Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த இருபத்தைந்து வருடங்களுக்குமதிகமாக தாயகம் கோரிப் போராடும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவாகப் பல வருடங்களாகப் புலம் பெயர் தேசங்களிலும் அமைதிவழிப் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் எனப் பல நடந்து வந்திருக்கின்றன. அன்மைக்காலத்தில் வன்னிப் பெரு நிலப்பரப்பில், போர் அதி உச்சநிலை அடைந்திருந்த போதும், புலம் பெயர் தேசங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மிகுந்த ஒழுங்கமைப்புடனேயே நடைபெற்று வந்தன. நேற்று வன்னிப் பெருநிலப்பரப்புச் சமர்க்களங்களில் கொல்லப்பட்ட பல போராளிகளினதும், பொதுமக்களினதும், உடல்கள் கருகியும் சுருங்கியும் காணப்பட்ட படங்கள் படைதரப்பின் இணையத்தளங்களில் பிரசுரமானதும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் என அரசு அற…

    • 0 replies
    • 887 views
  2. சுவிஸ்முரசம் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் நடத்தும் தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரி சுவிஸ் பேர்ணில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கண்டன ஒன்றுகூடலில் சுவிஸ்வாழ் தமிழ் மக்களை கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர் கோரிக்கை விடுத்துள்ளனர் காவல்துறையினரின் விசேட அனுமதிபெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் ஒன்றுகூடல் எதிர் வரும் வியாழக்கிழமை(09.04.09) வரை தொடர்ச்சியாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள் http://www.swissmurasam.net

  3. Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3596/tvi-afternoon-news-06.04.2009

  4. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பணயத்தினை மேற்கொண்டு நாளை புதன்கிழமை லிபியா செல்லவிருப்பதாக அரசாங்க செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. லிபிய அரசாங்கத்தினால் கடந்த வருடத்தில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமையவே இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்ளவிருக்கின்றார். அரச தலைவரின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக இருக்கும் என கொழும்பில் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. மகிந்த ராஜபக்ச அரச தலைவராகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் லிபியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். புதினம்

    • 2 replies
    • 792 views
  5. சுவிஸ்முரசம் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் நடத்தும் தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோரி, சுவிஸ் ஜெனீவா நகரத்தில் உள்ள ஐ.நா முன்றலில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்ட கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு எதுவித அனுமதியின்றி சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்று கூடி நடைபெறும் கண்டண ஒன்றுகூடலில் வந்திருப்பவர்களின் வதிவிட அனுமதிகளை பரிசோதித்த காவல்துறையினர் இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அப்படி கலந்துகொண்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தும் மக்கள் கண்டன ஒன்றுகூடலில கலந்துகொண்டு தமது கரங்களில் தமிழீழ தேசிய தலைவரின் உருவப்படத்தையும், தமிழீழ தேசியக்கொடியையும் தாங்கியவாறு மக்கள் தமது உணர்வுகளை …

  6. ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியா கொடுத்த விச வாயு குண்டுகளைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் கோவை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 07.04.2009 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.க.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் கோவை ஆறுச்சாமி, பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்கக்குமார், முகில்ராசு, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கருமலையப்பன், கா.ச.நாகராசன், கோவை கதிரவன், மாநகரத் தலைவர் கோபால், சாஜித், தாராபுரம் குமார் ஆகிய பொறுப்பாளர்கள் உட்பட …

  7. பிரான்ஸ் பாரிசில் நேற்று மதியத்திலிருந்து நடைபெற்று வந்த போராட்டம் தற்பொழுதும் தொடர்ந்தும் நடைபெறுகிறது. இதேவேளை இன்று காலை வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். தடியால் அடித்து காயப்படுத்தினர். ஒரு பெண்ணுக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்தது. முதியவர் ஒருவரை தாக்கிய காவல்துறை அவரை மிதித்து அடித்து புல்வெளியில் தூக்கிப் போட்டனர். அவர் கண்ணீர் விட்டு அழுதபடியே கீழே விழுந்து கிடந்தார். மேலும் இளைஞர்களும் பெண்களும் தாக்கப்பட்டனர். அதன்பிறகு மக்களை துரத்திக்கொண்டு போய் புல்வெளிக்குள் விட்ட காவல்துறையினர் சுற்றிவர பொலிஸ் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். ஆயினும் மக்கள் இன்னும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;…

  8. உலக நாடுகள் எங்கும் தமிழ் மக்கள் பேரெழுச்சி கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். தமிழ் மக்கள் மீது மிக மோசமான இனப்படுகொலை ஒன்றை சிறிலங்கா கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில், அதனை தொடர விடாமல் தடுப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஒரே காலத்தில் பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் எதனையும் சர்வதேசம் அக்கறையுடன் கவனத்தில் எடுக்காது சிறிலங்கா மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போரை நிறுத்த வைத்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்கும் வரை …

