Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செய்தியாளர் தாயகன் 20/07/2009, 02:19 வவுனியா முகாம்கள் நிரந்தரமாகும அபாயம் - கசிந்துள்ள தகவல்கள் வவுனியா முகாம்கள் நிரந்தரமாகும் அபாயம் காணப்படுவதாக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஏ.பி செய்திச் சேவை எச்சரிக்கை செய்துள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் 180 நாட்களுக்குள் மீளக் குடியேற்றப்படுவர் என சிறீலங்கா அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகின்ற போதிலும், அதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. மாறாக வவுனியா முகாம்களிலுள்ள மக்களை வெளியே செல்ல விடாது தடுத்து வைத்துள்ள சிறீலங்கா அரசு, முகாம்களிற்குள் வைப்பகம், அஞ்சல் அலுவலகம், பாடசாலை, சந்தை என்பவற்றை அமைத்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முகாம்களிற்கென பல மில்லியன் ரூபாக்கள…

  2. சிறிலங்காவின் பிரதான வானூர்தி தளங்களில் ஒன்றான அநுராதபுர வானூர்தி தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய நபர் வவுனியா இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2007 ஒக்ரோபரில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 24 கரும்புலிகள் கலந்துகொண்டதாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்ததாக காவல்துறையினரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் உட்பட மூன்று பேர் அநுராதபுரம் முகாமுக்கு வெளியால் நின்று தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கட்டளைகளை வழங்க மற்றவர்கள் சிறு சிறு குழுக்களாக கம்பி வேலிகளை வெட்டிக்கொண்டு முகாமுக்குள் பிரவேசித்ததாக கைது செய்யப்பட்டவர் ஒப்புக்கொண்டதாகவு…

    • 0 replies
    • 435 views
  3. சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதியும் அரச தலைவரின் தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டவருமான வசந்த கரணகொட, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சில் தனது புதிய பதவியை அவர் இன்று ஏற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படைத் தளபதியாக இருந்த வசந்த கரணகொட கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டு அரச தலைவரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இருந்தபோதிலும் இந்தப் பதவி மாற்றத்தினால் அதிருப்தியடைந்த அவர் அதனை வெளிப்படுத்தும் முகமாக தனக்கான நியமனக் கடிதத்தை இடது கையால் பெற்றுக்கொண்டார். இருந்தபோதிலும் தனக்கு உறுதியளித்தபடி பிரித்தானியா அல்ல…

    • 0 replies
    • 340 views
  4. சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் சிக்கி தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24.07.09) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் நேற்று ஆலேசானைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் …

    • 0 replies
    • 312 views
  5. இன்றைய (19 -07 -09) செய்திகள்

    • 0 replies
    • 722 views
  6. இந்திய இராணுவத்தினர் 5000 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்? இலங்கை வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 5 ஆயிரம் இந்திய இராணுவம் கொழும்பு வந்தடைந்திருப்பதாக தமிழகத்தில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக கண்ணி வெடிகளை அகற்றவென இந்திய இராணுவத்தினர் 500பேர் இலங்கை வரவுள்ளனர் என்று பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக அண்மையில் தெரிவித்தார். ஆனால் தற்போது 5 ஆயிரம் வீரர்கள் வரை வந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குச் சென்று பணியைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த இதழில் மேலும் கூறியிருப்பதாவது: சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிரு…

  7. ஈழப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு தனது வல்லாதிக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ள இந்தியா, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக முன்னணியை (ஈ.என்.டி.எல்.எப்.) அமைப்பைப் பயன்படுத்தியே தனது மறைமுக வேலைத் திட்டம் ஒன்றை இந்தியா தற்போது வகுத்துவருவதாக தெரியவந்திருக்கின்றது. இ…

  8. செய்தியாளர் முகிலன் 18/07/2009, 17:47 தமிழர் தாயகப் பகுதியில் 80 விடுக்காடு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன – சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழர் தாயகப் பகுதியில் 80 விடுக்காடு நிலப்பரப்புகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதியில் 80 விடுக்காடு நிலப்பரப்புகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டன. மீள் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் எனக் கூறி மீள் குடியேற்றத்தை இழுத்தடிப்புச் செய்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அம…

