் அரசியல் கருத்து இணக்கம் என்பன குறித்து புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு விவகார அதிகாரி ஜேம்ஸ் மூரேயும் உடன் இருந்தார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பின்போது, புலம்பெயர் தமிழர்களின் கவலைகளையும் நோக்கங்கள் குறித்தும், மனித உரிமை சிக்கல்கள் தொடர்பில் அமெரிக்கா எட…
-
- 1 reply
- 514 views
-
-
"சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகரில் பெரும் தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் வரை நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என என்னால் பிரகடனப்படுத்த முடியாது" என அந்நாட்டுப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். "மலேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட செல்வராஜா பத்மநாதன், கொழும்பில் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் பெரும் தொகையான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் எனக் குறிப்பிட்ட பிரதமர், "இவ்வாறு பதுக்கிவைக்கப்பட்டு…
-
- 0 replies
- 538 views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் மருத்துவ வசதிகள் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பிரான்சைத் தலைமையகமாகக் கொண்ட எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு, அவசர பராமரிப்பை வேண்டியுள்ள நோயாளர்கள் கூட மருத்துவரைச் சந்திப்பதற்கு பல நாட்கள் காத்து இருக்க வேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தற்போதும் வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். இருந்தபோதும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்துகொடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்குச் செல்வதாயின் மருத்துவத்துறை அறிவற்ற படையினரின் அனுமதியையே வேண்டிநிற்க வேண்டியுள்ளது எனவும் எம்.எஸ்.எஃ…
-
- 0 replies
- 683 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளர் நாயகம் செல்வராஜா பத்மநாதனைக் கைதுசெய்து கொண்டுவருவது என்பது சிறிலங்கா அரசின் நீண்டகாலத் திட்டம் எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புலிகளை அனைத்துலக மட்டத்தில் அழித்து ஒழிப்பதிலேயே தமது கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். தொடக்கத்தில் இருந்தே பத்மநாதன் தொடர்பான தகவல்களை புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் கண்காணிக்கத் தொடங்கியிருந்தார்கள் எனவும் அரச கட்டுப்பாட்டில் உள்ள வானொலிக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்த கோத்தபாய, பத்மநாதன் மீதான விசாரணைகளைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் வலையமைப்புக்கள் பற்றிய பல தக…
-
- 0 replies
- 602 views
-
-
வாஷிங்டன் : இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னை, இனிமேல் செய்ய வேண்டிய புனரமைப்பு திட்டங்கள் போன்ற பல விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இலங்கை தமிழர்கள் சார்பாக 16 பேர் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை செயலர் ராபர்ட் பிளாக் இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். இலங்கைக்கான அமெரிக்க தூதர் சார்ஜ் மோரும் இதில் கலந்து கொண்டார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து இம்மாதிரியான கூட்டம் ஒன்றை அமெரிக்க அரசு நடத்தியிருப்பது இதுவே முதல்முறை. தினமலர்
-
- 5 replies
- 1.3k views
-
-
காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தபோது இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மொரட்டுவ, அங்குலான காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பொறுப்பதிகாரி உட்பட காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குலானை காவல்துறை நிலையத்துக்கு புதிதாக பொறுப்பதிகாரி ஒருவரும், 11 காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் இன்று உடனடியாகவே தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அங்குலான காவல்துறையினரால் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்களினதும் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று வியாழக்கிழமை…
-
- 0 replies
- 586 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளர் நாயகம் செல்வராஜா பத்மநாதனைக் கைதுசெய்து கொண்டுவருவதென்பது சிறிலங்கா அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டம் எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புலிகளை அனைத்துலக மட்டத்தில் அழித்தொழிப்பதிலேயே தமது கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆரம்பத்திலிருந்தே பத்மநாதன் தொடர்பான தகவல்களை புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் கண்காணிக்கத் தொடங்கியிருந்தார்கள் எனவும் அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள வானொலிக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்த கோதாபாய, பத்மநாதன் மீதான விசாரணைகளைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் வலையமைப்புக்கள் பற்றிய பல…
-
- 0 replies
- 666 views
-
-
சிறிலங்கா அரச, நாடாளுமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்த முடிவு - மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்லப்போவதாக மகிந்த அறிவிப்பு திகதி: 13.08.2009 // தமிழீழம் சிறீலங்கா அரச அதிபர் தேர்தல் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்வரும் 2010ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நடாத்தத் தீர்மானித்துள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன இனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சிறீலங்கா அரச அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்மாகாணசப…
-
- 0 replies
- 588 views
-
-
