Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம்…

  2. Published By: NANTHINI 03 MAR, 2023 | 01:17 PM (எஸ். தியாகு) இலங்கையில் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 550 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பொன்று கிட்டியிருக்கும் நிலையில், அதற்கான ஆட்சேர்ப்பானது, வெளிப்படைத்தன்மையின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும், இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல், மௌனத்தை கடைப்பிடிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் முயற்சிகளையடுத்து, இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள 550 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்…

  3. Published By: VISHNU 26 JUL, 2023 | 09:55 PM தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்த நிலையில் அவரும் குறித்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்ததாகத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் சுமார் 18 கிலோமீட்டர் தூரமாக இருக்கும் நிலையில் விரைவாக இந…

  4. பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் வரும் வெள்ளி அன்று இலங்கை வருகிறார். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இருநாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்தவும் இலங்கை எதிர்கொள்ளும் பிராந்திய, சர்வதேச பிரச்சனைகள் பற்றி இலங்கை அதிபருடன் கலந்துரையாடப்படும் எனறும் தெரிவிக்கப்படுகிறது. https://www.francetvinfo.fr/politique/emmanuel-macron/info-franceinfo-emmanuel-macron-se-rendra-au-sri-lanka-pour-une-visite-historique_5973293.html

  5. சீனாவிற்கு செல்லவிருக்கும் இலங்கை கறுவா உலகம் முழுவதும் வாசனை திரவியங்களுக்கென பெயர் பெற்ற இலங்கையில் இருந்து கறுவா மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், பேரு போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி சந்தையில் கசியா கறுவா மற்றும் கறுவா என இரண்டு வகையான கறுவாப்பட்டை உள்ளது மற்றும் இவற்றில், கசியா கறுவாப்பட்டையின் தரம் உண்மையான கறுவாப்பட்டையின் தரத்தை விட குறைவாக இருப்பதால், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உண்மையான கறுவாப்பட்டைக்கு இன்னும் அதிக கேள்வி உள்ளது. இந்நிலையில் , எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து சீனாவிற்கு கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஏற்றுமதி விவசாய திணைக…

  6. ஒன்பதில் ஏழு மாகாண சபைகளில் சிங்கள மக்கள்: குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் – ஜனாதிபதி தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் …

    • 5 replies
    • 975 views
  7. வைத்தியசாலை வைத்தியர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, தனது குழந்தையை கொலை செய்து மனைவியின் கர்ப்பப்பையையும் அகற்றி விட்டதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில். கடந்த 20ஆம் திகதி அன்று எனது மனைவியை ஊடுகதிர் படப்பிடிப்பு (ஸ்கான்) செய்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்றவேளை, எனது மனைவிக்கு குழந்தை வளர்ச்சி கூடுதலாக இருக்கிறது. நீங்கள் 12ஆம் திகதி வாருங்கள் என அன்று பார்வையிட்ட வைத்தியரால் கூறப்பட்டது. பன்னிரண்டாம் திகதி நாங்கள் மீண்டும் அந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வேறொரு வைத்த…

  8. வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மாதங்களாக வவுனியா மாவட்டத்திலே மக்கள் அச்ச உணர்வுக்கு மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்று முழு காரணம் பொலிஸார் தான். வவுனியா மாவட்டத்திலே இருக்கின்ற நகர பொலிஸ் நிலையம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய குற்றத் தடுப்புப் பிரிவு இந்த இர…

    • 7 replies
    • 771 views
  9. 26 JUL, 2023 | 01:01 PM யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - காரைநகருக்கு இடையில், சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி மது போதையில் பாதையில் பயணித்தவர்களுடன் தகாத வார்த்தைகள் பேசி முரண்பட்டதுடன் அரச உத்தியோகஸ்தர் ஒருவரையும் தாக்கியுள்ளார். ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடல் பாதையில் கடமை நேரத்தில் நிறை போதையில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் மேலங்கி அணியாது, அரை நிர்வாணமாக மது போதையில் நின்று பயணத்தில் இருந்த அரச ஊழியர்கள் பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட…

  10. கனேடிய பிரதமரின் தமிழ் இனப்படுகொலை என்ற கூற்றை நிராகரித்தது இலங்கை அரசாங்கம் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 23ஆம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. மேலும் இது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேநேரம் இலங்கையில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும்…

    • 8 replies
    • 928 views
  11. பொரளை நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மைக்கு பின்னால் புலனாய்வு அமைப்பு ? 1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டது. தமிழ் மக்கள் இனப்படுகொலையை மறவோம் என எழுதப்பட்டிருந்த வாசகத்திற்கு அங்கு வருகைத் தந்த குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்தது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும், மாறாக விடுதலைப் புலிகளையே இராணுவம் அழித்ததாகவும் அங்கு வருகைத் தந்த சிலர் கூறியிருந்தனர். இந்த அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க இராணுவ புலனாய்வு அமைப்பே வன்முறையைத் தூண்டியதாக ஆரம்ப விசாரணைகள் காட்டுகின்றன. இறந்தவர்களின் நினைவாக விளக்குகள் மற்றும் மெழுகுவ…

