ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142935 topics in this forum
-
இவரின் கடிதம் பொப் ரேயை (Bob rae)திருப்பி அனுப்ப உதவியதா? Was expat behind Bob Rae's woes? In her June 8 opinion piece Irangani de Silva urged Foreign Secretary Palitha Kohona to rip up a visa granting Bob Rae entry to Sri Lanka from June 10 to 12 because his report back to Canada would surely tarnish the country’s image. Print Bob Rae's nightmare Bob Rae statement 20,000 reported dead Warzone a wasteland Eatery targeted, Sinhalese say 'Photo shows rebel leader dead' Sri Lanka war timeline Tigers' elusive leader PHOTOS: Tamil protest Video: Gardiner closed Photos: Protest closes Gardiner Article by influential Sri Lankan in London, Ont., may have l…
-
- 1 reply
- 1.8k views
-
-
புதுடெல்லி : இலங்கையின் வடபகுதியில் இருந்து அந்நாட்டு ராணுவம் வெளியேற, நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி கட்சியைச் சேர்ந்த சேனாதிராஜா உள்ளிட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இலங்கைத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக, இந்தியா வழங்கும் நிதி, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த குழுவில், தமிழ் தேசிய கட்சி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்புக்குப்பின், செய்தியாளர்களிட…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறும் தமிழர்களுக்கான தாயகம் - தன்னாட்சி - சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு வழங்குமாறும் இந்திய எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான எல்.கே.அத்வானியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 442 views
-
-
கடந்த மூன்று வாரங்களில் 5000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சரணடைந்தவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் பணியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு படைவீரர்களை விடுதலை செய்யவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....1…
-
- 4 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் 28 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
வன்னியில் அண்மைக் காலத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய முகாம்களுக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் செல்வதற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்தே வருகின்றது. இதனால் இந்த முகாம்களில் உள்ள சுமார் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பில், எதுவுமே தெரியாத ஒரு நிலையே நீடிப்பதாக வன்னியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இரகசியத் தன்மை பேணப்பட வேண்டும் என்ற பெயரில் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாரிய உணவின்மை மற்றும் அடிப்படை வசதியின்மை காரணமாக பெரும் நோய்த் தொற்றல்களையும் கடுமையான பின்னடைவுகளையும் சந்தித்திருப்பதாக அங்குள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் கூறுகின்றன. இந்த மு…
-
- 0 replies
- 835 views
-
-
கடந்த சில வாரங்களாக சில வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் சில பத்திரிகைகளும் பல ஊடகவியலாளர்களுக்கும் புலிகளுக்குமான தொடர்பு பற்றி சாடை மாடையாக தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்த ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் செயற்பட்டார்கள் என்றும் கூற இந்த ஊடகங்கள் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் அரசாங்கத்திற்கெதிராக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டனர். தொலைக்காட்சி நிறுவனங்கள் இக்குற்றச்சாட்டை முன்வைக்கும் போது ஊடகவியலாளர்களின் கண்டனக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ நாடாக்களையே ஓளிபரப்பின. அதன் போது ஒளிபரப்பப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்களால் அந்த ஊடக…
-
- 0 replies
- 671 views
-
-
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் தற்போது காணப்படும் இராணுவ நிர்வாகம் சிவில் நிர்வாகமாக மாற்றப்பட வேண்டுமென தமிழ்ப் புத்திஜீவிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் முடிவடைந்தமை மகிழ்ச்சியளிக்கும் அதேவேளை, பொதுமக்கள் இழப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 300,000த்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளது. அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி மக்கள் பற்றி விபரங்கள் அவர்களது சொந்தங்களுக்கு வழங்குதல், சுதந்திரமாக இடம்நகர்வதற்கான சந்தர்ப்பம், விரைவில் அகதிகளை மீள் கு…
-
- 0 replies
- 468 views
-
-
சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீட்கக் கோரியும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் பிரித்தானியா, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
