ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான தீபக் ஒபராய், இலங்கை செல்வதற்கான விசாவை வழங்க, இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு செல்லும் நோக்கில், அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய எண்ணியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இலங்கை விஜயத்தின் பின்னனியில் கனேடிய தமிழ் அமைப்பு இருப்பதாகவும் இவர் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள நாளிதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. GTN
-
- 1 reply
- 812 views
-
-
இலங்கையின் உற்பத்தி பொருட்கள் மலேசிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மலேசிய இந்திய வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் சுமார் 50 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற இந்தப் போக்கினைக் கண்டிக்கும் வகையில் இலங்கையின் உற்பத்தி பொருட்களை மலேசிய தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என மலேசிய இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.சிவக்குமார் பெட்டாலிங் ஜெயாவில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமானமற்ற இலங்கை அரசாங்கத்தின் போக்கு கண்டிக்கதக்கது. அப்பாவித் தமிழர்கள் உணவு, உறைவிடம் இன்றி தவிக்கின்றனர். இலங்கையின் உற்பத்தி பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் மலேசிய தமிழர்கள் இதற்கான தமது எதிர்…
-
- 1 reply
- 650 views
-
-
7 ஆயிரத்து 200 விடுதலைப்புலி உறுப்பினர்களில் 3 ஆயிரம் பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு நிமால் லெவ்கே: வவுனியா இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 ஆயிரத்து 200 விடுதலைப்புலி உறுப்பினர்களில் 3 ஆயிரம் பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் நிமால் லெவ்கே தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். …
-
- 1 reply
- 691 views
-
-
விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரிடம் மூன்று மணிநேர ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது : விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் கொழும்பு பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சி முன்னிலையில் நேற்று (12) மூன்று மணிநேர ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் அடங்கிய கோவையுடன் நீதிமன்றத்திற்கு சென்ற ஜோர்ஜ் மாஸ்டர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகளை வழங்கியதாக, ஜோர்ஜ் மாஸ்டர் என்ற பருத்தித்துறை 2 ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்னம் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவக் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இராணுவக் காவற்துறைய…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல்: ராணுவ பேச்சாளர்உதய நாணயக்கார திகதி: 13.06.2009 // தமிழீழம் சிறீலங்கா ராணுவத்துறை பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ‘'கிழக்கு மாகாணத்திற்குள் சிறிய குழுக்களாக விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று தகவல்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதை கண்காணிக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். சங்கதி
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா வாக்குறுதிகளை மதிக்காதது கொடுமையானது : பான்கீமூன் ஐநாவின் பாதுகாப்பு செயலர் பான் கீ மூன் அவர்கள் சிறீலங்கா அரசாங்கம் கடந்தமாதம் விடுதலைப்புலிகளை தோற்கடித்துள்ளநிலையில் வழங்கிய வாக்குறுதிகளை மதிக்கத் தவறியுள்ளதாகவும் இதுதொடர்பில் சிறீலங்கா ஜனாதிபதி அவர்களுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நன்றி:-பதிவு http://www.pathivu.com/news/2219/54//d,view.aspx
-
- 4 replies
- 1.2k views
-
-
அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு. கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை, வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததன் மூலம். அகிம்சை... அணி சேராக் கொள்கை... பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை... என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது. சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், ஈழ மக்களைக் ] கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அள்னக்கையாக இருந்து அதனை ஆதரித்ததன் மூலம் மொத்த தமிழ் இனத்தின் முகத்திலே கரியை அல்ல மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு. மாபெரும் மனிதப் பேரவலம் நடந்தேறியது கண…
-
- 5 replies
- 1.4k views
-
-
போர்க்குற்ற சாட்சிகளை குற்றம் புரிந்தவராக்கும் சிறீலங்காவின் கைங்கரியம் போர்க் குற்றத்தின் சாட்சியாக விளங்கும் மருத்துவர்களில் இருவரும்இ உதவியாளர் ஒருவரும் நேற்று நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். வன்னியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்டப் படை நடவவடிக்கை வரை அங்கு தங்கியிருந்த அளப்பரிய சேவையாற்றி மருத்துவர்கள்இ தற்பொழுது சிறீலங்கா படையினரது தடுப்புக் காவலில் உள்ளனர். வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களானஇ • கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தம்பிமுத்து சத்தியமூர்த்திஇ • முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் துரைராஜா வரதராஜாஇ மற்றும் • முல்லைத்தீவு பொது மருத்துவமனை அத்தியட்சகர் வீரகத்தி சண்முகராஜா • ப…
-
- 0 replies
- 811 views
-
-
இலங்கைக்கான ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இலங்கைக்கான சமாதான கட்டமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஜப்பானிய பிரதிநிதி என்ற வகையில் எனது பயணம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. 2003ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது நாம் 4 பில்லியன் டாலரை அன்பளிப்பாக கொடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக புலிகள் இதனை புறக்கணீத்தனர்’’என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’இலங்கை தொடர்பான தெளிவு எமக்கு இருந்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை’’என்று தெரிவித்தார். நன்றி நக்கீரன்.
