Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத் தீவகப் பகுதியில் இந்திய மீனவர்களின் சடலங்கள் வீரகேசரி இணையம் 7/23/2009 12:08:38 PM - யாழ்ப்பாணத் தீவகப் பகுதியில் தொடர்ந்து நேற்றும் நான்கு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்தச் சடலங்கள் இந்திய மீனவர்களுடையதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவை உரிய முறையில் முழுமையாக இனம் காணப்படாத நிலைமை காணப்படுகின்றது. நேற்று மாலையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நான்கு சடலங்கள் ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோஜ் மகாதேவாவின் பணிப்புரையின் பெயரில் பிரேத பரிசோதனைக்காகவும் சடலங்களை அடையாளம் காண்பதற்காகவும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீவகப் பகுதியில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் மண்கும்பான் கடற்கரையில…

  2. சித்திரவதை முகாம்களில் சிக்கியுள்ள மூன்று லட்சம் ஈழத் தமிழரை அவர்களின் வாழ்விடங்களில் உடனே மீண்டும் குடியமர்த்தக் கோரியும், இரக்கமற்ற போர்க் குற்றவாளிகள் ராஜபக்ச சகோதரர்களைக் கைதுசெய்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நாளை தொடங்குகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 270 views
  3. சித்திரவதை முகாம்களில் சிக்கியுள்ள மூன்று லட்சம் ஈழத் தமிழரை அவர்களின் வாழ்விடங்களில் உடனே மீண்டும் குடியமர்த்தக் கோரியும், இரக்கமற்ற போர்க் குற்றவாளிகள் ராஜபக்ச சகோதரர்களைக் கைதுசெய்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும் தமிழகம் தழுவிய கையெழுத்து இயக்கம் நாளை தொடங்குகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 457 views
  4. உலகத் தமிழர் பேரவை – ஊடக அறிக்கை உலகெங்கிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்ததின் விளைவாக “உலகத் தமிழர் பேரவை” உதயமாகின்றது. தமிழர் மீது நடாத்தப்பட்ட பாரிய இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் முகமாகவும் , ஜேர்மனிய நாசி வதை முகாங்களிற்கு ஒப்பான வதை முகாங்களில் வாடும் எமது உறவுகளை மீட்கவும் உலகில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் ஒலிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். சர்வதேசமயமான சுயாதீனமான, ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இப்பேரவையானது வலுப்பெறவுள்ளது. இலங்கைதீவினில் தமிழர்களது பாரம்பரிய…

  5. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் மத்தியில் ஊடுருவியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு முற்றாக வேர் அறுக்கப்படும் வரையில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படமாட்டார்கள் என அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கின்றார். வடபகுதியில் உள்ள முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கொழும்பு திரும்பியுள்ள அமைச்சர், அது தொடர்பாக நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். முகாம்களில் உள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் அரசு முடிந்தளவுக்கு அனைத்தையும் செய்யும் எனவும் தெரிவித்த அவர், மனித உரிமைகள் விடயத்திலும் தான் கவனம் செலுத்துவதாகக் கு…

    • 0 replies
    • 562 views
  6. சிறிலங்காவின் தமிழர் விரோதப் போக்கிற்கு இந்தியா ஆதரவளிக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தொல். திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கொடுமையான பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களை நேரடியாகச் சென்றடைய உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த நிதியை சிறிலங்கா அரசின் கைகளில் ஒப்படைக்கக்கூடாது. முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகிவரும் 3 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு…

    • 0 replies
    • 500 views
  7. தமிழர் மனித உரிமைகள் மைய அறிக்கை பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் – தமிழீழ மக்களுக்கு எதிராக போர்க் குற்றம் புரிந்த சிறிலங்கா அரச பிரதிநிதிகளும் பாதுகாப்பு அதிகரிகளும் இந் நாடுகளுக்கு விஜயம் செய்யும் வேளைகளில், இவர்கள் மீது, அந்த நாட்டின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு அமைய, நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய தயாராக வேண்டுமென அறைகூவல் விட்டுள்ளது. தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம்; தற்பொழுது சிறிலங்காவை காப்பாற்ற முன்வந்த நாடுகள், தமது வெளிநாட்டு கொள்கைகளை மாற்றும் வேளைகளில், காலம் கடந்தாலும் இனச் சுத்திகரிப்பை மே…