''ஈழத் தமிழரின் ஆத்மாவின் எதிர்பார்ப்பு'' இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட சீனாவுக்கு யோசனை ---- இணையதள கட்டுரை - ஷான்-லீ சீனா சிறிது முயற்சி மேற்கொண்டால்' கூட்டாட்சி நாடு' என்று பெருமை பேசி வரும் இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட செய்துவிடலாம் என சீனாவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை குறித்த 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற அதே தினத்திலேயே சீனாவுக்கு சர்வதேச மற்றும் இராணுவ விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கி வரும் சீன சர்வதேச யுத்த தந்திர ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைய தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந…
-
- 2 replies
- 905 views
-
-
புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிக்க அரசாங்கத்தால் முடியாதென்ற கருத்துக்களை அரசாங்கம் தவிடு பொடியாக்கியுள்ளதாக ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது அமெரிக்க அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடித் தொடர்புகள் காணப்பட்டதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது புலி ஆதரவாளர்கள் பரக் ஒபாமாவிற்கு ஆதரவாக செயற்பட்டதாகத் தெரிவித்துள்ள குமரன் பத்மநாதன், தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழ விடுதலைக்கு இந்தியா உதவாது என்பது தான் என்னுடைய கருத்து என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல் வருமாறு: கேள்வி: இலங்கையில் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் உறவுகளுக்காக உங்களால் என்ன செய்ய முடியும்? பதில்: சொல்லமுடியாத துயரத்தை, வேதனையை, இந்த நிகழ்வு எமக்குக் கணித்திருக்கிறது. நடந்து முடிந்துள்ள அவலங்களை எல்லாம் விட இப்போது, முட்கம்பி வேலிகளுக்குள், வதை முகாங்களுக்குள் சிக்கி அவலப்பட்டுக்கொண்டிருக்கிற எமது தமிழ்ச் சொந்தங்கள் எல்லாம் படும் அவலம் தான் எம்மை வேதனைப்பட வைத்திருக்கிறது. இதுதொடர்பில் அ…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை அரசாங்கம் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானரும் புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு உலகம் முழுவதிலும் ஆயிரத்து 582 வங்கி கணக்குகள் இருப்பதாகவும் இது குறித்த ரகசிய அறிக்கையை கனேடிய ரகசிய காவற்துறையினர் சர்வதேச காவற்துறையினரிடம் வழங்கியிருப்பதாகவும் சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் கே.பிக்கு நிதி வழங்கப்பட்ட விதம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் உள்ள எந்த ஆயுத அமைப்புக்கும் இவ்வாறு பெருமளவிலான வங்கி கணக்குகள் இருக்கவில்லை எனவும் கே.பியின் மலேசியா மற்றும் சிங்கபூர் வங்கிக் கணக்குகள் பற்றியும் அந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள…
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியா நகர சபைத் தேர்தலில் அரசாங்கத்தினால் வெற்றிப் பெற முடியாமல் போனது பற்றி ஜனாதிபதி மற்றும் அவரது சில ஆலோசகர்களுக்கும் இடையில் மிகவும் ரகசியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.விடுதலைப்புலி
-
- 0 replies
- 707 views
-
-
கொழும்பு – அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை கே.பி வெளியிட்டு வருகிறார் ‐ பிரதமர்: கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவர் எனக்கூறுப்படும் கே.பி கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் இதனால் அவற்றை அகற்றும் வரை முழு இலங்கையிலும் சமாதானம் ஏற்பட்டு விட்டது எனக் கூறமுடியாது என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹொரணையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 30 வருடங்களாக காணப்பட்ட இருண்ட யுகம் தற்போது அற்றுப் போயுள்ளதாக சிலர் நினைக்கின்றனர். அந்த யுகம் அற்றுப் போயுள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் இரத்மலானை அங்குலானைப் பகுதியில் இன்று காலை இரண்டு சிங்கள இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியெங்கும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த இளைஞர்களைப் பொலிஸாரே சுட்டிருக்கலாம் எனக் கருதிய அந்தப் பகுதிப் பொதுமக்கள், இந்த இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற பொலிஸாரைக் கைது செய்யச் கோரி புகையிரதத்தை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது புiகையிரதப் போக்குவரத்துகள் பாதிப்படைந்துள்ளன. புகையிரத வீதி மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள் அங்குலானை பொலிஸ் நிலையத்தினையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதன் மூலம் பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் பலத்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு
-
- 1 reply
- 817 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளர் நாயகம் செல்வராஜா பத்மநாதனைக் கைதுசெய்து கொண்டுவருவதில் அனைத்துலகச் சட்டங்களை மீறும் வகையில் அரசு செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, மிகவும் வேண்டப்படும் ஒரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கு அனைத்துலகத்தின் ஒத்துழைப்பை தாம் பெற்றுக்கொண்டதாகவும் அறிவித்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 453 views
-
-
இலங்கை வரலாற்றில், அநுராதபுர காலத்துக்கு பின் கிடைத்த பெரு வெற்றி, கே.பியின் கைது எனப் பெருமிதம் கொள்கிறார் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர். விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளரான செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்துத் கருத்துத் தெரிவித்த ஜாதிக ஹெல உருமயவின் தலைவரான எல்லாவெல மேதானந்த தேரர், திறமைமிகு புலனாய்வுப் பிரதிநிதிகள் இலங்கையின் வரலாற்றுக்காலத்தில் மட்டுமல்ல இன்றைய காலத்திலும் இருக்கிறார்கள் என்பது, கே.பி கைது செய்யப்பட்ட விடயத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கி
-
- 1 reply
- 696 views
-