  9. விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் திட்டங்கள், ஆயுதக் கொள்வனவு விபரங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய கோப்புக்கள் சில மீட்கப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளாமுள்ளிக்குளம் பகுதியில் நிலத்தின்கீழ் புதைத்துவைக்கப்பட்டிருந்தே இந்தக் கோப்புக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த 272 கோப்புக்கள் மீட்கப்பட்டிருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன கூறினார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் கடந்த 10 வருடங்களாக இணைந்து செயற்பட்டுவந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை மீட்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். விடுதலைப் புலி…

    • 2 replies
    • 2.1k views
  10. செய்தியாளர் மயூரன் 19/07/2009, 13:06 நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டுள்ளது - மகிந்த ராஜபக்ச நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கே கடிதம் மூலம் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதித்துறையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் கைத்துதொழித்துற…

    • 5 replies
    • 2.1k views
  11. ஆங்கில நூல்களின் அறிவுரைகளை போராளிகளுக்கு வழங்கிய தேசியத்தலைவர் தமிழீழ தேசியத் தலைவர் போராட்டக் காலங்களில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்கள் பற்றிய அறிவை போராளிகளுக்கு ஊட்டியுள்ளார் என சிங்கள நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. போலீஸ் திணைக்கள உயரதிகாரியான அனுரா சேனநாயக்கவை ஆதாரம் காட்டி எழுதப்பட்டுள்ள அச் செய்தியில், கடந்த 6 நாட்களாக வன்னியில் நடாத்தப்பட்ட பாரிய தேடுதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக

  12. தமக்குள் அணி சேராமல், முரண்பட்டு நிற் கும் நாடுகளின் மாநாடொன்று எகிப்தில் நடை பெற்றுள்ளது. அதற்கு அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு என்கிற பெயரும் சூட்டப்பட் டுள்ளது. பொதுவாக இம் மாநாடுகளில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள் நிதியுதவி, முதலீடு, உலக விவகாரங்களில் அணி சேர்வது குறித்து பேசுவார்கள். உத்தியோகபூர்வமற்ற முறையில் நடைபெறும் சந்திப்புக்களுக்கு உத்தியோகபூர்வமான அங்கீகாரம் வழங்கும் ஒன்றுகூடல் தளமிது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னான பனிப்போர் காலத்தில் மூன்றாம் உலக நாடுகளால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் உறுப்பினராகவுள்ள பல நாடுகள், பிராந்திய அணு ஆயுத வல்லரசுகளாகவும், பொருளாதõரத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளாகவும் திகழ்கின்றன. தற்போதைய அமெரிக்கப் பொ…

  13. பிரான்சில் இன்று மாலை முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இடம்: Galleni (Rue de marché) M°3 (சங்கொலி பாட்டுப்போட்டி நடைபெற்ற நகரசபை மண்டபம்) நேரம் : 17:00

  14. ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக கலைஞர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து நடந்தார்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்தான் காவலர் என்றெல்லாம் நம்பியிருந்தார்கள். தங்களுக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் கலைஞர் வந்து தங்களைக் காப்பாற்றுவார் என்றெல்லாம் காத்திருந்தார்கள். ஆனால் அண்மையில்தான் அவரது போலித்தனம் அம்பலமாகியது. அவரது முழுதான நோக்கமே தனது குடும்ப ஆதிக்கத்தை மாநில ஆட்சியில் மட்டுமல்ல மத்தியிலும் செலுத்தி இனி வரும் எத்தனையோ தலைமுறைகளுக்குத் தனது பிள்ளைகளும் உறவினர்களும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதுதான். எனவே கலைஞர் கருணாநிதியும் அவரது புதல்வி கனிமொழியும் அடிக்கடி விடும் பத்திரிகை அறிக்கைகளைப் பார்த்து புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ…