  8. பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது : அருட்தந்தை ஜெகத் கஸ்பார் இந்தியாவின் கை இரத்தப் பழியைச் சுமப்பதாகத் குற்றம் சாட்டியுள்ள அருட்தந்தை ஜெகத் கஸ்பார், ஈழத் தமிழ் இனத்திற்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ‘நக்கீரன்’ குழுமத்தின் ‘இனிய உதயம்’ காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார். ‘நக்கீரன்’ இதழில் தற்போது நீங்கள் எழுதிவரும் ‘மறக்க முடியுமா?’ கட்டுரைத் தொடரானது, ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது. பிரபாகரன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்கள் மீது போரைத் திணித்தவர் என்றெல்லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டிய பிம்பத்துக்கு…

  9. ஈழப்பிரச்சனை உட்பட பல விடயங்களில் உரிய முறையில் செயற்படத் தவறி இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் செயலர் நாயகம் பான் கி-மூன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேவையான தொடர்பாடலைப் பேணி, ஆக்கபூர்வ நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கத் தவறி இருப்பதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள பான் கி-மூன், தன்னைப் பற்றி மக்கள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐந்து வருடப் பதவிக் காலத்தில் அரைவாசிப் பகுதி மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், சூடானின் டார்பூர், இலங்கையில் ஈழத்தமிழர்கள், மற்றும் மியன்மாரின் படைத்துறை ஆட்சி போன்ற விடயங்களில் இவர் ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை என மேற்குலக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. புல ஊடகங்களின் இவ்…

    • 1 reply
    • 631 views
  10. மகள் மீது பாலியல் வல்லுறவு கொண்ட துணைப்படைக்குழு உறுப்பினருக்கு 15 வருட கடூழியச் சிறை பதினாறு அகவை நிரம்பாத தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக துணைப்படைக்குழு உறுப்பினர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக இருந்த இவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில், சட்டமா அதிபரினால் பதினாறு வயதுக்குக் குறைந்த தனது மகள் மீதான பாலியல்வல்லுறவு தொடர்பில் 3 குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறும…

  11. போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் இலட்சியம் மாறாது என்பது பொதுவான கூற்று.ஒரு இலக்கினை அடைவதற்கு, பலவிதமான அரசியல் செயற்பாடுகள் பரீட்சித்துப் பார்க்கப்படும். அடக்கு முறையாளன் அரசாக இருக்கும்போது, இராணுவ ஒடுக்குமுறையானது, போராடும் மக்கள் மீது ஏவிவிடப்படும் என்பது உலக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஒரே தேசிய இனத்தினுள் சாதீய முரண்பாடு, மத முரண்பாடுகள் வெடிக்கும்போது, வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. சமூகக் கட்டமைப்பிலுள்ள வர்க்க நிலை சார்ந்த முரண்நிலைகள் கூர்மையடைந்து, மோதல்களை உருவாக்கும். ஆனாலும் இத்தகைய முரண் நிலைகளையும் மீறி, பெருந் தேசிய இனவாதம் கட்டவிழ்த்து விடும் அடக்கு முறைகள், முதன்மையுறும்போது, தேசிய இன விடுதலைப் போராட்டம் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக மாற்றமு…

  12. இலங்கை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு தாய்லாந்தில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஏசியான்) வெளியுறவுத்துறை அமைச்சர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இன்று சந்தித்து உரையாடினர். சிறிலங்காவில் போருக்குப் பின்னரான நிலைமை குறித்தும், போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு விரைவில் மறுவாழ்வு அளிப்பது குறித்தும் அவர்கள் இருவரும் விவாதித்தனர் என்று கூறப்படுகிறது. இச்சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, போரினால் இடம்பெயர்ந்த 3 லட்சம் அப்பாவித் தமிழ் மக்களை ம…

  13. பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அழைப்பு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்ஸ், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ், தமிழ் இளையோர் அமைப்பு பிரான்ஸ்,தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்ஸ் ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து, பிரான்சின் மனிதவுரிமைச் சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் வியாழக்கிழமையன்று (23.07.2009) பி.பகல் 4 மணிதொடக்கம் 6 மணி வரை ஒன்று கூடல் நடாத்தவுள்ளனர். 1983 யூலை 23 தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்து துடித்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கத்தில் அனைவரும் ஒன்றாவோம். மாபெரும் …

