ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
“மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும்” ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று சனிக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது. குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர். போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு…
-
- 1 reply
- 291 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 04:12 PM (எம்.நியூட்டன்) தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் ஏழாலை மக்கள் சுற்றுச் சூழல் அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொலைத் தொடர்பு கோபுரம் இவ்விடத்தில் அமைக்க வேண்டாம். ஏழாலை தெற்கு புளியங் கிணற்றடி வீதியில் சனநெருக்கம் அதிகமாக உள்ள இடத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதை நாம் விரும்பவில்லை. இந்தச் செயற்பாடானது எமது பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போத…
-
- 2 replies
- 832 views
- 1 follower
-
-
டெங்கு தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு டெங்கு தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரையில் 48,963 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இவர்களில் 24,402 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் 9,559 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிக ஆபத்துள்ள வலயங்களாக 61 பிரதேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1337076
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கை விமான சேவையில் 6 ஆயிரம் பேர் தொழிலை இழப்பர் : அமைச்சர் நிமல் 01 JUL, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதன…
-
- 0 replies
- 204 views
-
-
இலங்கையின் நெருக்கடிகளுக்கு பூச்செண்டுகளாக சர்வதேச உதவிகள் அழித்து விட வேண்டாம் - அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் 01 JUL, 2023 | 09:38 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் பொருளாதார நெருக்களை தீர்க்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்புகள் பூச்செண்டுகளாக கிடைக்கப்பெறுகின்றன. இவற்றை பயன்படுத்தி நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதா அல்லது அழிவுக்கு வழிவிடுவதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவ…
-
- 0 replies
- 180 views
-
-
01 JUL, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இலங்கை விமான சேவை எமிரேட்ஸ் …
-
- 1 reply
- 175 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 01 JUL, 2023 | 06:28 AM கொழும்பு வடக்கு போதனா வைத்தியாசாலையில் ( ராகம) அன்டிபயோட்டிக் ஊசி மருந்து ஏற்றப்பட்ட 23 வயது யுவதி உயிரிழந்துள்ளார். 27ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு வாய்மூலம் பயன்படுத்துவதற்கான மருந்து வழங்கப்பட்டதாகவும், ஆனால் அது பலளனிக்கவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதே மருந்தினை ஊசி மூலம் மருத்துவர் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த யுவதி ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஓவ்வாமையினால் பாதிக்கப்பட்ட யுவதியை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாக ராகம வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். எட்டு மணித்தியாலங்க…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 MAY, 2023 | 04:58 PM (எம்.வை.எம்.சியாம்) அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம். இருப்பினும் குறித்த எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு எமது வ…
-
- 6 replies
- 307 views
- 1 follower
-
-
ருவென்வெலிசாயவில் இருந்து வவுனியாவுக்கு தேரர்கள் பாதயாத்திரை ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த தேரர்கள் பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது. அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியைக் கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது. குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த தேரர்கள், மறைந்த பௌத்த தேரர்களின்…
-
- 3 replies
- 507 views
-
-
Published By: VISHNU 29 JUN, 2023 | 08:21 PM யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இர…
-
- 18 replies
- 1.3k views
- 2 followers
-
-
30 JUN, 2023 | 07:31 PM ( இராஜதுரை ஹஷான்) இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வீட்டு மின் பாவனையில் 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வின் 65 சதவீத கட்டணம் ஒரு அலகு 30 ரூபாவாலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்த நிலுவை கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைக்கப்படும். அத்துடன் 60 அலகுகளுக்குக் குறைவான பிரிவில், ஒரு அலகுக்கான கட்டணம் ரூபா 42 இல் இருந்து 32 ரூபாவாகவும் மாதாந்த நிலுவைக் கட்டணம் ரூபா 650 இல் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்படும். 91 மற்றும் 120 அலகு பிரிவுகளுக்கு ஒரு அலகு 4…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
30 JUN, 2023 | 04:33 PM முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டாரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிலிருந்து கட்டாருக்கு வேலைக்காக சென்ற இருஇளைஞர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கட்டாரில் இளைஞர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/158926
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
தேர்தல் நடவடிக்கையை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானி அறிவிப்பு அச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை - அரசாங்க தகவல் திணைக்களம் By DIGITAL DESK 5 30 JAN, 2023 | 10:08 AM (எம்.ஆர்.எம்.வசீம்) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்கு இதுவரை அச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தேர்தல் ஆணைக…
-
- 76 replies
