ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
Thursday, 29 January 2009, 17:50 கொழும்பு நிருபர் மயூரன் மனித உரிமைகள் உறுதி செய்தால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் சாதகமாக பரீசிலிக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம் வன்னியில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது மற்றும் ஊடக ஒடுக்குமுறைகள் உட்பட அனைத்து மனித உரிமை மீறல்களும் உறுதிப்படுத்தப்பட்டால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை நீடிப்பு குறித்துபரீசிலிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்காவில் மனித உரிமைகள் உச்சளவில் உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சர் பொகொல்லாகமவிடம் சுட்டிக் காட்டிய…
-
- 3 replies
- 569 views
-
-
இன அழித்தலை மறைக்கும் பிரச்சாரம் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி, அவரது ஆதரவு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் மட்டுமின்றி மேலும் சில தமிழ் ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது. தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் போர் நடத்தி வருகிறோம், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்றும், விடுதலைப் புலிகள்தான் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சிறிலங்க அரசும், உண்மையை திட்டமிட்டு மறைக்கும் வல்லமை கொண்ட அதன் ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது…
-
- 0 replies
- 620 views
-
-
அனுராதபுரம், பொலநறுவையில் தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் உடலங்கள் புதைக்கப்படுகின்றன அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்ற பெண்கள் பலர் விசாரணைக்காக இரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டு எரிக…
-
- 1 reply
- 755 views
-
-
கொழும்பு: யுத்தப்பகுதியில் இருக்கும் 2.5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்றும் பணியில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது.முல்லைதீவு பகுதியில் இலங்கை ராணுவம் எதிர்பட்ட அனைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து தமிழர்கள் அங்கிருந்து சாரைசாரையாக வெளியேறி வருகின்றனர். அப்படி வெளியேறுபவர்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ராணுவத்தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர். இதையடுத்து யுத்தப்பகுதியில் தமிழர்களை காக்க வேண்டும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை யுத்தப்பகுதியில் இருந்து பத்திரமாக அழைத்து செல்ல ஐ.நா. முடிவு செய்துள்ளது. இது குறித்து ஐ.நா. பொது செயலர் பான் கீ மூனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், யுத்த களத்த…
-
- 8 replies
- 1.4k views
-
-
வன்னியில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.. அங்கு மனிதாபிமான அவலம் என்ற ஒன்றே இல்லை.. ஐ சி ஆர் சியும் ஐநாவும் மிகைப்படுத்திய தகவல்களை வழங்குகின்றன என்று சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசும் அதன் பேச்சாளர்களும் சர்வதேச சமூகத்துக்கு தொடர்ச்சியாக கூறி வந்துள்ள நிலையில்.. இன்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும்.. ஐநாவும் இணைந்து பல காயப்பட்ட பொதுமக்களை மீட்டு வவுனியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு விடுதலைப்புலிகளும் ஆதரவு வழங்கியுள்ளனர். காயப்பட்டவர்களில் கடும் காயங்களுக்குள்ளான 50 சிறுவர்களும் அடக்கம் என்று ஐநா அதிகாரி கூறி இருக்கிறார். அதுமட்டுமன்றி சிறீலங்கா அரசின் கூற்றுக்களை அவர் மறுதலித்திருப்பதோடு.. உண்மையில் வன்னியில் பெரும் மனிதப் பேரவலம் த…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், போர் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ளார். இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "பொதுமக்கள் மிகுதியாகவுள்ள பகுதிகளில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு, இலங்கை ராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல வழிவகுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல, இலங்கை …
-
- 7 replies
- 2.6k views
-
-
எரிக் சொல்ஹெய்மின் கோரிக்கை அரசாங்கத்தால் நிராகரிப்பு வீரகேசரி நாளேடு 1/29/2009 11:37:21 PM - வன்னியில் மோதல் பிரதேசத்திற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்ச்ர எரிக் சொல்ஹெய்ம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முல்லைத்தீவு மோதல்களில் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து எரிக் சொல்ஹெய்ம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். இதேவேளை, வன்னி மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.
