ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
05/06/2009, 18:23 [பிரித்தானியச் செய்தியாளர்] முகாம்களில் பணியாற்ற அனுமதி வேண்டும் - மன்னிப்புச் சபை வவுனியா முகாம்களில் பணியாற்ற தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என, பன்னாட்டு மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிவரும் அப்பாவி பொதுமக்களுக்கான அடிப்படை மனிதாபிமான உதவிகள் போதாது எனவும், இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே வெளிநாட்டு மனிதநேய அமைப்புக்களின் பணியாளர்கள் அங்கு பணியாற்ற பூரண அனுமதியைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு மனிதநேய அமைப்புக்களின் சேவையை அரசாங்க…
-
- 1 reply
- 502 views
-
-
ஊடகவியலாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு இலங்கை: உலக கருத்துரிமை அமைப்பு திகதி: 05.06.2009 // தமிழீழம் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நிகழும் இலங்கைதான் உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு மிக ஆபத்தான நாடாக உள்ளது என்று சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் கண்டனம் செய்துள்ளது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கூடிய சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம்அமைப்பு, இலங்கையில் சமீபத்தில் ஊடகவியலாளர் போடால ஜெயந்தா தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. பன்னாட்டு ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 30 கருத்துச் சுதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஊட…
-
- 2 replies
- 521 views
-
-
05/06/2009, 11:15 மணி தமிழீழம் [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] 3000 - 5000 பொதுமக்களே கொல்லப்பட்டனராம் - பொய்ப்பரப்புரையில் ஈடுபடும் அரசு வன்னியில் தமது அரசு முன்னெடுத்த ஆக்கிரமிப்பு, இன அழிப்புப் போரில் 3000 - 5000 பொதுமக்களே கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. சிறீலங்கா அரசின் மிகப்பெரும் பரப்புரை பீரங்கியாகச் செயற்பட்டுவரும், மனித உரிமைகள் அமைச்சின் செயரும், சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளருமான ரஜீவ விஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். மே மாதத்தின் சில நாட்களில் மட்டும் 20,000 போதுமக்கள் கொல்லப்பட்டதை இவர் மறுத்துரைத்துள்ளார். அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல்வரை 7,000 பொதுமக்களே கொல்லப்பட்டனர் என ஐ…
-
- 1 reply
- 462 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது செயலிழந்து போன ஒரு இயக்கம் என்பதனாலும் சிறிலங்கா அரசாங்கத்தின் கூற்றின் படி அந்த இயக்கத்தின் அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டமையாலும் - அமெரிக்காவும் ஏனைய மேற்குலக அரசுகளும் விடுதலைப் புலிகளை தமது பயங்கரவாதப் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலறி கிளின்ரன் அவர்களுக்கும் அமெரிக்க தலைவர் பராக் ஒபாமா அவர்களுக்கும் காங்கிரஸ் மற்றும் செனட் சபை உறுப்பினர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவை…
-
- 3 replies
- 813 views
-
-
இலங்கை மீதான விசாரணைக்கு ஐநா உதவும் - வலியுறுத்துகின்றார் நவநீதம்பிள்ளை
-
- 1 reply
- 751 views
-
-
தமிழரிற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கத் தேவையான சட்டமும் சமூக முறைமைகளும் இல்லாதவிடத்து மீண்டும் ஒரு போராட்டம் உருவாக சாத்தியமுள்ளது அது ஆயுதப் போராட்டமாக இருக்க வேண்டும் என்றதில்லை என தலைமை நீதிபதி சரத் சில்வா இன்று கூறினார். SL Chief Justice says 'grant Tamils their due protection by Law'
-
- 0 replies
- 858 views
-
-
Tamil doctors, who served inside safe zone placed on trial
-
- 0 replies
- 932 views
-
-
சென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோ…
-
- 3 replies
- 2.1k views
-
-
"ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு உரியவர்களை உடன்படச் செய்யாவிட்டால் நாட்டாமை பேசும் நாடுகள் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும்" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'ஆனந்த விகடன்' வார இதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக 'ஆனந்த விகடன்' வார இதழில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. தாக்கல் செய்த இரகசிய அறிக்கையை ஆதாரம் காட்டி, 'மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நடக்க வேண்டும்' என்று ஒரு சில நாடுகள் கோரிக்கை வைத்த…
-
- 5 replies
- 858 views
-
-
சிறிங்கா தடுப்பு முகாம்களுக்குள் கட்டாயப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நூறாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உதவுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உலகப் பிரபல பாடகி மாயா அழைப்பு விடுத்துள்ளார், என பிரித்தானியா ஸ்கை செய்திகள் தெரிவித்துள்ளன. மேற்குலக இசையில் பிரபலமான மாயா அருட்பிரகாசம், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலின் ஒரு சுயாதீன வேட்பாளரான, ஜனனி ஜனநாயகத்துக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்திருந்தார் என்றும் ஸ்கை செய்தி கூறியுள்ளது. “300,000 மக்களை கட்டாயப்படுத்தி முகாம்களுக்குள் தடுத்து வைத்திருக்கும் சிறிலங்கா அதிகாரிகள் அவர்களது முழு உரிமைகளையும் பறித்துள்ளார்கள். அம்மக்களுக்கு உணவில்லை, அம்முகாம்களுக்குச் செல்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை, ஊடக சுதந்திரம் இல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா சபையின் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல் குறித்த தீர்மானம் முறியடிக்கப்பட்டுள்ளது.அத்த
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் சிறிலங்காவில் இருந்தபோது சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
