ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது. இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. இதனால் மனம் கொதித்துப்போன மதிமுக தொண்டர் தீக்குளித்துள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்த மதிமுக தொண்டர் சிதம்பரம் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8641
-
- 9 replies
- 2.6k views
-
-
எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம் தமிழீழம் 19.05.2009 எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம். அன்பு மிக்க எம் உறவுகளே! 60 வருடகால நீண்ட மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக எம் தமிழர் தேசம் தனக்கான சுயமான போராட்ட சக்தியாக மாறியுள்ளது. இன்று சர்வதேசம் எங்கும் எமது தேசம் தொடர்பாகவும் தமிழீழ தமிழர் பற்றிய பிரச்சினைகளையும் அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கையில் உள்ள அனைத்து குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காணுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 459 views
-
-
கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் நேற்று திங்கட்கிழமை இரவு அக்கரைப்பற்றுப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 472 views
-
-
சிறிலங்கா படையினரின் தமிழ் இன அழிப்பு படுகொலையை களியாட்டங்கள் மூலம் கொண்டாடிவரும் சிங்களக் காடையர்கள், தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ்ப் பெண்களின் தங்க நகைகளை அபகரித்த இரண்டு சம்பவங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 518 views
-
-
இலங்கை யுத்தம் பொய்களாலும், போலித்தனங்களாலும் நிறைந்ததொன்றென பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் டெலிகிராம் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் ரிச்சர்ட் நிக்சன் தெரிவித்துள்ளார். சீன ஆயுதங்கள், இந்திய புலனாய்வுத் தகவல்கள், இராணுவப் படைவீரர்கள் மற்றும் சிங்கள இனவாத தலைவர்களின் உதவியுடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களது சொந்தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை நினைத்து மிகவும் வேதனையடைவதாக அவர் தெரிவித்துள்ளார். வன்னியில் சூரியனும், சந்திரனும் நட்சத்திரங்களும் தங்களது முகத்தை மறைத்துக் கொண்டுள்ளதாகவும் மரண தேவதையின் ஒளிக்கீற்றுக்களினால் முழு வன்னிப் பிரதேசமே மூழ்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்ட…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கை தேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றக் கூட்டம் ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூட்டியிருக் கின்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில் ஜனா திபதி தலைமை வகித்து உரையாற்றுவதற்கு வசதி யாக நாடாளுமன்றம் நேற்றுமுன்தினம் நள்ளிரவோடு இடைநிறுத்தப்பட்டிருகின்றது. புதிய கூட்டத் தொடரை இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும்போது, தமது தலைமையில் நாடா ளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு ஜனாதிப திக்குக் கிடைக்கிறது. ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந் திப் போராடிய விடுதலைப் புலிகளின் தலைமையை அடியோடு அழித்து, அதனை நீக்கியதோடு, நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதான அரசின் அறிவிப்பை இன்று நாட்டு மக்களுக்கு விட…
-
- 0 replies
- 990 views
-
-
தமிழர் மனங்கள் வேதனையில் - சிங்கள தேசம் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் தமிழர் தாயக பிரதேசமெங்கிலும் இன்று காலை படை முகாம்கள் சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கியமாக நகர்ப்பகுதிகள் எங்கிலுமாக படையினர் பட்டாசுகள் கொழுத்தி ஆர்ப்பரித்தனர். நாடாளுமன்றத்தில் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் உரையை பல இடங்களிலும் படையினர் நேரடி ஒலிபரப்பச் செய்ததனையும் அவதானிக்கமுடிந்தது. அதுமாத்திரமன்றி, வீடுகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களிலும் சிறிலங்காவின் தேசியக்கொடியை பறக்கவிடுமாறு படையினர் கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தனர். இதேவேளை நாளை (மே-20) தேசிய விடுமுறை தினமாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. தமிழர் மனங்கள் வேதனையில் தோய்ந்து கிடக்க சிங்கள தேசம் இன்று மகிழ்ச்சி கொண்டாடி வருகின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