-
- 1 reply
- 781 views
-
-
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ…
-
- 0 replies
- 550 views
-
-
சிறிலங்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த நோயாளர்களுக்கான போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்ய ஐ.நா. உள்ளிட்ட அனைத்துலக அமைப்புக்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் பா.நடேசன் மேலும் கூறியுள்ளதாவது: மேலும்... http://www.paristamil.com/tamilnews/?p=25534
-
- 2 replies
- 587 views
-
-
முல்லைத்தீவின் விஸ்வமடு சந்தியை 58ஆவது படைப்பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர். இன்றும் சில மணி நேரங்களில் முல்லைத்தீவு முற்று முழுதாக இராவணுவத்தினரின் வசமாகிவிடும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல்குழல் பீரங்கித் தாக்குதலையடுத்து விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஏராளமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. http://www.paristamil.com/tamilnews/?p=25305
-
- 23 replies
- 2.8k views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த பகுதிகளுக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் மிகவும் ஆழமாக அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இந்த நடவடிக்கைகள் தமக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளதாக அரசாங்கம் பெருமிதங்கொள்கின்ற போதிலும், அந்த நடவடிக்கைகளின் வெற்றி குறித்து ஏற்கனவே சந்தேகங்கள் எழ ஆரம்பித்து விட்டன. மேலும்.. http://www.paristamil.com/tamilnews/?p=25544
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிரமாக போராட்டம் நடத்த பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் நாளை சென்னையில் கறுப்புக் கொடி ஏந்தி மெளன விரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இலங்கையில் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தவும், இந்த விவகாரத்தில் நடந்து வரும் போராட்டங்களை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், ஒருமித்த கருத்தை உருவாக்குவது குறித்தும் விவாதிக்க சென்னையில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனி…
-
- 1 reply
- 492 views
-
-
http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=117 www.nakkheeran.in
-
- 0 replies
- 6.3k views
-
-
நம் அரசியல்வாதிகளை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. சிங்கள மிருகம் சரத பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொன்னபோது இவர்கள் கொதித்தெழுந்தார்கள். அவனாவது வாயால்தான் சொன்னான். ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் மானங்கெட்ட காங்கிரசு அரசோ இவர்களை கோமாலிகளைவிட கேவலமான கேனையனாக்கிவிட்டார்கள். ஆனால் நம்மவர்களுக்கு அது உரைத்ததாக தெரியவில்லை. உரைக்கவும் உரைக்காது. அவர்கள் போட்ட எலும்பு துண்டை நக்கியே வளர்த்த உடலாயிற்றே. கருணாநிதியும் சட்டசபையில் பிராணாப் இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாக அறிவித்து முழக்கமிட்ட அன்பழகனும் அதற்கு மேசைகளைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வேட்டிக்குப் பதில் புடவைக் கட்டிக்கொள்ளலாம். இவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள் என்று தெ…
-
- 7 replies
- 1.7k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி ரூ. 48.14 கோடியை தொட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர். இது குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் கூறுகையில், இலங்கை போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவு நினைப்பவர்கள் 'இலங்கை தமிழர் நிவாரண நிதி' என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை எடுத்து தலைமை செயலாளர், தமிழக அரசு, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தமிழக முதல்வர் அக்டோபர் 27ம் தேதி அறிவித்திருந்தார். அதற்கான வங்கி கணக்கு முதல்வர் பொது நிவாரண நிதிகள் உபகணக்காக …
-
- 0 replies
- 693 views
-
-
சிறிலங்கா படையினர் அறிவித்த “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளான உடையார்கட்டு- மாணிக்கபுரம்- சுதந்திரபுரம்- இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 178 பேர் காயமடைந்துள்ளனர். சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும் சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். மற்றும் 18 பேரின் உடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் கிடக்கிறது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தாது என்று தனக்கு உறுதியளித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் இந்திய அ…
-
- 4 replies
- 740 views
-
-
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரை மீறி உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்தனர். வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டன. முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன. இந்த தீடீர் தாக்குதலால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின் கார்களும் அடித்து நொருக்கப்பட்டன. வங்கியின்…