பிரான்சில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தீப வணக்கம் செலுத்துவதற்கான அழைப்பினை பிரான்சில் உள்ள இலங்கை - இந்திய வர்த்தகர் சங்கம் விடுத்திருக்கின்றது. டென்மார்க்கில் கறுப்புக்கொடி கண்டனப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
இலங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, இந்த விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 462 views
-
-
பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் கவனயீப்பு போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளை இனப் பெண்ணான மரியா என்பவர் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியபடி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
தமிழ்.வெப்துனியா.காம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும், ஈழத் தமிழ் மக்கள் வாழ்க்கையிலும் ஒரு எதிர்பாராத சூழல் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய ஒரு தாக்குதல் நடத்தி போரை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது சிறிலங்க அரசு. பாதுகாப்பு வலயத்தில் இருந்து விரட்டப்பட்ட அல்லது அங்கு நடந்த தாக்குதலால் ஓடிவந்த சற்றேறக்குறைய இரண்டே முக்கால் லட்சம் மக்கள் இன்றைக்கு அங்கு வசதியற்ற 40 முகாம்களில் இருப்பதாக செய்தி வந்துள்ளது. அதே நேரத்தில் மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடருமா? அல்லது எப்பொழுதுதான் தொடரும்? இதற்குப் பிறகு எந்த திசையில்தான் செல்வது? போன்ற பல்வேறுபட்ட கேள்விகள், பொதுவாக தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு ஒரு நெருங்கிய தொடர்புடையவர், ஈழத் தமிழ் மக்…
-
- 0 replies
- 799 views
-
-
காஷ்மீர் பிரச்சனையை விட்டுத்தர முடியாது:பாக். காஷ்மீர் பிரச்சினையை விட்டுக்கொடுக்க முடியாது. அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியமானது. அதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறி இருக்கிறது. இதுபற்றி பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் அப்துல் பாஷித், ’’காஷ்மீர் பிரச்சினை, நீண்ட நாள் பிரச்சினை. அதை தீர்க்க வேண்டியது அவசியமானது. காஷ்மீர் பிரச்சினையை அமெரிக்காவின் உதவியுடன் தீர்த்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வோம். காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. மனித உரிமை மீறல்களை, இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்’’என்று கூறினார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9535
-
- 2 replies
- 1k views
-
-
தாயக மக்களுக்காக புலம்பெயர் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'வணங்கா மண்' கப்பல் சிறிலங்கா கடற்பரப்புக்குள் நேற்று அதிகாலை நுழைந்தபோது கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
சிறிலங்கா படையினரின் தடுப்புக் காவலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இறுதிவரை பணியாற்றிய நான்கு மருத்துவர்கள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரக்கட் பேரவை உலகக் கிண்ண டுவரின்ரி‐20 போட்டித் தொடரில் பங்கேற்க சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் சிலர் ஆர்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும், இலங்கைக்கு எதிரான போட்டிகளை ஏனைய நாடுகள் பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். இலங்கயில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதனால் உலக அரங்கில் இலங்கை கிரிக்கட் அணி புறக்கணிக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர். தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது மைதானத்திற்கு வ…
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப இந்தியா திட்டம்? இலங்கையின் வட பகுதியில் நிலைமையை ஆராயவும், அங்கு முகாம்களில் உள்ள தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து அறியவும் சிறப்பு தூதர் ஒருவரை அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாய் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு போதிய உணவு, நீர், கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில் அவர்கள் பெரும் கொடுமையான சூழலில் வசித்து வருகின்றனர். இது குறித்து ஐ.நா., ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்தாலும் இந்தியா மட்டும் கவலைப்படாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந் நிலையில் தமிழர் விவகாரம் குறித்து விவா…
-
- 10 replies
- 1.6k views
-
-
பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன் எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன். சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உ…
-
- 35 replies
- 8.1k views
-
-
முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை சொற்களில் விளக்க முடியாது என்று சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா கவலை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் உள்ள மாரவிலவில் நீதிமன்ற வளாக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். வன்னிப் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் தங்கியுள்ள 'நிவாரண ஊர்களுக்கு' சென்றிருந்தேன். அவர்களின் துன்பங்களையும், வேதனைகளையும் என்னால் சொற்களில் விளக்க முடியாது. நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை ஒரே இனம்தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க முடியும். இடம்பெயர்ந்த அப்பா…
-
- 11 replies
- 1.9k views
-
-
தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும், தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் றிச்சர்ட் டிக்சன் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் இலங்கை இனப்படுகொலை குறித்தும், அதனை தடுக்க உலக நாடுகள் தவறிவிட்டன குறித்தும் கட்டுரை …
-
- 4 replies
- 1.4k views
-