உயிர்த் தியாகம் மேற்கொண்டு மீட்கப்பட்ட வடக்கு வீதிகளுக்கு படைவீரர்களது பெயர்களை சூட்ட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தேச ஒருமைப்பாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களது பெயர்கள் சகல வீதிகளுக்கும் சூட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான சட்டப் பின்னணியை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அப்பாவிகள் உயிர்த்தியாகம் செய்திருக்காவிட்டால் புலிகளிடமிருந்து நாட்டை மீட்பெதென்பது வெறும் கனவாக அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வீதிகளுக்கு படைவீரர்களது பெயரைச் சூட்டுவதன் மூலம் படைவீரர்களுக்கு கௌரமவளிக்க முடியும் என அவர் தெரிவித…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், விடுதலைப் புலிகளின் தலைவருமான பிரபாகரன் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்று செய்திகள் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த கடலூர் மாவட்டம் - குறிஞ்சிப்பாடி ஒன்றிய மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவரான 50 வயது நிரம்பிய பிரகாசம் எனும் கழகத் தோழர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். உடனடியாக அவர் பாண்டிச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். ஏடுகளிலும், ஊடகங்களிலும் வெளியாகி இருக்கின்ற செய்திகளால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் சோகக் கடலில் ஆழ்ந்துள்ள நிலையில் உலக மகா வீரன் பிரபாகரன் அவர்களைப் பற்றி வெளியாகி உள்ள செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், தீக்குளிக்கின்ற முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும்…
-
- 0 replies
- 842 views
-
-
கொழும்பில் இன்று வெறித்தனமாக அலைந்து திரியும் சில பேரினவாதக் கும்பல்கள் தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழ் வர்த்தகர்களிடம் சென்று தேசிய கொடியை கடைகளில் கட்டுமாறு இவர்கள் அச்சுறுத்துவதாகவும் வெள்ளவத்தையில் சில தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம் வீதிகளில் அதிகம் செல்வதை தவிர்த்து தமிழர்கள் பலர் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகவும் தெரியவருகிறது. ஒருவித அச்சம் கலந்த சூழல் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இதேபோன்ற நிலை மட்டக்கிளப்பிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பில் வீதீயால் செல்லும் தமிழர்கள் மீது தண்ணீரை ஊற்றி கேலிசெய்வதாகவும், இனி உங்களுக்கு யார் இருக்கிறார்…
-
- 21 replies
- 5.4k views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார் . UN Secretary General to visit SL The UN Secretary General Ban Ki-moon is scheduled to visit Sri Lanka this week on May 22nd. His chief of staff Vijay Nambiar who is already in Colombo met with senior government officials today to discuss the situation in Sri Lanka. - டெய்லி மிரர் -
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். அவரின் பேட்டியின் முக்க…
-
- 0 replies
- 2.3k views
-
-
பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். தமிழ் நெட்ற்கு திரு பத்மநாதன் செவ்வி Pirabakaran alive; SL lost trust & confidence of Tamils; India has a crucial role to play
-
- 4 replies
- 3.2k views
-
-
Sri Lanka lost confidence of Tamils: Pathmanathan Stating that the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Mr. V. Pirapaharan is alive and well, Mr. Selvarasa Pathmanathan, the head of LTTE's international relations, told TamilNet Monday that it was very unfortunate that many of its senior members and leaders have either given up their lives or have been treacherously killed. "The Sri Lankan Government may have declared a military victory. But it does not realize that it is a hollow victory. It has completely lost the trust and confidence of the Tamils in Sri Lanka," he further said in an exclusive interview. TamilNet The Sri Lankan Government has…
-
- 1 reply
- 1.9k views
-
-
இன்று உலக பங்குச்சந்தைகள் எல்லாம் ஏற்றங்களை காட்டி இருக்கின்றன . நுயோர்க் , லண்டன் ,டோகியோ பங்குச்சந்தைகள் எல்லாம் அதிகரிப்புகளை காட்டுவதன் பின்னணியில் உலக பொருளாதார மீட்சி என்ற காரணம் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் உயரிய பெறுமதியை அடைந்திருக்கிறது , அதற்கு காரணம் அங்கு காங்கிரஸ் தலைமையில் ஒரு பொருளியல் அறிஞரை பிரதமராக கொண்ட நிலையான ஒரு அரசாங்கம் அமைந்திருக்கிறது. இடது சாரிகள் ஆதரவோ , பிற்போக்கான கொள்கைகள் உடைய கட்சிகளில் தங்கி இருக்கின்ற அரசாங்கம் அமையாமை மிகப் பெரிய அந்த மாற்றத்துக்கு காரணம் . ஒரேநாளில் இரண்டாயிரத்து பத்து புள்ளிகள் அதிகரித்து பதின் நாலாயிரம் புள்ளிகளை தொட்டிருக்கிறது. இவை எல்லாம் இப்படி இருக்க ஒரு தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு செ…
-
- 3 replies
- 3.3k views
-
-
http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO3a030Mt3e செய்தியின் படி திங்கள் அதிகாலை வரை பொதுமக்களும் காயமடைந்த போராளிகளும் பலர் உயிருடன் இருந்துள்ளார்கள். எத்தனை பேர் இருந்தார்கள்? கடைசியில் எத்தனை பேர் மீட்கப்பட்டார்கள்? அவ்வளவு பேரும் கொலை செய்யப்பட்டனரா? எதுவும் தெரியவில்லை.... சில நாட்களுக்கு முன் புலிகள் 165 000 என்று கூற, சர்வதேசமோ 50 000 எனச் சொல்ல, சிங்களம் 10 000 என்று கூறியது. இப்பொழுது சிங்களத்தோடு சர்வதேசமும் புலி முடிந்துவிட்டது என கூறுகின்றது. ஆனால் மிகுதி மக்களைப் பற்றி சர்வதேசம் மறந்துவிட்டது. அல்லது வேண்டுமென்றே அந்த மக்களின் விடயத்தை புறக்கணித்துவிட்டது. இப்போது எமது கடமை... சர்வதேசத்தின் முன்னால் அந்த மக்கள் எங்கேயெனக் கேட்டு... …
