ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
What really happened in Sri Lanka?With civilians still suffering and the government revising casualty figures, we need a real inquiry into the Sri Lankan conflict Conor Foley guardian.co.uk, Thursday 16 July 2009 15.30 BST Article history The Moscow Trial Was Fair wrote the British lawyer and MP Dennis Pritt, who was subsequently awarded the International Stalin Peace prize, having been expelled from the Labour party in the interim for backing the Soviet invasion of Finland. The government of Sri Lanka must be hoping for a similarly credulous reaction to its decision last week to parade the five doctors who witnessed the bloody climax of the country's c…
-
- 0 replies
- 1.3k views
-
-
எகிப்தில் நடைபெறும் அணிசாரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கெய்ரோ சென்றிருந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்தப் பேச்சுக்களின் போது என்ன விடயங்கள் ஆராயப்பட்ட என்பதையிட்டு அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத போதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்கள், இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் என்பன தொடர்பாகவே முக்கியமாக ஆராயப்பட்டன என தகவல் அறிந்த வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தான் …
-
- 1 reply
- 414 views
-
-
துன்பத்தில் வாடும் தமிழ் மக்களுக்கு இந்த அரசால் தீர்வு தர இயலாது: திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு துன்பத்தில் வாடுகின்ற வடக்குத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க சமமான உரிமைகளை வழங்கவேண்டியது அரசின் கடமை. தற்போதைய அரசு தனிப்பட்ட அரசாக இருப்பதால், இந்த அரசினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என ஐ.தே.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார். யாழ். மாநகர சபைத் தேர்தலையொட்டி, யாழ். நகருக்கு வருகை தந்த ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனா, ஐ.தே.கட்சியின் யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் எஸ்.சத்தியேந்திரா ஆகியோர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்…
-
- 0 replies
- 391 views
-
-
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் 73,451 பேர் உள்ளனர் தமிழ்நாட்டில் 19,705 குடும்பங்களைச் சேர்ந்த 73,451 ஈழத்தமிழர்கள் தஞ்சம் கோரியிருப்பதாக, தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதியமைச்சர் அன்பழகன் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பிரகாரம், இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட 26 மாவட்டங்களிலுள்ள 115 முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் மக்களைப் பராமரிக்க ஒரு வருடத்திற்கு, இந்திய மதிப்பில் 45 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு கூறுகின்றது. 2008 முதல் 2009ஆம் ஆண்டுவரை 44.34 கோடியும், அதற்கு முன்னைய ஆண்டிற்கு 39.90 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 395 views
-
-
படங்களுடன் வந்த இவ்வாக்கத்தினைப் பார்வையிட http://my.telegraph.co.uk/richarddixons/bl..._land_of_terror
-
- 20 replies
- 2.5k views
-
-
வவுனியாவில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களை வெகுவிரைவில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு முன்னோடியாக வன்னியில் தற்போது நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்திருக்கின்றார். அணிசாரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, மாநாட்டின் இடையில் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. பணியாளர்களின் விவகாரம், இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றம் போன்ற …
-
- 0 replies
- 395 views
-
-
சிறிலங்காவின் படையினரால் வவுனியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களையும் சட்ட மருத்துவ அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, குறிப்பிட்ட மருத்துவ அறிக்கைகளை எதிர்வரும் 31 ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. இரண்டு ஐ.நா. பணியாளர்களும் எழுந்தமானமாகக் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் இன்றித் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 480 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு: 1989 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று எளிமையான முறையில் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. நூற்றுக்கும் குறைவான அவரது கட்சி ஆதரவாளர்கள் இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் அலுவலகச் செயலாளர் சங்கையா தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 1989…