பாராளுமன்ற விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் உடை அணிந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியே இவ்வாறு பாராளுமன்றத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார். பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் அவைக்கு சமூகமளிக்கும் போது பெண்கள் கட்டாயமாக சேலை அணிந்து வர வேண்டுமென்பதே சட்டமாகும். எனினும், பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி சேலைக்கு பதிலாக சல்வார் கமீஷ் அணிந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாலேயே அவர் சல்வார் கமீஸ் அணிந்து சென்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்து வரை மறைக…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்குத்தான் அக்கறை என்று கூறுவார்களேயானால், அதுதான் உலக அதிசயம் மட்டுமல்ல, உலக மகா அதிசயமும் ஆகும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அதிசயங்களில் உச்சக்கட்ட அதிசயத்தைக் காண வேண்டுமானாலும் கேட்க வேண்டுமானாலும் அதிகத் தொலைவு செல்லாமலேயே, அதிக சிரமம் எடுத்துக் கொள்ளாமலேயே முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ரீதியான சமுதாய ரீதியான அறிக்கைகளையும், அவர் வெளியிட்ட சூளுரைகளையும், அறைகூவல்களையும் திரும்பத் திரும்பப் படித்தாலே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உலக அதிசயத்தை நாம் காண முடியும். அவர் தலைமை ஏற்றிருக்கும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக அவரே கையெழ…
-
- 6 replies
- 989 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இறுதிவரை பணியாற்றிய நான்கு மருத்துவர்களில் ஒருவரை மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சிறிலங்கா பயங்கவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர், ஏனைய மூன்று மருத்துவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது அவர்கள் குறித்த விபரங்களை திட்டமிட்டு மறைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
தமிழ் இனப் படுகொலையை நடத்திய சிறிலங்காப் படையில் உள்ள முக்கியமானவர்களை அரசியலுக்குள் நுழைக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
-
- 0 replies
- 568 views
-
-
ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறி வவுனியா புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது : வவுனியா மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய முகாமான ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் வெடித்துச் சிதறி வவுனியாவையும் அதனை அண்மதித்த பகுதிகளிலும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதுடன் வவுனியா நகரப் பகுதி எங்கும் புகைமண்டமாகமாகக் காட்சி தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.globaltamilnews.net/tamil_news....10476&cat=1
-
- 45 replies
- 9.4k views
-
-
பிரபாகரன் மர்மத்துடன் முடிந்துவிடுமா ஈழத்தவர் துயரம்? வெள்ளை பாஸ்பரஸ் கொன்ற உயிர்களின் வலி சில வெள்ளை நாடுகளுக்குப் புரியாமல் போகலாம். ரசாயனக் குண்டுகள் தின்ற மக்களின் குரலை ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் கண்டுகொள்ளாமல் போகலாம். அடிமை விலங்கை உடைக்கப் பாடுபட்ட ரணத்தை உணராத தலைமுறை இந்தியாவை ஆளலாம். ஆனால், புரட்சியின் அடையாளமாக உலகம் இன்று வரை நினைத்துப் பார்க்கும் கியூபா, அதுவும் ஃபிடெல் காஸ்ட்ரோவின் நாட்டுக்குமா புரியவில்லை ஈழத்தவன் ஓலம்? தமிழ்ப் பிழைப்புக் கூட்டமும் சர்வதேசச் சமுதாயமும் கைகழுவிவிட்ட தமிழீழச் சமூகம் கம்பி வேலிக்குப் பின்னால் வேதனையில் தவிக்கிறது. உங்களில் யார் எங்களுக்கு உணவு தருவீர்கள்? தண்ணீர் தருவீர்கள்? ஆசை வார்த்தை பேசுவீர்கள்? இப்படிப் ப…
-
- 0 replies
- 636 views
-
-
சிறிலங்கா தொடர்பான தெளிவு எமக்கு இருந்தனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்ளவில்லை என்று சிறிலங்காவுக்கான ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட யசூசி அகாசி நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேலும் தெரிவித்துள்ளதாவது: இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியாக உள்ளார். இலங்கைக்கான சமாதானக் கட்டமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஐப்பானிய பிரதிநிதி என்ற வகையில் எனது பயணம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. இதே தகைமையுடன் ச…
-
- 0 replies
- 477 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கூஜா தூக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை காற்றுக்கூட புகமுடியாத அறைக்குள் வைத்து பூட்ட வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அமைச்சரான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது: இந்த நாட்டில் தோல்வியுறாத மன்னனாக எமது அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நான் காண்கின்றேன். பிரபாகரன் கொல்லப்பட்டதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். எமது பிள்ளைகள் நிம்மதியாக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். எமது பிள்ளைகள் பயம் இன்றி பாடசாலை செல்கின்றனர். எமது அரச தலைவர் அச்சமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட…
-
- 0 replies
- 465 views
-
-