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக, இலங்கை ராணுவம் இன்று அறிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியில் நம்பகத்தன்மை இல்லாதவண்ணம் சூழல் நிலவுவதாக, சர்வதேச தமிழ்ச் சமுதாயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்துவிட்டதாக, இன்று (மே 18) காலை தொடங்கியே இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, புலிகளின் அரசியல் தலைவர் நடேசன், சமாதான செயலர் தலைவர் புலித்தேவன், புலிகளின் சிறப்பு ராணுவத் தலைவர் ரமேஷ் ஆகியோரது உடல் அடையாளம் காணப்பட்டதாக, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின்…
-
- 0 replies
- 2.6k views
-
-
பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 10 replies
- 3.7k views
-
-
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரையில் தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: அணிகலன் ஆக்கும் வினையாற்றுபவன்; அந்த அணிகலன் இரும்பால் ஆனதா- அல்லது செம்பு பித்தளையா- பொன்னால் ஆன கரணைகள் கொண்டதா- வைர மணி மாலையா- எந்த ஒரு உலோகத்தினால் உருவாக்கப்படுவதாக இருப்பினும், அணிகலனின் வனப்பு வசீகரத்தை விட அதை நீண்ட சங்கிலியாக இணைத்திருக்கும் ஒவ்வொரு கரணையும் ஒன்றையொன்று வலிவு குறையாமல் விளங்கி இணைந்திருக்கிறதா என்பதை முதலில் ஆய்வு செய்வதையே வழக்கமாக கொள்வார்கள். அப்படி கண்ணீரிலும், செந்நீரிலும் தோய்த்தெடுத்த கரணைகளை இணைத்திட்டதும் வனப்பும் வலியும் மிகுந்ததுமான திராவிட இயக்கம் …
-
- 15 replies
- 2.8k views
-
-
புதிதாக அச்சிடப்பட்டுள்ள பல தேசிய கொடிகளில் தமிழரைக் குறிக்கும் செம்மஞ்சள் நிறம் அச்சிடப்படவில்லை சிங்களவரை பிரதிபலிக்கும் கடுஞ்சிவப்பு நிறமே அச்சிடப்பட்டுள்ளது: இலங்கையின் வடக்கில் நடைபெற்று வந்த யுத்தம் முடிவையெட்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இதன் மூலம் தோற்கடிக்கப்பட முடியாது என பலராலும் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தோல்வி கண்டுள்ளதாகவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது. இந்த யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் சகலரும் வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் இலங்கை தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென படையினரும் காவற்துறையினரும் ஏன் அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. இதற்காக பல இலட்சக்கணக்கில் இலங்கைத் தேசிய கொடிகள் ப…
-
- 5 replies
- 2.7k views
-
-
இலங்கை அரசிற்கே இல்லாத அக்கறையில் சில பதிவர்கள் தலைவனின் மறைவிற்கு அஞ்சலி ஒட்டத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியெல்லாம் நடந்து விட முடியாது. இது என் எண்ணம். அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடியும். நிகழ்வுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை மட்டும் பாருங்கள். பின்னர் ஒரு முடிவிற்கு வாருங்கள். 60 வருட கால சுதந்திரத்திற்கான போராட்டம் இது. 30 வருட காலம் தலைவரின் நேரடி பங்களிப்பு. இந்த இராணுவ முற்றுகை என்பது ஒரே இரவில் நடந்து முடிந்ததல்ல. ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக முன்னேறிய கடும் பிரயத்தனம். புலிகளோ வான் கலங்கள் நீர்மூழ்கிகள் திறன் மிக்க கடற்படை என்பவற்றைக் கொண்டிருந்தவர்கள். போரை எதிர்கொண்ட வேளையில் சர்வ…
-
- 1 reply
- 2.6k views
-
-
வடபகுதியில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களின்போது போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஏழு சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று பாதுகாப்பான முறையில் விடுவிக்கப்பட்டு இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியேறிய ஒரு தொகுதி மக்களுடன் மக்களாக வெளியேறிய இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய இந்த நான்கு கடற்படையினரும் மூன்று இராணுவத்தினரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து தம்…
-
- 6 replies
- 1.6k views
-
-
பொய் பிரச்சாரத்தைக்கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் பலர் கைது சிங்கள அரசுடன் இணைந்து இந்திய உளவுத்துறை “ரா” மூலம் தமிழக ஊடகங்களில் ஈழத்தில் 35000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட செய்தியை மறைத்து பொய் செய்தியை பரப்புவதைக்கண்டித்து தமிழகத்தில் நெல்லை மாநகர் வண்ணாரப்பேட்டையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சாலை மறியல் செய்த வழக்கறிஞர்கள், பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமையில் , பெரியார் திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் காசிராசன் ,வழக்கறிஞர் சங்க துணைச்செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர்கள் கருணாநிதி, ராஜ இரத்தினம், மோகன், முத்துக்…
-
- 0 replies
- 2k views
-
-
நோர்வேயில் தொடர் போராட்டம் இன்று காலை அமெரிக்கன் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் 1 மணித்தியாலத்தில் நிறைவுபெற்றதை தொடாந்து இன்று பி.பகலில் இருந்து தொடர் போராட்டம் நடைபெ உள்ளது
-
- 0 replies
- 960 views
-