-
- 22 replies
- 3.5k views
-
-
போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 321 views
-
-
அவளுடைய கையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் அல்பத்தை வைத்திருந்தாள். அவளைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமும் அவள் அதனைக் காண்பித்தாள். அவள் தமிழில் என்ன சொன்னாள் என்பதை அறிய எனக்கு ஒரு வழியும் இருக்கவில்லை. நான் அந்தப் படத்தில் மூன்று சிறுவர்களைக் கண்டேன். நான் அவளுடைய குரலைப் புரிந்து கொண்டேன். இது அங்குள்ள ஒருவருடைய மிக ஆழ்ந்த வலி, துன்பம்! அவளுடைய கதையை ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நான் புரிந்து கொண்டேன். கடந்த மாதம் நடைபெற்ற இலங்கையின் மோதலில் அவள் தனது ஒரே மகளையும், இரண்டு மகன்களையும் கணவனையும் இழந்திருந்தாள். அவளுடைய இன்னும் ஒரு மகன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஆனால் இப்போது அவன் அங்கு இல்லை. அவன் தப்பிவிட்டானா…
-
- 0 replies
- 512 views
-
-
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் தமிழர்கள் மீது விமான நிலையத்தில் கடுமையான விசாரணை ஜ வெள்ளிக்கிழமைஇ 12 யூன் 2009இ 04:34.00 யுஆ புஆவு +05:30 ஸ வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்லும் தமிழர்கள் விமான நிலையத்தில் வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள்இ கனடாஇ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்குச் செல்லும் தமிழர்களே இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் குறித்த தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே விசாரணைகள் ஆரம்பமாகி விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல மணி நேர விசாரணைகள…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடந்த3 ஆம் திகதி ஆயுதப்படையினரைக் கௌரவிக்குமுகமாக காலி முகத்திடலில் நடத்தப்பட்ட அணிவகுப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையில், "30 வருட காலமாக மிகமூர்க்கத்தனமானதும் மிகப்பலம் வாய்ந்ததுமெனக் கருதப்பட்ட பயங்கரவாதப் படையணி 3 வருட காலத்துக்குள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது' எனவும் இதற்காக ஒரு உலக வல்லரசின் இராணுவம் தேவைப்படுமென உலகத்தில் பலரும் எமது நாட்டில் சில பிரிவினரும் எண்ணியிருந்தனர். ஏன் ஐ.நா. படைகளை ஈடுபடுத்துவது கூட அவசியமெனவும் வேறுபலர் எண்ணினர் என்றும் குறிப்பிட்டிருந்தார். சிறு காலமாக அல்ல, 30 வருட நீண்டநெடுங்காலமாக பயங்கரவாதிகள் எமது நாட்டை தமது பிடியில் வைத்திருந்தனர். முழுநாட்டையுமே அடக்கி வைத்திருப்பதற்கான பயங்கரமான திட்டங்கள் அவர்களிடம் இருந்தன …
-
- 1 reply
- 830 views
-
-
நிதியுதவி கேட்டு யாரையும் கெஞ்ச மாட்டோம் - இலங்கை வெள்ளிக்கிழமை, ஜூன் 12, 2009, 14:13 [iST] கொழும்பு: சர்வதேச நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டாலர் கடனுவதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற பதட்டத்தில் இருக்கும் இலங்கை, யாரிடமும் நிதி கேட்டு பிச்சை எடுக்க மாட்டோம் என கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நிவர்ட் கப்ரால் கூறுகையில், பிச்சைப் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த நாட்டிடமும், எந்த நிதியத்திடமும் போய் பணம் கொடுங்கள் என நாங்கள் கெஞ்ச மாட்டோம். சொந்தக் காலில் நிற்கும் தகுதி எங்களுக்கு உண்டு. பங்குச் சந்தைகள் மூலம் பணம் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் எங்களிடம் அதிகமாகவே உள்ளன என்று கூறியுள்ளார் அவர். இலங்கை நிதி நிலைமை …
-
- 8 replies
- 1.1k views
-
-