-
- 64 replies
- 4.9k views
-
-
பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் கார்டியன் (Guardian) பத்திரிகையில் இன்று மீண்டும் 'ஸ்ரீலங்காவில் என்ன நடந்தது?' என்பது பற்றிய ஆய்வு... தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள்... நன்றி What really happened in Sri Lanka? With civilians still suffering and the government revising casualty figures, we need a real inquiry into the Sri Lankan conflict Conor Foley guardian.co.uk, Thursday 16 July 2009 15.30 BST The government of Sri Lanka must be hoping for a similarly credulous reaction to its decision last week to parade the five doctors who witnessed the bloody climax of the country's civil war in May and now claim that they deliberately ove…
-
- 2 replies
- 890 views
-
-
Rajapaksa: committed to reconciliation B. Muralidhar Reddy Online edition of India's National Newspaper Friday, Jul 17, 2009 COLOMBO: Sri Lankan President Mahinda Rajapaksa has told U.N. Secretary-General Ban Ki-moon that his government remains committed to the resettling and rehabilitating the nearly three lakh war displaced in the north of the country in the shortest possible time. The issue of the war displaced, conditions in the relief centres and the need for reconciliation among all communities were discussed at the bilateral meeting between Mr. Rajapaksa and Mr. Ban on the sidelines of the 15th NAM Summit at Sharm-El-Sheikh in Egypt. Mr. Raja…
-
- 0 replies
- 658 views
-
-
ஈழத் தமிழர் அரசியலில் மக்கள் தலைவனாக தடம் பதித்தவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மறைந்து இன்று ஜூலை 13 ஆம் திகதியுடன் 20 வருடங்கள் நிறைவுறுகின்றன. ஈழத்தமிழர் உரிமைக்காக போராடிய அதேவேளை, அப்போராட்டத்தின் நியாயங்களை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன ஒரு மிதவாதியின் மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்று தமிழ்மக்களை அவரின் வழித்தடங்களை திரும்பிப் பார்க்க வைக்கின்றது. "தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று இப்போது அதனைக் கொண்டு நடத்தும் அமிர்தலிங்கத்திடம் நான் காணும் சிறப்பியல்பு அவருடைய அஞ்சாமையாகும். மிகப்பலம் வாய்ந்த எமது எதிரியாக…
-
- 13 replies
- 1.4k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு யாழில் ஊரடங்கு நீக்கம் வீரகேசரி நாளேடு 7/16/2009 10:26:23 PM - எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படவுள்ளது. நல்லூர் கந்தன் பெருந்திருவிழா தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆராய நடைபெற்ற கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. யாழ். மாநகர சபை ஆணையாளர் மு.செ. சரவணபவ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, ஆலயச் சூழலில் சட்டம், ஒழுங்கைப் பேணுவதற்காக 24 மணி நேரமும் பொலிஸார் பணியில் ஈடுபடுவார்கள். வழமைபோன்று மின்சார விநியோகங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார, கு…
-
- 0 replies
- 501 views
-
-
சிறிலங்காவின் கடற்படை அதற்கு எனத் தனியான வானூர்திப் பிரிவு (Air wing) ஒன்றை எதிர்காலத்தில் அமைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க, ஏவுகணை வசதிகளையுடைய கப்பல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சிறிலங்கா கடற்படை திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். "போர் இப்போது முடிவடைந்துவிட்டாலும் கூட, சிறிலங்கா கடற்படையினரால் வெறுமனே துறைமுகத்துக்குள் முடங்கிக் கிடக்க முடியாது" எனவும் குறிப்பிட்ட புதிய கடற்படைத் தளபதி, "கடற்படையானது கடலிலேயே நிற்கும்" எனவும் தெரிவித்தார். தனது புதிய பதவியை நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட அவர், இன்று வியாழக்கிழமை முதன் முறையாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடினார். அத…
-
- 4 replies
- 598 views
-
-
