ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டு அரசினர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த ஏழு நாட்களாக நடத்திய உண்ணாநிலை போராட்டம் நேற்று புதன்கிழமை முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பழச்சாறினை கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்து வைத்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 589 views
-
-
கொழும்புக்கு அவசரமாக வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி.. இராணுவ வெற்றிகள் மூலமே அரசியல் தீர்வையும் சாதாரண வாழ்க்கையையும் சிறீலங்காவில் ஏற்படுத்த முடியும் என்று கூறி.. சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாதப் படைகளின் இராணுவ வெற்றிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். Military victories offer political opportunity to restore life- Mukherjee Indian Foreign Minister Pranab Mukherjee, in a statement, said during his discussions with President Mahinda Rajapaksa yesterday he had stressed that military victories offer a political opportunity to restore life to normalcy in the Northern Province and throughout Sri Lanka. Full statement: I had …
-
- 22 replies
- 2.7k views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைக்கு பாகிஸ்தான் அரசாங்கம் துணை நிற்க வேண்டாம் எனவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆயுத உதவி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறும் பிரான்ஸ் பாரிசில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
எங்கள் அரசியல் வாழ்வு அடியோடு நாசமாகி போனாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர்களை காப்பதற்கு நாங்கள் போராடுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 636 views
-
-
கிளிநொச்சி எதிர்பாராத விதத்தில் வீழ்ச்சி அடைந்ததைப் போல விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி மிகப் பெரிய நகரமான முல்லைத் தீவும் ஜனவரி 25ஆம் திகதி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் முல்லைத் தீவைக் கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினரின் 59வது படைப்பிரிவினர் தமது படை நடவடிக்கையின் போது எந்தப்பிரயோசனமுமற்ற சில நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக நன்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிலைகளை முறியடிக்க வேண்டியிருந்தது. மேலும் வாசிக்க http://www.paristamil.com/tamilnews/?p=25339
-
- 3 replies
- 2.4k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம் நடத்த "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
எம்மை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என பன்னாட்டு சமூகம் சொல்கிறதா? நேற்று முன்தினம் 300 பேர். நேற்று 46 பேர். (தமிழ்வின்). இன்று உலக நாடுகளிடம் இருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தோம். எதுவுமில்லை. போதாக்குறைக்கு இலங்கை வந்து போன பிரணாப் முகர்ஜி "உப்பிடி ஒரேயடியா பொசுக்காதேங்கோ, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுங்கோ அப்பிடி எண்டால்தான் கொஞ்சம் கதை அமரும்" எனபது போல வந்து சொல்லிவிட்டு போகிறார். வந்த மனுஷன் ஒரு கண்டன அறிக்கை கூட விடேல்ல பாருங்கோ. என்னதான் இருந்தாலும் தமிழ் எம்.பி க்களை சும்மா சந்திச்சு, வேணாம் பார்த்திட்டு கூட போயிருக்கலாம். அதை கூட செய்யல மனுஷன். இதுக்கிடைல அவர் விடுதலைப் புலிகளை அழிச்சுப்போட்டு ஒரு அரசியல் தீர்வை முன் வையுங்கோ எண்டு கூட சொல்லிப்போட்டு போயிருக்க…
-
- 2 replies
- 873 views
-
-
சென்னையில் உள்ள இந்திய இராணுவத் தலைமையகத்திற்கு எதிராக ஆர்பாட்டம் செய்யச் சென்ற தமிழக மாணவர்கள் காவல்துறையினரால் கைது Students 'gherao' Indian Army headquarters at Chennai [TamilNet, Wednesday, 28 January 2009, 17:44 GMT] Members of the Confederation of All Students were arrested by the Tamil Nadu State Police when they attempted to surround the South Zone Regiment Headquarters ATNKNK of the Indian Army at Chennai Wednesday morning to mark their protest against "Indian terrorism that supplies weaponry for the genocide of Tamils." Wearing black shirts to mark their anger and mourn their dying Tamil brethren, the students raised slogans condemning the Indian Govern…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரான்சில் கவனயீர்பு நிகழ்வு என்றுமில்லாதளவு மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டனர்.-படம் இணைப்பு (28.01.2009- புதன்கிழமை) இன்றய நிகழ்வில் 10000 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்று தங்களது உணர்வுளை வெளிப்படுத்தியிருந்தனர். வன்னிமக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கண்டனங்களை உணர்வுடன் வெளிப்படுத்தினர். பெருமளவான இளையோர் பங்கேற்று இலங்கையரசுக்கு ஆயுத உதவி செய்துவரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர். கவனயீர்பு நடைபெற்ற இடத்தில் பாகிஸ்தான் தூதரகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. photos