ஊடகவியலார்கள் மீது முன்னெப்போதும் இல்லாதளவிற்கு மிக மோசமான தாக்குதல்களும், கடத்தல்களும், நிகழ்ந்துள்ள போதும், இக் குற்றங்கள் தொடர்பாக, இதுவரையில் யாரும் கைது செய்யப்பட்டாத மர்மம் என்ன? எனக் கேள்வி எழுந்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொறடா ஜோசப் மைக்கேல் பெரேரா, ஒரு சிறப்பு அறிக்கையை தாக்கல் செய்து பேசியபோதே இவ்வாறு கேட்டுள்ளார். பத்திரிக்கையாளர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஒரு விசாரணைக் குழுவை அமைத்து புலனாய்வு செய்ய வேண்டும் எனவும், சிறிலங்கா அரசிடம் கோரிக்கை வைத்தார். மேலும் பேசுகையில், 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை 11 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 50 பத்திரிக்கையாளர்கள் கடத்த…
-
- 0 replies
- 422 views
-
-
ராஜபக்சே தம்பி கோத்தபாயா அரசியலில் நுழைய முடிவு சனிக்கிழமை, ஜூன் 13, 2009, 10:34 கொழும்பு: இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை வெற்றிகரமாக திட்டமிட்டு நடத்தி முடித்த பெருமைக்குரியவரான அதிபர் ராஜபக்சேவின் தம்பி, கோத்தபாய ராஜபக்சே, விரைவில் அரசியல் பிரவேசம் மேற்கொள்கிறார். கோத்தபாயாவை தனது அரசியல் வாரிசாக ராஜபக்சே உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற ராஜபக்சே மட்டுமல்லாது அவரது தம்பி கோத்தபாயுவும்தான் முக்கிய காரணம். கோத்தபாயவும், ராணுவத் தளபதி பொன்சேகாவும் இணைந்துதான் தமிழினப்படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றினர். இவர்கள் இருவரும் கேட்ட உதவிகளையெல்லாம் அதிபர் ராஜபக்சே வழங்கியதால் போரில…
-
- 0 replies
- 458 views
-
-
சனிக்கிழமை, 13, ஜூன் 2009 (11:55 IST) இலங்கை பாராளுமன்ற கூட்டம்: தமிழ் பெண் எம்.பி. வெளியேற்றம் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டணி கட்சி எம்.பி.ஆக இருப்பவர் தங்கேஸ்வரி கதிராமன். இவர் இலங்கை கிழக்கு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். இலங்கை பாராளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை தங்கேஸ்வரி சல்வார் கமீஸ் உடையணிந்து வந்தார். இதை கண்டதும் பாராளுமன்ற அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இலங்கை பாராளுமன்ற விதிப்படி பெண் உறுப்பினர்கள் சேலை மட்டுமே அணிந்து வரவேண்டும். முஸ்லிம் பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமே சேலை அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்கேஸ்வரி எம்.பி. யிடம் பாராளுமன்ற அதிகாரிகள் இந்த வ…
-
- 0 replies
- 595 views
-
-
காயமடைந்த தமிழர்களை புல்டோசர் ஏற்றி ராணுவம் கொன்றது - மனித உரிமை குழு சனிக்கிழமை, ஜூன் 13, 2009, 12:06 [iST] லண்டன்: வன்னியில் கடைசி கட்டமாக நடந்த போரின்போது காயமடைந்து கிடந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை மிகக் கொடூரமாக புல்டோசர் ஏற்றிக் கொன்று மற்ற உயிரிழந்தவர்களின் உடல்களுடன் சேர்த்து புதைத்தது ராணுவம் என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையை, லண்டனைச் சேர்ந்த கார்டியன் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை ராணுவத்தினர் கடைசி கட்ட போரின்போது தங்களது மேலதிகாரிகள் பிறப்பித்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையையும் தாண்டி மிக மோசமாக நட…
-
- 0 replies
- 888 views
-
-
தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய, தமிழக அரசுகளின் எதிர்வினை என்ன? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் பிரபல வார ஏடான 'குமுதம்' கேள்வி எழுப்பியிருக்கின்றது. இது தொடர்பாக 'குமுதம்' வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. இலங்கை முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கிற தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களால் விளக்க முடியாது'' இப்படிப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருப்பவர் இலங்கைத் தலைமை நீதிபதியான சரத் என். சில்வா. "வெற்றியால் மகிழாமல், பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கு மருந்திடுங்கள்" என்கிறார் இலங்கை சென்று வந்தவரான ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன். பி…
