Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொரளையில் விசேட நடவடிக்கை : 35 பேர் கைது பொரளை பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2023/1334331

  2. பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று முன்மொழிந்துள்ளார். “இன்றைய குழந்தைகளுக்கு பாலியல் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என தெரியாது. சில குழந்தைகள் இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது, ”என தெரிவித்துள்ளார். “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ht…

  3. Published By: DIGITAL DESK 3 10 JUN, 2023 | 04:14 PM ஆர்.ராம்- தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்வதையே விரும்புகின்ற நிலையில், இழுத்தடிப்புக்கள் மூலமான தீர்வினை நீர்த்துப் போகச் செய்வதற்கு முயன்றால் வெளியக சுயநிர்ணயத்தைக் கோரும் நிலைமை ஏற்படும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் கடந்த வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை, அதோடிணைந்த எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  4. சிவலிங்கம் ஆரூரனுக்கு விடுதலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க …

  5. 11 JUN, 2023 | 08:04 PM நுவரெலியா, கிரேட்வெஸ்டன் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ரதல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உயிரிழந்துள்ளார். நாளைய தினம் பாடசாலை ஆரம்பிக்க இருப்பதால் இன்று பாடசாலையில் சுத்திகரிப்பு வேலைக்காக சென்றிருந்த அதிபர் சுப்பிரமணியம் மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த அதிபர் தலவாக்கலை கல்கந்த வத்த பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். இறந்த அதிபர் ஒரு சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/157488

  6. விபச்சாரத்தில் ஈடுபட்ட பல பெண்களுக்கு தொற்று நோய்! வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது என தொிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் குறித்த 7 பெண்களும் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும்…

  7. இலங்கை செல்வதற்கு அனுமதி தாருங்கள் – மோடிக்கு சாந்தன் கடிதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது ஒரு அறையில் கைதி போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சாந்தன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த முகாமில் ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தம்மை போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு இந்தியாவில் எவ்வாறு ரத்த உறவுகள் …

  8. கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் கிழக்கு ஆளுநரால் கையளிப்பு! Published By: Nanthini 10 Jun, 2023 | 01:26 PM கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிலைபேண்தகு விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (9) திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல, மாகாண பிரதம செயலாளர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாள…

    • 2 replies
    • 424 views
  9. யாழில் சுயமரியாதை நடைபயணம் adminJune 10, 2023 சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றி வலியுறுத்தியும் சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சனிக்கழமை இடம்பெற்றது. சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, ‘ இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இடம்ப…

  10. வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை நோய் குருநாகலிலும் பரவல் - 100க்கும் அதிகமான கால்நடைகள் பாதிப்பு Published By: Vishnu 28 May, 2023 | 06:34 PM (எம்.வை.எம்.சியாம்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் பரவிய தோல் கழலை நோய் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கால்நடைகளிடையே ஒரு வகையான …

  11. மாகாண சபை தேர்தல் விரைவில் – தயராகுமாறு பசில் அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் …

    • 1 reply
    • 575 views
  12. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:30 AM இலங்கையில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் செனெட் வெளிவிவகார குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைசெய்யப்பட்டதை நான் வரவேற்க்கும் அதேவேளை அவர் கைதுசெய்யப்பட்டமை அச்சுறுத்தப்பட்டமை துன்புறுத்தப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என செனெட் குழுவின் தலைவர் செனெட்டர் மெனெட்டெஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு படையினர் புலனாய்வு பிரிவினரின…

  13. 10 JUN, 2023 | 09:00 AM காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. https://www.virakesari.lk/article/157380

  14. இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும் அபிவிருத்தி முகவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவற்றிலிருந்து இந்த செயல்முறைக்கு உதவி பெறப்படும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் இதனை நிறைவு …

  15. ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையை கொழும்பு நகருக்கு வெளியே மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே சுற்றுலா தலமாக மட்டுமே திறந்து வைக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு மாற்று காணியை தேடி வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்த்துள்ளார். உத்தேச ‘புதிய கொழும்பு பாரம்பரிய நகரத் திட்டத்தின்’ கீழ், ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் அலரிமாளிகை கட்டிடம் மற்றும் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவை சுற்றுலா தலங்களாக பாதுகாக்கப்படும். இத்திட்…

  16. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பு !! பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்டத்தில், புறப்பாட்டு முனையத்தில் இரண்டு தானியங்கி குடிவரவு செக்-இன் கவுண்டர்கள் நிறுவவும் 8 மாதங்களின் பின்னர் வருகை முனையத்திலும் இரண்டு கவுண்டர்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை குடிவரவுத் துறையும், விமான நிலைய மற்றும் ஏவியேஷன் செர்வீசஸ் நிறுவனமும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும். சிங்கப்பூர் நிறுவனமான தேல்ஸ் டிஸ் தயாரி…

  17. பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களும் அங்கிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தத்தமது நாடுகளில் வழங்கப்பட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளிலேயே வழங்கப்பட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தும் வகையிலான ஒரு இணக்கப்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்பட்டால் பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் சாரதி அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாள…

  18. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! kugenJune 7, 2023 தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் http://www.battinews.com/2023/06/blog-post_969.html

  19. பொறுமையின் எல்லையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிா்வரும் ஜூலை மாத இறுதிக்குள் தமிழ் மக்களின் அரசியல் தீா்வுக்கான பேச்சுவாா்த்தை ஒரு கட்டத்தை அடையும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளாா். குறித்த கால இடைவௌிக்காக காத்திருப்பதாக தொிவித்த அவா், தமிழ் மக்களின் அரசியல் தீா்வு தொடா்பில் பொறுமையின் எல்லையில் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை…

    • 1 reply
    • 457 views
  20. மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது எங்களது நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் – சுரேந்திரன் June 10, 2023 ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு அல்லது முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது, ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும், மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். குறித்த அறிக்கையில் , அரசியல் யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை பகிர்ந்து, மாகாண சபை தேர்தல் சட்…

  21. ஐ.எம்.எப். : 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்த புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு…

  22. முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் எதிா்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்க…

    • 0 replies
    • 319 views
  23. 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள் adminJune 10, 2023 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது. கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. https://globaltamilnews.net/2023/191754/

  24. இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கம் !! இந்தியா, ஜப்பான் மற்றும் இறையாண்மைக் கடனாளர்களின் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் நிதித் தலைவர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் கலந்துரையாடலுக்காக கூட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையின் கடன் பிரச்சினைகளை எவ்வாறு சிறந்த முறையில் கையாள்வது என்பது தொடர்பில் சீனாவிற்கும் ஏனைய கடன் வழங்குநர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். அத்துடன், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையின் கடன் பேச்சுக்களில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இதில் சீனா பங்கேற்றிருக்கவில்லை. ‘இ…

  25. வெளிநாட்டில் உள்ள தொழிலார்கள் மூலம் இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் பணம் !! 023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. மே மாதத்தில் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 175 மில்லியன் டொலர்கள் அதிகம் என்றும் 2022 மே மாதத்தில் இலங்கைக்கு 304.1 மில்லியன் டொலர் கிடைத்ததாகவும் அறிவித்துள்ளது, இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான மொத்தம் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.