  14. மங்களவுக்கு குற்றப் புலனாய்வுத்துறை அழைப்பாணை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவை, உடனடியாக விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப்(CID) பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் ரவி வித்யாலங்கார அழைப்பாணை விடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் வெளியான டைம்ஸ் பத்திரிகையில் 1,400 ஏதிலிகள் மாதம் தோறும் இறப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் அதில் மங்கள சமரவீரவைப் மேற்கோள்காட்டி சில வரிகள் எழுதப்பட்டிருந்தது அரசை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை அரசின் கவனம் இவர்மீது திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே குற்றப்புலனாய்வுப் பி…

  15. சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினரின் தகவலின் பேரில் ஆயுதங்கள் மீட்பாம் – சிறிலங்கா இராணுவம் தெரிவிப்பு [படங்கள் இணைப்பு] சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினரின் தகவலின் பேரில் ஆயுதங்களை தாம் மீட்டதாக சிறிலங்கா இராணுவம் தெரிவிக்கிறது. செல்வம் என்றழைக்கப்படும் புலிகளின் பயிற்றுவிப்பாளர் ஒருவரின் வீட்டின் பின்புறம் இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வெடிபொருட்கள், ரொக்கட் லோஞ்சர்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக் கூறப்படுகிறது. இது தொடர்பான படங்களை சிறிலங்காத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளி கொடுத்த தகவலின் பேரில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சி…

  16. கொழும்புயாழ்ப்பாணம் விமான சேவை கட்டணங்கள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்கும் இரத்மலானைக்கும் இடையில் விமான சேவை நடத்திவரும் இரு தனியார் நிறுவனங்களுடன் நேற்று நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் விமான பயணக்கட்டணத்தை சுமார் 10 சதவீதத்தால் குறைப்பதென தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், எக்ஸ்போ ஏவியேஷன் நிறுவனத்தினால் தற்போது ஒரு வழிப் பயணத்துக்கு அறவிடப்படும் 10,750 ரூபா கட்டணமா…

  17. யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய நான்கு உடலங்களும் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினதாக இருக்க வேண்டும் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இரண்டு உடலங்கள் புங்குடுதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதேவேளையில் மேலும் இரு உடலங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எழுவைதீவுக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நான்கு உலங்களும் யாழ்ப்பாணம் மருத்துவமனை பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட இந்த நான்கு …

  18. சிங்கள கடற்படையினர் மீது இந்திய நாளிதழ் குற்றச்சாட்டு இந்திய கடற்பரப்பின் உரிமையையும் தமிழக மீனவர்களிடம் இருந்து சிங்கள கடற்படையினர் பறித்து வருவதாக இந்திய நாளிதழ் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. கச்சத்தீவின் அதிகாரம் சிறிலலங்காவுக்கு வழங்கப்பட்ட போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையை சிங்கள கடற்படையினர் மீறி வருவதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. சிங்கள கடற்படையின் இந்த நாசகார செயல், இந்திய மத்திய அரசாங்கம் கண்டிப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் கச்சத்தீவினை இந்தியா மீள பெறுவது தொடர்பில் அழுத்தங்கள் எழ ஆரம்பித்த நிலையில், சிறிலங்கா அரசாங்கம் சற்றே அடக்கி வாசித்தாலும், மீண்டும் அங்கு பாதுகாப்பு கோபுரத்தை அமைத்து தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முய…

    • 2 replies
    • 581 views
  19. இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான, கெளரவமான வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான அரசியல் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் தான் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். எகிப்தில் நடந்த முடிந்த அணி சேரா நாடுகள் (Non Aligned Movement - NAM) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இராசா எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது என்றும், அவர்களின் பிரச்சனைக்கு 1987ஆம் ஆண்டு…

  20. பறவையே.. விரி சிறகை உறவைக் காக்க என் எண்ணததில் என்றும் என் இனப் பறவையின் சரணாலயம்.. வெண் பனிமலை முகடுகளும் தீங்கனிச் சோலை தழுவிய ஆற்றுப் படுக்கைகளும்.. பச்சை வயல் வெளி விரிப்புகளும்.. அந்த வெண்மணல் தடவும் கடலலைச் சிரிப்புகளும். தென்றல் தாளாட்டும் குளக் கரையும.;.. புல்லினங்கள் கூடுகட்டும் தென்னம்பனைச் சரடுக் காடுகளும்.. தொன்மைத் தமிழ் வாழவைக்கும் எங்கள் தமிழ் தாய் இலக்கிய வருடல்களும்.. வீர வரளாறுகளும் புதைத்து வைத்துள்ள வீர மணி முத்துக்களின் துயிலும் இல்லங்களும். எந்தன் முந்தை வினை தொடங்கிய கரப்பன் வழி குடியிருப்பும்.. கன்னித் தமிழகமும் ஈழத்து நிலப் பரப்பு எங்கும் பறந்து.. சிறகடித்த மூத்தகுடிப் பறவையினம் நாம்.. சிறகொடிந்து வாழ்வோமா.. இல்லை எம்…