-
- 1 reply
- 679 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வந்த மக்கள் வவுனியாவில் உள்ள தடை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதன் மூலம் அந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 468 views
-
-
போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது. அரசாங்கம் இந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். வடபகுதியில் நடைபெற்ற போரில் இடம்பெயர்ந்த மக்களை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. குடும்பங்களாகவும் மக்கள் படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அனைத்துலக சட்டங்களை மீறும் செயலாகும். இந்த வருடத்தின் இறுதிக்குள் முகாம்களில் உள்ள மக்கள் தமது இடங்களுக்கு செல்லலாம் என அரச…
-
- 0 replies
- 342 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வடபகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் தமது சேவைகளை விஸ்தரிப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளும், விசேட வங்கிகளும் வடமாகாணத்தில் தமது கிளைகளைத் திறப்பதற்கான அனுமதியை நாடியுள்ளன. கடந்த மூன்று வாரங்களில் மத்திய வங்கி வடமாகாணத்தில் 67 புதிய வங்கிகள் அமைப்பதற்கு அனுமதிகளை வழங்கியுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறையே பெரும் எண்ணிக்கையான வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வடபகுதியை நோக்கி வங்கிகள் விஸ்தரிக்கப்படுகின்றமை மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பெரும் உதவியாகவிருக்குமென அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 881 views
-
-
ஈழத் தமிழர்களை அழிப்பதற்குப் துணை போன இந்திய அரசுக்கும், அதற்குத் துணை போன தமிழக முதல்வருக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழுக்கு அவர் அளித்த கேள்வி - பதில்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் அணுகுமுறை குறித்து? ஈழத் தமிழர்களை அழிப்பதற்குப் துணை போன இந்திய அரசுக்கும் அதற்குத் துணை போன தமிழக முதல்வருக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. போர் நிறுத்தம் செய்வதற்கு கருணாநிதி எடுத்த முயற்சிகள், வெளியிட்ட அறிக்கைகள், உண்ணாவிரதங்கள், கண்டனங்கள் அனைத்தும் போலியானவை. சட்டமன்றத்தில்கூட நான் வற்புறுத்திய பிறகு…
-
- 0 replies
- 391 views
-
-
கடந்த வாரங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய அவுஸ்திரேலியர்கள் இப்போது இலங்கை மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியர்கள் இலங்கை மாணவர் குழு மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழுவொன்று மேற்படி மாணவர்கள் மீது இனவாத அவதூறு சொற்களால் தாக்கியதாகவும், வடக்கு கன்பெராவில் மக்குவாரி என்ற இடத்திலுள்ள மேற்படி மாணவர்களின் வீட்டு யன்னல்களை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி காவல் துறையினர் விசாரணை நடாத்தி வருவதாக ஏ.பி,சி நியூஸ் சேவை தெரிவிக்கிறது.கார் யன்னல் கண்ணாடிகளையும் அவுஸ்திரேலியர்கள் உடைத்து விட்டதாக ஒரு மாணவர் கூறினார். மூன்று அவுஸ்திரேலியர்கள் எங்…
-
- 23 replies
- 2.6k views
-
-
தலைவன் உள்ளான் நீ தலை குனியாதே… தாய்மண்ணை பெற்றெடுக்கும் வரை நீ தளர்ந்து விடாதே… இவ் விடயம் 09. 06. 2009, (வியாழன்), தமிழீழ நேரம் 5:17க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், விசேட செய்தி உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை. அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது (ஆனால் ராணுவம் 17-ம் தேதியே அறிவித்துவிட்டது). இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தற்கும் பல சான்றுகள் உள்ளன. உலகத்தின் உத்தமர்க…
-
- 42 replies
- 6.6k views
-