- 5.2k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 JUN, 2023 | 11:16 AM விசேட மருத்துவநிபுணர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்துள்ளதாலும் ஏனைய சிலரை சர்வதேச பல்கலைகழகங்கள் உள்வாங்குவதாலும் இலங்கையின்சுகாதார துறை நெருக்கடிகளை எதிர்கொள்ளநேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை சமீபத்தில் வைத்தியர்களின் ஓய்வுவயது எல்லையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் இதற்கு காரணமாக உள்ளது எனவும் கருத்துக்கள்வெளியாகியுள்ளன. 2024 இல் நாட்டிற்கு 4229 விசேட வைத்திய நிபுணர்கள் தேவை என சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது எனினும் இடமாற்றம் அடிப்படையிலான புள்ளிவிபரங்கள் 750 வெற்றிடங்களை உடனடியாக நிரப்பவேண்டியுள்ளதை புலப்படுத்தியுள்ளன. இருதயநோய் நிபுணர்…
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது ஏன் என்பது வங்கித் தலைவர்களுக்குக் கூட தெரியாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மூன்று நாள் வங்கி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர். மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி அவர்கள் பொருளாதாரத்தை திவாலாக்கியதைப் போல வங்கித்துறையை திவாலாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. நிதித்துறையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும். இது உள்நாட்டுக் கடனைக் குறைக்கச் செல்வதை வ…
-
- 6 replies
- 678 views
- 1 follower
-
-
28 JUN, 2023 | 11:02 AM கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற வீதியில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/158747
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
இணைய விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த யாழ். இளைஞன் Posted on June 29, 2023 by தென்னவள் 8 0 இணைய விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாண இளைஞன் பணத்தினை இழந்துள்ளார். இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் அந்த மோட்டார் சைக்கிள் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை அடுத்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொடர்பு இலக்கத்துடன் இளைஞன் தொடர்பு கொண்ட போது , மோட்டார் சைக்கிளுக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால் , மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கிறோம் என நம்பிக்கை தரும் விதம…
-
- 4 replies
- 513 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 JUN, 2023 | 04:30 PM யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என சமூக செயற்பாட்டாளர் எஸ். செல்வின் தெரிவித்தார். உலக வாங்கியால் வெளியிடப்பட்ட கடல் அட்ட பண்ணை தொடர்பில் கடத்தொழில் சங்கங்களுக்கு விழிப்புணர் கூட்டம் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள ஆழம் குறைந்த கடற்கரைகளில் எவ்வித பரந்துபட்ட ஆய்வுகளும் திட்ட மிடல்களும் இன்றி க…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
கவிஞர் தீபச்செல்வனுக்கு அமெரிக்க விசா மறுப்பு Posted on June 28, 2023 by தென்னவள் 5 0 அமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருந்த ஈழ கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கும் தீபச்செல்வன், எதிர்காலத்தில் இந்தியாவுக்குச் செல்லவும் தனக்கு விசா மறுக்கப்படலாம் என கவலை தெரிவித்திருக்கிறார். நாவலாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா எனப் பல தளங்களில் இயங்கிவருபவர் கவிஞர் தீபச்செல்வன். அவர் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகி…
-
- 3 replies
- 528 views
-
-
விபத்தில் சிக்கிய விஜயகலா உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார். குறித்த நால்வரும் பயணித்த சிற்றூந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் எவரும் கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://…
-
- 2 replies
- 337 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 JUN, 2023 | 03:53 PM விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலை பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு நாளை (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில் அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர…
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையம் நோக்கி நேற்றிரவு 8.20 மணிக்குப் புறப்பட்ட விமானமொன்று தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரண்டரை மணிநேரத்தில் மீண்டும் இலங்கையை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-455 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 301 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வேறொரு விமானத்தில் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ht…
-
- 0 replies
- 353 views
-
-
28 JUN, 2023 | 02:53 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கட்டாமுரி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவன் தனது சகோதரர் மற்றும் இரண்டு மைத்துனர்களுடன் வேட்டையாடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிறுவனுடன் வேட்டையாடச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/158776
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அளித்த விளக்கம்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் கடந்த இரண்டு மாதங்களில் 18 இலிருந்து 15 ஆக குறைந்துள்ளது. திட்டமிடப்பட்ட குத்தகைக் காலாவதியால் விமானப் பற்றாக்குறை ஏற்படுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கணித்திருந்தது, எனினும், எதிர்பாராத நிகழ்வுகளால் நிலைமை மோசமடைந்தது. உள்நாட்டில் உதிரிப்பாகங்கள் கிடைக்காமை காரணமாக இரண்டு விமானங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன. அ…
-
- 8 replies
- 728 views
-
-
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மக்களுக்கு பாதிப்பு இல்லை : ஜனாதிபதி! உள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மீதியும் பாதிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொது நிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பை ஏற்படாது. கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்திலும் எவ்வித பாதிப்பு…
-
- 0 replies
- 199 views
-