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறீலங்கா இனவெறி அரசின் இனஅழிப்பு நடவடிக்கையால் தாயகத்தில் நாளாந்தம் நமது உறவுகள் இரத்தமும் சதையுமாய் சிதறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் புலம் பெயர்ந்து வாழும் நாம் எமது உறவுகளுக்காக பல வழிகளில் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இன்றைய அவசர நிலையை இந்நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியவர்களாக நாங்களே இருக்கின்றோம். இவ் உடனடி செயற்பாட்டில் இணைந்து செயற்பட கீழ் குறிப்பிடும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஒன்றிணைவோம். 044 273 34 07 076 291 49 75 மின்னஞ்சல் tamilssos@gmail.com நாமெல்லாம் ஒருங்கிணைந்து உறவுகளின் உயிர் காத்திடுவோம். உலகத்தமிழர் ஒருங்…
-
- 0 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்களை பொதுமக்கள் எனக் கருத முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 30 வருடங்களில் விடுதலைப்புலிகளின் 22 அயிரம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாவீரர்கள் குடும்பங்கள் என்ற அடிப்படையில் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் சர்வதேசமும், இந்தியாவும், சர்வதேச நிறுவனங்களும் இவர்களையே சிவிலியன்கள் என அடையாளப்படுத்துவதாகவும் இவர்கள் பிரபாகரனைக் காப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மா…
-
- 8 replies
- 1.2k views
-
-
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதி வவுனியாவுக்கு வந்துள்ள தமிழர்களை சரமாரியாக கொன்று குவித்து வருகிறதாம் இலங்கை ராணுவம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை இதுபோல கொன்று பிணங்களை எரித்தும், புதைத்தும் வெறியாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான தமிழ்ப் பெண்கள் ராணுவ முகாம்களில் வைத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடுமையும் தங்கு தடையின்றி நடந்து வருகிறதாம். விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில், தற்போது அப்பாவித் தமிழர்களை தாறுமாறாக வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது இலங்கை படைகள். பாதுகாப்பான பிரதேசம், விடுதலைப் புலிகள் பகுதியில் உள்ள தமிழர்கள் இங்கு வர வேண்டும் என அரசு விடுத்த அழைப்பை ஏற்று அப்பாவித் தமிழர்கள் பெரும் திரளா…
-
- 0 replies
- 822 views
-
-
நான் வாழும் பகுதியில் இடம் பெற்ற ஒரு சம்பவம் புலம்பெயர்ந்து ஐரோப்பாவுக்குள் நுழைந்த இன்னமும் தங்கள் சுயவருமானத்தை ஈட்ட முடியாமல் முகாமில் வேலையற்றிருக்கும் ஒரு சில இளைஞர்கள் அவர்களுக்கு வாரம் வழங்கப்படும் தொகை உணவு மற்றும் செலவுகளுக்கும் சேர்த்து அந்த நாட்டு பணத்தில் 70.. வன்னி அவலத்தை பார்த்ததும் அவர்களுக்கு தாங்க முடியாத வேதனை. யோசித்தார்கள். தங்கள் கைப்பணத்தில் செலவு செய்து கொத்து ரொட்டி தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். கொத்து ரொட்டி தயாரித்தார்கள். அதை தாங்கள் வாழும் பகுதியில் …
-
- 2 replies
- 1.2k views
-
-
திரு. கருணா நிதி அவர்களே நலமா, சிங்களத்தின் கால் வருடிகளுடன் கூட்டமைததால், சங்கம் வளர்த்த வழி வந்த கோபாலபுரத்தானும் கொள்கை விலகினனோ! கொத்து, கொத்தாய் ஈழத்தில் தமிழர், சிங்களத்தின் கொத்து எறிகணைகளால் செத்து மடிகையில், உமக்கு முதுகில் அல்லவா வலிக்கிறது. இருக்கட்டும், தமிழ் தலைவர் முதுகு சுகம் பெறட்டும். எத்தனை முறை சொன்னோம், எத்தனை பேர் சொன்னோம்? சொன்னதெல்லாம், உம் சாணக்கியம் ஆக்கினீர்! சாக்கு போக்கு சொல்லியே தமிழக காங்கிரசின் காலடியில் ஈழத் தமிழன் தலையை வைத்தீர்! இலவு காத்த கிளி நீர்! உம்மால் இழவு காக்கும் தமிழர் நாம்! உமக்கு முதுகு வலி கண்ட நாள் ஏன் ஈழத்தில் ஐநூறு உயிருக்கு முடிவு நாள் ஆனதோ! உமக்கு முதுகு வலி தீரும் போதும், நாயை விட கே…
-
- 1 reply
- 938 views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
Wednesday, 28 January 2009, 18:45 கொழும்பு நிருபர் மயூரன் எங்கள் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் உரிமை இல்லை - சோமவன்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டுமெனவே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தவே. இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் போரை நிறுத்தி விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் செயற்பாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் செயற்பட்டு வருகிறார் எனக் குற்றஞ்சாட்டியன சோமவன்ச அமரசிங்க, சர்வதேச சமூகத்தின் சதிவலையில் இலங்கை சிக்கிவிடக் கூடாது எனவும் எச்சரித்தார். …
-
- 0 replies
- 882 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விசனமும் கவலையும் தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிடம் கவலை தெரிவித்துள்ளனர். சர்வதேச தரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று கோடிட்டுக் காட்டியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரெய்ரோ வோல்ட்னர், ஐ.நா. மனிதாபிமான முகவரமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டு…