    • 2 replies
    • 1.3k views
  15. செய்தியாளர் மயூரன் 19/07/2009, 12:20 சிறீலங்காவுக்கான ஐ.நா பிரதிநிதி தயான் ஜயசிங்க திடீரேனப் பதவி நீக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான பிரதிநிதி தயான் ஜயதிலக்க திடீரென பதவி நீக்கப்பட்டுள்ளார். மகிந்த அரசாங்கத்தினால் எந்தவொரு முன்னறிப்பு இன்றி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தயான் ஜயதிலக்க விசனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: 2010ம் ஆண்டு மே 31ம் நாள் வரை தனது பதவி நீடிப்புக்கான கடித்தை மகிந்த ராஜபக்ச அனுப்பி வைக்கப்பட்ட போதும், அண்மையில் கிடைத்த கடிதத்தில் பணிகளை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளேன். சிறீலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நின்று போராடி …

  16. முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிடப்பட்டு இனரீதியான பாகுபாடுடன் படுகொலை செய்யப்படுகின்ற சம்பவங்களை உடனடியாக அரசாங்கம் கட்டுப்படுத்த துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று முஸ்லிம் இடதுசாரிகள் முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம்.பைசால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி நிலவிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் கொழும்பில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றார்கள். முஸ்லிம் இளைஞர்கள் ஒரு வாரத்துக்குள் 7 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். முஸ்லிம் இளைஞர்கள் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு அவர்களைத் துன்புறுத்தி அடையாளம் இல்லாத…

    • 2 replies
    • 1k views
  17. காக்கத் தவறினோம்! கழுவாய் தேடுவோம்!! – பழ. நெடுமாறன் உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு. மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு கள் எல்லாவற்றிலும் சீனர்கள் பெருந் தொகையாக வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் செஞ்சீனம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது. எனவே இந்நாடுகளில் அவர்களுக்கு எதிராக சுண்டு விரலை அசைப்பதற்கு கூட மற்ற இனத்தவர்கள் அஞ்சுகிறார்கள். …

  18. கானல் நீராகப் போகும் அரசியல் தீர்வும் மாற்றப்படும் பிராந்திய பூகோள எல்லைகளும் – வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கை இந்திய அரசுகள் 1987 களில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமாக நடைமுறைப்படுத்த முயன்ற 13 ஆவது திருத்தச்சட்ட நடைமுறை சாத்தியமற்றது என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தார். இந்தியா பெரிய நாடு. எனவே அதற்கு அதிகாரப்பரவலாக்கம் தேவை. ஆனால் இலங்கை சிறிய நாடு. அதற்கு அதிகாரப்பரவலாக்கம் சாத்தியமற்றது. பொலிஸ், மற்றும் காணித்துறை அதிகாரங்களும் உகந்தவை அல்ல என தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு வழங்கப்போவதாகவும், அதற்கு விடுதலைப்புலிகளின் போரிடும் வலு தடையாக இருப்பதாகவ…

    • 1 reply
    • 507 views
  19. "விடுவிக்கப்பட்ட" பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்: ஜகத் ஜயசூரிய திகதி: 19.07.2009 // தமிழீழம் இலங்கையின், வடபகுதியில் சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் தேவையின் நிமித்தம் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுமென புதிய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் தளபதியாக பதவியேற்ற பின்னர் நேற்று சனிக்கிழமை தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டதுடன் மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவ சுமங்கள தேரரையும் சந்தித்து ஆசி பெற்றதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். "விடுவிக்கப்பட்ட" பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல், அரசு மேற்கொண்டுவரும் புனர் நிர்மானப்பணிகள், மற்…