    • 1 reply
    • 623 views
  12. Published By: DIGITAL DESK 3 26 JUL, 2023 | 12:03 PM கடவுசீட்டு பெறுவதற்காக கைவிரல் அடையாளம் வைக்கும் இயந்திரம் (Fingerprint machine) பழுதடைந்துள்ளமையால் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இணையம் மூலம் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்பவர்கள், கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில், சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வார கால பகுதிகளாக பழுதடைந்துள்ளது. அதனால் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கைவிரல் அடையாளம் வைக்க முடியாத நிலையில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்…

  13. வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் வைபவ வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23 ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் குறித்த வீட்டுக்கு தீ வைத்ததில் 22 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார…

  14. 26 JUL, 2023 | 10:17 AM (எம்.மனோசித்ரா) போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு விரைவில் புதிய போக்குவரத்து சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய அடையாளங்காணப்பட்ட 32 போக்குவரத்து குற்றங்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது பதிவாகும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. …

  15. “ஆத்திர காரருக்கு புத்தி மத்திமம்” – சந்திரிக்காவுக்கு ஏவிய சட்டம் “பூமராங்” ஆனது! written by adminJuly 26, 2023 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், கையடக்க தொலைபேசி கட்டணங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர் கடந்த மாதத்திற்கான சட்டமூலங்களை நேற்று முன்தினம் (ஜூலை 24) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டமூலங்கள் எதனையும் ஜனாதிபதி அலுவலகம் இப்போது தீர்த்து வை…

  16. மத்திய வங்கி குண்டுதாரியை போன்று முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – நாமல் தமிழ் அரசியல் கைதிகளை போன்றே அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்திய வங்கி குண்டு தொடர்பில் இருநூறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அண்மையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை குறித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தாம் பல தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் சிறையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலி உறு…

    • 4 replies
    • 816 views
  17. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலாக மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவது போன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உள்ளக அரசியல் குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, பாலத்தால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். கண்மூடித்தனமாக வளர்ந்த நாடுகளின் கருத்துக்களை பின்பற்ற வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இந்தியா – இலங்கை பாலதிற்கு பதிலாக உணவுப் பாதுகாப்…

    • 1 reply
    • 221 views
  18. வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தேவன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவாக மலர் தூவி, பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் இருந்த சிங்கள சிறைக்கைதிகள் , சிறைக்காவலர்கள் உள்ளிட்ட தரப்பினர் மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலைகளை அரங்கேற்றினர். சுதந்திர தமிழீழத்தை எனது கண்கள் பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சொன்ன குட்டி மணியின் இரு கண்களும் உயிரோடு பிடுங்…

  19. இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று(24) சந்தித்து பேசிய போது இதனை வலியுறுத்தியதாக கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறினார். மாகாண அரசிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த முன்மொழிவொன்றை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அது குறித்து ஆய்வுக்குட்படுத்த ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்து ஐந்து பேரின் பெயர்களையும் பரிந…

  20. சுமந்திரன் போன்ற பிரிவினைவாதிகள் தேர்தல்கள் மூலம் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் : முஸாமில்! சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாமில் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலிஸ் அதிகாரம் இல்லாமல் ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க, ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில…

    • 5 replies
    • 786 views
  21. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைத்து வழங்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அமைத்து வழங்க வேண்டிய தேவை இருப்பதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாண்டியன்குளம் கிராம அலுவலர் பிரிவில் இந்திய அரசின் நிதி உதவித் திட்டத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்தும் வீடுகள் உடைந்தும் சுவர்கள் வெடிப்புக்கு உள்ளாகியும் காணப்படுகின்றன. குறித்த வீடுகள் இவ்வாறு கானப்படுவதனால் குறித்த வீடுகளில் குடியிருக்க முடியாது ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் இந்த…

  22. ட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது கச்சேரிக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்று கூடி நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றில் ஆஜராகிய 4 பேரையும் சொந்த பிணையில் செல்ல அனுமதித்து எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆஜராகுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் பீற்றர் போல் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். கடந்த மாச் 30 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற இருந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது அங்கு மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேச்சல் தரை காணிகளை தனியார் ஆக்கிரமிப்புக்க…

  23. கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படுகின்ற இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குறித்த குளத்தின் கீழான சிறுபோக செய்கை கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது சிறுபோக அறுடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பன்னங்கண்டி சின்னக்காடு மகிழங்காடு உள்ளிட்ட இடங்களில் சிபோக அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் அரச நெற்களஞ்சியம் என்பவற்றினூடாக அறுவடைசெய்யும் நெ…

  24. பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ! இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள் அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று அவர்கள் நல்லூர் கந்தனை தரிசித்திருந்தனர். https://athavannews.com/2023/1341582

  25. சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை! மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தகாத வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியமையால் அங்கு சர்ச்சை ஏற்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுகூட்டம் இன்று பலத்த பாதுகாப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் செ…

    • 3 replies
    • 662 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.