வீரகேசரி நாளேடு - வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் போரினால் பாதிப்பிற்குள்ளான பொது மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்னர், குறித்த பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லாமல் போய்விடும். எனவே, அரசாங்கம் உடனடியாகத் தொல்பொருள் ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். வடக்கில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் உள்நாட்டில் அதிகார பகிர்வு பிரச்சினைக்கும் சர்வதேசத்தின் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றம் போன்ற பிரச்சினைகளுக்கும் சரியான பதிலடி கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய பிக்கு முன்னணிய…
-
- 8 replies
- 923 views
-
-
காற்றுப்புக முடியாத அறைக்குள் வைத்து கூட்டமைப்பினரை பூட்ட வேண்டும் - அமைச்சர் மேர்வின் சில்வா ஜ வியாழக்கிழகாற்றுப்புக முடியாத அறைக்குள் வைத்து கூட்டமைப்பினரை பூட்ட வேண்டும் - அமைச்சர் மேர்வின் சில்வா [ வியாழக்கிழமை, 11 யூன் 2009, 05:02.53 PM GMT +05:30 ] தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களை காற்று புக முடியாத அறைக்குள் வைத்து பூட்ட வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். புலிகளை தோற்கடித்த நாங்கள் இன்னும் மூன்று வருடங்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம். எனினும் புலிகளிடம் சம்பளம் பெற்ற ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர் என்றும் அமைச்சர் மேலும் சொன்னார…
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் தொடருகின்ற வெற்றிவிழாக் கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் எச்சரித்திருக்கிறார். பயங்கரவாதம் என்று எதனை மக்கள் கிரகித்துக்கொண்டு அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ, அச் செயல்கள் நிறைவு பெற்றதனால் அடைந்த நிம்மதியின் வெளிப்பாடாக, “பயங்கரவாதத்தின் முடிவு” என்பதனை அவர்கள் கொண்டாடக் கூடும். அதேவேளையில், ராஜபக்ஸ அரசு இந்த வெற்றியினூடாக அதன் அரசியல் பயணத்தில் பெரிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கிறது. எனவே தன்னை இன்னும் பிரபலப்படுத்துவதற்காக வெற்றியின் உற்சாகம் தரும் மெல்லிய புறத்தோற்றத்தை சடுதியாகப் போர்த்திக் கொள்கிறது. அதேச…
-
- 2 replies
- 2k views
-
-
வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து புல்மோட்டைக்கு சென்றபோது தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் காலி பூஸா முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புல்மோட்டைக்கு வந்த இவர்கள் புல்மோட்டை, பதவியா மற்றும் ஹெப்பிட்டிகொலாவ பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் இவர்களில் எட்டு பேர் இளம் பெண்கள் எனவும் 13 பேர் ஆண்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் உக்கிரமாக மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கிருந்து புல்மோட்டைக்கு படகுகளில் தப்பி வந்த இவர்கள் படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் காணவி…
-
- 0 replies
- 604 views
-
-
இந்தியா வெட்கி, தலைகுனிந்து, வருந்தும் நாள் வரும் [ வியாழக்கிழமை, 11 யூன் 2009, 07:22.08 AM GMT +05:30 ] இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதத்தில் இலங்கைத் தமிழர்களின் துயரையும், அவர்களுக்கு அந்நிலை ஏற்படக் காரணமான நிகழ்வுகள் குறித்தும், அதில் இந்தியாவிற்கு இருந்த பங்கு குறித்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களின் உறுப்பினர்களும் வருத்தத்துடனும் கோபத்துடனும் எடுத்துரைத்துள்ளனர். மாநிலங்களவையில் நடந்த இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு, “அங்கிருந்து (இலங்கை) வரும் செய்திகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன, அப்பாவித் தமிழர்கள் பெரும் …
-
- 2 replies
- 2k views
-
-
இந்தியாவில் இருப்பதை போன்று இலங்கையிலும் கடலோரப் பாதுகாப்பு படை என்ற படைதரப்பு உருவாக்கப்பட உள்ளது. கடல் ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களை தடுக்க இந்த கடலோர பாதுகாப்பு படையை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடல் கொள்ளை, ஆயுத கடத்தல், மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இந்த படைப்பிரிவை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....10549&cat=1
-
- 1 reply
- 888 views
-
-
இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிங்களவர் வாழ்ந்தார்கள்: தேசிய பிக்கு முன்னணி திகதி: 11.06.2009 // தமிழீழம் இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் போரினால் பாதிப்பிற்குள்ளான பொது மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்னர், குறித்த பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லாமல் போய்விடும். எனவே, சிறீலங்கா அரசாங்கம் உடனடியாகத் தொல்பொருள் ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். வடக்கில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் உள்நாட்டில் அதிகார பகிர்வு பிரச்சினைக்கும் சர்வதேசத்தின் இலங்கைக்கு எதிரான மனித உரி…
-
- 2 replies
- 644 views
-