-
- 0 replies
- 829 views
-
-
பிரபாகரன் தப்பி ஓட்டம், மதிவதனி சுற்றிவளைப்பு, பொட்டு அம்மான் கருணாவுடன் சேர்ந்துவிட்டார்... என்றெல்லாம் தொடர்ச்சியாக செய்தி களை பரப்பிக்கொண்டிருந்த இலங்கை ராணுவ தளபதிகளுக்கு, கல்மடுகுளம் அணைக்கட்டினை உடைத்தெறிந்து அதனூடாக புலிகள் நடத்திய தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ""முல்லைத்தீவை கைப்பற்ற 8 இடங் களிலிருந்து முன்னேறி வருகிற ராணு வத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் ஆலோசித்த போது, கல்மடுகுளம் அணைக்கட்டினை தகர்ப்பதன் மூலம் ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தமுடியும் என்று புலிகளின் கடற்படை தளபதி சூசை யோசனை தெரிவித்துள்ளார். அணையை உடைப்பது மட்டுமல்லாமல் பாய்…
-
- 5 replies
- 3.4k views
-
-
தமிழகத்திலிருந்து பல முத்துக்குமரன்கள் உருவாவதை தடுக்க முடியாது - திருமாவளவன் கருத்து வீரகேசரி நாளேடு 1/29/2009 7:16:56 PM - இந்திய அரசு ஈழத் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதை தடுக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமரன் தீக்குளித்திருக்கிறார். இதனை தொடர்ந்தும் சிங்கள அரசுடன் இணைந்து இந்திய அரசு தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு மனநோய் பிடித்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்திய அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. முத்துக்குமரன் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு சென்றுள்ளார் …
-
- 1 reply
- 566 views
-
-
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்த தூத்துக்குடி வாலிபர் முத்துக்குமரனின் மரணத்துக்கு பிறகாவது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், இலங்கையில் நடந்து வரும் ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமரன் என்ற வாலிபர் சென்னையில் இன்று காலை 10.45 மணிக்கு தீக்குளித்தார். தீக்காயங்களோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த வைகோ, மர…
-
- 1 reply
- 706 views
-
-
மனித உரிமகளுக்கு எதிராக அப்பாவி தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்கள். சிறிலங்கா அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மருத்துவ வசதி வழங்கிடுக. அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் எனத் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:முல்லத்தீவுப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனால் அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர். மருத்துவமனகளும் தாக்குத…
-
- 0 replies
- 744 views
-
-
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம் இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரி…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிகவளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த போலீசாரை மீறி உருட்டுக்கட்டைகளுன் உள்ளே நுழைந்தனர். வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன. இந்த தீடீர் தாக்குதலால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொறூக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின் கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன. வங்கியின்…
-
- 0 replies
- 926 views
-
-
இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு இந்தியா உதவி பருத்தித்துறை கடலுக்கு அண்மையில் இந்தியாவின் இரு போர்க்கப்பல்கள் நிற்கின்றன இலங்கைக்கு இந்திய அர சாங்கம் ராணுவ ரீதியாக உத வியளித்து வருவதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை கடந்த திங்கட் கிழமை தெரிவித்துள்ளது. பாக். நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைப்பு வழங்குவது மாத்திர மன்றி விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் புதுடில்லி பகிர்ந்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள் ளது. விடுதலைப்புலிகளின் இறு தித்தளமாக இருந்த முல்லைத் தீவின் நகர பகுதிக்குள் இலங்கை இராணுவம் நுழைந் ததையடுத்து பாதுகாப்பு வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன. இந்திய கடற்ப…
-
- 1 reply
- 733 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒத்தக் கருத்துள்ள தலைவர்களின் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்தார். அதன்படி இன்று (28.01.09) மாலை நடந்த கூட்டத்தில், இலங்கை பிரச்சனைகள் குறித்து போராடுவதற்காக 'இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பை ஒரு மனதாக கொண்டுவந்தார்கள்.இந்த அமைப்புக்கு பழ.நெடுமாறன் முன்னின்று நடத்துவார் என்றும் முடிவெடுத்துள்ளனர். மேலும், இந்த இயக்கத்தின் மூலமாக வருகின்ற 30ம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு கருப்பு கொடி ஏற்றி மாலை4 மணி முதல் 6 மணி வரை மவுண விரதம் இருப்பது என்றும், அதனைத் தொடர்ந்து மறுநாள் 31ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து வ…
-
- 1 reply
- 709 views
-