ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
வன்னியில் கடந்த வாரங்களில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய செல்வீச்சில் நூற்று கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைதும் இருக்கிறார்கள் எண்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்து உள்ளது.. கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவ செல் தாக்குதல் நிண்று இருந்த இடைவேளை நேரத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக புலிகள் ஐநா ஒழுங்கு செய்து இருந்த தொடரணிக்கு அனுமதி வழங்கவில்லை.. எண்று ஐநா தெரிவித்தது.. தமிழ் நெற்றுக்கு பதில் அளித்த புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் புலிகள் ஐநா போக்கு வரத்தைதடை செய்ய இல்லை எண்று தெரிவித்தார்.. தடை செய்ய பட்ட அமைப்பான புலிகள் மக்களை கேடயமாக பயன் படுத்துகிறது எனும் குற்றச்சாட்டை இலங்கை அரசு தெரிவித்து இருந்தாலும் ஊடகவியலாளர்கள் (சுந…
-
- 0 replies
- 1k views
-
-
வன்னிப் பேரவலத்தை அம்பலப்படுத்த நாளை கனடிய தமிழ்ச் சமூகத்தினரால் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 329 views
-
-
தியாகி முத்துக்குமாரின் நிகழ்வுக்குப்பின் தமிழகத் தலைவர்கள் ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் என்று சென்னையில் தீக்குளித்த வாலிபர் முத்துக்குமரன் உருக்கமான வாக்குமூலம் கொடுத்துள்ளார். இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன…
-
- 1 reply
- 1.3k views
-
-
" என்னைவிடப் புத்திகூர்மையுடைய எத்தனையோ ஈழத்தமிழ்க்குழத்தைகளின் பரிதாபமான மரணத்தின் முன் எனது மரணம் துச்சம் " என ஈழத்தமிழர் பிரச்சினைக்காக சென்னையில் ராஸ் பவனுக்கு முன் தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர், இறப்பதற்கு முன் வைத்தியர்களிடம் அளித்த மரணவாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தனது வாக்கு மூலத்தில், " எனது மரணம், ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கட்டும். அதனால் ஈழத்துச் சகோதர்கள் காப்பாற்றப்படட்டும் " எனக் கூறியுள்ளார். செய்தி அறிந்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு விரைந்த தமிழக அரசியற்தலைவர்கள், அங்கே உணர்வுகளால் கொதித்துப்போயிருந்த தமிழுணர்வாளர்களை ஆற்றுப்படுத்தினார்கள். இத்தகைய தியாக உள்ளம் கொண்ட இளைஞர…
-
- 0 replies
- 539 views
-
-
சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் சுவிஸ் தமிழ் இளையோர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரகசிய காவல்துறையினர் வீதிகளில் நடத்திய விசாரணைகள், சோதனை நடவடிக்ககைகளில் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 401 views
-
-
சிறிலங்கா படையினர் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு- உடையார்கட்டு- மாணிக்கபுரம்- சுதந்திரபுரம்- இருட்டுமடு- றெட்பானா மற்றும் மூங்கிலாறு உள்ளிட்ட பல பகுதிகளை நோக்கி இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 178 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
சிறிலங்கா படையினர் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான உடையார்கட்டு- மாணிக்கபுரம்- சுதந்திரபுரம்- இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 178 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கையில் தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்ற வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அதை தெரியப்படுத்துகின்ற வகையில் நாளை பல்லாயிரக்கணக்கானோர் கையில் கறுப்பு கொடி ஏந்தி, அமைதியாக எங்களுடைய மவுன விரதத்தை நடத்துகிறோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்பினரும், மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு இந்திய கம்ய…
-
- 0 replies
- 430 views
-
-
"சுகம் வரும். ஆள் தப்பாது" என்ற பேச்சு மொழி நம் மத்தியில் அடிக்கடி பாவனையில் உண்டு. ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி எடுக்கும் குயுக்தித் தன நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் இத்தகைய பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்விவகாரத்தைத் தமிழக முதல்வர் கையாளும் மெத்தனப் போக்கை நோக்கும்போது, பிரச்சினைக்குத் தீர்வு என்ற "சுகம்" கிட்டும், ஆனால் ஈழத் தமிழ் மக்கள் தான் இங்கு "தப்பவே மாட்டார்கள்" என்பது நமக்கு உறுதியாகின்றது. ஈழத் தமிழரைக் காப்பாற்றுவதற்காக இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசுக்கு ஒரேயொரு நாள் காலக்கெடு விதித்துத் துடிப்புடன் கலைஞர் கருணாநிதி அறிவித்த போது நாமெல்லாம் மகிழ்ந்துதான் போனோம். …
-
- 0 replies
- 784 views
-
-
சிறிலங்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த நோயாளர்களுக்கான போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்ய ஐ.நா. உள்ளிட்ட அனைத்துலக அமைப்புக்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடுவை கைப்பற்றியிருப்பதாகவும் கடந்த 2 ஆண்டுகளில் 3,700 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 443 views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்புக்கள் பல தாமும் தமது பணிகளுக்கு செல்வதனை தவிர்த்து தாயகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த தமிழக சட்டப் பேரவையை முற்றுகையிட்ட தமிழகப் பெண்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