  20. புலிகளின் தற்போதய நிலைமை தொடர்பானதும்..., முடிவுசெய்யபடவேண்டியதும்.. -தேசபக்தன். 16.07.09. புலிகளின் தலைமை முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது என்பதும் தலைவர் பிரபாகரன் இதில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது புலம்பெயர்ந்த புலிகளின் தலைமை முழுவதற்கும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தே இருக்கிறது. இந்த தகவலை தமது முக்கிய அங்கத்தவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்கள். இது கே.பி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை விடுவதற்கு முன்பே நடந்தேறி ஒரு விடயமாகும். அடுத்த நாள் கே.பி. யின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து புலிசார்பு தொடர்பு ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டு ஒரு வாரம் துக்க நிகழ்விற்கு அறிவிப்பு விடுத்திருந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே புலம் பெயர் புல…

    • 1 reply
    • 1k views
  21. விடுதலைப் புலிகளின் சொந்தத் தயாரிப்பான நீர்மூழ்கி வாகனத்தினை சிறிலங்கா கண்டுபிடித்துள்ளது [படங்கள் இணைப்பு] நேற்று(18.07.2009) இரவு 56வது படைப்பிரிவினரும் T- 8 படைப்பிரிவினரும் இணைந்து வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டிருந்ததாகவும். கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி வாகனம் பாவனைக்குகந்த நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. சுமார் 24 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வாகனத்தின் மேலதிக விபரங்களை வெளியிட இலங்கை இராணுவம் மறு…

  22. தடுப்பு முகாம்களில் தாய் சேய் நலன் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வு இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தாய் சேய் நலன் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விரிவான ஆய்வு மதிப்பீடு ஒன்றை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடபகுதியில் உள்ள சகல இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இந்த ஆய்வு நடாத்தப்படவுள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களின் சூழ்நிலை நாளுக்கு நாள் விருத்தி அடைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் பிரிடோசி மெத்தா தெரிவித்துள்ளார். பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு நிலைமைகள் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.meenagam.org/?p=5993

  23. கொழும்பில் கடத்தப்பட்ட இருவர் படுகொலை கொழும்பு, மட்டக்குளி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் வான்களில் கடத்திச் செல்லப்பட்ட இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்விருவரது சடலங்களும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் மாதம்பிட்டி மாவத்தை பகுதியில் பற்றையொன்றினுள் வீசப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரது கண்களும் கறுப்புத் துணிகளால் கட்டப்பட்டும் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையிலும் கழுத்து வெட்டப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர். மார்புப் பகுதியிலும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. …

  24. போர் முடிவடைந்தாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் அழிக்கப்படவில்லை – சிறிலங்கா அமைச்சர் கெஹெலிய போர் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், விடுதலைப் புலிகள் இன்னமும் முழுமையாக அழிக்கப்படவில்லை என சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் கிழக்கில் கெரில்லாத் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிர்காலத்தில் துப்பாக்கியை அல்ல எறிபொல்லைக் கூட கையில் எடுக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே கெஹெ…

  25. மக்களுக்கு வழங்கிய இரு அதிநவீன குளிரூட்டி வண்டிகளை காட்டில் ஒழித்து வைத்த கருணா கிழக்கு வாழ் மக்கள் நலன் கருதி அரச சார்பற்ற நிறுவனமொன்று நன் கொடையாக வழங்கிய இரண்டு அதி நவீன குளிரூட்டிகளை கருணா காட்டில் மறைத்து வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேவா லங்கா எனப்படும் அரச சார்பற்ற நிறுவனம் கிழக்கு மீன்பிடித் தொழிலாளர்களின் தொழில் அபிவிருத்திக்காக இரு அதிநவீன குளிரூட்டி வண்டிகளை கருணா ஊடாக வழங்க முற்பட்டுள்ளது. இவ்வண்டிகளை பெற்றுக்கொண்ட கருணா அவற்றை மட்டக்களப்பை அண்டிய காட்டுப்பிரதேசம் ஒன்றில் தனது நெருங்கிய சகாக்களின் உதவியுடன் மறைத்து வைத்திருந்தமை வெளிவந்துள்ளது. இவ் இரு வண்டிகளையும் கைப்பற்றிய காவல்துறையினர் மேற்கொண்ட வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.