செய்தியாளர் கோபி 16/07/2009, 17:46 நெடுங்கேணிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவத் திட்டமாம் - மகாவலி அதிகார சபைத் தலைவர் தமிழர்களின் பூர்வீக நிலப் பரப்புக்களில் ஒன்றான மணலாறுப் பிரதேசத்தில் சிறீலங்கா அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சிங்கள நாளேடான தினமின தெரிவிக்கையில்: முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுங்கேணிப் பிரசேத்தில் 2500 சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் திட்டத்தினை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் தலைவர் தர்மசிறி டி அல்விஸ் தெரிவித்துள்ளார். குடியேற்றப்படும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஏக்கர் வயல் நிலமும், அரை ஏக்கர் தென்னை வளர்ப்புக்கான நிலமும், வீ…
-
- 0 replies
- 494 views
-
-
யாழ் செய்தியாளர் சிறீதரன் 16/07/2009, 15:34 யாழ் கொக்குவிலில் இளம் பெண்ணும், பெற்றோரும் ஆயுத தாரிகளால் தாக்கப்பட்டனர் யாழ் கொக்குவிலில் இளம் பெண்ணும், பெற்றோரும் ஆயுத தாரிகளால் தாக்கப்பட்டு, படுகாயம் அடைந்த நிலையில், போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கடந்த புதன்கிழமை ஊரடங்கு அமுலில் இருந்த அதிகாலை ஒரு மணியளவில் நுழைந்த முகமூடி அணிந்த ஆயுதாரிகள் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது பெற்றோரையும் கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர். இவர்கள் சத்தமிட்டதை தொடர்ந்தும் அயலவர்கள் கூடியதும், ஆயுததாரிகள் தப்பியோடியுள்ளனர். 54 அகவையுடைய சத்தியமூர்த்தி, 49 அகவையுடைய சாந்தகுமாரி மற்றும் அவர்களது மகளான 20 …
-
- 0 replies
- 733 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து தில்லிக்கு சைக்கிள் பயணம் ஈழத் தமிழர்களுக்கு சமஉரிமை, நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி திருவள்ளூரிலிருந்து தில்லி வரை திமுக பிரமுகர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், ராமபத்திரகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சு.சஞ்சீவி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். சிற்றுண்டிச் சாலை நடத்தி வரும் இவர், கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டி 40 தொகுதிகளுக்கும் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்தார். 2007-ம் ஆண்டு நதிநீர் இணைப்புக்காக சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டார். தற்போது கடந்த 10-ம் தேதி திருவள்ளூரில் இருந்து சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளார். செ…
-
- 2 replies
- 569 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையான விசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி – வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர். ஆனால், ஈழத்தின் வன்னி-முள்ளிவாக்கால் களப்பிரதேசத்தில் உண்மையில் நடந்தது என்னவென்று இதுவரை நமக்குக் கிட்டியுள்ள தகவல்களைத் தர்க்கரீதியில் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுக்கு வர முடிகிறது: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் “இறுதிப் போர்” அறிவிப்பு செய்து, மூர்க்கத்தனமான தாக்குதலை ந…
-
- 56 replies
- 6k views
-
-
வியாழக்கிழமை, 16, ஜூலை 2009 (14:0 IST) சீமானின் 'நாம் தமிழர்' இயக்கம்! இலங்கையின் வன்னிப் பகுதியில் முள் வேலிக்குள் முடங்கிப் போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குகிறார். வரும் ஜூலை 18 ஆம் தேதி சனிக்கிழமை, மதுரையில் 'நாம் தமிழர்' என்ற பெயரில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் சீமான். அன்று மாலை 4 மணிக்கு மதுரை ஜான்சிராணி பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு வடக்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இயக்குனர் மணிவண்ணன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது இவர்களுடன் சீமானும் பொதுக் கூட்ட…
-
- 2 replies
- 941 views
-
-
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு ஏறத்தாழ 2 மாதங்கள் கழிந்துவிட்டன. ஆயினும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்து வந்துள்ளதே தவிர, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையாகிய அடிப்படைப் பிரச்சினைக்கு நியாயமானதும் நம்பகத்தன்மையானதுமான அரசியல் தீர்வு காண்பதற்கு எதுவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அது விடயமாக ஏனோதானோ என்ற விதத்தில் செயற்பட்டு வருகிறது. தன்னிச்சையான முறையிலான தீர்வொன்றினைத் தமிழர் மீது திணிக்கும் நோக்கில் செயற்பட்டு வருகிறது எனலாம். ஜனாதிபதி "இந்து' ராமுக்கு வழங்கிய பேட்டி சென்றவாரம் கொழும்பில் வைத்து சென்னை "இந்து' பத்திரிகை ஆசிரியர் நரசிம்மன் ராமுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ வழங்கிய செவ்வியிலிருந்து அரசா…
-
- 1 reply
- 987 views
-
-