    • 2 replies
    • 955 views
  9. இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம். விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால்.... இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள். அதனால்,அங்கு நின்ற போராளிகள் மயக்கமுற்று கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று மயக்கமுற்றவர்க…

    • 19 replies
    • 3.4k views
  10. தாய் தமிழீழ மண்ணில் சிங்கள இனவெறி பயங்கரவாத அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்புப் போருக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழ் மக்களை பிரிட்டன் பொலிஸார் வலுக்கட்டாயமாக பலத்தைப் பிரயோகித்து அங்கிருந்து நகர்த்தும் நடவடிக்கையை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு குற்றச்சாட்டின் பெயரில் நால்வர் கைது செய்யப்பட்டு, மிகுதி மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் சில நூறு மக்கள் தொடர்ந்து அருகில் கூடி போராடி வருவதாகச் சொல்லப்படுகிறது. நேற்றும் இன்றும் தலா ஒருவர் தேம்ஸ் நதிக்குள் பாய்ந்துள்ளனர். இருவரும் பத்திரமாக மீட்கப்…

  11. அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் நாளை காலை 11 மணிக்கு கவனயீர்ப்பு கண்டன பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரசாயண நச்சு வாயு தாக்குதல் காரணமாக உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டு இருப்பதாக கிடத்துள்ள செய்தியை அறிந்து தமிழ் இளையோர் அமைப்பும்,தமிழ் அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் உடனடியாக இந்த கவயீர்ப்பு கண்டன பேரணியை ஒழுங்கு செய்துள்ளார்கள். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இடம்:விக்ரோரிய பாராளுமன்ற முன்றல் காலம்:புதன்கிழமை 8ம் திகதி காலை 11 மணி http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=5…

  12. பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு அருகில் நேற்றுத் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், பரிசின் தமிழர்களின் மையப்பகுதியான லாச்சப்பல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இந்தப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். லாச்சப்பல் பகுதி வழமைக்கு மாறாக முழுமையாக மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப்போயிருக்கும் காட்சி....... படங்களை பார்க்க.............. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  13. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் சமாதானச் செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், இலங்கையின் சமாதான முயற்சிகளில் முன்னர் அனுசரணையாளர்களாகச் செயலாற்றிய நோர்வேக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும், நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜொனஸ் கர் ஸ்டொயருக்குமிடையில் அமெரிக்காவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. “இலங்கையில் ஏற்பட்ட இரத்த ஆற்றைத் தடுப்பதற்கு நோர்வே சலிக்காமல் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், ஏனைய விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடினோம்” என சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஹிலாரி கிளின்டன் கூறினார். “இதனைவிட காலநிலை மாற்றம் மற்றும் ஆப்கானிஸ்த…

  14. வீரகேசரி நாளேடு - நாங்கள் இலங்கையில் நடைபெறும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர்நிறுத்தம் வேண்டுமென கடந்த ஆறுமாத காலமாக வலியுறுத்தி வருகிறோம். எனினும் இலங்கை அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லை. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். எமது குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், ஐ.நா. சபை மூலமாக போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகின்றன. அதைப்போலவே, நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும் பொதுவாக இலங்கை தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர் "இப்பிரச்சினைக்கு போர் தீர்வல்ல, பேச்சு வார்த்தைதான் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும். என…

  15. இலங்கை அரசு இரசாயனக் குண்டுகள் வீசி ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கிறது. அடுத்து நச்சுப் புகைக் குண்டுகளை வெடித்து பல்லாயிரம் மக்களைக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. ஐ.நா.மன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள இரசாயன மற்றும் நச்சுப்புகைக்குண்டுகளை ஈழத் தமிழ்ப் பொதுமக்கள் மீது இலங்கை அரசு வீசுவது மனித குலத்திற்கு எதிரான கொடிய குற்றச்செயலாகும். இக்கொடிய குற்றச்செயலைச் செய்திட இலங்கை அரசுக்கு எல்லா வகை உதவிகளையும் இந்திய அரசு செய்து வருகிறது. தமிழினத்திற்கும் மனிதகுலத்திற்கும் எதிரான இந்திய அரசின் இந்தத் துரோகச் செயலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 08.04.2009 புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஈழத்தமிழ…

