ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது Posted on July 12, 2023 by தென்னவள் 2 0 13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத் தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். “13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இடம் பெற்று வருகிறது . 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல. தற்போதுள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலேயே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள். ஆனால் 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வே தவிர அது தமிழ் மக்களுக்கான…
-
- 11 replies
- 900 views
-
-
12 JUL, 2023 | 10:14 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர். இந்நிலையில் 2009 ம்…
-
- 1 reply
- 694 views
- 1 follower
-
-
அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையில…
-
- 39 replies
- 2.5k views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 JUL, 2023 | 03:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று புதன்கிழமை காலை கூடியது. இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராச…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
சாந்தனை நாட்டுக்கு அழைக்க போராட்டத்தில் குதித்த தாய்! (படங்கள்) 75 வயதைக் கடந்த சாந்தனின் அம்மா தனது மகனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான போராட்டத்தில் இறங்கினார். ஆளுநர் ஊடாக அதிபருக்கான கடிதத்தையும், வெளிவிவகார அமைச்சகத்துக்கான கடிதத்தை கச்சேரியிலும் அளித்திருக்கிறார். அதேவேளை, சாந்தன், சில நாட்களுக்கு முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கடிதத்தில், இலங்கைக் குடிமகனான தான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் தற்போது…
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கையின் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா வரவேற்பு! மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கான அறிக்கையை வெளியிட்டு பிரித்தானியா இதனை தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் அரசாங்கத் திணைக்களங்களால் நில அபகரிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்பான தனது பரிந்துரைக்கு இலங்கையின் ஆதரவையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது. அண்மைய ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை பிரித்தானியா ஏற்றுகொண்டது. அனைத்து சமூகங்களுக்கு…
-
- 1 reply
- 223 views
-
-
தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை! உள்நாட்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2020 முதல் 2022 ஆம் ஆண்டுவரை, இலங்கையில் நுகர்வுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 623 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் தேங்காய் எண்ணெய் பாவனையில், 22 சதவீதம் உள்ளூர் உற்பத்தியிலும், 78 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யிலும் ஈடுபடுத்தப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது எனக் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1338752
-
- 0 replies
- 204 views
-
-
சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்! சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சுவீடனின் தலைநகர் ளுவழஉமாழடஅ யில் துருக்கி தூதரகத்துக்கு முன்னால் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது சு…
-
- 3 replies
- 338 views
- 1 follower
-
-
காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு : குளிர்பானங்களை வழங்கிய கடற்படையினர்! யாழ்ப்பாணம் – மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகள் உள்ளன. இவற்றினை வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று அளவீட்டுப் பணிகளை ஆரம்…
-
- 0 replies
- 198 views
-
-
Published By: RAJEEBAN 12 JUL, 2023 | 10:15 AM அரசாங்க மருத்துவமனைகளில் பெரும்பாலான சிடி ஸ்கானர்கள் செயல் இழந்துவிட்டன என மருத்துவதுறை சார்நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்க மருத்துவமனைகளில் 44 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன, குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரன தேசிய பல்வைத்தியசாலை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மாத்தறை ஆகிய மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள் இயங்கவில்லை என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 15 replies
- 1k views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUL, 2023 | 08:21 PM தங்க ஜெல் மற்றும் பவுடரை இந்தியாவின் சென்னைக்கு எடுத்துச் செல்ல தயாரான ஐந்து வர்த்தகர்களை விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் மற்றும் பவுடரின் பெறுமதி சுமார் 16 கோடியே 40 இலட்சம் ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர்கள் நால்வரும் 55 வயதுடைய வர்த்தகருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 வர்த்தகர்களும் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து இந்தியாவ…
-
- 0 replies
- 525 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUL, 2023 | 06:15 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை (2023 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று அதன் பின்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் உயர்தர பரீட்சைகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படாமல் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் நவம்பரில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை டிசம்பரில் நடைபெற வேண்டிய இவ்வாண்டுக்கான சாதாரண தர பரீட்ச…
-
- 2 replies
- 296 views
- 1 follower
-
-
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை! வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அலுவலகம் திறக்கப்பட்ட போது, அன்டன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், அரசியல்துறைத் தலைவர் சிவகுமார், ஆகி…
-
- 0 replies
- 383 views
-
-
நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார். தாக்குதல் சம்பவத…
-
- 4 replies
- 329 views
- 1 follower
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்! ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்…
-
- 2 replies
- 277 views
-
-
பசில் குழுவினரை சுத்தப்படுத்தும் முயற்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் : சஜித் பிரேமதாச! தெரிவுக்குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும் விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வார நாடாளுமன்ற அமர்வை நோக்கும் போதும் பசில் ராஜபக்சவின் கும்பல் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மே…
-
- 0 replies
- 259 views
-
-
Published By: DIGITAL DESK 3 11 JUL, 2023 | 10:47 AM (எம்.மனோசித்ரா) சனத்தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சனத்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2023/2024ஆம் ஆண்டுகளில் சனத்தொகை மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/159716
-
- 3 replies
- 368 views
- 1 follower
-
-
10 JUL, 2023 | 04:57 PM (நா.தனுஜா) அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவதுடன் அவர்களிடம் தண்டப்பணமும் அறவிடப்படும் என்றும், எனவே உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளன. இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை கடந்த காலங்களில் சடுதியாக அதிகரித்ததையடுத்து, அதனைத் தடுப்பதற்குரிய கூட்டிணைந்த நடவடிக்கைகளை இலங்கையும் அவுஸ்திரேலியாவும…
-
- 1 reply
- 401 views
- 1 follower
-
-
11 JUL, 2023 | 07:06 AM இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா திங்கட்கிழமை (10) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். இரு நாட்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்கின்றார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் ட…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
10 JUL, 2023 | 03:23 PM (நா.தனுஜா) தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளன. அதில் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய …
-
- 1 reply
- 17.2k views
- 1 follower
-
-
நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் ! நந்திக்கடல் கடற்கரையும் இந்த நாட்டின் கரையோரத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதில் பல இலட்சம் மக்கள் கொத்தணி குண்டுகளுக்கு தோட்டாக்களுக்கும் பலியாகியிருந்தனர். இந்நிலையில் நந்திக்கடல் கடற்கரையும் புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் இதுவரை இதுபோன்ற 24 இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இதற்கிடையில், கடந்த மே மாதத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிக…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUL, 2023 | 04:49 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பெரிய பரா-13, சின்ன பரா - 01, 82MM மோட்டார் - 49, 60MM மோட்டார் - 01, ஆர் பி ஜி - 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல வகை வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/159688
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமன பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக இந்த பொருளாதார நெருக்கடி உருவாகும். வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவது ஆரம்பிக்கப்படும். வெளிநாட்டு கடன் திரும்ப செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மீதமாகியுள்ள அந்நிய செலாவணியை பயன்படுத்தியே அரசாங்கம் அத்தியவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகிறது. நாட்டில் காணப்படும் தற்போதை…
-
- 8 replies
- 873 views
- 1 follower
-
-
2022 ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால், 15 பணம் மாற்றுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காமல் இருக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய பின்வரும் நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/262339
-
- 1 reply
- 599 views
- 1 follower
-
-
பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை : எரிக் சொல்ஹெய்ம்! இலங்கை மக்களுக்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன் காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர் என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை மக்களிற்கே உரிய நெருக்கடியிலிருந்து மீளும் திறன் காரணமாக இது சாத்தியமாகவில்லை என அவர் ச…
-
- 4 replies
- 365 views
- 1 follower
-