செய்தியாளர் தாயகன் 16/07/2009, 11:57 இலங்கையில் காலூன்ற துடிக்கும் சீனாவும் - இந்தியாவும் இலங்கையில் அரசியல் - பொருண்மிய ஆதிக்கம் செலுத்த சீனா பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக, ஆசிய நாடுகளின் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனா பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளுகின்ற போதிலும், இந்தியாவின் செயற்பாடுகள் காரணமாக அவை மிக சாதுரியமாக முறியடிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புனரமைத்துவரும் சீனா. 5.7 மில்லியன் செலவில் பாணந்துறை துறைமுகத்தையும் புனரமைக்க முன்வந்துள்ளது. இவை மட்டுமன்றி புத்தளம் நுரைச்சோலை அனல் மின்னிலையத்தை 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிச் செலவில் சீனா அமைத…
-
- 2 replies
- 636 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 16/07/2009, 11:48 13,000 வீடுகள் அமைக்க சீனா உதவி சிறீலங்காவில் 13,000 சிறிய வீடுகளை அமைக்க சீனா உதவி செய்யவுள்ளதுடன், இதற்கான ஒப்பந்தம் ஒன்று நேற்று நிர்மான மற்றும் பெறியியல் அமைச்சில் இடம்பெற்றுள்ளது. சிறீலங்கா அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் சீனாவின் பன்னாட்டு பொருண்மிய தொழில்நுட்ப கூட்டமைப்பு முகவர் நிலைய துணை அதிகாரி லியூ வீ ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான இத்திட்டத்துக்கு சீனா உதவ இருப்பதுடன், சிறிய வீடுகளை கட்டிக் கொடுக்கும் குத்தகையையும் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளான தெமட்டகொட, பஞ்சிகாவத்தை, றாகமை, மற்றும் கெப்பி…
-
- 1 reply
- 535 views
-
-
இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்கான அதிஉயர் கௌரவ விருது 'உதயன்' நாளேட்டுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றபோது 'உதயன்' நிறுவனத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான 10 ஆவது விழா கொழும்பு மவுண்ட்லவேனியா ஹோட்டலில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருண் றோய் கலந்துகொண்டார். இந்த விருது வழங…
-
- 4 replies
- 547 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 16/07/2009, 11:17 9 கோடி மக்களும் இணைந்து தமிழீழம் அமைப்போம் - வைகோ உலகம் அனைத்திலுமுள்ள 9 கோடி தமிழர்களும் தமிழீழம் மலர முயற்சி செய்ய வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழத் தேசியத் தலைவர் தலைமையில் மீண்டும் விடுதலைப் போர் தொடங்கும் எனத் தெரிவித்த அவர், நிச்சயம் தமிழீழம் மலரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் மாநாட்டில் அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார். தமிழீழத் தேசியத் தலைவரது முயற்சிகள் வீண்போகாது எனவும், உரிய நேரத்தில் அவர் மக்கள் முன் தோன்றுவார் எனவும் வைகோ கூறியிருக்கின்றார். pathivu
-
- 1 reply
- 419 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் நமணன் 16/07/2009, 11:15 ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்துக்கு திருச்சியில் தடை தமிழ்நாடு பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் திருச்சியில் நேற்று நடைபெற இருந்த கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். கண்ணைக் கட்டிப் பரப்புரை மேற்கொள்ள முன்னர் அனுமதி வழங்கியிருந்த காவல்துறையினர் நேற்று காலை நடைபெற இருந்த போராட்டத்திற்கு திடீரென அனுமதி மறுத்துள்ளனர். இதேபோன்ற போராட்டத்திற்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியிருந்த தமிழ்நாடு அரசு, இம்முறை ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற இருந்த போராட்;டத்திற்கு அனுமதி மறுத்திருக்கின்றது. இது பற்றி கவனயீர்ப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த பால்.அறிவழகன் கூறுகையில், தமிழ்நாடு அரசி…
-
- 2 replies
- 562 views
-
-
புலி உறுப்பினர்களை அழிக்க மலேசியாவிடம் உதவி் கேட்கும் பொகொல்லாகம அணி சேரா நாடுகளின் 15 ஆவது உச்சி மாநாட்டுக்காக எகிப்து சென்றுள்ள இலங்கைப் பிரத்திநிதிகள் குழு, மாநாட்டிடையே மற்றைய நாட்டு தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய இலங்கை வெளிநாட்டு அமைச்சர் ரோகித பொகொல்லகம மலேசிய வெளிநாட்டு அமைச்சர் அனிஃபா அமானை நேற்றுச் சந்தித்துப் பேசும்போது தற்போது எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களின் செயற்பாடுகள் மலேசிய நாட்டின் பகுதிகளில் தடைசெய்வதற்கு மலேசியா உதவவேண்டும் எனக் கேட்டுள்ளார். மேலும் உலக பொருளாதார பிரச்சனைகளுக்கு நடுவே நாட்டின் அபிவிருத்தித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு புலிகளையும் தாம் ஒழித்துள்ளதாக மேலும் பொகொல்லகம கூறியதாகத் தெரிகிறது. …
-
- 0 replies
- 961 views
-