    • 0 replies
    • 662 views
  16. நோர்வே அரசாங்கம் சிறீலங்காவில் போரை நிறுத்த நாள்தோறும் முயற்சி செய்து வருவதாக எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்."நோர்வேயில் தமிழ் மக்கள் தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் கவலைகள் தனக்கு புரிகின்றது. நோர்வே அரசு தன்னால் முடியுமான முயற்சிகளை தற்பொழுது செய்து வருகின்றது. நோர்வே அரசு இலங்கையில் போரை நிறுத்த ஒன்றுமே செய்யவில்லை என தமிழ் மக்கள் கூறுகின்றார்கள். ஆனால் சிறீலங்கா அரசாங்கம் கூறுகின்றது நோர்வே அரசு தங்களின் பிரச்சினைக்கு அதிகமாகவே செயற்படுகின்றது என அவர் கூறினார். உலகில் முக்கியாமாக மனிதப் பேரவலம் சிறீலங்காவிலையே தற்பொழுது நடைபெறுகின்றது.நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் 200.000 வரையான மக்கள் சிறிய இடத்தில் அடக்கப்பட்ட…

    • 0 replies
    • 1.2k views
  17. சிறிலங்காவின் 58 ஆம், 59 ஆம் படையணிகள் அழிக்கப்பட இந்திய ராணுவம் களமிறங்கியது. அதுவே நச்சு வாயுத் தாக்குதலை நடத்தியது ! according to the armysources, most of the SL front line fighting forces have been destroyed. Now, 58th and 59th division are replaced by Indian Army. They used the GASattack against our boys. They came from Karnataka and Aanthira. They look like sinhalese.

  18. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனப் படுகொலை தொடர்பாக நெதர்லாந்து அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மாணவி ஒருவரை நெதர்லாந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அழைத்து கலந்துரையாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 438 views
  19. வடமாகாணத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக சிறிலங்காவின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இன்று விரிவான முறையில் ஆராய்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 348 views
  20. வடபகுதியில் தொடரும் போரின் பிடிக்குள் பொதுமக்கள் அகப்பட்டுள்ளமை தொடர்பாக தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பான்ட், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கையை மீள வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 388 views
  21. வடபகுதியில் இடம்பெறும் போர் நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு வலயம் என சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதியை சிறிலங்கா படையினர் நேர்மையுடன் மதித்துச் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கல்லின் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 309 views
  22. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி சுவீடன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 522 views
  23. போர் வெற்றியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மையினருடைய இருப்பை பலவீனப்படுத்தி அழித்துவிடும் திட்டம் ஒன்றுடன் அரசாங்கம் செயற்படுவதாக கடுமையான எச்சரிக்கை ஒன்றை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டிருக்கின்றார். கொழும்பு கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் ஐனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை அவர் வெளியிட்டார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: ஜனநாயக அடிப்படையில் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ளாமல் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்து அதிகாரத்தில் நீடிப்பதற்கான திட்டம் ஒன்றுடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. போர் வெற்றிக்குள் மறைந்…

  24. வந்தித்தாயா..வந்திட்டான் ...புதுக்குடியிருப்பு என்பது, ரஜரட்ட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் காணப்பட்ட பண்டைய கால நகரம் ‐ ஹெல உறுமய விடுதலைப்புலிகளின் இறுதி கட்டத்தில், அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கி கைகளை சுட்டுக்கொள்ள வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு என்பது, ரஜரட்ட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் காணப்பட்ட பண்டைய கால நகரம் எனவும் இதனை மீட்டமை தொடர்பில் படையினருக்கு கௌரமளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு தற்போது இருப்பது, போர் தவிர்ப்பு வலயமான ஒரு சிறிய பகுதி மாத்திரமே. 30 வருடங்களாக தீரக்கப்படாத பிரச்சினையாக அரசியல்வாதிகள் மாற்றிக் கொண்ட விடுதலைப்புலிகள் தொடர்பா…

    • 6 replies
    • 1.9k views
  25. தமிழத்தின் தாயுறவே! புலத்தில் உறவுகளையும், புலம் பெயர் தெசத்தில் வாழ்வினையும் தொலைத்து விட்டு நிற்கும் புலம் பெய தேசத்துறவொன்றின் இந்த மடலுக்காய் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கு, ஒன்றித்து வாசி, உடன் செயற்படு. உன் உடன் பிறப்பெனும் உரிமையில் கேட்கின்றேன். ஈழத்தின் இறுதிக்கட்டப் போரினை இன்று முடித்து விடுவோம், நாளை முடித்து விடுவோம் என்று இறுமாந்திருந்த சிங்களத்தின் சிந்தனைகளை , சீறியெழுந்த போராளிகள் சிதறடித்தது கண்டு கலங்கிற்று சிங்களச் சிறிலங்கா. ஈந்த நாட்களுக்குள் முடித்து விடும் என்று நம்பி, இந்தியத் தேர்தலுக்கும்ட நாள் குறித்தாகி விட்ட நிலையில், இன்னமும் போர் முடியவில்லை என்பதும், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சர்வ தேசங்களுக்கு இந்தியாவைக் கேளுங்கள் என சிங்க…

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.