-
- 3 replies
- 819 views
-
-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உதயம்! ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒத்தக் கருத்துள்ள தலைவர்களின் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்தார். அதன்படி இன்று(28.01.09) மாலை நடந்த கூட்டத்தில், இலங்கை பிரச்சனைகள் குறித்து போராடுவதற்காக ’இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பை ஒரு மனதாக கொண்டுவந்தார்கள். இந்த அமைப்புக்கு பழ.நெடுமாறன் முன்னின்று நடத்துவார் என்றும் முடிவெடுத்துள்ளனர். thanks nakkheeran
-
- 0 replies
- 991 views
-
-
‘எங்கட அம்மாவோட ஆசை, எங்கட அப்பாவோட ஆசை, எங்கட தலைமுறையின்ட ஆசை, எங்கட இனத் தின்ட ஆசை, விடியப்போகின்ற விடியலின்ட வெளிச்சத்தில எங்கட ஆசை நிறைவேறும், தமிழீழம் நிச்சயம் உதயமாகும்!’ - கிளைடர் குண்டுத் தாக்குதலின் கோரத்தில் உடம்பெங்கும் ரத்த சகதியாக ரணகளப்பட்டிருந்த நிலையிலும், வலி மறந்து முணுமுணுக்கிறான் அந்தச் சிறுவன். பிப்ரவரி 4-க்குள் முல்லைத் தீவு முழுவதையும் பிடித்தே தீருவோம் என்கிற வெறியில் வேகமெடுக்கும் இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாவதென்னவோ அப்பாவித் தமிழ் மக்கள்தான்! பிளேடால் பிரசவம்… கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்கள்தான் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவை. வட பகுதியின் நாலரை லட்சம் தமிழர்களு…
-
- 0 replies
- 1.3k views
-
-
கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்த மனித உரிமைப் போராளியும் அமெரிக்காவின் முன்னாள் உதவி அட்டர்னி ஜெனரலுமான புரூஸ் ஃபெயின், ``இலங்கையில் தமிழின அழிப்பு (நிமீஸீஷீநீவீபீமீ) நடக்கிறது. இதைச் செய்யும் அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபைய ராஜபக்ஷே, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்'' என்று பலரின் புருவங்களை உயரச் செய்துள்ளார். அவரைச் சந்தித்தோம். இலங்கையில் நடப்பது தமிழினப் படுகொலை என்று எதனடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்? ``தமிழருக்கு எதிரான இனவெறியை பல ஆண்டுகளுக்கு முன்பே மகாவம்சா, தர்மபாலா ஆகியோர் சிங்களவர் மனதில் பதிந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். கிறிஸ்து…
-
- 0 replies
- 644 views
-
-
நேற்று (27-01-2009) நடை பெற்ற கவனயிர்ப்பு போராட்டத்தின் பின் இன்று அமைச்சர் தெரிவித்த கருத்து இந்த கிழைமை நடைபெற இருக்கும் ஜரோப்பிய அமைச்சர்கள் சந்திப்பில் இலங்கை பிரச்சனை பற்றி கவனம் எடுக்க பட வேண்டும் என்று பாராளமன்றத்தில் பேசி இருக்கிறார் Koenders vraagt aandacht voor Sri Lanka 27-01-2009 19:33 De Tamils in Nederland vragen dinsdag op Het Plein in Den Haag aandacht van kabinet en parlement voor de verslechterende situatie in Sri Lanka. DEN HAAG (ANP) – Minister Koenders (Ontwikkelingssamenwerking) zal deze week bij de informele vergadering met zijn Europese collega’s aandacht vragen voor de humanitaire situatie in Sri Lanka. Dat h…
-
- 0 replies
- 884 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தேவையற்ற முறையில் தலையிடுகின்றது. தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்து ஆராயும் உரிமை கருணாநிதிக்கோ ஜெயலலிதாவுக்கோ கிடையாது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு அதிகாரமோ உரிமையோ இல்லை. இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளின் பிரச்சினைக்கு முடிவு கட்ட முடியாவிடின் அரசாங்கத்தை வேறொருவருக்கு கையளித்துவிட்டு ஜனாதிபதி வெளியேறவேண்டும் என்றும் அவர் கூறினார். ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று புதன்கிழமை கோட்டை சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றபோது சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இம…
-
- 0 replies
- 484 views
-
-
இலங்கைத் தமிழர்களின் நலன்கள் தொடர்பான பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமே ஒப்படைப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அப்பாவி தமிழ் மக்கள் குறித்தே இந்தியா அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளுக்கு எதிராக வடக்கில் பெற்றுள்ள வெற்றிகள் இங்கு இயல்பு வாழ்க்கை கட்டியெழுப்ப வாய்ப்ப அமைந்துள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் மகிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையி…
-
- 1 reply
- 645 views
-
-
காணொளிய பாக்க இங்கை கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...14&Itemid=1
-
- 0 replies
- 987 views
-
-
இலங்கைத் தீவில் மேலாதிக்கம் செலுத்திய சிங்கள மன்னர்களான துட்டகைமுனு-கஜபாகு காலம் இப்போது மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் திரும்பி விட்டது என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1k views
-