கொழும்புப் இன அழிப்பு அரசின் போர்குற்றங்களின் இன்னொரு பரிமாணமாக இடம்பெயரும் மக்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் ஆரம்பம் - கஜேந்திரன் யாழ்ப்பாணத்தின் வடமாராட்சிக் கிழக்கு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோடைப்பகுதிகளில் அண்மையில் சிங்கள இனக்கொலை ராணுவத்தால் பிடிக்கப்பட்டு "தடுப்பு முகாம்களில்" சிறை வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது உறவினர்களிடம் விசாரணை என்ற பெயரில் பல பெண்களை அழைத்துச் செல்லும் ராணுவம் அவர்களை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவருவதாக முறையிட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கடந்த புதன்கிழமை தெரிவித்திருக்கிறார். ஆகவே தொடர்ந்தும் இந்த இனக்கொலையை நியாயப்படுத்தியும், முன்னின்று இயக்கியும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழர்களை…
-
- 2 replies
- 1.3k views
-
-
திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற நேரடி மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 327 views
-
-
தமிழ்நாடு சென்னையில் உள்ள இலங்கை வங்கி மீதும், அந்த வங்கியின் அதிகாரிகளின் கார் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 331 views
-
-
இன்று காலை சில மாணவர்களால் ரொறன்ரோவிலுள்ள இலங்கை துணைதூதரகத்துக்கு முன்னால் ஆரம்பித்த போராட்டம் மிகுந்த மக்கள் ஆதரவை பெற்று ஒரு பாரிய மக்கள் போராட்டமாக வெடித்திருக்கின்றது. ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஏற்பாடு செய்திருந்த சிறிய அளவினாலான கவனயீர்ப்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரையும் தூதரகத்துக்கு முன்னால் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊடகங்களும் அங்கே வந்து செய்தி சேகரித்துக்கொண்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் வாருங்கள். இடம்: 40 St Clair Ave W (St Clair Ave and Young St)
-
- 12 replies
- 2.2k views
-
-
ஈழத் தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள், எரிமலையாகச் சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
ஈழத் தமிழரின் தியாக வரலாற்றில், முத்துகுமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள், எரிமலையாகச் சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 435 views
-
-
சிங்கள அரசிற்கு உதவும் தஞ்சை விமானப்படை தளம் மூடக்கோரி தமிழர்கள் ஒருங்கிணைப்பு நடத்தும் முற்றுகைப் போராட்டம் திகதி: 29.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு கலந்து கொண்டுள்ளது. தஞ்சையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மூலம் சிங்கள அரசிற்கு இராணுவ தளவாடங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளதைக் கண்டித்தும் அத்தளத்தை உடனடியாக இழுத்து மூடக் கோரியும் அவ்விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர…
-
- 0 replies
- 655 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேசுவதற்காகவும், போர் நிறுத்தம் வேண்டும் என்றால் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்ளவும் இலங்கைக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா ராஜபக்சேயின் அழைப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். ’’எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப்புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள். இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும். ஆகவே, கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப்புலிகள் கேட்பார்கள். …
-
- 20 replies
- 2.3k views
-
-
' ஓன்றாய் எழுவோம் ' .. முதலில் யார் எழுவது நீயா ? நானா ? வன்னியில் மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது, ஏறத்தாள நான்கு இலட்சம் மனித உயிர்கள் தமது அடுத்து நிமிட இருப்பிற்கான உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் உணவு வாகனத் தொடரணி வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அங்கு வாழும் அப்பாவி மக்கள் உணவின்றியும் இறக்கும் நிலை ஏற்படும். எப்படியாவது தமிழர்களின் தொகை குறைந்தால் சரி என்ற தென்னிலங்கையின் எதிர்பார்ப்பிற்கு பல வழிகளில் ஆதரவு பெருகுகின்றது. பருவம் தப்பி பெய்யும் மழையும் வன்னியில் நாளாந்த இடம்பெயர்வை சந்திக்கும் மக்களை தனது பங்கிற்கு வதைத்து அழிக்கின்றது. மஹிந்தவின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்சவை அழைத்து ஐநாவி…
-
- 1 reply
- 667 views
-
-
இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து தமிழ்நாடு சென்னையில் ஊடகவியலாளர்கள் நேற்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
ஈழப்பிரச்சனை:3-ந் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த வாரம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக இறுதி தீர்மானம் நிறைவேறியது. அப்போது, இலங்கை பிரச்சினை குறித்து தி.மு.க. செயற்குழுவை கூட்டி முடிவை எடுப்போம் என்று சட்டபேரவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி தி.மு.க. செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். thanks nakheeran
-
- 4 replies
- 1.1k views
-