  21. விடுதலைப் புலிகளுடனான இராணுவப் போர் முடிந்து விட்டாலும் கூட முழுமையாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருத முடியாது என்று கெஹலிய ரம்புகவெல கூறியுள்ளார். கெஹலிய ரம்புகவெலஅளித்துள்ள தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளதாவது: விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நாம் கருத முடியாது. தற்போது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். சூசை ஒரு சமயத்தில் குறிப்பிட்டார் "உண்மையான யுத்தம் தரையில் அல்ல கடலிலேயே இருப்பதாக". எனினும், அவை அனைத்தும் தற்போது வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளையர்களும் செயற்பட்டார்கள். உலகில் எந்தவொரு அமைப்பிற்கும் இல்லாத பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். அவர…

    • 9 replies
    • 1k views
  22. செய்தியாளர் கயல்விழி 22/07/2009, 12:38 630 மில்லியன் யென் அரசுக்கு யப்பான் வழங்கவுள்ளது சிறீலங்கா அரசுக்கு மேலும் 630 மில்லியன் யென்களை வழங்க யப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையின் வானிலை அவதான நிலையத்திற்கு என 630 மில்லியன் யென் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, யப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறீலங்காவின் மனித உரிமைகள், மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க யப்பானிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கையில் முதலீடு செய்யும் நாடுகளின் வரிசையில் யப்பான் முதலிடத்திலும், சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த நிலைகளிலும் உள்ளன. பதிவு

  23. செய்தியாளர் கோபி 22/07/2009, 14:39 மெனிக்பாம் ஏதிலிகள் முகாமிலிருந்த தேசியத் தலைவரின் பெற்றோரைக் காணவில்லை வவுனியா மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது பெற்றோரைக் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக இவர்கள் மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவர்கள் சிறீலங்காப் படையினரால் இரகசிய இடத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த 17ம் நாள் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிகையின் போது அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது. pathivu

  24. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடாவே அதிக நிதியுதவி வழங்கியுள்ளது நெசனல் போஸ்ட் : தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அதிகளவு சர்வதேச நிதியுதவி கனடாவிலிருந்தே கிடைக்கப் பெற்றுள்ளதென பிரபல இணைய தளமான நெசனல் போஸ்ட் தெரிவித்துள்ளது. வருடாந்தம் 12 மில்லியன் டொலர்கள் பணம் கனடாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கனேடிய புலம்பெயர் தமிழர்களே அதிகளவு விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் 10 முதல் 12 மில்லியன் டொலர் பணம் புலிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரொரன்டோ மற்றும் மொன்றியல் பகுதிகளில்…

    • 1 reply
    • 1.2k views
  25. இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம், சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை பேட்டிகண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து பத்திரிகையில் எழுதியமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல. நன்கு திட்டமிடப்பட்டு கருணாநிதியின் அறிக்கையோடும் ப.கிருஷ்ணாவின் அறிக்கையோடும் சேர்த்து ஒரே நேரத்தில்றோவினால் இயக்கப்பட்டுத் தமிழீழத் தேசியத்திற்கும், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் சேர்த்து வைக்கப்பட்ட சாவு மணியாகும். கொழும்பு சென்னை டெல்லி அச்சில் செயற்படுத்தப்பட்ட ஒரு கூட்டுச் சதியே இவ் அறிக்கையும், பேட்டியும். பாசிஸ்டுகளினதும், ஸ்ராலினிஸ்டுகளினதும் கோட்பாடுகளைப் பின்பற்றி, போர்க் குற்றவாளிகளைக் காத்து நின்று, போரிலே தோல்வியடைந்த மக்களை மேலும் அழிவிற்குள்ளாக்கி, அவர்கள் மீது சாத்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.